ராமாநுஜ ஶப்தார்த்தம்
2. वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पति: (ஶிவபுராணம்)
பரப்ரஹ்மம் என்பது தன்னோடு கூட மற்றொன்றைச் சேர்க்காத தனி வஸ்து அல்ல. அது மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஶ்ரிய:பதிதான் என்பதைப் பல ப்ரமாணங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஸ்வாமி.
1.शेषि दम्पति (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்)
2. दम्पति जगतांपति (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்)
3. युवां दम्पति दैवतं न: (ஶ்ரீஸ்துதி)
4. श्रीमन्नारायणो न: पति: (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்)
5. ஶ்ரீமானான நாராயணன் (ஶ்ரீரஹஸ்யரத்னாவளி - 2)
6. ஶ்ரிய:பதியான நாராயணன் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)
7. விக்ரஹத்தில் ப்ரஹ்மசர்யாவஸ்தையிலுள்பட
कृष्णाजिनेन संवृण्वन् वधूं वक्ष: स्थलालयाम्
(தேஹளீஶ ஸ்துதி)
என்னும்படியிறே நித்யயோகம் இருப்பது
(ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்)
8. பரதத்துவமானது ஸ்வவ்யதிரிதிக்த வஸ்துக்கள் எல்லாத்துக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் ஶேஷியுமான ஶ்ரிய:பதி (ஶ்ரீதத்வபதவீ)
9. தண்டதரத்வமும் புருஷகாரத்வாதிகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வ்யாபாரங்கள் (ஶ்ரீமத்ரஹஸ்ய தத்வத்ரயம்)
10. ப்ரதிபுத்தரான நமக்குப் பெரிய பிராட்டியாருடனேயிருந்து என்றும் ஒக்கப்பரிமாறுகிற இவனையொழிய ப்ராப்யாந்தரமும் ஶரண்யாந்தரமும் இல்லை. இத்தம்பதிகளே ப்ராப்யரும் ஶரண்யரும் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்)
11. சாற்றினர் நம்போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)
12. இப்படி ஶ்ரிய:பதியான நாராயணன் திருவடிகளே உபாயதசையிலும் பல தசையிலும் உபஜீவ்யர்கள் (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)
13. லக்ஷ்மீ விஶிஷ்டத்வம் உபாய ஐக்யத்துக்குப் பாதகமாகாது
14. யதா ப்ரமாணம் ஶரண்யாபிப்ராய விஶேஷாநுகுணமாக விஶிஷ்டம் உபேயமானாற்போலே விஶிஷ்டமும் உபாயமாகக் குறையில்லை.
15. ஏகஶேஷித்வத்தாலும் ஏகாபிப்ராயத்தாலும் பரஸ்பர ப்ராவண்யாதிஶயத்தாலும் ஸ்வரூப ரூபாதிகளில் பிரிவற்ற அந்வய விஶேஷத்தாலும் गाढोपगूढानि ते (ஶ்ரீசதுஶ்லோகி)
என்னும்படி ஸுஶ்விஷ்டமான விஶிஷ்ட தத்வம் நிற்கிற நிலை குலையாதபடி ஸவிஶேஷணமான நாராயண ஶப்தம் ப்ரதிபாதிக்கிறபடியை அநுஸந்திக்கை ஸத்வஸ்தற்கு ப்ராப்தம்.
16. திருநாரணனே மன்னியவன் சரண் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)
3. ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.
4. रमा सम्बन्धीति राम: லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள். இந்த ஸம்பந்தத்தினால் பகவானுடைய பெருமைக்குப் பாதகம் இல்லை என்பதை மறுத்தவர்களுக்கு 1) जलधिसुतया सार्धंदेवो जगत्परिपालयन् परमपुरुष: सिद्धोपाय: प्रतीष्टभरस्सताम् (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) என்றும் ஶ்ரீமச்சப்தத்தில் தோற்றின நித்யபத்னீ ஸம்பந்த விஶிஷ்டமானாலும் உபாயைக்யத்திற்குக் குறையில்லை. ஶ்ரிய:பதித்வ லிங்கத்தாலும் நாராயணன் ஶப்தத்தாலுமிறே ஶ்ருதிகளில் பரதத்வ விஶேஷ நிர்ணயம் பண்ணப்பட்டது (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்) என்றும் पूर्णं तेज: स्फुरति भवती पादलाक्षा रसाङ्कं என்றும் அருளிச் செய்யப் பட்டுள்ளது (ஶ்ரீஸ்துதி)
தொடரும்