வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017
நம்மாழ்வார் வைபவம்
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017
நம்மாழ்வார் வைபவம்
संक्षेपोऽसौ विभागं प्रतयति च ऋचां चारुपाठोपपन्नम् |
सम्यग्गीतानुबद्धं सकलमनुगतं सामशाखासहस्रं
संलक्ष्यं सामिधेयै: यजुरपि दशकै: भात्यथर्वा रसैश्च ||
ஸங்க்ஷேபோsஸௌ விபா₄க₃ம் ப்ரதயதி ச ரு̆சாம் சாருபாடோ₂பபந்நம் |
ஸம்யக்₃கீ₃தாநுப₃த்₃த₄ம் ஸகலமநுக₃தம் ஸாமஶாகா₂ஸஹஸ்ரம்
ஸம்லக்ஷ்யம் ஸாமிதே₄யை: யஜுரபி த₃ஶகை: பா₄த்யத₂ர்வா ரஸைஶ்ச ||
खात्मादेरिन्द्रियादेरुचितजननकृत् संसृतौ तन्त्रवाही ।
निर्दोषत्वादिरम्यो बहुभजनपदं खार्हकर्मप्रसाद्यः
पापच्छिद्रह्मनाडीगतिकृदतिवहन् साम्यदइचात्र वेद्यः ।
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017
நம்மாழ்வார் வைபவம்
पाञ्चालीगात्रशोभाहृतहृदयवधूवर्गपुंमावनित्या
पत्यौ पद्मासहाये प्रणयिनि भजत: प्रयसीपारतन्त्र्यम् |
भक्ति: शृङ्गारवृत्त्या परिणमति मुनेर्भावबन्धप्रथिम्ना
योगात् प्रागुत्तरावस्थितिरिह विरहो देशिकास्तत्र दूता: ||
பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா
பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |
ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா
யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||
பாஞ்சாலியின் அவயத்தின் அழகைக் கண்டு, அத்தால் அபஹரிக்கப்பட்ட மனத்தையுடைய ஸ்திரீகள் அந்த அழகைத் தாங்கள் புருஷர்களாயிருந்து அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் மிகுதியினால் தங்களைப் புருஷர்களாகவே பாவித்துக்கொண்டாற் போலே ச்ரிய:பதியான பகவான் இடத்தில் ஸ்திரீகளைப் போலவே பாரதந்த்ர்யத்தை வஹித்த ஆழ்வாருக்கு உண்டான பக்தியானது ச்ருங்காரமாகப் பரிணமியா நின்றது. இப்படி உண்டான ஆசை பாஹ்ய ஸம்ச்லேஷம் கிடைக்கவேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விரஹதசை உண்டாயிற்று. இத்தசையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வதற்கு ஆசார்யர்கள் தூதர்களாய் ப்ரார்த்திக்கப் படுகிறார்கள். இதுதான் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் தூதப்ரேஷணாதிகளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்கப்பட்டதாயிற்று. “பாஞ்சாலியிடத்தில் உண்டான காதலை நிரூபித்த மஹரிஷியின் வர்ணனம் மிகவும் க்ராம்யமாயிரா நின்றது. ஆசார்யனோ அதை மிகவும் அழகாய் இங்கு ஸங்க்ரஹித்திருப்பதைப் பாரும்” என்று அஸ்மத் ஸ்வாமி ஓர் உருவிலே ஈடுபடும்படியாய் இருந்தது.
ஆகிலும் வேதங்கள் போலே ஸம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்படாதோ? கானப்ரதானமாயிருப்பதினால் நிஷேதிக்கப்பட்டதாயிற்றே? வேதங்களைப் போலத் தத்வார்த்தங்களைத் தெரிவிக்கும் ஏற்றம் இதற்கு உண்டோ? என்கிற சங்கைகளைப் பரிஹரித்தருளுகிறார்.
भाषागीति: प्रशस्ता भगवति वचनात् राजवच्चोपचारात्
सा जगस्त्यप्रसूतात्विह परिजगृहे भूमिकाभेदयोग्या |
यत्तत्कृत्यं श्रुतीनां मुनिगणविहितै: सेतिहासै: पुराणै:
तत्रासौ सत्त्वसीम्न: शठमथनमुने: संहिता सार्वभौमी ||
பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||
பாஷா கீதி: ப்ரசஸ்தா
பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.
பாஷா ப்ரசஸ்தா
ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.
கீதி: ப்ரசஸ்த:
ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொட்னுபோகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத்கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.
பாஷாகீதி: ப்ரசஸ்தா
த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.
பகவதி வசநாத்
பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.
ராஜவச்சோபசாராத்
இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.
ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது
தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,
ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக்கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.
இஹ பரிஜக்ருஹே பூமிகாபேதயோக்யா
இந்தக் காரணங்களைக் கொண்டு நம் பூர்வர்கள் இந்த ப்ரபன்ன வேஷத்திற்கு இவைகள் மிகவும் உசிதம் என்று இவற்றை அங்கீகரித்திருக்கிறார்கள் என்று ஆசார்யர்களின் அப்யுபகமும் காட்டப்பட்டது.
யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம் இத்யாதி
உத்தரார்த்தத்தில் முனிகணங்களினால் வகுக்கப்பட்ட இதிஹாஸ புராணங்களுடன் சேர்ந்த வேதங்கள் எந்தெந்த கார்யங்களைச் செய்வதற்காக ஏற்பட்டவைகளோ, அவற்றை எல்லாம் ஆழ்வாருடைய ஸார்வபௌமியான ச்ருதியாகிற உபநிஷத்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ரபந்தத்தின் வைலக்ஷண்யம் சொல்லப்பட்டதாயிற்று. அங்கு ச்ருதிகளின் கருத்தை அறிய உபப்ரும்ஹணங்களான இதிஹாஸ புராணங்கள் தேவையாயிருந்தன. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்படிப்பட்ட உபப்ரும்ஹணங்களை எதிர்பாராமலே அவ்வர்த்தங்களை சந்தேகமற நிரூபிக்கின்றன என்கிற விசேஷமும் சொல்லப்பட்டதாகிறது.
இங்கு ச்ருதிகளும் சேர்த்துக் கூறப்பட்டிருப்பதினாலும், “ஸார்வபௌமீ ஸம்ஹிதா” என்று ஆழ்வாருடைய ப்ரபந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்பதினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹணமன்று, வேதங்களைப் போலவே துல்யமான ப்ரமாணம் என்றதாயிற்று.
இந்த ஏற்றத்தையே வேதாந்தாசார்யரான ஸ்வாமியும், “மாசில் மனம் தெளி முனிவர் வகுத்ததெல்லாம் நம் மாலுகந்த ஆசிரியர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.
ஆகிலும் வேதங்கள் ருக், யஜுஸ், ஸாம, அதர்வ என்று நாலு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனவே? அவற்றின் அர்த்தங்கள் ப்ரஹ்ம ஸூத்திரங்களில் 4 அத்யாயம் 16 பாதங்களில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றனவே? அந்த ஏற்றம் இப்பிரபந்தத்திற்கு எங்ஙனே உண்டாகும் ? என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோகத்தில் “யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்” இத்யாதியாக அருளிச் செய்ததை, அதாவது இதிஐஆஸ புராணாதிகளுடன் கூடிய ச்ருதிகள் எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ – எந்தெந்த அர்த்தங்களை ப்ரதிபாதிக்கின்றனவோ – அவைகளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்றன என்பதையும் உபபாதித்தருளுகிறார் – “ஆதௌ சாரீரகார்த்த க்ரமம்” என்றாரம்பித்து.