And today being a Friday please enjoy this "Sri Laksmi Gadyam" audio
|
|
1940களிலே வந்து கொண்டிருந்த “ஸ்ரீதேசிக ஸ்ரீஸுக்தி ஸம்ரக்ஷணி” இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தீர்த்தவாரிக் காட்சி. தீர்த்தவாரி என்று சொல்லி விட்டு ஆசிரியர் சுவைபட எழுதியிருப்பது என்னவோ
பொன்னிவர்மேனி மரகதத்தின்
பொங்கிளஞ்சோதியகலத்தாரம்
மின்னிவர்வாயில் நல்வேதமோதும்
வேதியர்வானவராவார்தோழீ
என்னையும்நோக்கியென்னல்குலும்நோக்கி
ஏந்திளங்கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென்னோக்குமென்றஞ்சுகின்றேன்
அச்சோவொருவரழகியவா.
என்ற ஆழ்வாரின் அருளிச் செயலுக்கு ஒரு அருமையான நாடகம்! படித்து ரசியுங்களேன்.
இதே ஸம்ரக்ஷணி இதழில் வந்த பல அருமையான கட்டுரைகளை அடியேனது இன்னொரு ப்ளாக் http://rajamragu.spaces.live.in ல் காணலாம். ஸ்வாமி தேசிகனின் பரம ரசிகராக இருந்த திரு D. ராமஸ்வாமி ஐயங்கார் எழுதியவை.
திரு அனானிமஸ் அவர்களே! ஏற்கனவே தேசிகன் யார்? அவர் என்ன செய்தார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டிருந்தீர்கள். எனது அடுத்த பதிவில் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.
நங்கநல்லூர் அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த திருநின்றவூர் கருட ஸேவைக் காட்சி திரு கமலக்கண்ணி அம்மன் கோவிலாருக்கு! விளக்கம் அடுத்த பதிவில்.