வெள்ளி, 25 மார்ச், 2011

வேறு எங்காவது உண்டோ?

திருப்புல்லாணி உத்ஸவங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வரும் (விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்) பெரியவர்களே! திருப்புல்லாணியில் ப்ரும்மோத்ஸவ காலங்களில் சில வழக்கங்கள் கடைப் பிடிக்கப் படுகின்றன.

அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் காளி ஓட்டம் என்னும் நிகழ்ச்சி நடக்கும். மூன்றாம் நாள் இரவில் கோவிலிலிருந்து மரியாதைகளுடன், தளிகை மற்றும் பூசணிக்காய் (பலியாக – முன்னாள்களில் ஆடோ கோழியோ போகுமாம்) இவற்றை மேளதாளத்துடன் ஆலய அதிகாரிகள் திருப்புல்லாணி ஊரை வலம் வந்து அதன்பின் ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் புல்லாணி அம்மன் என்னும் எல்லைக் காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அதன்பின்னேதான் உரிய நாளில் அங்குரார்ப்பணம் செய்து உத்ஸவம் ஆரம்பிக்கும்.

அதேபோல, அங்குரார்ப்பண நாளன்று ரக்ஷாபந்தனம் செய்துகொள்ளும் பட்டர், ஸ்தானிகர் இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தப் புல்லாணி அம்மன் கோவில் பூசாரிக்கும் மரியாதைகள் செய்து வஸ்திர தானம் அளிக்கப் படும்.

பெரியவர்கள் சிலர் புல்லாணி அம்மனாகத் தான் இங்கு எங்கள் தாயார் முதலில் அவதரித்தாள் என்ற சொல்வதுண்டு. இந்தப் புல்லாணி அம்மன் கோவில் இப்போது ஸ்ரீஜெயராம பட்டரின் பெரு முயற்சியாலும், பூசாரி அரியமுத்துவின் ஒத்துழைப்பாலும் அழகான கற்கோவிலாக உருவாகி வருகிறது. புனருத்தாரண வேலைகள் தொடங்குமுன் ப்ரச்னம் பார்த்ததில் இந்தப் புல்லாணி அம்மன் கோவில் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோவிலுக்கும் முந்தியது என்று வந்தது.

இன்னும் ஒரு கொசுறு தகவல். புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே என்று தினமும் ஸேவிக்கும் அந்தணர்களில் யாருக்கும் புல்லாணி என்று பெயர் கிடையாது. அபூர்வமாக ஓரிரு தெய்வச்சிலைகள் தென்படுவார்கள். ஆனால், இதர ஜாதிகளில், அதுவும் குறிப்பாக தாழ்த்தப் பட்டோர் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறோமே அவர்களில் குறைந்த பக்ஷம் பத்தில் ஒருவருக்கு புல்லாணிதான் பெயர்..

இம்மாதிரி வழக்கங்கள் வேறு எந்த ஊர் உத்ஸவாதிகளில் கடைப் பிடிக்கப் படுகிறது?

 

வியாழன், 24 மார்ச், 2011

திருப்புல்லாணி தீர்த்தவாரி

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் பத்தாம் நாளன்று காலையில் ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாள் பெரிய திருவடியிலும், ஸ்ரீ பட்டாபிராமன் அநும வாகனத்திலும் சேதுக்கரைக்கு எழுந்தருளி சேதுவைக் கடாக்ஷிக்க, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சேதுவில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின் சேதுக்கரையிலுள்ள ஸ்ரீ ஜெயவீர ஹநுமார் சந்நிதியில் ஏக ஆசனத்தில் பெருமாள், சக்கரவர்த்தித் திருமகன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும், அதே நேரத்தில் ஸ்ரீஜெயவீர ஹநுமாருக்கும் வெகு விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனங்கள், வேத பாராயண முழக்கத்துடன் நடைபெற்று, இரவு இருவரும் திருப்புல்லாணி கோவிலை அடைந்து, பெருமாளுக்குத் தாயார் கதவடைக்க ப்ரளயகலகம் தீர்த்தக்காரரால் சேவிக்கப் பட்டு நடை திறந்து நம்மாழ்வார் இருவரையும் சமாதானப் படுத்தி அதன்பின் பெருமாள் சந்திரப் பிரபையில் புறப்பாடு கண்டருளி மறுநாள் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி விடாயத்தி உத்ஸவ அலங்கார திருமஞ்சனங்கள் கண்டருளி, இரவு நாச்சிமாருடன் சர்வாலங்கார சுந்தரராய் திருவீதிப்புறப்பாடு கண்டருளியதுடன் பங்குனி உத்ஸவம் இனிதே நிறைவுற்றது.

align="justify"> 

       திருப்புல்லாணியில் கரண்ட் என்பது எப்போ வருமோ எப்போ போகுமோ என்ற நிலையில் விரிவாக எழுத முடியவில்லை. இந்த ஒரு பாராவைக் கூட முந்தாநாள் ஆரம்பித்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன். தீர்த்தவாரியும், அதைத் தொடர்ந்த திருமஞ்சனமும் வீடியோக்களாக இங்கே!

தீர்த்தவாரி

 

சேதுக்கரையில் திருமஞ்சனம்

(சற்று பெரிய வீடியோ! தெரிவதற்கு சிலருக்கு தாமதமாகலாம்! )

 

 

வேதபாராயணத்தினால் பெருமாளைக் குளிரச் செய்தவர்கள்

மதுராந்தகம் ஸ்ரீஅஹோபில மடம் பாடசாலை வாத்யார் ஸ்வாமியுடன் வித்யார்த்திகள்.

DSC02605 

திருச்சானூர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம பாடசாலை வித்யார்த்திகள்

DSC02608

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஊரெங்கும் நிறைந்த கோவிந்தா கோஷம்

DSC02582திருப்புல்லாணியில் இன்று ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேரில் புறப்பாடு கண்டருளினார். காலை 9.50க்கு இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் திரு மகேந்திரன் வடம் பிடித்து துவக்கி வைக்க, எம்பெருமான் உவந்து கேட்டுக் களிக்கின்ற பறை மேளம் முழங்க (ஒன்று தெரியுமோ! அந்தக் காலத்திலிருந்தே உத்ஸவாதிகளில் இந்தப் பறை மேளத்துக்கென முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, அவர்களுக்கு விசேஷ சம்பாவனைகளுக்கும் திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது) தேர் நகர்ந்த ஓரிரு வினாடிகளிலேயே சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தேர் ஓடியது. வந்து கூடிய கூட்டத்திற்கு பிடிக்க வடத்தில் இடமில்லை. அளவு கடந்த உற்சாகத்தில், ஆனந்தப் பரவசத்தில் அவர்கள் எழுப்பிய கோவிந்த கோஷம் பெருமாளைக் குளிரச் செய்திருக்க வேண்டும். அதனாலேயே தேர் இழுப்பவர்களுக்கு எந்த சிரமமும் தெரியாமல் வடம்  பிடித்து இழுத்த களைப்பே தெரியாமல், சுட்டெரித்த வெயிலையே உணராமல் இழுத்தோம். இன்னும் சொல்லப் போனால் தேர் ஓட்டத்திற்கு இணையாக நாங்கள் ஓடுவதே ஒரு நேரத்தில் சவாலாக ஆயிற்று என்கிற அளவில் ஓட்டமோ ஓட்டம். சரியாக ஒரு மணி நேரத்தில் நிலைக்கு வந்து விட்டார். கூடி இழுத்த கூட்டம் மந்திரங்கள் தெரியாத கூட்டம். சாஸ்திரங்கள் அறியாத மக்கள். வேதங்களும், பிரபந்தங்களும் எம்பெருமானை ஏத்துகின்ற
DSC02577
வகையெல்லாம் முற்றிலும் அறியாத கிராமத்து ஜனங்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்கள் உள்ளத்திலிருந்து மனத்திலிருந்து உள்ளன்போடு கோவிந்தா என்று அழைத்தால் போதும் என்பதுதான். அறிவால் அவர்கள் என்றும் பெருமாளை அணுகியதில்லை. புத்தியால் ஆராய்ச்சிகள் செய்ததில்லை.  கைங்கர்யங்கள் செய்கிறோமென்று அவர்கள் எந்தப் பட்டத்துக்கோ பலனுக்கோ ஆசையும் பட்டவர்களில்லை.  இன்னும் சொல்லப் போனால் வந்திருந்த கிராமத்து ஜனங்கள் பலருக்கு அன்றாடம் உழைத்தால்தான் அதன் மூலம் கூலி கிடைத்தால்தான் ஜீவனம். அதையும் துறந்து  இதயபூர்வமாகத் தன்னை நேசிக்கும் அவர்களுக்காகவே பெருமாள் மிகவும் இறங்கி வந்து அருள் புரிவான் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே இன்றைய தேரோட்டம் அமைந்தது. “உணர்வா ரின்பமாவானை” என்று கேசவ அய்யங்கார்  வர்ணிப்பாரே அப்படி அவர்கள் தங்கள் உணர்வால் உளம் உருகி எழ்ப்பிய கோவிந்தா DSC02572
கோஷங்களாலே மனம் மகிழ்ந்த மெருமாளையும், தேரோட்டத்தில் இறுதிப் பகுதியையும் (அடியேனும் தேரிழுத்ததாலே முதலிலிருந்தே முடியவில்லை), தேரிலிருந்து பெருமாள் ஆஸ்தானத்திற்கு காலையில் எழுந்தருளியமையும் இங்கு வீடியோக்களாகக் காணலாம்.