சனி, 17 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

வினைக்கூடம்

916. பித்தம யர்த்தடி யேனுட னீங்கு
         மத்தறு வாய்நிகழ் வாயில ரங்கன்
         முத்தொலி பாதுகை யோதும லர்க்கண்
         ணத்தனொ டொத்தப யத்திரு நீயே.         6

வேற்றுமைக்கூடம்
 

917. யவளையன் னடைவனோ வனையவள் ளணிவளோ
         யவளனா னடைநலாள் யவளவற் கனிலுளாள்
         யவளனா துறுபணிக் கெவளனில் யவணிலை
         யவளிறைப் பதநிலை யபயமெற் கருள்வளே.        7

அடிமடக்கு

918. எரியிடு கடுவினை யவிய நலம்
         புரிதவர் கழுவா யிறையவளே
         தெரிதலி னரிமா வடிநிலைநீ
         புரிதவர் கழுவா யிறையவளே.             8

அடிமாலைமாற்று

919. மாரபாதமாரரீ
         ரீரமாதபாரமா
         பூரிபாதுதாரனா
         னாரதாதுபாரிபூ                                9

திரும்பாமெய்யெழுத்து

920. அவநீறுஞ்
         சடகோபர்
         தலைமானே
         ழனயாயே.                                    10

முரசபெந்தம்

921. நாதபாதரபாதமா
         வேதபாரமபாதநா
         நாதபாமதுபாதைவா
         பூதபாதரபாதைகா                        11

TPM_0001                     

சொற்பொருண்மாறாமாலைமாற்று

922. பாதுபா திதி யேதயே
         யீதுயீ நிதி பானுபா
         நாதநா வவ கீதிகீ
         பூதபூ திதி தேனிதே.                  12

சரபெந்தம்

923. இராமனோடுறாகமத்
         திராசனப்ப தாவனீ
         இராமனோடறாநமக்
         கராதனத்திதாவனீ                         13

கருடகதிசக்கரபெந்தம்

924. பாதாவாயேமாதாவாநா
         தாதாவாமாதாதாநாபா
         பாதாநீதான்காலாயேகப்
         பாதாயீரம்வாயோதும்பா                14

 

TPM_0002

TPM_0003

இருசிருங்காடகசக்கரபெந்தம்

925. வானார்காரியமாகுமா
          னானாவுருவாபாதுகா
          கானாடுயவேயாகுநேர்
          தானாவேதவுகாதிவா                      15

TPM_0004

இருசதுக்கசக்கரபெந்தம்

926. பரதன்பணிதிருவா
         தரவிற்பநரவணி
         பரதன்னணியுருபா
         தரவிந்தநலவளே                             16

TPM_0005

நாலாரச்சக்கரவேண்டளப்பதுமபெந்தம்

927. பூதநாவலரோதபூ
          பூதரோதளிமோதபூ
          பூதமோகறுவேதபூ
          பூதவேங்கடநாதபூ                            17

TPM_0006

TPM_0007

பதினாறுதளப்பதுமபெந்தம்

928. வாவாகோவாநாவாமூவா
         தேவாராவாரோவாரீவா
         ரேவாதாவாபூவாகாவா
         னாவாயாவாநாவாயாவா                   18

TPM_0007

சதுரங்கதுரங்கபெந்தம்
                     

                     1   
929. மாதாபாதாபூமாநாதா
       மோதாதாராதாமாவாமா
       நீதாதோகாநாவாகா
       தாதாகாயாவேதாகாமா                           19

                        2
930. மாதாபூவாமாநாயாதா
        பாதாநாகாதாமாதாமோ
        தோதாதாதாகாகாமாமா
        வாதாமாவேராதாநீகா.                           20

TPM_0009

வெள்ளி, 16 அக்டோபர், 2009

முன்னுரைக்கு ஒரு கட்டியம்!

“ திருவரங்கத்தில் “நம் சடகோபருக்கு” முதன்மை, தலைமை.  வைகுந்தத்தில் “நம்பெருமாளுக்கு” முதன்மை, தலைமை. இவ்விரு முதன்மையுள்ளும் இவ்விரு தலைமையுள்ளும், இறைவனாகிய பரன் முதன்மை பெரிதா காதலனாகிய புருடோத்தமன் தலைமை பெரிதா, அல்லது, அடியாராகிய சடகோபர் முதன்மை பெரிதா, காதலியாகிய சடகோபநாயகியின் தலைமை பெரிதா, என்றதுதான் சேடியாகிய இறைவனும் சேடராகிய சடகோபரும் வேதமூர்த்திகளாய் ஒன்றிச் செய்யும் முடிவு காணாததோர் ஆநந்தமீமாஞ்சை (பேரின்ப ஆராய்ச்சி). அருளில் சேடனோடு ஒன்றிய சேடியின் பெருமை மிக்கதா, அன்பில் சேடியோடு ஒன்றிய சேடனின் பெருமை மிக்கதா? சேடிக்கு சேடன் ஆருயிராகும் அருமை மிக்கதா? சேடனுக்கு சேடி ஆருயிராகும் அருமை மிக்கதா? சேடி இறைமையில் உலகம் யாத்துள்ளதா? சேடன் அடிமையில் உலகம் யாத்துள்ளதா? இறைவன் நல்கும் அபயம் மிக்கதா? அடியார் புரியும் அஞ்சலி மிக்கதா? ஈதே அவ்வாராய்ச்சி. ஒன்றோடொன்று நிலைபேர்க்கலாகாது ஒன்றிநிலைத்துள்ளதால் அவ்விருமையின் ஒருமையே தேற்றம். அஃதே விசிட்ட ஒருமை. அத்தேற்றம் தெளிதற்கே அவ்வாராய்ச்சி. “உடனாயிருவரும் நோக்குவாம், உடனாயிருவரும் நுகர்வாம், உடனாயிருவரும் வீரியம் செய்வாம், யாமோதுமிதே தேசுடைத்தாக, இருவரும் அன்பே செய்யக் கடவோம்” (உபநிடதம் தமிழ் செய்தது) என்று மயர்வற மதிநலம் அருளும் குருவாயும் அருளப்பெறும் சீடனாயும் உபநிடதம் தானே செய்யுமோர் ஆநந்தமீமாஞ்சை ஈதே. “புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீயென், செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் – அவிவின்றி – யான் பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய் உள்ளு” “ஆரென்னை ஆராய்வார் ……. நங்கண்ணனும் வாரானால்” என்று சடகோபரும், “ஞானியெனப் பெறுவானென தாருயிர், தாளிது வென்மதம் தானொன்றாமே” “ஞானியெனப்பெறு மாமனப் பெரியோன் பெறுதற்கரிய வென் பெரும்பேறேயாம்” என்று பரம் பொருளும் சேர்ந்து செய்யும் மீமாஞ்சை அதுவாகும்.”

    இது யார் எழுதியதாயிருக்கும் என யூகிப்பது அடியேன் வலையைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு சிரமமாயிருக்காது. அடியேன் யாருடைய பரம ரசிகன் என்பது இங்கே பலருக்கும் தெரிந்த ஒன்றே. இது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அவர் பதிப்பித்த முதலாயிரத்துக்கு அவரே “அருளிச் செயல் மான்மியம்” என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. கிட்டத் தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் தேடி, நான்கு நாட்களுக்கு முன் கண்டெடுத்த பொக்கிஷம்.  46 பக்கங்களில் 46 மாதங்கள் படிக்க வேண்டியவற்றை அடக்கி வைத்திருக்கும் அற்புதக் கருவூலம். இதைப் பற்றி அடியேனிடம் சொல்லித் தேட வைத்தவர் ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக” ஆசிரியர் ஸ்ரீ T.C. ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. இது கிடைத்த சந்தோஷத்தில் வரும் ஐப்பசி மாத இதழிலிருந்தே இந்த “அருளிச் செயல் மான்மியம்” முன்னுரையை  “ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக”வில் தொடராக வெளியிட அவர் முடிவு செய்திருக்கிறார். முழுவதும் படித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. இதுவரை சந்தாதாரர்களாக இல்லாதவர்கள் hayagreeva_tcs@yahoo.co.in க்கு மெயில் அனுப்பி சந்தா விவரங்கள் அறிந்து இதை முற்றாக அனுபவிக்கலாம்.

   இப்படி எழுத கண்டிப்பாக ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்காரால் மட்டுமே முடியும் என்று யூகித்திருப்பீர்கள் இல்லையா?

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தமிழ்நாட்டு பிராமணர்கள்

நேற்று இராமநாதபுரம் அருகிலுள்ள குளத்தூர் கிராமத்தில் புரட்டாசி சனிக்கிழமை கருட வாகன புறப்பாடு. மூர்த்தி Zi6_0202சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற வசனமே இவரிடமிருந்து தான் தோன்றியதோ என நம்மை யோசிக்க வைக்கும் அளவு சிறிய வடிவில் 10-10-09_2056ஸ்ரீலக்ஷ்மிநாராயணப் பெருமாள் மூலவர். அவருக்கு ஏற்றாற்போல் இன்னும் சிறிய வடிவில் உத்ஸவர் ஸ்ரீநிவாஸர். நேற்றைய அநுபவங்களை நாளை சொல்கிறேன். அதற்கு முன், கூகுள் குழுமத்தில் உள்ள “மின்தமிழ்” குழுவில் நான் இப்போது படித்த ஒன்றை இங்கே காணலாம்.

 

 இன்று University of California, Los Angeles (UCLA) வெளியிட்ட ஒரு உரையின்
பகுதி கீழே: இன்னம்பூரான்
Brahmans, Society and the State in Colonial and Post-colonial Tamilnadu by
Professor Chris Fuller, London School of Economics

*A CISA seminar. Brahmans, the traditional caste elite of Tamilnadu, who
make up no more than 2.5 per cent of its population, are very
well-represented in the IT industry...*
Wednesday, October 14, 2009
2:00 PM - 4:00 PM
10383 Bunche Hall
Los Angeles,

Brahmans, the traditional caste elite of Tamilnadu, who make up no more than
2.5 per cent of its population, are very well-represented in the IT industry
and are now among the leading mobile service people of today’s global
economy. Tamil Brahmans, however, have been unusually successful in the
modern world of educated, professional employment from the nineteenth
century to the present day, and this paper looks at why this has been so. It
argues that a combination of factors, some more obvious than others, all
have to be taken into account in explaining Brahman success; most of these
factors have been discussed previously, but the literature has tended to
focus on some at the expense of others. The first factor is actually
anti-Brahmanism and the reservations system, which have encouraged or forced
Brahmans to look for new opportunities, often outside Tamilnadu. A second
factor is the legacy of caste traditions of education and learning, and the
Brahmans’ modern educational success. A third factor is the unusual facility
with which Brahmans migrated from village to city and further afield, and
then became urbanised quickly. A fourth factor is significant change in the
status of women among Tamil Brahmans over the last hundred years. A fifth
factor pertains to the Brahmans’ position in the social structure and their
relationships with other castes, in both rural and urban areas. All these
factors, which interact with each other, are also constitutive of the
Brahmans’ changing relationship with society and the state during the
colonial and post-colonial periods.
About the Speaker:

Chris Fuller is Emeritus Professor of Anthropology at the London School of
Economics. His first fieldwork (1971-2) was in Kerala among the Nayars and
the Syrian Christians, and his work particularly focused on kinship among
the Nayars, famous for their matriliny. In 1976, Fuller started field
research in the great temple of Madurai in Tamilnadu, which is dedicated to
the Hindu goddess Minakshi. During the next twenty-five years, he
periodically visited the temple to study the priests, whose lives changed
radically during that time, although he also did extensive research on the
temple’s highly elaborate ritual cycle. From 2003-2005, with other
colleagues in LSE, Fuller worked on a major research project on regionalism,
nationalism and globalisation in India, and his research focused on
middle-class company managers and software professionals in the city of
Chennai (Madras). From 2005-08, with Haripriya Narasimhan, he carried out a
research project on a group of Tamil Brahmans, focusing on this traditional
elite’s modern transformation into a migratory, urbanised, trans-national
community. Fuller has also researched and written extensively on popular
Hinduism and Hindu nationalism, the caste system, the anthropology of the
state and other topics.
Selected publications

   - 2008 (with Haripriya Narasimhan) From landlords to software engineers:
   migration and urbanization among Tamil Brahmans.*Comparative Studies in
   Society and History* 50: 170-96.
   - 2008 (with Haripriya Narasimhan) Companionate marriage in India: the
   changing marriage system in a middle-class Brahman subcaste. *Journal of
   the Royal Anthropological Institute* (N.S.) 14: 736-54.
   - 2007. (with Haripriya Narasimhan) Information technology professionals
   and the new-rich middle class in Chennai (Madras). *Modern Asian Studies*,
   41 (1), pp. 121-150.
   - 2005. (co-edited with Jackie Assayag) *Globalizing India: Perspectives
   from below<
http://www.anthempress.com/product_info.php?cPath=121&products_id=206...>
   *. London: Anthem Press.
   - 2003. * The renewal of the priesthood: Modernity and traditionalism in
   a South Indian temple <
http://www.pupress.princeton.edu/titles/7677.html>
   *. Princeton: Princeton University Press.
   - 2004. *The camphor flame: Popular Hinduism and Indian
society<
http://www.pupress.princeton.edu/titles/7823.html>
   *. Princeton: Princeton University Press. (Revised and expanded edition.)
   - 1984. *Servants of the goddess: The priests of a South Indian temple*.
   Cambridge: Cambridge University Press.

*Cost: Free Seminar*
For more information please contact

Juliana Espinosa
Tel: 310-206-2654
c
...@international.ucla.edu
www.international.ucla.edu/southasia

*Sponsor(s):* Asia Institute <http://www.asia.ucla.edu>, Center for India
and South Asia <
http://www.international.ucla.edu/southasia>,
History<
http://www.sscnet.ucla.edu/history>

இன்னம்பூரான்