சனி, 25 ஜூலை, 2009

சரணாகதிமாலை

நேற்றைய தொடர்ச்சி

"பகவந்நாராயணாபிமதாநுரூப ஸ்வரூபரூப குணவிபவைச்வர்ய, சீலாத்யநவதிகாதிசயாஸங்யேயகல்யாணகுணகணாம் பத்மவநாலயாம் பகவதீம், ஸ்ரீயம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம், அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரண:சரணமஹம் ப்ரபத்யே"

[பகவானான நாராயணனுக்கு இஷ்டமாகவும், தகுந்ததாகவும் உள்ள ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி, ஐச்வர்யம், சீலம் முதலான எல்லையற்ற மேன்மையையுடையவையும், கணக்கற்றவையுமான கல்யாண குணகணங்கள், இவற்றை உடையவளும், பத்மவனத்தை இருப்பிடமாக உடையவளும், பூஜிக்கத்தக்கவளும், எப்போதும் எம்பெருமானைவிட்டு அகலகில்லாதவளும், தோஷமற்றவளும், தேவதேவனான எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியும், எல்லாவுலகிற்கும் தாயாயிருப்பவளும், விசேஷமாக அடியேனுக்கு அன்னையாயிருப்பவளும்,கதியற்றவர்களுக்குக் கதியாயிருப்பவளுமான ஸ்ரீதேவியை, வேறொரு கதியற்ற அடியேன் சரணம் அடைகிறேன்.] என்பது சரணாகதி கத்யம் (1)

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் உள்ள சில பங்க்திகள் பின்வருமாறு:---

"62. த்ரிககுப்தாமா -- மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்ட ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களுக்கும் இடமாயிருப்பவர். இந்த ஆறு குணங்களிலும் இரண்டிரண்டு ஒவ்வொரு கூறாக வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றியே, 'த்ரியுகர் -- மூன்று இரட்டையுள்ளவர்' என்று திருநாமம். அல்து 'த்ரிககுத் + தாமர்' என்று இரண்டு நாமமுமாம். த்ரிககுத் -- மூன்று கொண்டைகளோடு கூடிய வராஹாவதாரத்தைச் செய்தவர். தாமா -- ஒளி உருவமானவர்."

"123. மஹாதபா:-- சிறந்த ஜ்ஞானமுள்ளவர். ஆறு குணங்களில் , ஞானம், பலம், என்னும் இரண்டு குணங்கள் ஸங்கர்ஷணன் கூறுகளாக வகுக்கப் பட்டுள்ளன. அவற்றில், ஞானமாவது -- ஜனனமரணங்களாகிய ஸம்ஸாரமார்க்கத்தில் அநாதிகாலமாக நடந்துகொண்டு வருந்தும் ஜீவராசிகளுக்கு ச்ரமபரிஹாரம் செய்வதற்காக அந்த அந்தக் கார்ய காரணங்களை அறிந்து கார்ய வர்க்கங்களைத் தம்தம் காரணங்களில் அடக்குவதற்குரிய ஸர்வஜ்ஞத்வம்.

"124. ஸர்வக:-- ஸம்ஹரிக்கப் பட்டனவற்றையெல்லாம் தாம் அடைந்து வஹிப்பவர்; இதனால் பலம் என்னும் இரண்டாம் குணம் குறிப்பிக்கப் பட்டது. பலமாவது -- அப்படி ஸம்ஹரிக்கப் பட்டவற்றையெல்லாம் தம்மிடத்தில் வைத்துத் தாங்குதற்குரிய வன்மை. இது மேற்சொல்லிய ஜ்ஞானத்திற்கு முக்யமான அங்கம்.

"125.ஸர்வவித்:-- ஸம்ஹரிக்கப் பட்டவற்றை யெல்லாம் திரும்பவும் படைத்துக் கார்யங்களான ப்ரபஞ்சங்கள் அனைத்தையும் அடைகிறவர். இங்கு ப்ரத்யும்நன் என்னும் வ்யூஹம் குறிப்பிக்கப்படுகிறது. ஐச்வர்யம் வீர்யம் என்னும் இரண்டு குணங்கள் ப்ரத்யும்ந வ்யூஹத்தின் கூறுகளாக வகுக்கப் படுகின்றன. அவற்றுள், ஐச்வர்யமென்பது -- விசித்ரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை வெளிப்படுவது. அதனை இந்த நாமம் தெரிவிக்கிறது.

"126. பானு:-- எல்லாவற்றையும் படைத்தும் தாம் விகாரமில்லாமல் விளங்குபவர். இது வீர்யம். வீர்யமாவது -- ஒரு விகாரமும் தன்னிடத்தில் சேராமலிருக்கும் ஸாமர்த்தியம்.

"127.விஷ்வக்ஸேந:-- எங்குமுள்ள ஜனங்கள் தம்மை ரக்ஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி செய்பவர். இது ரக்ஷிப்பதைத் தொழிலாகவுடைய அநிருத்த வ்யூஹம். சக்தி, தேஷஸ் என்னும் இரண்டு குணங்கள் அநிருத்த வ்யூஹத்திற்குச் சிறந்தவைகளாக வகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் சக்தியாவது -- எதையும் காப்பாற்றும் ஸாமர்த்தியம். அதனை இந்த நாமம் குறிப்பிக்கிறது.

"128. ஜனார்த்தன:-- தமது ரக்ஷணத்திற்கு விரோதம் செய்யும் சத்ருஜனங்களை உதவிதேடாமல் அழிப்பவர். இங்கு இரண்டாவது குணமாகிய தேஜஸ் குறிப்பிக்கப்படுகிறது. தேஜஸ் என்பது -- தனக்கு ஓர் உதவியைத் தேடாது கார்யத்தை முடிக்கும் திறமை.

பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் ப்ரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப் பட்டிருந்தாலும் அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்துரைத்தது.

"பரஸ்வரூபம் அகில ஹேயப்ரத்யநீகத்வத்தாலும் கல்யாணைகதாநத்வத்தாலும் ஸ்வேதரஸமஸ்த வஸ்துவிலக்ஷணமாய், விபுத்வாத்தேசத: பரிச்சேதரஹிதமாய் நித்யத்வாத் காலத:பரிச்சேதரஹிதமாய் ஸர்வமும் தனக்கு ப்ரகாரமாகத்தான் ப்ரகாரியாய்த் தனக்கு ஒரு ப்ரகார்யாந்தர மில்லாமையாலே வஸ்துபரிச்சேத ரஹிதமுமாய் ஜ்ஞாநாநந்தமயமாய் ஜ்ஞாநபலைச்வர்ய சீலாத்யநந்த கல்யாணகுண கண மஹோததியாய் ஸ்ரீய:பதியாய் ஸ்வேதரஸமஸ்தத்தையும் வ்யாபிக்குமிடத்தில் அப்ராக்ருதமாய் சுத்த ஸத்வமயமாய் ஸ்வாஸாதாரணமாய் புஷ்பஹாஸ ஸுகுமாரமாய் புண்யகந்த வாஸிதாநந்ததிகந்தராளமாய் ஸர்வாபாச்ரயமாயிருந்துள்ள திவ்யவிக்ரஹம்போலே வ்யாபித்து தரித்து நியமித்து இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகமாய்க்கொண்டு சேஷியாயிருக்கும்" [ஈடு. முதல் ஸ்ரீய:பதி]

வெள்ளி, 24 ஜூலை, 2009

சரணாகதிமாலை

6ம் பாடல் விளக்கம் தொடர்கிறது.

ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:-- மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான பரவாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள் அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)

பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ; பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்; ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர் சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்; தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)

திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும், மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக வ்யூஹசதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)

ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும் பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள் இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும், "ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச, பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;" என்ற சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.

(i) ஜ்ஞாநமாவது -- எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது -- ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது-- ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது -- ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது -- தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.

(vi) தேஜஸ்ஸாவது -- வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.

(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி
நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு:
ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும், தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஜ்ஞாநமாவது -- எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]

(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ
யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும். சக்தியாவது -- ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் -- சேராதவற்றைச் சேர்ப்பது]

(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது -- எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]

(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய
ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம்
குணதத்வார்த்த சிந்தகை:

[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது, குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது. ஐச்வர்யமாவது -- எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]

(5) தஸ்யோபாதாந பாவேபி
விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம்
அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது. இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும். அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும். வீர்யமாவது -- ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை -- விகாரமில்லாதிருத்தல்.]

(6) தேஜஸ்ஸாவது -- ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்

"செழுங்குணங்க ளிருமூன்று முடையார்" என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.

வியாழன், 23 ஜூலை, 2009

ஸ்ரீவேதாந்த தேசிக கத்யம்

ஏற்கனவே சென்ற ஆண்டில் ஸ்ரீவேதாந்த தேசிக கத்யத்தை ஒலி வடிவில் கொடுத்திருந்தேன். அதைப் பாடிய சென்னை நங்கநல்லூர் ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி மாமி இங்கு ஆடி அமாவாசைக்கு வந்திருந்தார். அவரிடம் மீண்டும் அதை ஒளிப் பதிந்து இங்கு இட்டுள்ளேன். ஓரிரு நாட்களில் வரிவடிவமாகவும் இங்கு இடுவேன். 70 வயதில் மாமி குரலில் உள்ள கம்பீரத்தை இனி ரசியுங்கள்.


செவ்வாய், 21 ஜூலை, 2009

Choose a font to print

Do you often print documents? Here is an interesting research on the use of ink by different fonts. You can yourself decide if you want to cut down costs on ink for your printers. Please look at the image here. Please click on the image to get it zoomed in.


ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசை. சென்ற பல வருடங்களாக ஒவ்வொரு ஆடி, தை அமாவாசை தினங்களிலும், சென்னையிலிருந்து சாமான்கள், கைங்கர்யபராள் எல்லாரையும் அழைத்துவந்து இங்கு வருகின்ற அத்தனை ஸேவார்த்திகளுக்கும் ததீயாராதனம் செய்துவைத்து மனமுகக்கும் திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தினர் இந்த ஆண்டும் வந்து சிறப்பாக ததீயாராதன கைங்கர்யம் செய்தனர். ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் கட்டப் பட்ட பிறகு அங்கே நடக்கின்றது. ஆசீர்வாதக் காட்சி இங்கே வீடியோவாக

திருப்பாதுகமாலை

21. விம்பவெதிர் விம்பப்பத்ததி
711. மாயன ரண்மனை மங்கையர்கட்
காயந லப்படி மக்கலமா
வேயதெ ருள்வடி வென்றெனுமத்
தூயப தாவனி போற்றுதுமே. 1

712. அணியுனை யரங்கமா லணிந்தொ துங்குகாற்
பணியது பேணியப் போது மப்பனுக்
கணவரி பாது! நின் கண்க ருத்துமான்
இணையுரு மேவநின் றெதிர்வி ளங்குவான். 2

713. திருவரி பாதுகாய்! திகழு நின்னிடை
வருமுன தெண்டிசைப் பாலர் தம்முருத்
தெரியெதிர் நீழல்கண் டீசர் வேறுநீ
தருமொரு சங்கையிற் போல்வ ணங்குவார். 3

714. தொழவரு சுராசுரர் மோலி யவ்வவை
யெழுமுன் தண்ணலில் விம்ப மாயிரம்
பொழிதலி லாங்குடன் போத பாதுகாய்!
வழிவரு மவர்க்கிடு வண்ண நண்ணுவாய். 4

715. தேவர்க ணினக்கென வீந்த பாகுடம்
மேவரு ணாரணன் பாது! நின்னிடைப்
பூவரு விம்பமின் பூக்க வவ்வவை
ஆவலி னீயுவந் தாத ரித்தவாம். 5

716. கனநெடு கற்கசக் கற்க ளான்றயான்
வனமலர் பாதமெவ் வாறு தாங்குவல்
எனவரி தாண்மலர் நீழ லாமரை
மினினிறை பாதுனத் தவிசி லேந்தியே!. 6

717. உனையரி தாளினிற் புனையு மக்கணம்
இனவரி மீதெதிர் நீழ லிற்பரன்
வனமலி தன்னொரு வடத லந்திகழ்
நனவுரு பாது! நன் றறிவு றுத்துவன். 7

718. உனதிடை பணிந்தெதிர் பலித்த புங்கவர்
வனையரி திருவிழா வவதி யிற்பினும்
நனியெதிர் துளங்களில் நாடி நின்கணே
இனிதவ ராடவ பிரத மென்னவாம். 8

719. பலவுன கற்களிற் கண்டு தன்னுருக்
கலிதரு மூழிதோ றந்த ணர்பலர்
இலகுவி லிற்றையே யியற்றி யோவென
மலரவ னையுற மலர்தி பாதுகாய்!. 9

720. அணிதிரு வரங்கமா லணிந்து பாதுனைப்
பணைமிக வொதுங்கவந் தப்பு ரத்தவன்
துணைவிய ருருக்கணின் கண்டு ளங்களில்
இணையவ ரூசலாட் டென்று தோன்றுமே. 10

721. தவநிதி பாதுகாய்! தாழ்ந்து நின்முனோர்
நவையறு பின்னவ னரசி யல்வகை
நுவலவு னன்மணி யூடு றாசனக்
கவினொளிர் தன துருக் கண்டு வெள்கினன். 11

722. நிலவடி யிடத்திட விராமன் மீண்டுனைக்
கலவுன மணிக்களிற் கவியி ராக்கதர்
வலவனொ டடிநிலாய்! வயங்க வாங்குளோர்
பொலியுனை விளங்கவான் யான நோக்கினார். 12

723. உலகின ரிடுக்கணன் றொடுக்கு நீதிநீர்
மலிமணி பாது! நின் மணிக்க ணத்தொளிர்
நலமிகு சாமரை நீயு றிஞ்சுமாற்
றலரது கீர்த்தியாஞ் சீர்த்தி நாறுமே. 13

724. உலகுக ணோக்கநீ யுவந்து லாவுகால்
உலகுக ணின்கணே ரெதிர்து ளங்களில்
உலகுக ளன்றுதன் குக்கி வைத்தளித்
திலகவ னென்னதா ணிலை! விளங்குவாய். 14

725. உவணமு வந்தரி யூர வானவர்
அவர்படி யூர்வர்தாம் பாது னோடவன்
புவிசெல வும்பர்தம் பிம்ப முன்னிடை
அவிர்தலி லொத்தொரு வாக ராவரே 15

726. ஒளியினளி யமைக்குமணி யிமைக்கும் பாதூ!
ஒருங்குசுரர் மகளிருனை வணங்க வாங்கே
தெளியுருவத் திருநிகழுந் தேவி! நின்கண்
தெரியுமவ ருருவமெனும் விரக தொன்றிற்
கிளரெழிலந் நரவளியன் றொடைப டைத்த
பேதைதமைக் காணவுடனாண வென்றோ
களிமிகநின் னவையறுமா மேனி நீமக்
கடலிலொரு குடியெனவந் தாடு வாரே. 16

727. அத்தனடை நத்துமணிச் சோதி மல்கும்
அடிநிலை! யுன் னிடையமல வரங்க னத்தன்
ஒத்ததிருப் பதகமல மலர்த்தி நின்னோ
டுய்யவிது வையமென நடந்து நாடு
மொத்தமுமே யத்தனது கோயின் மீண்டு
மொய்யதிரு வோடுபணிப் பள்ளி யேறித்
தொத்துமுனைக் கழற்றியுமம் மெத்தை யோடு
முனிலொளிர் தன் முகிலுருவத் திலகுவானே. 17

728. உகவைமிக வுனையிறைவ னணிந்து பாவால்!
உலகடைய நடந்தருளே சுரந்த ளிக்கும்
தகவிலிரு மருங்குதிரு நெருங்கு கோலந்
தருதிருபூ மடந்தையர்க ணடந்த வாறே
அகமகிழ வவருனையே யிமையா துன்னும்
அருமையினின் மணியிலவர் நிலவு நேரிற்
றிகழழகன் திருவடியின் சேவை நீயே
தெளியவர் தமக்குமருள் புரிகின் றாயே. 18

729. தொல்லிறைவன் முனந்துவரை வயங்கு மோரை
யொருபதினா றாயிரவர்க் கொவ்வோர் மேனி
ஒல்லவிலொவ் வொருவருட னுளங்க லந்த
உத்தமனவ் வொத்தனணி யேறு நின்சீர்
வல்லரியின் வரிகளென விளங்கு கல்லின்
வளரொளிமீ தெதிர்விளங்கு முறையில் வள்ளல்
பல்லுருவம் படைத்தரிபா தொருத்தி நின்கண்
படிந்தொருதன் படிக்கேழில் பரிதெ ரிப்பான். 19

730. தாணக நின்கண் ணாநக மேனீ
நீணல மேறும் நீரெதிர் நீமம்
சேணும தந்நேர் விம்பெதிர் விம்பம்
மாணரி பாதிம் மாதிரி சாலும். 20

திங்கள், 20 ஜூலை, 2009

ந்யாஸதசகம்

நேற்றைய தொடர்ச்சி

பந்தல்குடி திருமலை அய்யங்கார் விரிவுரை

பகவந் - "மைத்ரேய! பகவச்சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித: நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய: ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி, ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத: பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி, பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித: சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:" (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! 'பகவான்' என்னும் சப்தம் ஸர்வகாரணங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. '(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன், 'ஸ்வாமி' என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே! அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது. 'பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது' என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

"பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன்" (திருவாய்மொழி 1-3-5){(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறேஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது. (அம்பகவன்) -- ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ; "அந்யத்ரஹ்யுபசாரத:" பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம். (அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) -- "நமஸ்யந்தச்சமாம் பக்த்யா" என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தானிறே. அங்கநாபரிஷ்வங்கம்போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது--- ஈடு"}

"இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும். இவ்வர்த்தத்தை 'நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும் 'உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும், 'சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்' (திருவாய்மொழி 10-10-10) என்றும், 'அமலன்' ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள். மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக் கும். இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும். இக்குணங்கள் எல்லாம் ஸர்வகாலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும். பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள்தோறும் அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்" [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]

"வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவ ரூபத்திற்கு பரரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது. இப்பக்ஷத்தை 'குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ, ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:' (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள் 'ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ; சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று. [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரயசிந்த நாதிகாரம்.]

ஞாயிறு, 19 ஜூலை, 2009

கோடாக் வீடியோ காமரா


அடியேனது பெண் எனக்கு ஒரு கோடாக் வீடியோ காமரா ஒன்றை அன்பளித்தாள். அதில் எடுத்த முதல் பதிவு இங்கே. என்னுடைய முதல் பதிவில் எங்கள் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்வாமி தேசிகன், இருவரும் கடந்த சில மாதங்களாக தினந்தோறும் திருச்செவி சாற்றும் ரிக் வேத கோஷம் இவைதானே இடம் பெற வேண்டும்!

ந்யாஸதசகம்


( பகவந்: -- ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸு என்கிற ஆறு குணங்கள் நிறைந்த எம்பெருமானே! தேவி: --ஸ்ரீபூமி நீளைகள், பிராட்டிமார்கள்: பூஷண -- திருவணிகலன்கள்: திருவாபரணங்கள்: ஹேதி -- திவ்யாயுதங்கள்: ஆதி - திருவணுக்கள் முதலானவைகளால்: ஜுஷ்டஸ்ய -- அடையப் பெற்ற: தவ -- தேவரீருடைய: நிரபராதேஷு -- குற்றமற்ற : கைங்கர்யேஷு --குற்றேவல்களில்: அடிமைகளில்: மாம் -- அடியேனை: நித்யம் -- ஒழிவில் காலம் எல்லாம், எல்லாக் காலத்திலும், நியுங்க்ஷ்வ -- நியமித்தருள வேண்டும், விநியோகித்துக் கொள்ளுக.

அகில விபூதிகளுடன் கூடிய தேவரீர் விஷயத்தில் அபராதம் இல்லாத கைங்கர்யத்தை அடியேன் செய்யும்படி நியமித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்.

ஸ்ரீபூமி நீளைகளாகிற பிராட்டிமார்களாலும், திவ்யாபரணங்களாலும், திவ்யாயுதங்களாலும் அடையப் பெற்று அதனால் ஆநந்தம் அடையும் தேவரீரது, அபராத லேசமும் புகவொட்டாத கைங்கர்யங்களில் நித்யமாக அடியேனை இறுத்திக் கொள்ள வேணும்.

ஷாட்குண்யபரிபூரணனே! அகில ஜகத்தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டு ஸர்வ ஜகத் சரீரகனாய் தேவிமார்களுடனும் ஸகல கல்யாண குணங்களுடனும் கூடிய தேவரீர் விஷயத்தில் இங்குச் சரீரம் உள்ளதனையும், பின்னர் யாவதாத்மபாவியாகவும் எவ்விதக் குற்றமும் இல்லாத கைங்கர்யங்களைச் செய்யும்படி அடியேனை நியமித்தருள வேண்டும்.

[இனி பந்தல்குடியாரின் வியாக்கியானம் தொடர்கிறது. குறைந்தது 7 நாட்களாவது எழுத வேண்டி வரும். பொறுத்தருள்க]