श्रीलक्ष्मण योग्यांसः
लक्ष्म = चिह्नं , शुदर्शन पांचजन्यांकनरूपं शिष्यबाहु मूलेकृतं भगवच्चिह्नं तेन अनयतिप्राणयतीनि लक्श्मणः, यद्वा, लक्ष्म = व्याख्यामुद्रारूपं भगवद्भाष्यकारा साधारणं चिह्नं , अथवा, लक्ष्म = भगवद्भाष्यकारेणभक्त चित्तभित्ति लिखितं तत्व ज्ञानाख्य चित्र रूपं, तत् भक्तासाधारण चिह्नं, ते नत् नयतिप्राणयतीति लक्ष्मणः शकन्ध्वादि त्वात् पररूपं , _पूर्वपदात्संज्ञायामगे_ इतिणत्वं, अतएव यतिराजसप्तत्यां _नाथस्सएषः_, उद्गृह्णती मुपनिषत्स्वि_ति श्लोकद्वये न एवमेव लक्ष्मणपद व्याख्यानंकृतं। फलरूप भगवत् साक्षात्कारपर्यन्तयो गोऽस्यास्तीतियोगी, यतीश्वरोवा। श्रीमतःज्ञान भक्तिवैराग्यादिरूप श्रीमतःलक्ष्मनयोगिनः कंशः भाष्यकारावतार इत्यर्थः भगवद्भाष्यकारः श्रीभाश्यादौ भक्तिस्वरूपंस प्रपंचं प्रतिष्ठाप्य गद्यत्रयेसंग्रहेण प्रतिपादितस्य न्यासस्य परपक्ष प्रतिक्षेपपूर्वकं अधिकार परिकरस्वरूपोत्गरकृत्य तत् फल तत् प्राभावादिकं सविस्तारमुपपादयितुं स्वयमेवाचार्यरूपेणावतीर्ण इतिहि सत्वस्थानां प्रसिद्धिः यथाहुर्वरदाचार्याः _वेङ्कटेशावतारोऽयं तत्घण्टां शोऽथवाभवेत् यतींद्रां शोऽथवेत्यवं वितर्क्यायास्तु मंगळं_ इति। आचार्यस्य घण्टावतारत्वेऽपि __तुष्टाभिर्लोकपालानाम्मात्राभिः कल्पतोनृपः स्ति वत् वेंकटेश भाष्यकारयोरप्य विरुद्धंशत्वं, विकल्पोक्तिस्तुतत्तदंश प्राधान्याभि प्रायेणेत्रवगन्तव्यं
ஸ்ரீலக்ஷ்மண யோக்யாம்ஶ: ஸ்ரீலக்ஷ்மணயோகீ
= ஸ்ரீமானான பாஷ்யகாரர், அம்ஶ: அவருடைய அம்சபூதர். இங்கு “ஸ்ரீ”யென்று ஞான
ஸம்பத்தைச் சொன்னபடி. லக்ஷ்மண என்கிற பதத்திற்கு “லக்ஷ்மணயதி = ப்ராணயதி” என்ற வ்யுத்பத்தியால்
சிந்ஹத்தினால் ஜீவிப்பிக்கிறாரென்றதாயிற்று. “லக்ஷ்ம” என்று சிந்ஹமாய் அது சங்கசக்ர
ரூபத்தைச் சொன்னபடி. அத்தைத் தரிப்பித்து அதனாலே சிஷ்யர்களை ரக்ஷிக்கிறாரென்றதாயிற்று.
அன்றிக்கே, சிந்ஹமென்று ஸ்ரீபாஷ்யகாரருடைய ஞானமுத்திரையைச் சொல்லித்தாயிற்று.
அன்றிக்கே, த்யான ஸமயத்தில் ஆச்ரிதர்களுடைய மனதிலூன்றிய ஞானசிந்க மாகவுமாம்.
யோகீ = பலரூப பக்தியோகமுடையவர். இப்படிக்கொத்த ஸ்ரீபாஷ்யகாரருடைய அம்சரென்ற படி.
இங்கு “ஸ்ரீபாஷ்யம் விரச்யய” என்கிற சுலோகத்தை அனுஸந்திப்பது. இவ்வர்த்தத்தை
“வேங்கடேசாவதாரோயம் தத்கண்டாம் ஶோதவாபவேத்| யதீந்த்ராம்ஶோதவேத்யேவம் விதர்க்யாயாஸ்து
மங்களம்” என்று குமார வரதாசார்யார் அருளிச் செய்தார். அதவா என்ற விகல்பம்
அவ்வவர்களுடைய ப்ராதாந்யத்தை த்யோதிக்கிறதென்றபடி. இங்கு வேங்கடநாதரென்ன,
அவருடைய திருமணியாழ்வார் என்ன, ஸ்ரீபாஷ்யகாரரென்ன, இப்படி அனேகர்களுடைய
அம்சம் ஓரிடத்தில் சேரும்படி யெங்ஙனே யென்னில்? அவர்கள் தர்ம்பூதஞ்ஞான
வ்யாப்தியால் அனுப்ரவேசிக்கையாலே ஸௌபரி முதலானவர் களைப்போலே சேரக்
குறையில்லை. அஷ்டமூர்த்தி:” “அஷ்டாபிர்லோகபாலாநாம்” இது முதலானது களையும்
கண்டுகொள்வது.
(தொடரப்போவது வரதாசார்யவீக்ஷிதாய நம:)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக