வியாழன், 19 ஏப்ரல், 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்


        ஸ்ரீவத்ஸத்தைப்பற்றி பாகவதம் தசமஸ்கந்தம் முடிவில், ப்ருகுமஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப் பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு. அடியாராகிய ப்ருகுமஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்கவேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம். ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப்போல – லாளநம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில்** பாடுகிறார். திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது. அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார். இது பெருமாள் தன்னை அடியார்க் காட்படுத்தும் முறையைக் காட்டின வழி. ‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார். லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம்முனிவர் மார்பில்தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்! பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல், இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது. 

               இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். “காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி, இவரும் சடகோபரைப்போல் க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமே வடிவெடுத் துதித்ததுபோல் இருந்தவர்कृष्णतृष्णा  तत्व- मिवोदितम् (க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்) (பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்) என்று நம்மாழ்வார் விஷயத்தில் பட்டர் ஸாதித்தது இவருக்கும் பொருந்தும். “தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம். முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார். अन्तकालेतु मामेव स्मरन् मुक्त्वा कळेबरन्| य: प्रयाति स मद्भावं यातिनास्त्यत्र संशय; || (அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய:) என்பது கீதை.

               இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதி கதி ஸாமாந்யமான மார்க்கம். அர்ச்சிஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர். சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில் चैद्यादीनाम् (சைத்யாதீ நாம்) என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது. சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன. சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

               “பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்! சீர்மறையின் செம்பொருள் செந்தமிழா லளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள் வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை. யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவசமாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது. “வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார். இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவுமாகவே சென்றது. நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தையும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர் अदान्मे ज्ञानमैश्वर्यम् स्वस्मिन्भावं च केशव: (அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ:)(ஸ்ரீபாகவதம் 1-5-39) என்று கூறினார். இத்திருப்பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை. இவருடைய பத்துப் பாசுரங்களிலும் ஜ்வலிக்கும் ஞான பக்திகளை அனுபவிப்போம்.       

தொடரும்
** ஸ்ரீசங்கர பகவத் பாதரின் "ஸ்ரீவிஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்துக்கு
அன்பில் ஸ்வாமியின் அருமையான விரிவுரை
http://thiruppul.blogspot.in/search/label/sri%20vishnu%20pathaadhi%20kesaantham
உள்ளது. விரும்புபவர்கள் அங்கு படிக்கலாம்       

திங்கள், 16 ஏப்ரல், 2018

அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் “அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்”

"காட்ட‌வே க‌ண்ட‌" (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி. मूर्तिराद्या (மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம். ப‌ர‌விப‌வ‌ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம். பெரிய‌ பெருமாள் திருமேனியிலே திரும‌லை முத‌லாகக் கோவில்கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும், ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌ போக்ய‌தையெல்லாம் சேர‌வ‌னுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌போக‌ம். உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ்ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம். நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌, ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம். பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌. உப‌ய‌ விபூதி விசிஷ்டாநுப‌வ‌த்தில் भिद्यन्ते हृदयग्रन्धिश्छिद्यन्ते सर्वसंशया:क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे प्रावरे (முண்ட‌க‌ம் 2,3,9) (பித்ய‌ந்தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திஸ்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ஸ‌ம்ஸ‌யா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே) என்ற‌ப‌டிக்கும் यत्र नान्यत्पश्यति (ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ஸ்ய‌தி) (சாந்தோகிய‌ம் -- பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும், ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது. நான்காம‌டியில் "பாட்டினால் க‌ண்டு வாழும்" என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி. முத‌ல் பாதத்தில் "க‌ண்ட‌" என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.
ந‌ம் பாண‌நாத‌ர் யோகி ஸார்வ‌பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநாகார‌ண‌மான‌ காட்சிபோன்ற‌ தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர். யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுதுபோக்கா யிருந்தது. க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து. யோகாரூட‌ராக‌ நெடுகிலுமிருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார். எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌மில்லை. ந‌ம்பிக‌ளும் இதை "முனியேறி" என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார். யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம். ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள். पश्यन् योगी परम् (ப‌ஸ்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே, தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து. முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம். முனியேறின‌ முனி இவ‌ரொருவ‌ரே.
யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி. ய‌ம‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும். ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம். அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார். "பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள். முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம். ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின் ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது. அங்க‌விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம். ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌க்ரியாத்ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது. "ந‌ல்லாடை" என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம். वस्त्रप्रावृतजानु ( வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு) ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும். ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம். இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி, ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார். இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார். அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து, உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு, பூம‌வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.
ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம். சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌ இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே. பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும்போது ज्योतिर्ज्योतिषि संयुतम् (ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்) என்று வ‌ர்ணித்த‌ப‌டி பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌ "இனி மீள்வ‌தென்ப‌ துண்டோ!" என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது. அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து. அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌து. சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது. "சிசு பால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து, அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்" என்று பார‌த‌ம். "எல்லோர் முன்னே சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது. த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்" என்று பாக‌வ‌த‌ம். அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌ வில்லை. இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார். பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும். சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேஸித்துக் க‌ல‌ந்தது. இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.
அனுபவம் தொடரும்



ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் “அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்”

அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்

(அனுப‌விப்ப‌வ‌ர் ஸ்ரீ உப‌.வே. அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமி)


ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
அமலனாதிபிரான் அனுபவம்
(அன்பில் ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமி அனுபவம்)
     தேவரிஷியான நாரதர் வீணாபாணி. அவருடைய வீணை அவருக்கு நித்யஸஹசரீ; நித்யமாக ஸஹதர்மசரீ. பகவத் குணங்களைப் பரவசமாகப் பாடி ஆனந்திப்பதே அவருடைய காலக்ஷேபம்;அவர் தர்மம். அந்தத் தர்மத்தில் 'வல்லகீ' என்னும் அவர் வீணை ஸஹசரீ. ஆத்மயாகம் செய்யும் ப்ரஹ்மவித்துக்களுக்க 'ச்ரத்தை பத்நீ' என்று சரணாகதியை விஸ்தாரமாக விவரிக்கும் வேதம் ஓதுகிறது. நாரதருடைய வீணை அவருக்குப் பத்நிபோல் ஸஹதர்மசரீ. அப்படியே நம்பாணனுக்கு அவர் யாழ் ஸஹதர்மசரீ. ஆழ்வார்கள் ரிஷிகள், த்ரமிடவேத த்ரஷ்டாக்கள்; வேதோபப்ரஹ்மணம் செய்தார்கள். அந்த ரிஷிகளில் நம் பாணர் நாரதரைப்போன்ற காயக தேவ ரிஷி. பாட்டினால் பகவானை ஸாக்ஷாத்கரிப்பவர் நாரதர். பாட்டினால் பரமாத்மாவினிடம் லயிப்பது ஸுலபம். 'வீணாவாதந தத்வத்தையறிந்த, ச்ருதி ஜாதிகளில் நிபுணராய், தாள ஞான முடையவர் அப்ராயேஸந(எளிதில்) மோக்ஷவழியை அறிவார் - அடைவார்' என்பர். நம் பாணர் இப்படி ஸுலபமாய் பரமாத்மாவினிடம் லயித்துப் பரவசமாகுபவர். பாட்டினால் கண்டு வாழ்பவர் நாரதர். இருவரும் பாட்டினால் கண்டு வாழ்கிறவரே. பாணர் துதி பாடுவர். पण-स्तुतौ (பண--ஸ்துதௌ) विपन्यव (விபந்யவ)(பாணிணி தாதுபாடம்) என்று பாடும் நித்யஸூரிகளைப் போல இவர் அரங்கனைப் பாடியே போந்தார். இவர் வீணாபாணி. யாழ்ப் பாணி. श्रीपाणिं निचुळापुरे' ( தனியன் சுலோகம்) என்றபடி பாணி என்றும் திருநாமம். வாத்யத்தோடு பாடிய ஆழ்வார் இவரொருவரே. வேணுகானம் பண்ணின க்ருஷ்ணன் ஒருவரே அவதாரங்களில வாத்யத்தோடு காயகர். வேதாந்தத்தையும் கீதையாகப் பாடினார். மற்றைய அவதாரங்களில் பாடவில்லை. வராஹரான ஞானப்பிரான் மூக்கினால் "குரு குரு" என்று சப்தித்துக் குருவானார். गुरुभिर्घोणारवैर् घुर्घुरै (குருபிர்கோணாரவைர் குருர்குரை). அபிநவதசாவதாரமான பத்து அவதாரங்களில் இவரொருவரே கண்ணனைப்போல வாத்யம் வாசித்த காயகர். "வீணையும் கையுமாய் ஸேவிக்கிற விவர்க்குச் சேமமுடை நாரதனாரும் ஒருவகைக்கு ஒப்பாவர்" என்று பிள்ளைலோகம் ஜீயர்.
      அஷ்டாங்க‌ யோக‌த்தில் ஸ‌மாதியென்னும் ல‌ய‌த்தை அடைவ‌துண்டு. அந்த‌ ஸ‌மாதியில் கிடைக்கும் த‌ர்ச‌ந‌ம், த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌மே யொழிய‌ முழு த‌ர்ச‌ந‌ம‌ல்ல‌, த‌ர்ச‌ந‌ம் போன்ற‌ மிக்க‌ தெளிவான‌ ஞான‌ம். பாட்டினால் வ‌ரும் ல‌ய‌மும் ப்ராயேண‌ அப்ப‌டியே. மோக்ஷ‌த்தில் அடைவ‌து உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌த்தின் காட்சி இவ‌ர் அர‌ங்க‌ன் முன் அம‌ல‌னாதிபிரான் பாடி அர‌ங்க‌ன‌ருளால் அக்காட்சியைப் பெற்று முக்த‌ரானார். இவ‌ர் அர‌ங்க‌ன் முன் பாடிய‌த‌ற்கு் தத்க்ஷ‌ண‌மே ப‌ர‌ம‌ புருஷார்த்த‌ முத்தியே அர‌ங்க‌ன் அளித்த‌ ப‌ரிசு. विशते तदनन्तरं (விச‌தே தத‌நந்த‌ர‌ம்) என்ற‌ப‌டி ப‌ர‌மாத்மாவிற்குள் நுழைந்து முக்திப் பேரின்ப‌ம் பெற்றார். இவ‌ர் முத‌லில் அர‌ங்க‌னைப் பாட்டாலும் யோக‌த்தாலும் ல‌யித்து் க‌ண்ட‌து த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌ மான‌ தெளிந்த‌ ஞான‌ம். அந்த‌க் காட்சிக்கும், அர‌ங்க‌னை நேரில் காணும் காட்சிக்கும் பேத‌முண்டு. அர‌ங்க‌னுடைய‌ த‌ர்ச‌ந‌ம் இவ‌ருக்கு அர‌ங்க‌ன‌ருளால்தான் கிடைத்தது என்ப‌தை ஒருவ‌ரும் ம‌றுக்க‌வொண்ணாது. இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌ம் அர‌ங்க‌ன‌ருகில் செல்ல‌க் கிடைக்கக்கூடிய‌ குல‌ம‌ல்ல‌.
    यमेवैष वृणुते तेन लभ्य: -- तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम् (ய‌மேவைஷ‌ வ்ருணுதே தேந‌ ல‌ப்ய‌: த‌ஸ்யைஷ‌ ஆத்மா விவ்ருணுதே த‌நூம் ஸ்வாம்) என்று க‌ட‌வ‌ல்லியும் முண்ட‌க‌மும் ஓதிவைத்த‌ன‌. இந்த‌ இர‌ண்டு உப‌நிஷ‌த்துக‌ளும் இதே ம‌ந்த்ர‌த்தை ஓதின‌. "வேத‌ புருஷ‌ன் இதை அபேக்ஷித்தான்" என்ப‌து ஸ்ரீவ‌ச‌ன‌ பூஷ‌ண‌ம். இந்த‌ ச்ருதிக்கு ந‌ம் பாண‌நாத‌ன் நேர் நித‌ர்ச‌ந‌ம். அர‌ங்க‌னே இவ‌ரைக் காட்சித‌ர‌ வ‌ரித்துத் த‌ன‌த‌ருகே வ‌ருவித்துத் த‌ன் காட்சியைப் ப‌ரிபூர்ண‌மாக‌த் த‌ந்தான். த‌ன் ஸ்வ‌ரூப‌ விவ‌ர‌ண‌ம் செய்தான். அவ‌ன் "உவ‌ந்த‌ உள்ள‌த்த‌னாய்" இவ‌ருக்கு விவ‌ர‌ண‌ம் செய்த‌ திருமேனியை (த‌நுவை) இவ‌ர் உல‌க‌த்திற்குத் த‌ன் பாட‌ல்க‌ளால் விவ‌ர‌ண‌ம் செய்து இன்புற்று இன்ப‌ம் ப‌ய‌ந்தார். अनुभूय हरिं शयानम् (அனுபூய‌ ஹ‌ரிஸ‌யான‌ம்) (நாத‌முனிக‌ள் சாதித்த‌ பாண‌ன் த‌னிய‌ன் ச்லோக‌ம்) என்ற‌ப‌டி தாம் அனுப‌வித்த‌ இன்ப‌த்தை உல‌க‌த்திற்குத் த‌ம் பாட‌ல்க‌ளால் சாச்வ‌த‌மாக‌ ப‌ய‌ந்தார். "காட்ட‌வே க‌ண்ட‌" என்ற‌ ந‌ம்பிக‌ள் பாசுர‌த்தில் "பெருமாள் அருளால் வ‌ரித்து அவ‌ராகக் காட்டின‌தால்தான் க‌ண்டார்" என்று यमेवैष(ய‌மேவைஷ‌) ச்ருதியின் பொருள் ஸூசிக்க‌ப் ப‌ட்ட‌து. "ஆதி" என்ப‌த‌ற்கு "வ‌லுவில் தாமாக‌வே முத‌லில் அழைத்தான்" என்னும் பொருளுரைக்க‌ப் ப‌ட்ட‌து. தான் முந்திக் கொண்டான். "த‌ம்மை விஷ‌யீக‌ரிக்கைக்கு அடியானான்", "என் பேற்றுக்கு முற்பாடானான‌வ‌ன்" என்று பிள்ளையும் நாய‌னாரும் ப‌ணித்தார். "ந‌ல்ல‌தோர் அருள்த‌ன்னாலே காட்டினான் திருவ‌ர‌ங்க‌ம் உய்ப‌வ‌ர்க் குய்யும் வ‌ண்ண‌ம்" என்று பாடிய‌ திருவ‌ர‌ங்க‌ம் காட்டும் அருள் இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌த்திற்கு எட்டுவ‌த‌ல்ல‌. அர‌ங்க‌ன் அருளி ப‌லாத்கார‌ம் செய்யாவிடில் ஸ‌ந்நிதியில் க‌ர்ப்ப‌க்ருஹ‌த்தில் ப்ர‌வேச‌ம் இவ‌ருக்கு அக்கால‌த்தில் கிடைப்ப‌து ஸாத்திய‌மோ? ம‌நுஷ்ய‌ ய‌த்ன‌த்தில் அஸாத்ய‌மென்ப‌து நிச்ச‌ய‌ம். நந்த‌னாருக்குக் கிடைத்ததுபோல் இதுவும் கேவ‌ல‌ம் தைவ‌ ய‌த்ன‌ம். ப‌ர‌மாத்மா தானே த‌ன் காட்சியைத் த‌ருகிறானென்ப‌தை அர‌ங்க‌ன் தானே வ‌ற்புறுத்தி இவ‌ரை அழைத்துத் த‌ந்து ஸ‌ர்வ‌லோக‌ ஸாக்ஷிக‌மாய் மூத‌லிப் பித்து அருளினார். இந்த‌ ச்ருதியில் காட்டிய‌ப‌டி ப‌ர‌ம‌ புருஷ‌ன் த‌ம்மை ப்ரிய‌த‌ம‌னாக‌ வ‌ரித்துத் த‌ம் திருமேனியைக் காட்டித் த‌ந்தானென்ப‌தை "என்னைத் த‌ன் வார‌மாக்கி வைத்தான்" என்று ஸூசித்தார் வார‌ம் = வர‌ணீய‌ வ‌ஸ்து.