सञ्चिन्तयन्त्यखिल हेय विपक्ष भूतं
शान्तोदितं शमवता हृदयेन धन्या: |
नित्यं परं वरद सर्वगतं सुसूक्ष्मं
निष्पन्द नन्दथु मयं भवत: स्वरूपम् || (16)
ஸஞ்சிந்தயந்த்யகில ஹேய விபக்ஷ பூதம்
ஶாந்தோதிதம் ஶமவதா ஹ்ருதயேந தந்யா: |
நித்யம் பரம் வரத ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்
நிஷ்பந்த நந்தது மயம் பவத: ஸ்வரூபம் ||
உத்தமோத் தமமா யுளவெலாம் பரவி
யொவ்வொரு அணுவிலு முறைந்து
நித்தமாய் நிலவி நிச்சயா னந்த
நிலைமையா யிடர்க்கிட மிலதாய்
சுத்தமா நின்சாந் தோதித மென்னுந்
சுடரொளித் தசையினை வரத
வித்தகர் மிக்க வியப்புடன் சாந்த
மேவிய மனதின்மெச் சுவரே.
(பா.ரா.தா)
குறையிலா அழிவிலா குணநிதிக் குன்றாய்
இணையிலா அளவிலா பரந்துயர் நின்றாய்
இருநிலை வடிவாய் அறிந்திட வல்லாய்
வரந்தரு வரதா! உணர்ந்தனர் நல்லோர். (16)
ஏ! வரத! பரமோத் க்ருஷ்டமாயும் ஸமஸ்த வஸ்துக்களிலும் பரவி ஒவ்வொரு அணுவிலும் உள்ளதென்னும்படியான அதி சூக்ஷமமாயும் நிச்சயமாயும் நித்யானந்த ப்ரசுரமானதாயும் ஸர்வஹேயங்களுக்கும் இடங்கொடாததுமான உனது “சாந்தோதிகம்” என்னும் தசையினை தந்யர்கள் தம் சாந்தமான மனஸ்ஸினால் சிந்தித்துக் களிக்கின்றார்கள்.
{பரப்ரும்ஹத்திற்கு சாந்தோதிதாவஸ்தை (ஸர்வ விபூதிகளையும் அந்தர்ப்பாவத்தில் கொண்டுள்ளது)யென்றும், நித்யோதிதாவஸ்தை (ஸர்வ விபூதிகளையும் அனுபவிப்பது) யென்றும் இரண்டு அவஸ்தைகளுண்டு என்பது சித்தாந்தம்} இது “நிரூடலக்ஷணை” என்று ஸம்ப்ரதாயம்.
विश्वातिशायि सुखरूप यदात्मकस्त्वं
व्यक्तिं करीश कथयन्ति तदात्मिकां ते |
येनाधिरोहति मतिस्त्वदुपासकानां
सा किं त्वमेव तव वेति वितर्क डोलाम् || (17)
விஶ்வாதிஶாயி ஸுகரூப யதாத்மகஸ்த்வம்
வ்யக்திம் கரீஶ கதயந்தி ததாத்மிகாம் தே |
யேநாதிரோஹதி மதிஸ்த்வதுபாஸகாநாம்
ஸா கிம் த்வமேவ தவ வேதி விதர்க டோலாம் || (17)
உன்னிலா வணிய மேனிதா னீகொ
லுனதுகொ லென்னுஞ்சஞ் சலத்தான்
மன்னுமூ சலின்மீ துன்னையு பாஸ
னம்புரி வோர்மதி யாடத்
தன்னிகர் தானே யென்னவா னந்த
ரூபியே தந்திநா கேச*
பொன்னினின்* னுருவம் போன்றதென் பாருன்
பொலிவுறு மணியுரு* வமதே (17)
தந்திநாகேசன் – தந்தி = யானை; நாகம் = மலை; == ஹஸ்திகிரீசன்.
பொன்னுருவம் = ஞானாத்யாத்மக ஸ்வரூபம்
மணியுருவம் = ரத்னம்போல் ஸ்வயம் ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரகம்
(பா.ரா.தா)
கச்சியில் உறைந்திடு வேள்வியின் நாயக
சத்திய உருதனில் நித்திய ரூபனே
மறைகள் உரைக்கும் உன்னுரு சத்தியம்
மறைகள் உணர்த்தும் உன்னுரு நித்தியம்
உறைபவர் மயர்வற நின்னுரு காண்பரே! (17)
தனக்கு ஸமானம் தானே யென்னும்படியான ஆனந்த ஸ்வரூபத்தையுடைய ஏ! ஹஸ்திகிரீச! உன்னை உபாஸனம் பண்ணுகின்றவருடைய புத்தியானது உன் திவ்ய மங்கள விக்ரகம் நீதானோ அல்லது உன்னுடையதோ என்று சாஞ்சல்யத்தை யடைகிறபடியால் உன் ஸ்வரூபம் ஞானானந்தமாத்மகமா யிருப்பதுபோல் உன் திவ்ய மங்கள விக்ரகமும் ஞானானந்தமாத்மகமா யிருக்கின்றதென்று சொல்லுகிறார்கள்.
मोहान्धकार विनिवर्तन जागरूके
दोषा दिवापि निरवग्रहमेधमाने |
त्वत्तेजसि द्विरद शैलपते विमृष्टे
श्लाघ्येत सन्तमस पर्व सहस्र भानो: || (18)
மோஹாந்தகார விநிவர்த்தந ஜாகரூகே
தோஷா திவாபி நிரவக்ரஹமேதமாநே |
த்வத்தேஜஸி த்விரத ஶைலபதே விம்ருஷ்டே
ஶ்லாக்யேத ஸந்தமஸ பர்வ ஸஹஸ்ர பாநோ: || (18)
சித்தமா யஞ்ஞா னத்திரு டன்னைச்
சிதைப்பதிற் றேர்ந்திராப் பகலுஞ்
சுத்தமாய் நின்று தடையதே யின்றிச்
சொலிக்குநின் சுடரொளித் தேசை
யத்தி* நா கேச* வாய்ந்திட வெண்ணி
லாயிரங் கதிரவ னொளியி
னுத்தம மாகு மொளிமதி* யோக
நள்ளிரு ளென் றுரைத் திடலாம்.
அத்தி == யானை; நாகம் = மலை.
ஒளிமதியோகம் = அமாவாசை
(பா.ரா.தா)
பகலவன் கிரணம் புறவிருள் அகற்றும்
விமலநின் கிரணம் உள்ளொளி பெருக்கும்
பகலவன் ஒளியும் பலவதில் மறையும்
அமலநின் ஒளியை திரையெது மறைக்கும்?
வரதநின் ஒளியெதிர் பகலவன் இருள்வனே!! (18)
ஏ! ஹஸ்திகிரீச! அஞ்ஞானமாகு மிருளை ஸித்தமாய்ப் போக்கடிப்பதில் ஸாமர்த்தியத்தை யுடையதும், இரவிலும் பகலிலும் கிஞ்சித்தேனும் தடையில்லாமல் பரிசுத்தமாய் நின்று பிரகாசிப்பதுமான உன் தேஜஸ்ஸை பராமரிசிக்குங்கால் ஆயிரம் கதிரோனொளியைவிட ஒரு அமாவாசையினிரவின் அந்தகாரமே சிலாக்கியமாகின்றது.
[உன் திவ்யமங்கள தேஜஸ்ஸைப் பார்க்குங்கால் சூர்யனுடைய தேஜஸ்ஸை மகா அந்தகாரமாகச் சொல்ல வேணும். அந்தகாரமே ஸூர்ய தேஜஸ்ஸைவிட சிலாக்கியமாகச் சொல்லவேணும். ஏனெனில் சூரியனுடைய ப்ரத்யக்ஷ காலத்தில் அந்தகார ப்ரத்யக்ஷம் எப்படி வராதோ அப்படியே பகவத் தேஜஸ்ஸுவின் ப்ரத்யக்ஷ காலத்தில் சூர்யனுக்கு ப்ரத்யக்ஷ முண்டாகாது. ஸமப்ரமத்தைக்கொண்டு ப்ரஸந்நமானதற்கு அவமான முண்டாவதைக் காட்டிலும் ஸமத்வ ப்ரஸக்தி ரஹிதமான ஸ்வபாவமே சிலாக்யம் என்பது கருத்து]
रूढस्य चिन्मयतया हृदये करीश
स्तम्बानुकारि परिणाम विशेष भाज: |
स्थानेषु जाग्रति चतुर्ष्वपि सत्त्ववन्त:
शाखा विभाग चतुरे तव चातुरात्म्ये ||
ரூடஸ்ய சிந்மயதயா ஹ்ருதயே கரீஶ
ஸ்தம்பாநுகாரி பரிணாம விஶேஷ பாஜ: |
ஸ்தாநேஷு ஜாக்ரதி சதுர்ஷ்வபி ஸத்வவந்த:
ஶாகா விபாக சதுரே தவ சாதுராத்ம்யே || 19
உத்தம குணத்தோ ருளந்தனின் ஞான
ரூபமாய் முளைத்துயர் நாட்டின்
சத்துவ விசாகத் தம்பமென்* பதினான்
காகிய தானமொவ் வொன்றின்
நத்திய சாகை நான்கையும் வகுத்து
நன்கமைந் தருளிய நான்காய்ச்
சித்திர மாமுன் வாசுதே வாதி
திருவடி வங்களிற் றேர்வார். (19)
[* ஸ்ரீவைகுண்டத்தில் விசாக ஸ்தம்பமென்று ஒரு ஸ்தம்பமுண்டு. அதில் நான்கு ஸ்தானமிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்தானத்திலும் நான்கு திக்குகளிலும் நான்கு சாகைகள் (தட்டுகள்) உண்டு. ஒவ்வொரு சாகையிலும் .1. வாஸுதேவ, .2. ஸங்கர்ஷண, .3. ப்ரத்யும்ந, .4. அநிருத்தர் என்கிற திருநாமங்களை யுடையவர்கள் எழுந்தருளி யிருக்கின்றனர். இந்நிலைக்கு சதுர்வ்யூக மென்று பெயர்.]
(பா.ரா.தா.)
கொடிமரந் தன்னில் கிளைத்த உருதனில்
புலன்நிலை சொல்லும் நால்வகை உருவதை
மதிநலம் மிக்க மாதவர் உணர்ந்திட
கரந்திடும் கச்சி பேரருள் வரதனே! (19)
ஏ! வரத! ஸத்வகுண சீலர்களான உபாஸகர்கள் தங்கள் ஹ்ருதயத்தில் ஞான ஸ்வரூபமாய் முளைத்திருக்கும் ஸ்ரீவைகுண்டத்திலுள்ளது போன்ற விசாக ஸ்தம்பத்தில் நான்கு ஸ்தானங்களிலும் ஒவ்வொரு ஸ்தானத்திலும் கோரை முளைத்தாப் போலிருக்கும் நான்கு சாகைகளையும் தங்களுக்கு ஸ்தானமாக விபாகம் செய்வதில் ஸமர்த்தர்களாயிருந்து உன் வாஸுதேவாதி நான்கு வ்யூஹங்களையும் உபாஸிக்கின்றார்கள்.
नागाचलेश निखिलोपनिषन्मनीषा
मञ्जूषिका मरकतं परिचिन्वतां त्वाम् |
तन्वी हृति स्फुरति कापि शिखा मुनीनां
सौदामनीव निभृता नव मेघ गर्भा ||
நாகாசலேஶ நிகிலோபநிஷந்மநீஷா
மஞ்ஜூஷிகா மரகதம் பரிசிந்வதாம் த்வாம் |
தந்வீ ஹ்ருதி ஸ்புரதி காபி ஶிகா முநீநாம்
ஸௌதாமநீவ நிப்ருதா நவ மேக கர்பா ||
வேத சாரமுது நூலி யாவுமுடை
மேய* சாரமெனும் பேழை*யிற்
காதி யானமணி பச்சை யாகுமுனை
யாயு மான்றவர்தஞ் சிந்தையின்
மாதி ரத்*தின்மலை யீச நுண்ணியதோர்
வன்னி* யின்சிகைய சைவிலாச்
சாதி மின்புதிய கொண்ட லைத் தனது
கருவி னிற்கொண்ட தொக்குமே. 20.
[ மேய = தகுதியான; பேழை = பெட்டி; மாதிரம் = யானை; வன்னி = அக்நி.]
(பா.ரா.தா.)
மாமறைச் சாரமாய் மரகத மணியாய்
பேழையில் பொதிந்த அருமணி அனையாய்!
கார்முகிற் சாரலில் ஒளிர்ந்திடு ஒளியாய்
மாதவ முனிவர் அகத்துறை மணியே!!
மாதவ! வேதியில் உதித்தவெம் வரதா!! (20)
ஏ! கரீச! வேதசாரமான ஸமஸ்த உபநிஷத்துக்களின் தாத்பரியமான பெட்டியுள்ளிருக்கும் மரகதம் போன்ற உன்னைத் தியானம் பண்ணும் மகா தபஸிகளுடைய மனதில் அதிசூக்ஷ்மமாயும் விலக்ஷணமாயுமுள்ள அக்நி சிகையானது மேகத்தைத் தன் மத்யத்தில் கொண்ட ஸ்திரமான ஒருசாதி (சிரேஷ்டமான) மின்னல்போல் விளங்குகின்றது.
(மனன சீலர்களுடைய ஹ்ருதயத்திலிருக்கும் அக்நி சிகையில் நீ ப்ரவேசித்து அவர்களுடைய தியானத்திற்கு விஷயனாக ஆகின்றாய் என்பது பொருள்)
औदन्वते महति सद्मनि भासमाने
श्लाघ्ये च दिव्य सदने तमस: परस्तात् |
अन्त:कलेबरमिदं सुषिरं सुसूक्ष्मम्
जातं करीश कथमादरणास्पदं ते ||
ஔதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே
ஶ்லாக்யே ச திவ்ய ஸதநே தமஸ: பரஸ்தாத் |
அந்த:களேபரமிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம்
ஜாதம் கரீஶ கதமாதரணாஸ்பதம் தே ||
தெண்டி ரை*க ரீச வோர்
சிறந்த மாளி கையதும்
மண்ட லங்க டந்து மாவை
குண்ட மும்வ யங்கினுங்
கண்டி லாது னக்கு தித்த
காத றானு மென்னவோ
தொண்டர் தம்மு டற்குண் மிக்கு
சூக்க மாமி ரந்த்ரமே. (21)
திருப்பாற் கடலும் திருமணி வீடும்
இருப்பாய் இருக்கும் பெருநில வேந்தே!
அழுக்கெம் உடம்பில் அருவுரு ஏற்று
உவப்புடன் இருக்கும் அருட்திறம் என்னே!! (21)
ஏ!கரீச! விசாலமான க்ஷீராப்தியில் ஒரு திருமாளிகை பெற்றுள்ளாய். இந்த ப்ரக்ருதி மண்டலங்களுக்கு வெளியுள்ள வைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உனக்குண்டு. இப்படியிருந்தும், அவைகளை விட்டு, உன் பக்தர்களுடைய சரீரத்துள் அதி சூக்ஷ்மமான ஹ்ருதய ரந்தரத்தை யடையும் பொருட்டு வந்துளாய்! அந்த சூஹரமானது உனக்கு எப்படி உவக்கத் தக்கதாயிற்றோ!
(ஸர்வ ப்ராணிகளிடத்தும் நீ வைத்துள்ள வாத்ஸல்யமே இதற்குக் காரணம் என்பது பொருள்)
बालाकृतेर्वट पलाशमितस्य यस्य
ब्रह्माण्ड मण्डलमभूदुदरैकदेशे |
तस्यैव तद् वरद हन्त कथं प्रभूतं
वाराहमास्थितवतो वपुरद्भुतं ते ||
பாலாக்ருதேர்வட பலாஶ மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டலமபூதுதரைகதேஶே |
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வாராஹமாஸ்திதவதோ வபுரத்புதம் தே ||
ஆலி லைத்த ளிர்மி சைய
டங்கு பால னானகான்
மூலை யுன்வ யிற்ற மைந்த
வண்ட கோடி முழுமையுங்
கோல* மாவின் கோல மன்று
கொண்ட போழ்தவ் வண்டமு
நீல மேக வரத வென்னி
லையி னிற்கு நின்றன. (22)
(* கோலம் = அழகு; வராகம்)
(பா.ரா.தா.)
ஆலினிலைப் பாலகனாய் உலகனைத்தும் உண்டதுவும்
பேருலகைத் தூமணிபோல் மணிவயிற்றுள் கொண்டதுவும்
பூவுலகைப் பன்றியதாய் இடர்ந்தெடுத்துத் தந்ததுவும்
பேரருளா! எம்வரதா! வியக்கவைத்த அற்புதமே !! (22)
ஏ! நீலமேக வண்ணனான வரத! நீ ஆலிலையில் ஒரு சிறு பாலனாய்க் கண்வளர்ந்தருளிய காலத்தில், ஸமஸ்த அண்டங்களும் உன் திருவுதரத்தினோர் மூலையில் சுருங்கிக் கிடந்தன. அங்ஙனமிருக்க, அந்த பிரும்மாண்ட மண்டலங்கள், நீ ஆச்சர்யமான மஹா வராகவதாரத் திருக்கோலம் கொண்டபோது உனக்கு எந்த நிலையில் நின்றனவோ? இதென்ன ஆச்சரியம்!
भक्तस्य दानव शिशो: परिपालनाय
भद्रां नृसिंह कुहनामधिजग्मुषस्ते|
स्तम्भैक वर्जमधुनापि करीश नूनं
त्रैलोक्यमेतदखिलं नरसिंह गर्भम् ||
பக்தஸ்ய தாநவ ஶிஶோ: பரிபாலநாய
பத்ராம் ந்ருஸிம்ஹ குஹநாமதிஜக்முஷஸ்தே|
ஸ்தம்பைக வர்ஜமதுநாபி கரீஶ நூநம்
த்ரைலோக்யமேததகிலம் நரஸிம்ஹ கர்ப்பம் || (23)
பத்தன் றான வன்*றன் பாலன்
பாலனம் பொருட்டு நீ
ந்த்தியே கரீச வெங்கு
நாரசிங்க மூர்த்தியாய்
வித்தரித் திலங்கு மூன்று
லோகமும் மொர்தூண் விடுத்
தித்தினத்துஞ் சிங்க கர்ப்ப
மேந்தி நிற்குந் திண்ணமே. (23)
(பா.ரா.தா.)
எங்குளன் என்றவன் பொங்கிய அக்கணம்
எங்கிலன் என்றனன் மங்கள நம்பியும்
புங்கவன் சொல்லது எங்குமே மெய்ப்பட
தங்கினை நாரண எங்குமாய் மன்றினை!
இங்குள தூணதை அன்னவன் தட்டிட
சிங்கமாய் நாரண மெய்யதாய் வந்தனை
மற்றுள தூணெலாம் இன்றுமாய் உள்ளனை
நற்றவச் சேயவன் பக்தியை மெச்சியே!! (23)
ஏ! கரீச! ஹிரண்ய கசிபு வென்கிற அசுரனுடைய குமாரனும் உன் பக்தனுமாகிய ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷிக்கும்பொருட்டு அன்று நீ வெகு ஆசையுடன் ஆச்சர்யகரமான நரசிங்க மூர்த்தியாய் எங்கும் வியாபித்து விளங்கிய மூன்று லோகங்களும் (நீ ஆவிர்ப்பவித் தருளிய அந்த) ஒரு ஸ்தம்பம் தவிர இப்போதும் நரசிம்மனைத் தமது கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம்.
क्रामन् जगत् कपट वामनतामुपेत:
त्रेधा करीश स भवान् निदधे पदानि|
अद्यापि जन्तव इमे विमलेन यस्य
पादोदकेन विधृतेन शिवा भवन्ति ||
க்ராமந் ஜகத் கபட வாமநதாமுபேத:
த்ரேதா கரீஶ ஸ பவாந் நிததே பதாநி|
அத்யாபி ஜந்தவ இமே விமலேந யஸ்ய
பாதோதகேந வித்ருதேந ஶிவா பவந்தி || (24)
வஞ்ச னைக ரீச கொண்டு வாம னாவ தாரனாய்
விஞ்சி மண்ணளந்து மூன்றுவீதம் பாதம் வைத்தனை
தஞ்ச ராய்த்த லைத ரித்தத்தாளின் தூய நீரினா
லெஞ்ச லின்றி யாவ ருஞ்சி வன்க ளின்று மாவரே. (24)
(பா.ரா.தா.)
வாமனனாய் வந்து வானுயர்ந்த மணிமாயன்
சேவடியில் அன்று தாமரையான் சொரிந்திட்ட
தீர்த்தமதே இங்கு தூநதியாய் பெருகிற்றே!
சேவடிநீர் பட்ட சீலமுடை உயிரெல்லாம்
பாவமெலாம் நீங்கி பாவனமாய் பொலிந்திற்றே!! (24)
ஏ! கரீச! நீ கபடமாக வாமனாவதாரம் செய்து இவ்வுலகத்தை வானளாவி யளக்கும்போது, உன் திருவடிகளை மூன்று ப்ரகாரமாக வைத்தருளினை. அத்திருவடித் தாமரைக ளொன்றி னின்று வரும் (கங்கா) ஜலத்தை பக்தியுடன் சிரஸ்ஸில் தரித்த ஸகலரும் இன்றும் சிவன்களாகின்றார்கள். (சிவம் = மங்களம்) இகத்திலும் பரத்திலும் மங்களங்களைப் பெறுகின்றார்கள்.
[அன்றுன் திருவடி யினின்றுதித்த கங்கையைத் தன் தலையில் வகித்ததினால் ருத்ரன் சிவனானான் என்பது மாத்திரமேயன்று; இப்போதுகூட அந்த கங்கா தீர்த்தத்தை சிரஸில் வகிக்கும் ஸகலருக்கும் மங்கள முண்டாகின்றது என்பது பொருள்]
येनाचल प्रकृतिना रिपु संक्षयार्थी
वारां निधिं वरद पूर्वमलङ्घयस्त्वम् |
तं वीक्ष्य सेतुमधुनापि शरीरवन्त:
सर्वे षडूर्मि बहुलं जलधिं तरन्ति ||
யேநாசல ப்ரக்ருதிநா ரிபு ஸம்க்ஷயார்த்தீ
வாராம் நிதிம் வரத பூர்வமலங்கயஸ்த்வம் |
தம் வீக்ஷ்ய ஸேதுமதுநாபி ஶரீரவந்த:
ஸர்வே ஷடூர்மி பஹுலம் ஜலதிம் தரந்தி || (25)
அன்றி ராம னாய்வி ரோதி
யைவ தைக்க வாவலாய்ச்
சென்று வெற்பின்* சேது கட்டி
சிந்து* வைக்க டந்தனை
இன்று மவ்வ ணைவி ழித்தி
யாவ ருங்க டப்பரா
லொன்று மாற லைநி றைந்த
வுற்ப வத்தி னோதமே* (25)
(பா.ரா.தா.)
பிறவியதன் உடன்வந்த பிரிக்கவிலா அறுபிணிகள்
அறம்தவிர்த்த வழிமுறையின் அறுவகையாய் கடுவினைகள்
இவையனைத்தும் பிறவியெனும் பெருங்கடலின் சுழலலைகள்
இவையுணர்த்த கடலிடையே மலையதனால் அணையமைத்து
பிறவியெனும் கடல்கடக்க வழியெனவே வரமதுவாய்
எமக்களித்தாய் இராகவனே மலையணையின் தரிசனமே. (25)
அன்று நீ ஸ்ரீராமனாக அவதாரம் பண்ணி ஆச்ரித விரோதியான இராவணனை ஸம்ஹாரம் பண்ணும் பொருட்டு மலைகளைக் கொண்டு ஸேதுகட்டி ஸமுத்ரத்தைத் தாண்டினாய். அந்தத் திருவணையைக் கண்ணுற்று சகலரும் காமக்ரோத முதலிய ஆறு அலைகளால் ஸம்பூரணமாகப் பொருந்தியுள்ள ஸம்ஸாரமாகிற கடலை இப்போதும் கடக்கின்றார்கள்.
इत्थं करीश दुरपह्नव दिव्य भव्य
रूपान्वितस्य विबुधादि विभूति साम्यात् |
केचिद् विचित्र चरितान् भवतोऽवतारान्
सत्यान् दया परवशस्य वदन्ति सन्त: ||
இத்தம் கரீஶ துரபஹ்நவ திவ்ய பவ்ய
ரூபாந்விதஸ்ய விபுதாதி விபூதி ஸாம்யாத் |
கேசித் விசித்ர சரிதாந் பவதோsவதாராந்
ஸத்யாந் தயா பரவஶஸ்ய வதந்தி ஸந்த: || (26)
இத்தன்மை யாகி யெவரும் மறுக்க
வியலாத தாகி யினிதாய்ப்
பத்தர்க் கிசைந்த படிவந் தரித்துன்
றயையிற் கிணங்கு பவனா
யெத்தன்மை யோர்க்கு மிணையா விசித்ர
சரிதங்க ளேந்து வரதா
மெய்த்தன்மை யென்று னவதாரம் யாவு
மேலோ ருரைப்பர் சிலரே. (26)
(பா.ரா.தா.)
சுரர்நரர் விலங்கென படைபொருள் என்றிவை
நினதருள் வசப்படு பொருளென ஆயினும்
அடியவர் நலம்பெற பலவுருத் தோன்றலில்
அவனியில் அறமது நிலைபெறச் செய்தனை
அறிபவர் இதுதிறம் மதிநலம் மிக்கவர்
அறிகிலர் மயங்குவர் மதிநலம் இல்லவர். (26)
ஏ! வரத! இவ்வாறாகி எவராலும் அபலாபம் பண்ணமுடியாததும் அப்ராகிருதமானதும் பக்தர்களுக்கு ஆதீனமானதும் மங்களகரமானதுமான உன் திவ்ய மங்கள விக்ரகத்தைத் தரித்துக்கொண்டு தயாபரவசனாய் தேவர் மனுஷ்யர் முதலான சகல விபூதிகளுக்கும் ஸமனாயிருப்பதால் வெகு விசித்ரமான சரித்ரங்களோடு கூடிய உன் அவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்று சில மகான்கள் சொல்லுகின்றார்கள்.
सौशील्य भावित धिया भवता कथञ्चित्
सञ्छादितानपि गुणान् वरद त्वदीयान् |
प्रत्यक्षयन्त्यविकलं तव सन्निकृष्टा:
पत्युस्त्विषामिव पयोद वृतान् मयूखान् ||
ஸௌஶீல்ய பாவித தியா பவதா கதஞ்சித்
ஸஞ்சாதிதாநபி குணாந் வரத த்வதீயாந் |
ப்ரத்யக்ஷயந்த்யவிகலம் தவ ஸந்நிக்ருஷ்டா:
பத்யுஸ்த்விஷாமிவ பயோத வ்ருதாந் மயூகாந் || (27)
தன்மேன்மை யென்றும் பிறர்தாழ்மை யென்று
மதியா தெவர்க்குஞ் சமனா
முன்னீர்மை யேற்கு மதியால் வருத்த
முறநீ மறைத்தும் வரதா
வுன்னேர்மை யாளர் முகின்மூ டருக்க
னொளி யுற்றிருக்கும் விதமே
யொன்றேனுஞ் சற்றுங் குறைவின்றி முற்று
முறையுன் குணங்க ளறிவார். (27)
(பா.ரா.தா.)
நினதருள் நியமம் நிறைகுணம் மறைத்து
அடியவர் களித்திட எளியனாய்த் தரித்தாய் !
குணமதிற் சிறந்த வரந்தரு வரத!!
பகலவன் கிரணம் முகிலது மறைத்தால்
பகலவன் அழிந்த நிலையது வருமோ
நினதருள் நிறைந்த தவத்திரு பெரியோர்
அறிந்தனர் உனையே குணநிதிக் கடலாய். (27)
ஏ! வரதா! தன் மேன்மை பிறர் தாழ்மை என்று எப்போதும் பாராட்டாது எவர்க்கும் ஸமனாக இருக்கும் உன் ஸௌசீல்ய குணத்தால், கொண்டாடப்பட்ட புத்தியையுடைய நீ, வெகு ப்ரயாசையுடன் மறைத்திருந்தும், உன் திருக்கல்யாண குணங்களை உன் ஸமீபத்தில் வர்த்திக்கும் அவர்கள் (அந்தரங்க பக்தர்களான திருக்கச்சிநம்பி முதலானோர்) மேகத்தினால் மறைக்கப்பட்ட சூர்ய கிரணங்களை சூர்யமண்டலத்துக்குச் சமீபத்திலுள்ள அருணன் முதலானோர் அறியுமாறே, யாதொரு ஸம்சயமு மில்லாமல் முழுமையும் செவ்வையாக அறிகின்றார்கள்.
नित्यं करीश तिमिराविल दृष्टयोऽपि
सिद्धाञ्जनेन भवतैव विभूषिताक्षा: |
पश्यन्त्युपर्युपरि सञ्चरतामदृश्यं
माया निगूडमनपाय महानिधिं त्वाम् ||
நித்யம் கரீஶ திமிராவில த்ருஷ்டயோsபி
ஸித்தாஞ்ஜநேந பவதைவ விபூஷிதாக்ஷா: |
பஶ்யந்த்யுபர்யுபரி ஸஞ்சரதாமத்ருஶ்யம்
மாயா நிகூடமநபாய மஹாநிதிம் த்வாம் || (28)
அத்தா கரீச தமிரக் கலக்க
மடைகின்ற திட்டி யினருஞ்
சித்தாஞ் சனத்தை நிகர்நின்னை நித்தஞ்
சீரோ டணிந்த விழியார்
எத்தாலு மென்று மழியாது மீது
நடையுற்ற வர்க்கு மிலதாய்
நிர்த்தா ரணித்து மருளான் மறைந்த
நிதியாரு நின்னை யடைவார். (28)
(பா.ரா.தா.)
அநுதினமும் உனதடியைத் தொழுதுள்ளம் கொள்பவரும்
உணர்ந்துணரா அருநிலையில் பரந்தெங்கும் உள்ளவனே
பெருநிதியாய் புதைந்தவுனை புறக்கண்ணால் அகழ்ந்துணரும்
உயர்வழியில் திறமுடைய மயக்கறுக்கும் மையதுவாய்
தகுவழியாய் ஒருவழியாய் உளம்கொண்டார் அர்ச்சையென (28)
ஏ! கரீச! நிதியிருக்கும் பிரதேசத்தில் பிரதி தினம் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த போதிலும் திமிர தோஷத்தால் மறைக்கப்பட்ட கண்களையுடைய புருஷர்கள் ஸித்தாஞ்சனத்தைக் கண்களில் போட்டுக்கொண்டு நிதியைக் காண்கிறதுபோல, அநாதியான பாப சம்பந்தத்தால் கலங்கி யிருக்கும் திருஷ்டியை யுடையவராயிருந்தும், உன் திவ்ய மங்கள விக்ரகமாகிற ஒரு சித்தாஞ்சனத்தை பிரதி தினமும் தம் கண்களிலிட்டு அலங்கரித்துக்கொண்டு (உன்னை சேவித்துக் கொண்டு) அநாதியான மருளால் (அவித்தையால்) மறைந்திருப்பதும் எத்தாலு மழிவில்லாததுமான மகா நிதியாகுமுன்னை நிர்த்தாரணம் பண்ணிக் காண்கின்றார்கள்.
सद्यस्त्यजन्ति वरद त्वयि बद्ध भावा:
पैतामहादिषु पदेष्वपि भाव बन्धम् |
कस्मै स्वदेन सुख सञ्चरणोत्सुकाय
कारागृहे कनक शृङ्खलयाऽपि बन्ध: ||
ஸத்யஸ்த்யஜந்தி வரத த்வயி பத்த பாவா:
பைதாமஹாதிஷு பதேஷ்வபி பாவ பந்தம் |
கஸ்மை ஸ்வதேந ஸுக ஸஞ்சரணோத்ஸுகாய
காராக்ருஹே கநக ஶ்ருங்கலயாsபி பந்த: || (29)
உன்பா லிராக முறுசிந்தை யோர்க
ளுடனே வெறுத்து விடுவார்
தம்பாவ பந்த மிறையாதி யோர்தந்
தானங்கண் மீதும் வரதா
இன்போ டமர்ந்து சஞ்சார மேக
விச்சை வகிப்ப ரெவரே
அன்போ டுகந்து பொன்னாய தேனு
மணிவார் விலங்கு சிறையே. (29)
(பா.ரா.தா)
பிரமன் இந்திரன் எனவொரு பதவியில்
விருப்பம் நன்னிலர் நினதுரு அழகினில்
மயக்கம் கொண்டவர் எனதொரு தகவினர்!
இடினும் பொன்விலங் கெனவொரு இழிவதை
திரிவர் ஏற்றனர் எனநிலை உளதிலை. (29)
ஏ! வரத ! சுகமாக சஞ்சாரம் பண்ணவேணுமென்ற ஆசைகொண்ட எவர்தான் சிறையில் பொன்னாற் செய்யப்பட்டதாயினும் ஒரு விலங்கினால் கட்டுப்படுவதற்கு இச்சிப்பார்? அதுபோல திருக்கல்யாண குணங்களையுடைய உன்மீது உத்கிருஷ்டமான அன்போடு கூடின அந்தக்கரணங்களை யுடையவர்கள் பிரும்ம பதவி முதலான பதவிகளில் ஆசை வைக்க மாட்டார்கள். உன்மீது அபிருசி பிறப்பதற்கு முன் அப்பதவிகளி லாசை வைத்திருந்த போதிலும் அபிருசி பிறந்த உத்தரக்ஷணத்தில் அதை வெறுத்து விட்டு விடுவார்கள்.
हस्तीश दु:ख विष दिग्ध फलानुबन्धि(नि)
आब्रह्म कीटम्पराहत संप्रयोगे |
दुष्कर्म सञ्चयवशाद् दुरतिक्रमे न:
प्रत्यस्त्र मञ्जलिरसौ तव निग्रहास्त्रे ||
ஹஸ்தீஶ து:க விஷ திக்த பலாநுபந்தி(நி)
ஆப்ரஹ்ம கீடம்பராஹத ஸம்ப்ரயோகே |
துஷ்கர்ம ஸஞ்சயவஶாத் துரதிக்ரமே ந:
ப்ரத்யஸ்த்ர மஞ்ஜலிரஸௌ தவ நிக்ரஹாஸ்த்ரே || 30
அத்தீச துக்க மா மால* மார்ந்த
பலமுற்ற தாகி யமர
எத்தாலும் தாக்க வியலாத தாகி
யிறையாதி கீடம்* வரையே
வித்தார மாமெம் வினையால் விலக்க
வொண்ணாத தாகி யிலகு
மத்தாவு னிக்ர கத்தம்* பெதிர்க்கு
மம்பெங்க ளிவ்வஞ் சலியே (30)
( ஆலம் = விஷம்; கீடம் = க்ஷூத்ரப்பூச்சி, புழு; நிக்ரகத்து அம்பு = நிக்ர ஹாஸ்த்ரம்)
(பா.ரா.தா.)
படைபொருள் அனைத்தும் தருவினைத் தகுதியின்
பலனது பெறுதல் வரதநின் நியமமே
பிறவியில் சுமக்கும் அருவினைப் பயனென
விடமுடைச் சரமாய் விமலநின் உறுத்தலும்
தடைபட வகையெம் வணங்கிடு கரங்களே! (30)
ஏ! ஹஸ்தீச ! துக்கம் என்கிற விஷத்தால் பூசப்பட்ட (ஸம்ஸார) பலத்துடன் (பலம் – பாணத்தின் முனை) சம்பந்தப் பட்டிருக்கிறதும், பிரமன் முதல் புழு வரையிலும் ஒருவராலும் எவ்விதமும் தடுக்க முடியாததாய் தன் கார்யத்தை முடித்துக்கொள்வதில் ஸாமர்த்தியமுடையதும், விஸ்தாரமாக பாவங்களைச் செய்திருக்கும் அடியோங்களால் விலக்க முடியாததுமான உன் நிக்ர ஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரம் அடியோங்களுடைய இந்த அஞ்சலியே (தவிர வேறொன்றுமில்லை).