செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அன்பு எனப்படுவது யாதெனில்

திரு பொள்ளாச்சி நசன் ஐயா தனி ஒருவராக பற்பல தமிழ் நூல்களை தனது தமிழம் இணையத்தில் மின் நூல்களாக்கி பெரும் சாதனை நிகழ்த்தி வருவதைப் பற்றி முன்னர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன். அப்படி அவர் பாதுகாத்து வைத்துள்ள "செந்தமிழ்" இதழ்களில் ஒன்றில் நான் படித்து ரசித்த ஒரு பகுதி
. அன்புக்கு ஒரு நல்ல இலக்கணம் சொல்லும் அந்தப் பாடல் இங்கிருக்கிறது

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

கலர் கண்ணை உறுத்தும் இந்த வலைத் தளத்தை படிக்க கஷ்டமாயிருக்கிறதா?

இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்களே அடியேனுடைய வலைப்பதிவை, இதைப்போல மோசமாக வடிவமைக்கப் பட்ட ஒரு தளத்தைப் பார்வையிடும்போது, அதிலுள்ள விஷயங்கள் பிடித்திருக்கலாம் (புல்லாணிப் பக்கங்கள் உங்களுக்குப் பிடித்தமானவை என்று சொல்ல வரவில்லை ) ஆனால் அந்த வடிவமைப்பு, பின்புலம், எழுத்துக்களின் நிறம் எல்லாம் எரிச்சலூட்டி படிப்பதற்குப் பிடிக்காமல் இருக்கிறதா? கவலையை விடுங்கள். Firefox addon ஒன்று கைகொடுக்கக் காத்திருக்கிறது. No Color என்ற பெயரில் உள்ள அது மிக உதவியாக உள்ளது. நிறுவிக் கொண்டால் நமது ஸிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. தேவைப் படும்போது அதன்மீது ஒரு க்ளிக். அவ்வளவுதான். கண்ணிமைக்கும் நேரத்தில் வலைத்தளத்தில் பின்புலக் கலர்களெல்லாம் மறைந்து படிப்பதற்கு இதமாக மாற்றிவிடுகிறது. மீண்டும் ஒரு க்ளிக் செய்தால் வலைத்தளத்தின் இயல்பான வடிவமைப்பு திரும்ப வந்து விடும்.  ஸ்க்ரீன் ஷாட்களைப் பாருங்கள். பிடித்திருந்தால் இங்கிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

இது இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பது.கலர் மாற்றிய பிறகு எப்படி இருக்கிறது பாருங்கள்.





நம்மில் இன்னும் பலர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் என்று இருக்கிறோம். அவர்கள் IEsurfgear addon நிறுவிக்கொண்டு இதைக் காட்டிலும் இன்னும் எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.



 இந்த IE surf gear ஆட்ஆனை இங்கிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.