திங்கள், 14 ஜூன், 2010

இது சந்தைக்குப் புதுசு.

image

PDF பற்றி தெரியாதவர்களோ அல்லது உபயோகிக்காதவர்களோ கிடையாது. தினந்தோறும் ஏதாவது புதிது புதிதாய் pdf reader, editor என்று வந்து கொண்டே உள்ளது. எல்லாரும் adobe reader, Nitropdf, Foxit என அவரவர்களுக்கு சௌகர்யமான ஏதோ ஒன்றை பயன்படுத்தி pdf fileகளை படித்து வருகிறோம். ஆனால் அவையெல்லாமே ஒரு விதத்தில் ஒற்றுமை. நாம் விரும்பும் வழியில் அவை இயங்கா. மேலிருந்து கீழாகவோ (vertical) அல்லது பக்கவாட்டிலோ (Horizontal) {a small news: There is a serious discussion – rather almost finalised – to remove this “Z” from English alphabet} மட்டுமே படிக்க முடியும்.

ஆனா, அடியேனைப் போல சில வேலை இல்லாதவங்களுக்கு மாறுதலா அதாவது நிஜத்திலே புத்தக பக்கங்களைப் புரட்டிப் படிப்பதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவதுண்டு. அந்த குறை தீர புதுசா martview என்ற பெயரில் ஒரு pdf reader வந்துள்ளது. படத்திலே உள்ளது போல பக்கங்களைப் புரட்டிப் படித்து சந்தோஷப்படலாம். வழக்கமான முறையில் வெர்ட்டிகலாப் படிக்கணும் அல்லது பக்கவாட்டில் ஸ்லைடாக நகரணும் அப்படின்னு விருப்பப் படறவர்களுக்கு வழியுமிருக்கு. தம்ப்நெயில்களைப் பார்த்து வேண்டுகிற பக்கத்துக்கு நேரடியாகவும் செல்லலாம். உங்களிடம் இருக்கும் Ebooks ஐ அங்கு upload செய்யலாம். அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை download செய்து கொள்ளலாம்.

Martview can be downloaded from here.

adiyen also want to make it clear that this provides a different way of reading pdfs and Ebooks. But Adobe reader/ Foxit/Nitro pdf all provide much more facilities.