சனி, 16 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 13

ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது. இவருடைய ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீசதுஶ்லோகி, ஸ்ரீஸ்தோத்ர ரத்னம், ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹம் இவற்றிற்கு விஸ்தாரமாக வ்யாக்யாநமிட்டும், “ஆகம ப்ரமாண்யம்”, “ஸம்வித்ஸித்தி”, “ஈசுவர ஸித்தி” “ஆத்ம ஸித்தி புருஷ நிர்ணயம்” இவற்றின் தாத்பர்யார்த்தாத்தங்களை “ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை” முதலிய ஸ்ரீஸூக்திகளில் வெளியிட்டருளியுள்ளார். மேலும், “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹ”த்தில்  सास्त्र सारार्थ उज्यते --ஸாஸ்த்ர ஸாரார்த்த உஜ்யதே –(ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்) என்பதற்கு இவ்விடத்தில் கீதார்த்தஸங்க்ரஹம் ஶாஸ்த்ர ஸாரார்த்தம்.  सर्वगुह्यतमं ஸர்வகுஹ்யதமம் (கீதை 18-64) என்று ஆரம்பித்து அர்ஜனனை ஸாவதாநமாய் இருக்கும்படி செய்து मन्मना भव मद्भक्त: மந்மநா பவ மத்பக்த: (கீதை 18—65) सर्वधर्मान् परित्यज्य ஸர்வதர்மாந் பரித்யஜ்ய (கீதை 18 – 66) என்று இரண்டு ஶ்லோகங்களால் சொல்லப்பட்டது. ஸாரார்த்தமாவது பக்தி யோகமென்று  “கீதா பாஷ்ய”த்தில் சொல்லியிருப்பதோவெனில் அங்கப்ரபத்தி பரமாகச் சொல்லும் பக்ஷத்தில் ப்ரபத்தியைக் குறித்துப் பக்தி அங்கியாகையினாலே ப்ரதாநமாகையினால் என்றும் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டில் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே பக்தி ப்ரபத்தி இரண்டும் ஶாஸ்த்ர ஸாரார்த்தம் என்ற பதத்தினால் சொல்லப்பட்டுள்ளது.  प्रीत्यैव कारित: ப்ரீத்யைவ காரித: (கீதார்த்த ஸங். 31) ஶாஸ்த்ர விருத்தமாக கேவலம் தன்னுடைய இச்சையை பற்றி செய்யலாம் என்பதை ஶாஸ்த்ரம் வேண்டா என்றபடியன்று. இங்கு ஶாஸ்த்ரம் கொண்டே அறியவேண்டுகிற கைங்கர்யம் தன்னில் ஸ்வாமி ஸந்தோஷ ஜனகத்வமடியாக ஶேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் சொல்லுகையிலே இதற்குத் தாத்பர்யம் “ப்ரீத்யைவ” என்கிற அவதாரணத்தாலே ஸாதநத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னுமிடம் உபாயதாம் பரித்யஜ்ய என்று விவரிக்கை யாலே வ்யக்தம். ஶாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் விவக்ஷிதமானாலும் நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்கு ஶாஸ்த்ரமே ப்ரமாணம் என்னும் இடம் நிஜகர்ம ஶப்தத்தாலே ஸூசிதமாயிற்று.

वपुरादिषु வபுராதிஷு (ஸ்தோத்ர ரத்னம்) என்ற ஶ்லோகத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்து,  मम नाथ மம நாத (ஸ்தோத்ர ரத்னம் 55) என்பதால் அதற்காக அநுஶயிக்கிறார். இதைத் தவறு என்று சிலர் கூறியதற்கு

ஶாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று. ஆக இரண்டு ஶ்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையே யாகிலும் ‘ந மம’ என்று ஸ்வ ஸம்பந்தம் அறுக்கையே (ரஹஸ்யத்ரயஸாரம்) अहमपि तवैवास्मि हि भर:’ அஹமபி தவைவாஸ்மி ஹி பர: (ஸ்தோத்ர ரத்னம்) என்னும்படி பர ஸமர்ப்பண ப்ரதாநமான ஶாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றருளி இவருடைய அநுஷ்டானமே ஶாஸ்த்ரீயமானது என்று ஸமர்ப்பித்து அருளியுள்ளார். இப்படியே  प्रसीद मद्वृत्तमचिन्तयित्वा ப்ரஸீத மத்வ்ருத்தமசிந்தயித்வா (ஸ்தோத்ர ரத்னம்) என்பதற்கு இந்த ஸ்தோத்ரத்தில் ஆத்யந்தங்களில் பண்ணின ஆசார்ய புரஸ்காரம் இங்கு அருளிச் செய்கிற ப்ரபத்திக்கு அபேக்ஷிதமாயாதல் வைகல்ய பரிஹாரார்த்த மாயாதலாய் உபயுக்தமாய் வந்ததித்தனை (ரஹஸ்யத்ரய ஸாரம்) என்று அருளிச் செய்திருப்பதும், தம் ஆசார்யரான மணக்கால் நம்பிகளை ஸ்தோத்ரம் பண்ணாதே அவருக்கும் ப்ராசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறித்து ஸ்தோத்ரம் செய்துள்ளதற்கு  காரணத்தை ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தியில் ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் என்றருளிச் செய்துள்ளார்.

இப்படி ஸ்ரீகுருபரம்பராஸாரத்தில் குருஶிஷ்ய பரம்பரையை நன்றாக நிரூபித்துள்ளார்.

24. ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)

‘பெரிய நம்பி முதலான பரமாசார்யர்களும் தம்தம் ஸூத்ரங்களின்படியே யஜ்ஞாதிகள் பண்ணினார்கள் என்னுமிடம் ஸர்வருக்கும் ப்ரஸித்தம் என்று அருளிச் செய்துள்ளார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 12

30. ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்  (नाथोपज्ञं प्रवृत्तम्)(ஸ்ரீதத்வமுக்தா கலாபம்) ‘அகஸ்த்ய ஸேவிதமான தேஶத்திலே அநேக தேஶிகாபதேஶத்தாலே அவதரித்தருளினான் இவ்வாசார்யர்களில் ‘ ஈஶ்வர  முனிகள் பிள்ளை நாதமுனிகள். இவர் ந்யாயதத்துவம் என்கிற ஶாஸ்த்திரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார். இவருக்கு நம்மாழ்வார் ஆசார்யரானார். தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
नाथेन मुनिना तेन भवेयं नाथवानहम् |
यस्य नैगामिकं तत्त्वं हस्तामलकतां गतम् ||

                                                (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று அருளிச்செய்து ஸ்ரீந்யாய தத்வ வாக்யங்களை ந்யாய பரிஶுத்தி முதலியவற்றில் பல இடங்களில் உதாஹரித்தும் காண்பித்துள்ளார்.

31. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்|
சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் ||
नम्स्याम्यरविन्दाक्षं नाथभावे व्यवस्थितम्|
शुद्धसत्त्वमयं शौरेरवतारमिवापरम्||
(யதிராஜ ஸப்ததி)

32. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீமணக்கால் நம்பியைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தை
அநுஜ்ஜிதக்ஷமாயோகமபுண்யஜநபாதகம்
அஸ்ப்ருஷ்டமதராகம் தம் ராமம் துர்யமுபாஸ்மஹே
अनुज्झितक्षमायोगमपुण्यजनबाधकम्
अस्पृष्टमदरागं तं रामं तुर्यमुपास्महे 
(ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்க்ஷை உண்டாக்கி உபதேஶித்தது பரமாசார்ய குலத்திற்கு தாம் ஒரு கிஞ்சித்காரம் பண்ணுகையிலும் ஆசார்ய நியோகத்தைக் கடுகத் தலைக்கட்டுகையிலும் உண்டான த்வரையாலும் சிரகால பரீக்ஷாதிகள் வேண்டாதபடி போதநந்து முஹு: க்ரமாத் (बोधनन्तु मुहु: क्रमात्) என்கிற யுக தர்மாநுஸாரத்தாலும் உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி) என்று இவர் ஸ்ரீஆளவந்தாரிடம் தாமே சென்று அவருக்கு வேதாந்த காலக்ஷேபம் சொல்லியது ஶாஸ்த்ரீயமானது என்று ஸ்தாபித்தருளியுள்ளார். ஸ்ரீதத்வடீகையில் 
ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம் (रक्षितत्वं तु रामार्यै: त्र्य्यन्तार्थ हि सूचितम् ) என்று அருளிச் செய்வது இவருடைய ப்ரபாவத்தைக் கூறுகிறது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.


 

siRiya thirumadal tele-upanyasam dated 11-08-2014

The 12th tele-upanyasam on Thirumangai Azhwar's "siRiya thirumadal" deliveed by Natteri Sri Rajagopalacharyar swami on 11-08-2014 is available at

http://www.mediafire.com/listen/2e4r5mjkt09gski/012_madal_(11-08-2014).mp3