ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்ர‌ ச‌த‌ம்

||अव|| _आचार्यवान् पुरुषोवेद_, _यस्यदेवे पराभक्तिर्यथा देवेतथागुरौ_, आचार्यद्धैवविद्याविदितासाधिष्टंप्रापत्_ _आचार्यदेवोभव_ तत्विज्ञानार्थं सगुरुमवाभिगच्चेत्_, देवमिवाचार्यमुपासीत_, पापिष्टंः क्षत्रबन्धुश्चपुण्डरीकश्च पुण्यकृत्| आचार्यवत्तयामुक्तौ तस्मादाचार्यवान् भवेत्_, गुरुं प्रकाशयेद्धीमान्_, इत्यादिभिः गुरुपासनस्य सकलश्रेयस्साधनत्वेन विहितत्वात्, तत्र च _गुरोर्नाम सदाजपेत्_, _असावसावित्याभगवत्त_ _इति सर्वाचार्य नाम संकीर्तनस्य कर्तव्यत्वेऽपि शरणागतिधर्मप्रवर्तकाचार्याणां विशेषेनपूज्यत्वात्, तेष्वपिप्रबन्ध मुखेनोपकर्तृणां प्राधान्येन वेदान्ताचार्यैः रहस्यत्रयसारादित्वात्रिंशद्रहस्य ग्रन्धेषु निक्षेपरक्षाप्रभृतिषुच अधिकारपरिकरोपाय फलानां स्वरूपस्य सम्यत् प्रतिवादनात्, सर्वदा तन्नामकीर्तनमेव कर्तव्यमिति निश्चित्यगौणानि प्रसिद्धानि वरदाचार्यप्रभृतिभि संकीर्तिताति उपदेशपरंपरयाऽधिगतानि अष्टोत्तरशतसंख्याकानि आचार्यनामानि पद्यरूपेण संग्रहीष्यन् प्रारिप्सितस्य ग्रन्धस्याविघ्नेन परिसमाप्त्यर्थम् आचार्य नमस्कारात्मकं मंगळ माचारति,
मू || सांख्यसौगत चार्वाक शाङ्करादि तमोनुदं त्रय्यन्त देशिकं वन्दे वेङ्कटेशाह्वयं महः
सांख्येति आदिशब्देनयादवभास्करादयोगृह्यन्ते।
(அவ‌தாரிகை) “ஆசார்ய‌வாந்” என்று தொட‌ங்கி முக‌வுரை அருளிச் செய்கிறார்.
“ஆசார்ய‌னையுடைய‌வ‌ன்தான் அறிந்த‌வ‌னாவான். எவ‌னுக்கு ப‌க‌வானிட‌த்தில் போலே ஆசாரிய‌னிட‌த்திலும் ப‌ரையான‌ ப‌க்தியுள்ள‌தோ, அவ‌னுக்குத்தான் அபேக்ஷிதார்த்த‌ங்க‌ள் ப்ர‌காசிக்கும், ஆசார்ய‌ரிட‌த்தில் க்ர‌ஹிக்க‌ப்ப‌ட்ட‌ வித்யைதான் வ்ருத்திக்கு வ‌ரும், ஆசார்ய‌னை தெய்வ‌மாக‌ ப‌ஜிக்க‌வேண்டும், ப்ர‌ம்ம‌த்தை அறிய‌வேண்டுகைக்க‌டி குருவையே ப‌ஜிக்க‌வேணும், மிக்க‌ பாபியான‌ க்ஷ‌த்ர‌ப‌ந்துவும், புண்ய‌வானான‌ புண்ட‌ரீக‌னும் ஆசார்ய‌னைய‌டைந்தே முக்தியைப் பெற்றார்க‌ள், குருவை ப்ர‌காசிக்க‌ வேணும்” இது முத‌லான‌துக‌ளாலே குரு ப‌ஜ‌ன‌மே எல்லாவ‌ர்த்த‌ங்க‌ளையும் த‌ருமென்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து. “குருவின் நாம‌த்தை எப்பொழுதும் ஜ‌ப‌ம் செய்ய‌வேணும் “. குருப‌ர‌ம்ப‌ரையையும் அப்ப‌டியே ஜ‌ப‌ம் செய்ய‌வேணும் என்று விதியுள்ள‌து. இவ்விதியினால் எல்லா குருக்க‌ளின் திருநாம‌ங்க‌ளை எப்பொழுதும் சொல்ல‌வேணுமென்றிருந்தாலும், அக்குருக்க‌ளில் எவ‌ர்க‌ள் ச‌ர‌ணாக‌தி வித்யை உப‌தேசித்து ப்ர‌வ‌ர்த்த‌ன‌ம் செய்கிறார்க‌ளோ அவ‌ர்க‌ளே மிக‌வும் உத்தேச்ய‌ர்க‌ள், இவ‌ர்க‌ளிலும் எவ‌ர் அனேக‌ க்ர‌ந்த‌ங்க‌ளால் அச்ச‌ர‌ணாக‌தி வித்யையை ஸ்தாபித்தாரோ அவ‌ரே அவ‌ர்க‌ளிலும் மிக‌வும் உத்தேச்ய‌ர். ஆகையால், ஸ்ரீம‌த்ர‌ஹ‌ஸ்ய‌த்ர‌ய‌ஸார‌ம் முத‌லான‌ ர‌ஹ‌ஸ்ய‌ம், நிக்ஷேப‌ர‌க்ஷை முத‌லான‌ க்ர‌ந்த‌ங்க‌ளால் அதிகார‌ம், அதிகாரி, ஸ்வ‌ரூப‌ம், உபாய‌ம் முத‌லிய‌வைக‌ளைத் தெளிவாக‌ அருளிச் செய்கையால் ஸ்ரீநிக‌மாந்த‌ ம‌ஹாதேசிக‌னே மிக‌வும் உத்தேச்ய‌ர் என்று நிச்ச‌யித்து வ‌ர‌தாசார்ய‌ர் முத‌லான‌வ‌ர்க‌ளால் அருளிச் செய்ய‌ப்ப‌ட்ட‌தும், குருமுக‌மாக‌ வ‌ந்ததும், கார‌ண‌ங்க‌ளாலுண்டான‌துமான‌ தேசிக‌ன் திருநாம‌ங்க‌ளில் நூறு திருநாம‌ங்க‌ளை சுலோக‌ங்க‌ளாக‌ செய்யாநின்று கொண்டு, விக்ன‌மில்லாமைக்காக‌ ஒரு ம‌ங்க‌ள‌ம் ப‌ண்ணுகிறார் “ஸாங்க்ய‌” (सांख्य) என்ப‌தால்..
க‌பில‌, புத்த‌, நாஸ்திக‌, மாயாவாத‌, யாத‌வ‌, பாஸ்க‌ர‌ ம‌த‌ங்க‌ளாகிற‌ இருளை நீக்கும‌தும், வேதாந்த‌ மெய்ப்பொருளை விள‌க்கும‌தும், “வேங்க‌டேச‌ர்” என்று திருநாமமுடைய‌துமான‌ ஒரு சோதியை அடி ப‌ணிகிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக