अद्वैतसिद्धान्त
प्रकरणम् ॥
அத்வைத
ஸித்தாந்த ப்ரகரணம்.
இனி
அத்வைத ஸித்தாந்தத்தை
நிருபிக்கிறேம்.
இதற்கு
ப்ரவர்த்தகர் ஸ்ரீ சங்கராச்சாரியர்.
ब्रह्मैकं
परमार्थसत्तदितरन्मायामयत्वान्मृषा
ब्रह्मैवैकमुपाधिबिम्बितमतो
जीवेशभावं गतम् ।
भ्रान्तिस्संसृतिरस्य
तत्प्रशमनं मुक्तिस्तदप्यात्मनो
ब्रह्मैक्यावगमाच्छूति
श्रवणजादित्याद्दुरद्वैतिनः
॥
ப்ரஹ்மைகம்
பரமார்த்த-ஸத்
ததிதான் -
மாயா
-
மயத்வான்-ம்ருஷா
ப்ரஹ்மைவைக
முபாதி -பிம்பித-மதோ
ஜீவேச-பாவம்
கதம் 1
ப்ராந்திஸ்
-
ஸம்ஸ்ருதி-ரஸ்ய
தத்-ப்ரசமனம்
முக்திஸ்-ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத்
ச்ருதி-சரவண-ஜாத்
இத்யாஹு ரத்வைதிந்:11
இது இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ சலோகம். இதன் அர்த்தம்:-
ஏகம்
=
தனக்கு
ஸஜாதீயமானதும்,
விஜாதீயமானதும்,
ஒன்றுமில்லாததாய்,
தன்னிலும்
ஒரு
தர்மமும் இல்லாததான,
ப்ரஹ்ம-ஆத்ம
வஸ்து,
பரமார்த்தஸத்பரமார்த்தமாயுள்ளது
(ஆத்மவஸ்துவுக்கு
ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா,
விஜாதீயமானது
ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது)
இதனால்
இரண்டாவது ஆத்மாயில்லை
என்றும்,
ஆத்மாதவிர
மற்றொரு வஸ்து இல்லை என்றும்,
ஆத்மவஸ்துவில்
ஒரு தர்மமும் இல்லை என்றும்
சொன்னதாகிறது.
இங்கு
'ப்ராதிபாஸிகஸத்'
'வ்யாவஹாரி
கஸத்'
இவைகளைக்காட்டில்
ஆத்ம வஸ்துவுக்கு வாசி
தோன்றுவதற்காக 'பரமார்த்தஸத்'
என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
'ததிதரன்
...
ம்ருஷா'-ப்ரஹ்மத்தைக்
காட்டில் வேறுபட்டது மாயையின்
கார்யமானதால் பொய்;
'ப்ரஹ்மை.......கதம்'-ஒரு
ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய்
அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும்
ஈச்வரனாகவும் ஏற்பட்டது.
'ப்ராந்தி: அஸ்ய'ஜீவாத்மாவுக்கு நான்ஞாதா, நான்கர்த்தா, நான்போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.
'தத்ப்ரசமனம் முக்தி:' அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்,
ததபி.........ச்ரணஜாத்' தத்வமஸி என்கிற வேதாந்தவாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால் (தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்யஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி யுண்டாகிறது.
'இத்யா... ந:' என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.
1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிருபண ப்ரகரணம்.
ப்ரிதிவீ,(पृथिवी ––பூமி) ஜலம், தேஜஸ், (तेझः -அக்னி) வாயு, ஆகாசம் என்று பெயருடைய பஞ்சபூதங்களும், அவைகளுடைய கலப்பாலுண்டான 'பௌதிகம்'(भौतिकं - பூதங்களிலிருந்து உண்டானவை) என்று பெயருடைய சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமானவையன்று. பாலைவனத்தில் மத்யாஹ்நத்தில் (मध्याह्नम्) ஸூர்யகிரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத ஜலப்ரவாஹமும் அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையாயில்லாதபோதிலும் உள்ளது போல் தோன்றுகிறது.அங்கே பரவிய சூரியகிரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல, இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்சரூபமாய்க் காணப்படுகிறது. இதுதான் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.
வாஸ்தவமாயுள்ள
ப்ரஹ்மஸ்வரூபம் தெரியாமல்
பொய்யான ப்ரபஞ்சம் காணப்படு
வானேன் எனில்-
வாஸ்தவமான
ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு
அநாதிகாலமாக மாயையென்று ஒரு
வஸ்துவின் ஸம்பந்தம்
வந்திருக்கிறது.
இந்த
மாயைக்குத் தனக்கு
ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது
ஸ்வபாவம்.
அப்படி
மாயையினால் மறைக்கப்பட்டதால்
ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி
ப்ரகாசிப்பதில்லை.
இந்த
ப்ரஹ்மத்துக்கு ஸத்தை,
ப்ரகாசம்,
ஆநந்தம்
என்று மூன்று ஆகாரங்கள் உண்டு.
அதனால்தான்
இது ஸச்சிதாநந்தஸ்வரூபமென்று
சொல்லப்படுகிறது.
இந்த
மூன்று ஆகாரங்களும்
ப்ரஹ்மஸ்வரூபத்தைக் காட்டிலும்
வேறுபட்டவையன்று.
இந்த
ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு
குணமும் கிடையாது.
ஆகையால்
இது நிர்குணம் என்றும்
நிர்விசேஷம் என்றும்
சொல்லப்படுகிறது.
ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று 'ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆநந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்' என்றிது முதலிய ஶ்ருதிகளாலும் அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் -- கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் பாலைவனத்தில் பரவின ஸூர்யகிரணத்தில் ஜலப்ரமம் உண்டாகிறது. இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது. அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும். அந்த வஸ்து ஸத்யமன்று என்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு *ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படியே மேல் மேல் ஆதார #பரம்பரை ஒப்புக்கொள்ளவேண்டியதாக வருகிறது. ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதே.
*ஆதாரம் -- எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது ஆதாரம்.
#பரம்பரை -- ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.
தொடர்வது
प्रपञ्चमिथ्यात्वनिरूपणम् –– ப்ரபஞ்ச மித்யாதவ நிரூபணம்
