சனி, 14 ஆகஸ்ட், 2010

மனம் கவர்ந்ததொரு திருமண அழைப்பிதழ்

திருமணங்களுக்கு அழைப்பது ஒரு தனிக் கலை. அதிலும் இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்துத் திருமண அழைப்பிதழ்கள் மற்றவைகளிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பல வகையிலும் சிந்தித்து வடிவமைப்பது பெருகி வருகிறது. சிந்திக்கத் தெரியாத அடியேனைப் போன்ற சிலர் "இதுதான் வழக்கம்" என்ற போர்வையிலே 30 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரியே அடிப்பதும் உண்டு. வித்தியாசமாகவும் இருக்க வேண்டும், வைணவ சம்ப்ரதாயங்களையொட்டி நடக்கின்ற திருமண நிகழ்வுகளை அவை பற்றி அறியாதாரும் தெரிந்து கொள்ள வேண்டும், அழைப்பிதழைப் படிக்கும்போதே மனம் மகிழ வேண்டும் என்ற நோக்கிலே அமைந்த ஒரு அழைப்பிதழ் இன்று அடியேனை அடைந்தது. அழைப்பிதழ் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ள அந்த அழைப்பிதழை இங்கே காணலாம். திரு இராமன் அடியேன் குடும்பத்தார் எல்லார் மீதும் பரிவு கொண்ட ஒரு சீமாட்டியின் சம்பந்தி என்பதும், தமிழின்மீது அளப்பரிய காதல் கொண்டு ஏராளமான கவிதைகள் புனைந்து வரும் திரு நாராயண ஐயங்காரின் சம்பந்தி என்பதும் அடியேனுக்குக் கூடுதல் சந்தோஷம். வில்லிபுத்தூர்காரர்களிடம் தமிழ் கொஞ்சி வருவதில் வியப்பொன்றுமில்லைதான்.
Please click on the image below to zoom it and read conveniently

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக