புதன், 30 ஜூலை, 2008

ஸ்ரீமத் ஆண்டவன் --- திருப்புல்லாணியில்

திருப்புல்லாணியில் தனது 20வது சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தை மேற்கொண்ட ஸ்ரீமத் ஆண்டவன் முந்தைய வருஷங்களைப் போலவே இங்கும் நான்கு புத்தகங்களை வெளியிட்டார். “ஆச்சார்ய இராமாம்ருதம் “(தமிழ்) “ஆச்சார்ய இராமாம்ருதம்” (ஆங்கிலத்தில் அமெரிக்கா வாழ் ஸ்ரீமதி கல்யாணி கிருஷ்ணமாச்சாரியால் மொழிபெயர்க்கப்பட்டு யாஹூ குரூப்ஸில் வெளியானதின் தொகுப்பு) [இரண்டும் பகுதி2] “ஆச்ரம சாத்துமுறை க்ரமம்” மற்றும் திருப்புல்லாணித் தலவரலாறான “மணியுந்து புல்லாணியே' (இந்தத் தலைப்பு ஸ்ரீமத் ஆண்டவனாலேயே அருளப்பட்டது) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
அதன் வீடியோ பதிவு இங்கு காணலாம். அடியேனது சிஸ்டத்தில் உள்ள ஒரு குறையின் காரணமாக quality ரொம்ப சுமார். பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.