வியாழன், 6 மார்ச், 2008

ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்

கனகதாராஸ்தவம் அருளிச் செய்தது.

விருத்தம்

நலந்தர வேவெண்பரிமுகத்தால்வந்த
லாலாமுதஞ்சிந்தியிருந்ததெல்லாங்
கலந்தெடுத்துத்தேவிகள்கைகொடுத்துவைத்தா
கதிகொண்டேசிறுகுழந்தைவரதநாதன்
மலர்ந்தகையாலெடுத்துண்ணப்பின்புகேட்டு
மைந்தனிவன்செய்ததிதோவென்றுதானே
குலந்தழைக்குமென்பதற்கு வேறாய்ச்சொன்ன
கூறுதானடைந்ததுமவ்வாறுதானே.

தரு - இராகம் - சாவேரி - தாளம் - ஆதி

பல்லவி

சாமியெங்கள்கருணாநிதி - குருசாந்த - வேதாந்தநிதியிவர்தாமே.

அனுபல்லவி

பூமிபுகழுங்கச்சிப் பேரருளாளர்பாதப்
பூங்கமலம்பரவும் வேங்கடநாதகுரு (சா)

சரணங்கள்

அந்தநாள் பிரமசாரி யொருத்தன்வந்து
அங்கங்கேதனவான்க ளாரென்றெங்கும்விசாரித்
தெந்தன்கலியாணத்துக்கே யெவர்கள்சொன்னங்கள்வாரித்
தந்திடுவாரென்றானே தந்ததிவர்சொன்னமாரி (சா)

இதுதருணத்தினல்ல தனவானிவரென்று
இவர்திருமாளிகையைக் காட்டியேசிலர்சொல்ல
அதுநிசமாமென்றெண்ணி யவனுமிவர்பாற்செல்ல
மதுரமிகுந்தகவி மாரிபொழியவல்ல (சா)

பரிவாயனுக்கிரகித்த பாகவதர்கள்சொற்ற
படியேபெருமாள்கிருபை பண்ணுவாரென்றுமெத்த
பெரியபிராட்டியார்மேல் சீர்த்துதிய்ன்றுரைத்த
வரிசையதினாற்சொன்னம் வாரிவாரிக்கொடுத்த (சா)