சனி, 3 மார்ச், 2012

வைத்தமாநிதி 11

ஜய ராதே!

ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்தம்

(திவ்யப் ப்ரபந்தப் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ணன் சரிதம்)

(கௌஸ்துபமணி என்ற ஸ்ரீ பிரஹ்மானந்த தீர்த்த சுவாமிகள் தொகுத்தது)

03032012484

வாசமலர்ப் பொழில்சூழ் மல்லைமூதூர்
வடமதுரையில் கண்ணன் திருஅவதாரம்.

அல்லித்தாமரைமேல் மின் இடையாள் திருமகளும்,
காம்பு அணை தோள் தரணி மங்கையும்,
ஒருமதி முகத்துச் சேயிழை புலமங்கையும்,
நின் ஈர்அடி ஒன்றிய மனத்தால்
செம்பொன் கமலத் திருவடியின் இணை முப்பொழுதும் வருட,
வங்கம் வலிதடங் கடலுள் ஆயிரம்தோள் பரப்பி
முடி ஆயிரம் மின் இலக, ஆயிரம் பைந்தலைய, இராயிரம் கண்,
அனந்தன் என்னும் வரி அரவின்
உயர் வெள்ளை அணையை மேவி,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில் வீச,
துன்னிய தாரகையின் பேர்ஒளிசேர்
ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால்
இரு சுடரை மன்னும் விளக்குஆக ஏற்றி,
மறிகடலும் பன்னுதிரைக் கவரி வீச,
அறிதுயில் அமர்ந்த பருவரைத்தோள் பரம புருடனை,
கருமாணிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு, வாய், கண், கை, உந்தி, கால்உடை எம்மானை,
வெள்ளத்து அரவில் தன் கோலச் செந்தாமரைக்கண் உறைபவன்போல
ஓர்யோகு புணர்ந்த வித்தை;

தேன்உடைக் கமலத்து அயனோடு, திரிபுரம் செற்றவனும்,
இந்திரனும், கதிரவனும், சந்திரனும், தொண்டுஆர் இனமும்,
இமையோரும், துணைநூல் மார்வின் அந்தணரும்,
கார்ஆர் வரைக்கொங்கை, கண்ஆர் கடல் உடுக்கை,
சீர்ஆர் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேர்ஆற்றுப் பேர்ஆர மார்பில்,
பெருமா மழைக்கூந்தல், நீர்ஆர்வேலி நிலமங்கையும்,
மாமுனிவரும் பலரும் கூடி, மாமலர்கள் தூவி,
கொந்து அலர்ந்த நறுந்துழாய், சாந்தம், தூபம் தீபம் கொண்டு தொழுது,
ஆயிரம் பெயரால் இறைஞ்சி,
“பொருகடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியே!
சோதி தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்!
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்!
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே!
எம் ஆர்உயிரே!கருமாமுகில் உருவா!
கனல் உருவா! புனல் உருவா!சந்தோகா! பௌழியா!
ஐந்தழல் ஓம்பு தைத்திரியா! சாமவேதி!
எம்மையும் ஏழ்உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா!
நீ அன்றி யாம் ஒரு புகலிடம் இலம்,
ஆவி காப்பார்ஆர் இவ்விடத்து,
நமது இடர் கெட, அண்டா நமக்கு அளியாய்,
நல்துணைஆகப் பற்றினோம், சரண் தா”
என்று அலற்றி நின்று,
கண்ணன் அல்லார் இல்லை கண்டீர் சரண்
மண்ணின் பாரம் நீக்குதற்கே என்று வேண்டி
சரண் தா என இரங்க,
உயர்வு அற உயர்நலம் உடையவன் தான் சரண்ஆய்
அவன் மகிழ்ந்து துவர்கனிவாய் நிலமங்கை துயர்தீர,
மண்உலகில் துயரில் மலியும் மனிசர் உய்ய,
அடியார்படும் ஆழ்துயர் ஆயஎல்லாம் நிலம்தரம் செய்ய,
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க,
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
அங்கு ஒரு மாயையினால்,
துயர்இல் சுடர்ஒளி தன்னுடை ஆதிஅம் சோதி உருவை,
நின்றவண்ணம் நிற்கவே அங்குவைத்து,
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தன்
தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்,

இங்கு மன்னிய சீர்மதனன் மதுவார்சோலை உத்தர மதுரையில்,
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத
செப்பு இளமென்முலை தேவகி தன்வயிற்றில்,
செந்நாள் சொப்படத் தோன்றி,
மக்கள் அறுவரைக் கல்லிடை கூற்று இயல் கஞ்சன் மோத
இழந்த சுருப்பார் குழலி தேவகித்தாயை குடல் விளக்கம் செய்து,
மன்னுபுகழ் வசுதேவர் வாழ்முதலாய்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான்,
பெற்றோர் தளை கழல, இருட்கண் வந்து,
ஒருத்தி மகனாய் அத்தத்தின் பத்தாம் நாள் பிறந்து
ஆலை நீள்கரும்பு அன்னவன் தாலேலோ என்று
வாயிடை நிறைய தால் ஒலித்திடும் திருவினையில்லா
தாயரிற் கடைஆய தாய்,
பன்னிரு திங்கள் வயிற்றில்கொண்ட அப்பாங்கினால்
தேவகி புலம்ப, தந்தை மனம் உந்து துயர் நந்த,
ஓர் இரவில், ஊர் எல்லாம் துஞ்ச, உலகு எல்லாம் நல் இருளாய்,
உலகில் மற்ற ஆரும் அஞ்ச அரவு குடை ஆகப்போய்,

அங்கு அயல்இடத்து உற்றார் ஒருவரும் இன்றி,
அறிவு ஒன்றும் இல்லாத பெற்றம் மேய்த்துண்ணும் ஆய்க்குலம் புக்கு,
ஆலைக்கரும்பின் மொழி அனையாள் அசோதை
தொல்லை இன்பத்து இறுதி காண,
ஆயர் குலத்து ஈற்று இளம்பிள்ளை ஒன்றாய்,
எடுத்த பேராளன் நந்தகோபன் மக்கட்பெறாத
மலடன் ஏமாற்றம் தவிர்த்து,
தன் உயிர் நீல நிறத்துச் சிறுவனாய்,
மைந்நம்பு வேல்கண் நல்லாள் முன்னம் பெற்ற
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றலாய்,
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தாய்,
ஆயர்குலத்தின் அணிவிளக்காய், அடுத்த பேரின்பக் களிறாய்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கமாய்,
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய, காண்டல் இன்றி,
ஒருத்தி மகனாய், திண்கொள் அசுரரைத்தேய,
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்பேர்த்து,
ஓர் தாய்இல் வளர்ந்தான்
பரவி வானவர் ஏத்த நின்ற பரமன்
 
  


வெள்ளி, 2 மார்ச், 2012

வைத்தமாநிதி 10

[ஸ்ரீ கௌஸ்துபமணி ஸ்வாமி அடுத்ததாக ஸ்ரீஇராமாவதாரத்தை நாலாயிரத்தின் சொற்களால் சொல்வதற்கு ஆரம்பிக்கிறார். பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஏற்கனவே அனுக்ரஹித்திருப்பதால் அதை அப்படியே தனது நூலில் இணைத்துக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை பாடாததான உத்தர காண்டத்தை மட்டும் இயற்றி ஸ்ரீஇராம சரிதத்தை நிறைவு செய்திருக்கிறார். பெரியவாச்சான்பிள்ளையின் பாசுரப்படி இராமாயணம் எல்லோரிடமும் இருக்கக் கூடியதால், அதைத் தட்டச்சிடாமல் கௌஸ்துபமணி ஸ்வாமியின் உத்தரகாண்டத்தை மட்டும் இங்கு இடுகிறேன்]

வைத்தமாநிதி

பாசுரப்படி இராமாயணத்தில்

உத்தர காண்டம்

நாஅகாரியம் சொல் இலாதவர்,
நாள்தொறும் விருந்து ஓம்புவார்,
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ்,
அம்பொன் நெடுமணிமாட அயோத்திநகர் அரசு எய்தி,
திருமகளோடு இனிது அமர்ந்து,
வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி,
தூதுவந்த குரங்கு, என்று ஒழிந்திலை,
உகந்துகாதல் ஆதரம் கடலினும் பெருகச்செய்
தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதுஇல் வாய்மையினோடும்
உடனே உண்பன் நான் என்று உண்டு,

வந்த மாமுனிவரும் பாவநாசனை வியந்துதி செய்ய
அகத்தியன் வாய்த்தான் முன் கொன்றான் ---
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் ---
தன்பெரும் தொல்கதை கேட்டு
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
தீ வேள்வி மிக்க பெரும் சபை நடுவே
மிதிலைச் செல்வி உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டு
செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று,
செழுமறையோன் உயிர் மீட்டு
தவத்தோன் ஈந்த நிறைமணிப் பூண் அணியும் கொண்டு
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி
முனிவன் வேண்டத் திறல் விளங்கும்
இலக்குமனைப் பிரிந்து

அன்று புல் பாமுதலா,
புல்,எறும்பு, ஆதி ஒன்று இன்றியே,
நல்பால் அயோத்தியில் வாழும் சராசரம்
முற்றவும் வைகுந்தத்து ஏற்றி

அடல் அரவப் பகையேறி,
இலங்குமணி நெடுந்தோள் நான்கும் தோன்ற,
சுடர் ஆழிவெண் சங்கு இருபால் பொலிய,
வென்றி வில்லும்,தண்டும், வாளும் மன்னு பூணும்,
மின்னு நூலும், குண்டலமும், மார்பில் திருமறுவும்,
பொன்முடியும், வடிவும், பூந்தண்மாலைத்
தண்துழாயும் தோன்ற

விண்முழுதும் எதிர்வரத் தன்தாமம் மேவிச்சென்று
மாமணி மண்டபத்து உடன் அமர் காதல் மகளிர்
சந்து அணி மென்முலை மலராள், தரணிமங்கை, புலமகள் என்ற மூவரும்
பிறைஏறு சடையானும், சந்தமலர்ச் சதுமுகனும், புரந்திரனும்,
கதிரவனும், சந்திரனும், அளகைக்கோனும்,
இறை ஆதல் அறிந்து ஏத்த, அயர்வுஅறும் அமரர்கள்
துயர்அறு சுடர் அடி தொழுது எழ,
அமரர் அரிஏறாக, இனிது வீற்றிருந்த அம்மான் – எம்மான் –
எம்பெருமான்தன் சரிதை,
செவியால் கண்ணால் பருகுவோம்;
இன்னமுதம் மதியோம் ஒன்றே, ஏத்துகின்றோம்
நாத்தழும்ப இராமம் திருநாமம்.

இனி நாளை முதல் தொடரவிருப்பது

“ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்தம்”


புதன், 29 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 9

துருவ சரித்திரம்

      மனுகுலத்தார் தங்கள் கோவாக, எல்லைஇல் சீர்அரசன்தன் மகனாய்த்தோன்றி, நாட்டிற்பிறந்து படாதனபட்டு, மாற்றுத்தாயான கூற்றுத்தாய் சொல்ல கொடிய வனம் போன சீற்றமிலாதான் “அம்மான் ஆதிப்பிரான்! அவன் எவ்விடத்தான் யான்ஆர்? ஆவார் ஆர்துணை? நோற்று நோன்புஇலேன், ஒன்று அட்டகில்லேன், ஐம்புலன் வெல்லகில்லேன்,  கடவன்ஆகி காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன், எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே! நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் நான் அலப்புஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவனே திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாவே, உனக்கு ஆள்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? உண்ணும் சோறு பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி, மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவி, மாணி அல்லும் பகலும் நெடுமால் என்று அழைத்து ஒல்கி ஒல்கி நடந்து கசிந்த நெஞ்சொடு, வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றிப்போய், மந்திரம் கொள் மறை முனிவன், என் அப்பன் நான்முகன் தான்முகமாய் படைத்த முனிவன், அருள்பெற்று, தொல்நகரம் துறந்து, துறைக்கங்கைதன்னைக் கடந்து வனம் போய் புக்கு;

திங்கள், 27 பிப்ரவரி, 2012

Guru Paramparai Vaibhavam dated 27-02-2012

ஸ்ரீமத் திருக்குடந்தை தேசிகன் திருக்குடந்தையிலிருந்து கிளம்பி திருவணை வரை செய்த விஜய யாத்ரையை மிக விரிவாக நாட்டேரி ஸ்வாமி தனது இன்றைய உபந்யாஸத்தில் சொல்கிறார். இன்றைய உபந்யாஸம் திருக்குடந்தை தேசிகன் வைபவத்தை மட்டும் கூறாமல் அவர் மங்களாசாஸனம் செய்தருளிய திவ்ய தேசங்கள், அபிமான க்ஷேத்ரங்கள் பற்றியும் வெகு சுவையான செய்திகளைச் சொல்வதாய் அமைந்திருக்கிறது. 
இன்றைய உபந்யாஸத்தை Mediafireலிருந்து நகலிறக்கிக் கொள்ள 


To listen online

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 8

Smileஇன்றைய பதிவில்  முதல் பத்தியில் இருப்பதுபோல் நூலில் இல்லை. நண்பர் ஒருவர் பெரிய பத்திகளில் வரிகளைத் தொடர்ந்து படிப்பது கண்களுக்குச் சற்று கஷ்டமாக உள்ளது. அதையே வரிக்கு 5 அல்லது 6 வார்த்தைகளில் மடக்கி மடக்கி எழுதினால் படிக்க எளிதாக இருக்கிறது என்றார். அவர் கூறுவது சரிதானா என்று உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள முதல் பத்தியை மட்டும் அவர் விருப்பப்படி தட்டச்சிட்டிருக்கிறேன். கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

 

 

15. நாரணன் விளையாட்டு எல்லாம்  

( அலகிலா விளையாட்டுடையர்)

யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை,
தன் நாபி வலயத்துப் பேர் ஒளிசேர்
மன்னிய தாமரை மாமலர் பூத்து
அம்மலர்மேல் முன்னம் திசைமுகனைப் படைக்க
மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்.
உந்தி எழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன் தன்னைப் படைத்தவன்.
உய்ய உலகு படைக்கவேண்டி
உந்தியிற் தோற்றினாய் நான்முகனை;
வையமனிசரைப்பொய் என்று எண்ணிக்
காலனையும் உடன் படைத்தாய்,