வியாழன், 29 மே, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 6

              12 ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.
भरताय परं नमोस्तु तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजाम् |
यदुपज्ञमशेषत: पृतिव्यां प्रथितो राघवपादुका प्रभाव: ||
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் |
யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா  ப்ரபாவ:||
 
                                                                                                     (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
          பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.
       13. ராமாநுஜ  என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும் என்கிற அர்த்த விஶேஷம் இவருடைய அநுஷ்டானத்தினால் தெரிவிக்கப் படுகிறது என்பதை ப்ரபந்நனால்
             ப்ரார்த்தநீயமான ஶேஷியுகந்த கைங்கர்யத்தை இளைய பெருமாளுடையவும் இவருடைய அவதார விஶேஷமான திருவடிநிலையாழ்வாருடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே தெளிவது
          ஸாரார்த்த போதகமான சரம ஶ்லோகம் அங்கப்ரபத்தியை சொல்லுகிறதே தவிர ஸ்வதந்த்ர ப்ரபத்தியைக் கூறவில்லை. ஸர்வ தர்மங்களின் ஸ்வரூப த்யாநம் சொல்லப் பட்டிருக்கிறது. ஸர்வ பாப ஶப்தமான புத்தி பூர்வமாகத் தெரிந்து செய்யப்பட்ட உத்தர பாபங்களையும் குறிக்கிறது. இதுபோன்று விருத்தமாக எல்லா ப்ரமாணங்களுக்கும் அர்த்தங்களைக் கூறுபவர்களுக்கு ஸ்வாமி அவர்கள் பக்ஷங்களையெல்லாம்    கண்டித்து தத்வார்த்தத்தை “ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரா”திகளில் அருளிச் செய்தபடி ஸர்வஜ்ஞனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனால் உபதேஶிக்கப்பட்ட கீதையில் எல்லா உபாயங்களும் ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளன. எல்லா உறவினர்களையும் கொன்றுவிட்டு ராஜ்யத்தை பெறுவது சரியில்லையே என்று மனக்கலக்கத்துடன் யுத்தம் செய்ய உற்சாகமிழந்து நின்ற அர்ஜுனனுக்கு வர்ணாஶ்ரம தர்மங்களையெல்லாம் எடுத்துக் கூறி, க்ஷத்ரியனுக்கு சண்டையிடுவதே தர்மம் என்றும், ஆகையால் நீ யுத்தம் செய்யவேண்டும் என்று இரண்டு ஸேனைகளுக்கும் நடுவில் நின்று கொண்டு கீதையை உபதேஶித்தான் கீதாசார்யன்.
         இந்த ப்ரகரணத்திற்கு அநுகுணமாகவே எம்பெருமானார் ஸ்ரீகீதாபாஷ்யத்தில் அருளிச் செய்தபடி. ஆகிலும் ஸர்வாதிகாரமான ஸ்வதந்த்ர ப்ரபத்தி இந்த ஶ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஸ்ரீஶரணாகதி கத்யத்தில் நிரூபித்திருக்கிறார். இதைக் கடாக்ஷித்து சரம ஶ்லோகம்ப்ரபத்தி மோக்ஷத்திற்கு நேரில் உபாயம் என்பதைச் சொல்லுகிறது என்று ஸ்பஷ்டமாக நிரூபித்தருளியபடி இந்த கீதா ஶாஸ்த்ரமானது அர்ஜுனனைக் குறித்து உபதேஶிக்கப்பட்டதால் எல்லாருக்கும் பொருந்தாது என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக,
              தன் திருவடிகளைப் பெறுகைக்கும் மற்றும் அபிமதமானவை எல்லாத்துக்கும் பொதுவான ஸாதநமாய் ஆநுகூல்ய ஸங்கல்பாதி வ்யதிரிக்த பரிகர நிரபேக்ஷமாய் லகுதரமாய் க்ஷணமாத்ர ஸாத்யமான ரஹஸ்யதமோபயத்தை ஶ்ரோதவ்ய ஶேஷமில்லாதபடி உபதேஶ பர்யவஸானமான சரமஶ்லோகத்தால் ஸகல்லோக ரக்ஷார்த்தமாக அருளிச் செய்கிறான். (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)
        अनुचितपदवीभि: चिन्तयित्वा प्रयातान्यलमलमतिमात्रैरद्य चित्तविषादै: | उपनिषदमुदारामुद्वमनू क्कापि लक्ष्ये शरणमुपगतान्त: त्रायते शार्ङ्गधन्वा||  
        அநுசிதபதவீபி: சிந்தயித்வா ப்ரயாதாந்யலமலமதிமாத்ரைரத்ய சித்தவிஷாதை: | உபநிஷதமுதாராமுத்வமநூ க்காபி லக்ஷ்யே சரணமுபகதாந்த: த்ராயதே சார்ங்கதந்வா|| (ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா) என்றும்,
    “இது அர்ஜுனனைக் குறித்து உபதேஶிக்கப் பட்டதேயாகிலும் உபதேஶம் செய்தவன் ஸர்வலோக ஸாதாரணமாகையினாலும் உபதேஶம் செய்யப்பட்ட உபாயம் ஸர்வருக்கும் பொது என்று உபநிஷத் ப்ரஸித்தமாகையினாலும் இது ஸர்வருக்கும் ப்ரயோஜனமுடையதாகிறது” என்று அருளிச் செய்தபடி.
      14. ராமாநுஜ  என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.
     15. ராமாநுஜ  என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் பெருமையை “ஸ்ரீயாதவாப்யுதயம்” “ஸ்ரீகோபால விம்சதி” முதலியவைகளில் நிரூபித்தருளி அர்ஜுனனுக்கு உபதேஶம் என்று சொல்லி உலகோர் உய்ய பகவான் தன் வாக்காலே வெளியிட்டதான ஸர்வ வேதாந்த ஸாரமான ஸ்ரீகீதா ஶ்லோகங்களுக்கு மனம் போன போக்கில் அர்த்தங்களைச் சொல்லி அதைப் பயன் பெறாமல் செய்த ஸமயத்தில், ஸ்வாமி “ஸ்ரீகீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை” “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை” “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டு” முதலியவைகளின் மூலமாக கீதாசார்யனான எம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் ப்ரபத்தி ஶாஸ்திரார்த்தத்தையும் வெளியிட்டருளியுள்ளார் ஸ்வாமி.
         “தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே”
         என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தத்தை ஒரு ஶ்லோகத்தில்
कृष्णस्तत्तवं परं तत्परमपि च हितं तत्पदैकाश्रयत्वं शास्त्रार्थोयम्
க்ருஷ்ணஸ்ததத்வம் பரம் தத்பரமபி ச ஹிதம் தத்பதைகாஶ்ரயத்வம் ஶாஸ்த்ரார்தோயம்  என்றும்
पिशाच रन्तिदेव-गुप्त-शङ्कर यादवप्रकाश भास्कर नारायणार्य यज्ञस्वामि प्रभृतिभि: स्वं स्वं मतमास्थितै: परश्सतै: भाष्यकृद्भि: अस्मत् सिद्धान्त तीर्थकरैश्च भगवद्यामुनाचार्य भाष्यकारादिभिरविगीत परिगृहीतोयमत्र सारार्थ: भगवानेव परं तत्त्वं अनन्यशरणैर्यथाधिकारं तदेकाश्रयणं परमधर्म: इति|
பிஶாச ரந்திதேவ-குப்த-ஶங்கர யாதவப்ரகாஶ பாஸ்கர நாராயணார்ய யஜ்ஞஸ்வாமி ப்ரப்ருதிபி: ஸ்வம் ஸ்வம் மதமாஸ்திதை: பரஶ்ஸதை: பாஷ்யக்ருத்பி: அஸ்மத் ஸித்தாந்த தீர்தகரைஶ்ச பகவத்யாமுநாசார்ய பாஷ்யகாராதிபிரவிகீத பரிக்ருஹீதோயமத்ர ஸாரார்த: பகவாநேவ பரம் தத்த்வம் அநந்யஶரணைர்யதாதிகாரம் ததேகாஶ்ரயணம் பரமதர்ம: இதி|  
                       (கீதாபாஷ்யதாத்பர்யசந்த்ரிகை)          
என்றும் நிரூபித்தருளியபடி.
   
          சக்கரவர்த்தித் திருமகனாய்  நின்றாலும் அவனுடைய ஸ்வபாவத்தை
 अनन्य शासनीय, निषादराज सौहृद सूचित सौशील्य सागर तरणिसुत शरणागति परतन्त्रीकृत स्वातन्त्रय  அநந்ய ஶாஸநீய, நிஷாதராஜ ஸௌஹ்ருத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர தரணிஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருத ஸ்வாதந்த்ரய (ரகுவீரகத்யம்) இவ்வாறு அருளியபடி.