சனி, 1 மே, 2010

படித்தேன் ரசித்தேன்

ஏற்கனவே மின்தமிழில் "மின்னரங்கத்தந்தாதி" பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இன்று படித்து ரசித்த பகுதி இது. ஸ்ரீரங்கம்  ரங்கன் என்றாலே எல்லாருக்கும் மயக்கம் அவர் மீது தீராத மோகம் என்பது ஆழ்வார்கள் முதல் அடியவர்கள் வரை ஏற்பட்டது. மின்னரங்கத்தந்தாதி எழுதுபவரோ ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கேட்கவேண்டுமா? வார்த்தைகளால் நம்மை மயக்கி அனுபவிக்க வைக்கின்றார்.  உலகமெலாம் பொய்யிலாத மாமுனிவன் என்று கொண்டாடும் ஸ்ரீமணவாளமாமுனி  பற்றி அவர் எழுதியுள்ள பாடல்கள் இங்கே.

 பாரளந்த நூற்றந்தாதியோடு பயில வேண்டிய ஆசாரியன் வாழ்த்து இஃதாகும். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவன் பெருமை அஸாதாரணமானது. பக்தி என்பதை
மிகத்துல்லியமாகக் காட்டிநிற்கும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை சிறிதேனும் ஐயம்,
மயக்கம், திரிபு என்பவற்றிற்கு இடமின்றிக் கலைவடிவில் நிலைநாட்டியது நம்பிள்ளை
அளித்து, வடக்குத்திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய ஈடு என்னும் பகவத் விஷயம்.
அந்த அரும்பொக்கிஷம் ஆரம்பத்தில் சிலகாலம் பலருக்கும் போய்ச்சேரா
வண்ணம் இருந்தது. அந்நிலையை மாற்றித் திருவரங்கனின் அருளப்பாடு அனைவரும்
கற்பதற்குரிய வாய்ப்பினை ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவனின் மூலம் நல்கியது.
அரங்கன் தன் பரிசனங்களுடன் அனைத்து உற்சவாதிகளையும் ஒரு வருட காலம்
நிறுத்திவைத்து இந்த ஈடு ஒன்றினையே மாமுனிவன் எடுத்து விளக்கச் செவி மடுத்தனன்
என்னும் செய்தி நம்மவர்க்குப் புரிந்துகொளற்கரிதாம் ஒன்று.
நம்பிள்ளை காலத்திலேயே அவருடைய காலக்ஷேபம் கேட்க அக்கம்
பக்கம் ஊரிலிருந்தெல்லாம் அனேக ஜனங்கள் திரள்வர். காலக்ஷேப கோஷ்டி கலைந்து
மக்கள் செல்கையில் பார்த்த ஸ்ரீவைஷ்ணவனான ஒரு ராஜா, ‘நம்பெருமாள் திருவோலக்கம்
கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?’ என்று வியந்தான் என்பது பின்பழகிய
பெருமாள் ஜீயர் தரும் குறிப்பு.
அதுவுமின்றி நம்பிள்ளைக் குறட்டில் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்க
அரங்கனும் அர்ச்சா சமாதி கடந்து வந்து கேட்டான்; திருவிளக்குப் பிச்சன் அதட்டி
உள்ளனுப்பினான் என்னும் செய்தியும் ஈட்டின் அருமை பெருமையை விளக்கும்.
அத்தகைய ஈடு என்ற பகவத் விஷயத்தை அனைவர்க்கும் அரங்கன் முன்னிலையில் விநியோகம்
செய்தது எத்தகைய நுட்பமிகு செயல் என்பது வரலாறு, வரவாறு, அருளிச்செயல் என்பதன்
உண்மையான தாத்பர்யம் இவையெல்லாம் நன்குணர்ந்தவர்க்கே நிலமாகும். நம்போல்வார்
இதனை நன்குணர முயல்வதே கடன்.
ஞானம், பக்தி, அனுஷ்டானம், ஆத்மகுணங்கள், பூததயை முதலிய  ஆசார்ய இலக்கணத்திற்கே
இலக்கியமாய்த் திகழ்பவர் மாமுனிகள்.
இவருடைய காலத்தில்தான் ஸம்ப்ரதாய ஏடுகள் பலவற்றைப் புதிதாகப் படியெடுத்து,
ஒப்பு நோக்கி, செவ்வனே பல படிகளை   ஏற்படுத்திவைத்தார். இந்தச் செயலை
சீடர்களிடம் நியமித்ததோடு விட்டுவிடாமல் தாமே  இரவெல்லாம் தீப்பந்தம்
ஏற்றிவைத்துக்கொண்டு தம் கைப்பட படியெடுத்ததைப் பார்த்த ஒரு சீடர், ‘சீயா! தாமே
இவ்வளவும் சிரமப்பட வேண்டுமோ?’ என்று கேட்டதற்கு, ‘எனக்காகச் சிரமப்படவில்லை.
உம்முடைய சந்ததிகளுக்காகச் செய்கின்றேன் காணும்!’ என்றாராம் மாமுனிகள்.
அன்னவர்க்கே இந்த விம்சதியாம் இருபது.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*மாமுனிவன் இருபது*
1)
எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார்
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து.
2)
தந்ததமிழ் கண்டு  தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு.
3)
மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய  நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு.
4)
தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து.
5)
மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை  எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள்  தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு.
6)
தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.
7)
அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.
8)
சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.
9)
இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.
10)
பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.
11)
மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த  வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.
12)
இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.
13)
அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.
14)
வந்தணைந்த  செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.
15)
தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.
16)
பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்பெருக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.
17)
அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.
18)
முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.
19)
ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் சாதியுமாய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.
20)
விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்

 தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.  

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

Courtesy: winmani.wordpress.com

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.


கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.
முகவரி : http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe
இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் "Turn off " என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space " அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை

புதன், 28 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி – வேட்டைக்குப் போறார் இராமன்

vettai இன்று 8ம் நாள் உத்ஸவம். சற்று முன் இராமன் வேட்டைக்கு எழுந்தருளினார். புறப்பாடு எல்லாம் சகடை என்றான பின்னர், தோளில் எழுந்தருள்வது இன்று ஒரு வேளை மட்டுமே. வேட்டையாட வேணுமாய் கோவில் ஸ்தானீகர் பிரார்த்திக்க அதை ஏற்று பெருமாள் வேட்டையாடும் பாவனையிலே முன்னும் பின்னுமாய் மும்முறை போய் வந்து இந்த வேட்டையாடும் நிகழ்ச்சி நிறைவுறும். அதன்பின் இரவிலே குதிரை வாகனப் புறப்பாட்டின்போது அதே இடத்திலேயே பெருமாள்/ இராமன் வேட்டையாடிய பாவனையில் ஒரு முயலைக் காண்பித்து கொண்டு வந்தவருக்கு மரியாதைகள் செய்வதும் வழக்கம். பங்குனி பதிவிலே பெருமாள் வேட்டையாடியதை வீடியோவாக மட்டும் இட்டிருந்தேன்.  அதைத் தொடர்ந்து நிகழும் இன்னொரு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

mun.tk அந்தக் காலத்து மன்னர்கள் ஆட்சியின் போது அரசர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவர்கள் கிராம முன்சீப்புகள். சில இடங்களில் இவர்களுக்கு மணியகாரர், நாட்டாமை என்றும் சொல்வதும் உண்டு. எங்கள் ஊரில் அவர்கள் பரம்பரையாய் வசித்து வரும் வீடு பெருமாள் திருவீதி வலம் வரும் தெருவை விட்டு சற்று உள்ளடங்கி இருக்கிறது. வழக்கமாக பெருமாள் புறப்பாட்டில், தேரடியில் ராஜ மரியாதை ஆன பிறகே மற்றவர்கள் உபகாரங்கள் கண்டருளப் பண்ணமுடியும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். மற்றவர்களுக்கு அதன்பின் தெருவில் தனி மரியாதைகள் ஏதும் கிடையாது.

mtk ராஜாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் கிராம முன்சீபுக்கு மரியாதைகள் செய்யப்பட வேண்டும் என அந்த நாளைய அரசர்கள் விருப்பத்தின் பேரில் இந்த எட்டாம் நாள் மாலை மட்டும் பெருமாள்/இராமன் வேட்டையாடிய பிறகு, மேல ரத வீதியிலிருந்து மாட வீதியை இணைக்கும் சந்தில் நுழைந்து அங்கிருக்கும் முன்சீபு வீட்டாருக்கு அருள் பாலிப்பது என ஒரு ஏற்பாட்டைச் செய்து வைத்துள்ளனர். தினமும்5 நிமிடங்களுக்குள்ளாக ராஜ மரியாதை, மற்றவர்கள் வீட்டெதிரில் ஒரிரு நிமிடங்களே பெருமாள் நின்று சமர்ப்பிக்கும் உபகாரங்களை கண்டருளல் என்கிற நிலையில், முன்சீபு வீட்டு வாசலில் மட்டும் நிறைய நேரம்(சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக) நின்று அனுக்ரஹித்து, அங்கு அளிக்கப் படும் திருக்கண் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அப்படியே மாட வீதி வழியாகவே கோவிலை அடைவது என்பது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.

இன்று முன்சீபுகள் இல்லைதான். ஆனாலும் அந்த குடும்ப வாரிசுகளுக்கு அளிக்கும் மரியாதைகள் இன்னும் தொடர்கின்றன. முன்சீபு குடும்ப வாரிசுகளும் இதை விடாமல் கொண்டாடி பாக்யத்தை அனுபவிக்கின்றனர். இவைகள் இங்கு வீடியோவாக!

வேட்டையாடப் போறார்!

முன்சீப் வீட்டு வாசலில் திருக்கண்

 

 

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி 7ம் நாள் Part 2

இதோ இப்போது புறப்பாடு கண்டருளி திருவீதி வலம் வந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊர் அழகன். அவரைத் தாங்கி நிற்கும் ஹம்ஸ வாகனத்தின் சந்தோஷத்தைப் பாருங்கள். திருவீதிகள் வலம் வந்து அடியேன் க்ருஹத்தின் அருகில் வந்து விட்டார். விரிவாக எழுத நேரம் இல்லை. கோவிலுக்கு ஓட வேண்டும். பார்த்து ரசியுங்கள். நாளை வந்து விடுகிறேன்.

IMG_7934 IMG_7936 IMG_7937 IMG_7940 IMG_7941 IMG_7942 IMG_7943 IMG_7950

திருப்புல்லாணி 7ம் நாள் உத்ஸவம் Part 1

நேற்று திருக்கல்யாணம் ஆன ஸ்ரீராமனும், சீதையும் இன்று மாலை மஞ்சள் நீராட்டம் கண்டு (அனானிமஸ் அவர்களே! சூர்ணோத்ஸவம் என்பது இதுதான். பள்ளியறையில் சேர்த்தியான ராமனையும், சீதையையும் மஞ்சள் நீராட்டம் காணச்செய்து திருவீதிப் புறப்பாட்டுக்கு தயாராக்குவது என்று வைத்துக் கொள்ளுங்கள்) லக்ஷ்மணன் உடன் வர திருவீதிப் புறப்பாடு கண்டருளினர்.

மஞ்சள் நீராடி திருவீதிப் புறப்பாட்டுக்குத் தயாராய்

 

IMG_7927

எங்கே இளவலின் வில் என்று ஒரு கேள்வி முதல் நாள் கேட்டவரே! அது அடியேனின் குறை. ஆங்கிள் சரியில்லாததால் படத்தில் தெரியவில்லை. இப்போது பாருங்கள்?

IMG_7928

கோவில் வாசலில்

IMG_7929  

IMG_7930

புறப்பாட்டுக்குப் பின் திருமஞ்சனம் கண்டருள தயாராய் சீதா, லக்ஷ்மண ஸமேதராய் ஸ்ரீ ராமன்.

 

 IMG_7933

இனி தொடர்வது திருமஞ்சனக் காட்சிகள்.

Thirumanjanam Part 1

Thirumanjanam Part 2

Thirumanjanam Part 3

திருக்கல்யாணத்துக்கு முன் திருவீதிப்புறப்பாடு

 

முதல் படத்தில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் துணைவியாருடன்.

IMG_7889 IMG_7891 IMG_7893 IMG_7896 IMG_7897 IMG_7898 IMG_7899

IMG_7901 IMG_7904 IMG_7908 IMG_7909 IMG_7910 IMG_7911 IMG_7915 IMG_7918 IMG_7919 IMG_7920 IMG_7921 IMG_7923 IMG_7924

திருப்புல்லாணி உத்ஸவம் 6ம் நாள் திருக்கல்யாணம்.

இன்று ஸ்ரீசீதா ராமன் திருக்கல்யாண வைபவம். முன்னாலெல்லாம் நாங்கள் திருக்கல்யாணம் முடிந்து வீடு திரும்ப அதிகாலை 4 மணி கூட ஆகிவிடும். சிறு வயதில், அருகில் கீழக்கரை இருப்பதால் பெருமாளும் முஸ்லிம்களைப் போல இரவில் வெகு நேரம் கழித்து மணம் முடிக்கிறார்போலும் என்றெல்லாம் கேலி பேசியிருக்கிறோம். ஆனால் இப்போது கைங்கர்யத்துக்கும் சரி, கண்டு களிப்பதற்கும் சரி ஆட்கள் இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை முன்படுத்தி வந்து, இன்று வீதிப் புறப்பாடு ஆறு மணிக்கெல்லாம் துவங்கி ஸ்ரீராமன் கோவிலுக்குத் திரும்பி திருக்கல்யாணம் முடிந்து நாங்கள் 8 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்தாகி விட்டது. கல்யாணம் காண வந்தவர்களை வீடியோவில் எண்ணி விடலாம் பாருங்கள்.
அப்புறம் ஒரு வேண்டுகோள். இந்த வீடியோவைப் பார்க்கும்போதே பல கேள்விகள் எழும். சிறு வயதிலிருந்தே நான் கேட்டு பதில் கிடைக்காமல் அலுத்துப் போன பல சந்தேகங்கள் உங்களுக்கும் தோன்றலாம். பெரியவா நாளிலிருந்தே அது அப்படித்தான் என்ற ஸ்டாண்டர்டு பதிலைகிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக கேட்டு வருகிறேன். அதிலும் இன்று ஒரு அபத்தமும் நடந்தது. வீடியோவை உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 
குருடும் குருடும் ஆடும் குருட்டாட்டம் என்பது எங்களுக்குப் பொருந்தும்.


திங்கள், 26 ஏப்ரல், 2010

Sri Laksmi Sahasram

Is it possible for anybody to make an ignorant like adiyen to fully understand and enjoy  the great and rich "Lakshmi Sahasram" and also make to memorize side by side? can a person like adiyen who have no snana praapthi even with Sanskrit can immerse in it? " Who said it is impossible?" is the answer from Navalpakkam Sri Dr. Kannan swami who needs no introduction to the world of Srivaishnavas and whose mastery over Tamil, Sanskrit and English is very well known to the world. To enable everybody to enjoy the great work of Sri Kavi Venkatadhvari he has very recently released a set of 5 cds on "Lakshmi Sahasram" in very simple Tamil. The set is very reasonably priced at Rs.350 and can be had from Sri M.S. Ravindranath, 1746/2-2, 3rd Cross, Rama Mohanapuram, Bangalore- 560 021. Ph 080- 23321413.  Sri Dr. M.S. Sanathkumara has rendered the Sthothras in an enchanting tone and metre.Just for realising the quality, a sample has been added here. Adiyen beg Dr. Kannan swami to pardon me as adiyen is acting against what has been said in the CD cover " Stealing is a sin. Copying is stealing. Mahalakshmi dislikes stealing"  But this is a kind of anxiety to make the world know that a great work is available to be enjoyed. Please approach Sri Ravindranath for Cds.

Introduction
Get this widget | Track details | eSnips Social DNA

Part 1 Sample
Get this widget | Track details | eSnips Social DNA

திருப்புல்லாணி – 5ம் நாள்

IMG_7858

 

 

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாற்றுமுறையின்போது டூரிஸ்ட் கூட்டமும் கலந்து கொண்டதால் சற்று கூடுதல் பேர்கள் கோஷ்டியில் கலந்து கொண்டனர் என்பதைத் தவிர வேறு விசேஷங்களில்லை. பங்குனியின் டிட்டோதான். இது காலையில் திருமஞ்சனத்துக்கு தயாராயுள்ள ஸ்ரீ ராமன்.