
தேர் இழுக்கப் போப்போறேன்

வடம் பிடிக்கலாமா !

திவான் மரியாதையை ஏற்றுக் கொண்டு வடம் பிடிக்கப் போகிறார்.

தேரை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டோம்!
பெருமாள் தீர்த்தம் தெளியுங்க சாமி!!

திருத் தேரில் சீதா லக்ஷ்மணருடன் இராமன்
திருப்புல்லாணியில் இன்று திருத்தேர்.
ஒருகாலத்தில்
" ஊரெலாம் வாசல்தோறும் வெண்ணீறு தீட்டியே
யுவந்து சந்தனக் கோலமிட்
டுறுமலர்க்காவணத் தோரணப் பந்தரி
லும்பருட னம்புவியன் மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
வாரேறு கும்பமுலை மாதர் பூரணகும்ப
வாழை கன்னல் நிரைப்ப
வானவர்கள் தானவர்கள் மலரயன் சிவன்
முதல் வணங்கியே வடம்பிடிப்பத்
தேரேறி வீதிவலம் வந்து ........"
என ஆரவாரமாக கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் இப்போது நடப்பது மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
அதாவது ததியாராதனை மட்டுமே. பெருங்காயச் செப்பாக உத்ஸவங்கள் இங்கு நடந்தாலும், பக்கத்து கிராம மக்கள் எவ்வளவு உற்சாகமாக வந்து தேர் இழுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டும். அங்கங்கே வரும் "பறைக் கொட்டை" யும் ரசியுங்கள். மேள வாத்தியங்கள் இருந்தாலும், இந்த பறைக்கொட்டு வந்தால்தான் தேர் நிலை விட்டு நகரும். சமுதாயத்தின் அனைத்து மக்களையும் அணைத்துச் சென்ற பண்டைய நாள் ஏற்பாடு.
சுட்டெரிக்கும் வெய்யிலை "கோவிந்தா" கோஷங்களுடன் சமாளித்து தேரை இரண்டு மணி நேரத்துக்குள் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த எளிய மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் மீது பெருமாள் தீர்த்தம் தெளிக்கப் படவேண்டும் என்பது மட்டுமே! வீடியோவில் அதையும் கவனியுங்கள்.