செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஶ்ரீ தேசிக அஷ்டோத்தர சதம் உத்தரபாகம் நாமம் 53

அவதாரிகை

இப்படி அர்ச்சாவதாரங்களுடைய ஸேவையினாலே மேன்மேலும் வ்ருத்தியடையா நின்றுள்ள ஞானவிசேஷங்கள் சொல்லப்படுகின்றன.

53. अर्थपञ्चक-तत्वज्ञः 

प्राप्य-प्राप्त - प्राप्त्युपाय - फल - विरोधिरूप अर्थपञ्चक अर्थपञ्चकतत्वज्ञः । तत्र,

53. அர்த்தபஞ்சகதத்வஜ்ஞ: = அர்த்த பஞ்சகத்தின் உண்மை அறிந்தவர். அர்த்த பஞ்சகமாவது,

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்த்யுபாயம் பலஞ்சைவ ததா ப்ராப்தி விரோதி:||

என்று சொல்லப்பட்டவை. இதன் பொருள் -- ப்ராப்யமான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும், அடைகிறவனான ஆத்மாவின் ஸ்வரூபமும், அடைகைக்கு உபாயமும், பலமும், அடையவொண்ணாதபடி செய்யும் விரோதியும் ஆக ஐந்து.

(i) श्रियः पतिः निखिल-हेयप्रत्यनीक-कल्याणैकतानः अपरिमित स्वरूपः शरीरभूत-विभूतिद्वययुक्तः जगत्सृष्ट्यादि व्यापारलील पञ्चप्रकार-दिव्यमङ्कळ-विग्रहविशिष्टः पुरुषोत्तमः प्राप्यः

இங்கு ப்ராப்யமான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமாவது: -- லக்ஷ்மியோடு கூடின வும், எண்ணிறந்த ஞானானந்தமும், துர்குணமற்றவும், ஞானசக்தி முதலிய அநந்தங்களான மங்கள குணங்களுடையவும், முற்கூறியபடி ஐவகையான ரூபமுடையவும், சரீரமாக நின்ற லீலா விபூதி, போக விபூதிகளென்கிற இரண்டு விபூதிகளுடையவும், உலகழிப்பு, படைப்பு, அமைப்புகளை விளையாடலாகவுடையவும், விஷ்ணுவென்றும், நாராயணனென்றும் பெயர்களால் பேசப்பட்டவுமாயிருக்கும்.


(ii) ज्ञानानन्दस्वरूपो ज्ञानानन्द-गुणको अणुपरिमाण-स्वयंप्रकाशरूप भासमानो देहादि विलक्षणः परशेषतैकरसः पराधीन-स्वरूप-स्थिति-प्रालि परिपूर्ण-भगवदनुभव-योग्यः स्वरूपानुगुण-स्वच्छन्द-कैङ्कयार्थी जीवः प्राप्ता। 

ப்ராப்தாவான ஜீவனுடைய ஸ்வரூபமாவது:-- ஞானானந்த ஸ்வரூபமும், அணுபரிமாணமும், தனக்குத்தான் தோன்றுமதுவும், தன்னையொழிந்த தொன்றைக் காட்டுமதான தர்மபூத ஞானத்தையுடையவும், தேஹாதி களுக்கு வேறுபட்டதும், எம்பெருமானுக்கு அடிமையையே உகக்குமதுவும், ஈச்வரனிஷ்டப்படிக்குள்ள தன் பிறப்பு -- இருப்புக்களையுடையவும், மிகவும் பரிபூர்ணமாக பகவானை அனுபவிக்க யோக்யமும், தன்னிஷ்டப்படி தக்க வேலையில் ஆசையுடையவும், ஜீவாத்மாவென்றும் சொல்லப்படுமது.

(iii) प्राप्त्युपायश्च जीवस्य संसार -लङ्घनसाधनतया शास्त्र-चोदितोऽर्थः । स च द्विविधः, सिद्ध-साध्य-भेदात् । तत्र सर्वज्ञत्वात् परहितवेदी, सर्व-शक्तित्वात सर्व-अनिष्ट-निवर्तनक्षमः, सर्व-सुहृत्त्वात् परानिष्ट-निवारणादौ सर्वदा अभि मुखः, संसारतन्त्रवाहित्वात् अवसर-प्रतीक्षो व्याजविशेष-वशीकृतः स्वाधीन सहकारि-व्यतिरिक्त-निरपेक्ष-स्वार्थप्रवृत्तो मोक्षप्रदान-अव्यवहित-सङ्कल्पाश्रय श्रीमन्नीलमेघाभिध श्रीमन्नारायणः सिद्धोपायः ।

ப்ராப்த்யுபாயமாவது --  ஸித்தமென்றும், ஸாத்யமென்றும் இருவகையுளது. ஸித்தோபாயமென்றால் முன்பே உளதென்றபடி. அது முன் கூறிய லட்சண முடைய பரமாத்மா.

ஸாத்யோபாயமாவது -- பக்தியென்றும், ப்ரபத்தியென்றும் இருவகையுளது. இங்கு பக்தியாவது -- கர்மயோகம், ஞானயோகம் இவைகளைச் செய்து சுத்தமனம் பெற்றவனுக்கு செய்ய அடுப்பதாய் கடுமையானதும், இடையறா எண்ணெய் ஒழுக்கேபோல் அன்பு காரணமாய் ஒரு பொருள்மேலே நீங்காத நினைவுடையதாயும், ஸஞ்சிதமென்றும், ப்ராரப்தமென்றுமாப்போலே இருக்கிற பாபங்களில் சிலவற்றை மட்டில் போக்குமதாய், நாள்தோறும் அநுஷ்டிக்க வளர்ந்து வருவதாய், தன்னாலேயே செய்துகொள்ள வேண்டிய தான கடைசி நினைவை உடையதாய், யமம், நியமமென்றாப் போலே சொல்லப்படுகிற தனக்குரிய அநுஷ்டானங்களை உடையதாய், இப்படிப் பல நியமமுடையதாயிருக்கும். ப்ரபத்தியின் ஸ்வரூபம் மேலே சொல்லக்கட வோம். அங்கே கண்டுகொள்வது.

(iv) पुरुषस्य कर्तव्यतया विधीयमानस्साध्योपायः भक्तिः प्रपत्तिश्चेति द्विविधः । भक्तिर्नाम - कर्मयोग-ज्ञानयोग संस्कृत-अन्तःकरण-साध्यो वणादि नियताधिकारो वर्णाश्रमधर्म- इतिकर्तव्यताकः कृच्छ्रसाध्य तैलधारावत्  अविच्छिन्न–स्मृतिसन्ततिरूपः, प्रारब्धेतर-पुण्य-पाप-निवर्तकः, प्रतिदिनं अभ्यासाधेयानि आप्रयाणं अनुवर्तनीयः स्वयत्नसाध्य-अन्तिमप्रत्ययविशेषो यम-नियमा अष्टाङ्गयोगः । प्रपत्ति-स्वरूपं उत्तरत्र वक्ष्यते ।

பலமாவது -- உபாயத்தை அநுஷ்டித்து அதினாலே முன்பின்புள்ள பாபங்களின் துவக்கற்றவனாய், தேஹமுடிவில் பிரம்மநாடியாலே வெளிப்பட்டு, அடைவே அர்ச்சிராதி தேவதைகளால் வழிநடத்தப்பட்டு, அப்ராக்ருத தேசத்திற்சென்று, ஸூக்ஷ்மசரீரத்தைவிட்டு, விரஜையைக் கடந்து, திவ்யதேஹத்தை அடைந்து, அலங்காரஞ்செய்யப்பட்டு, பூஜிக்கப் பட்டு, ஶ்ரீவைகுண்டமாநகரில் திருமாமணி மண்டபத்தில், திருவரவணை யில்  ஶ்ரீமந்நாராயணனைக் கிட்டி, அஷ்டகுணங்கள் வந்துபுக, பரிபூர்ணமாக அனுபவித்து, அதின் போக்குவீடாக ஏவல்தேவை செய்துகொண்டிருக்கை

(v) वशीकरणविशेषात् उत्तर-पूर्वाघ-अश्लेषविनाशपूर्वक स्थूलशरीरनिवनिऊर्ध्वनाडि-उत्क्रमण-अचिरादि-आतिवाहिकगणातिवहन - प्रकृत्यतिक्रमण सूक्ष्मशरीरनाश-अप्राकृतदेशविशेषप्राप्ति-स्वरूपाविर्भाव - गुणाष्टकाविर्भावपर्वकआवृत्तिरहित-देश-काल-स्वरूप-परिच्छेदरहित - कैङ्कर्यपर्यन्त - परिपूर्णभगवदनुभवानन्दः फलम् । बीजाङ्कुरन्यायेन' अनादिकालप्रवृत्त अनन्तअकृत्यकरण कृत्याकरण प्रवाहात् उत्पन्नः अकृतप्रायश्चित्तानां अनतिलङ्घनीयफल: श्रुत्यैक-समधिगम्यो अनुत्प्रेक्षणीय-विपाकसमयः आब्रह्म-स्तम्ब-पर्यन्तमभिव्याप्तो अत्यन्त-विषमप्रवाह: अतिघोरनरकादि-अनर्थपरंपराहेतुः, चक्रवत् परिवर्तमानो निरन्तरं आमोक्षात् अनुवर्तमानो भगवन्निग्रह-सन्तानविशेषः प्राप्तिविरोधि - इत्येते अर्थाः सर्वेषु रहस्यग्रन्थेषु प्रपञ्चिताः ।

ப்ராப்திவிரோதியாவது -- விதைமுளையின் நியாயத்தால் வந்தனவும், புண்யபாபங்களுக்கு மூலமும், ப்ராயச்சித்தம் முதலானதன்றி நீங்காதவும், அனுபவித்தே தீரவேண்டியதும், ப்ரம்மா முதல் ஸ்தம்பமீறாகவுள்ள சரீரத்தை எடுவிப்பதும், துக்கத்தையே தருமதுவும், பெருந்துன்பமான நரகத்தைக் கொடுப்பதுவும், சக்ரம்போலே சுழன்று வருவதுவும், எம்பெருமானுடைய தண்டனைக்கும் காரணமானதுவுமான கர்ம விசேஷம். இப்படிப்பட்ட விரோதியை உபாயத்தாலே நீக்கி, ஜீவன் பரமாத்மாவை அடையவேண்டுவ தென்று திரண்ட பொருளை அறிந்தவரென்றபடி.