செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம் (2 & 3) அன‌ந்தார்ய‌ த‌ந‌ய‌ & வேங்க‌டாதிப‌:


() अनन्तार्य तनयः

          शेषाचलावताररूपस्य समस्तलोकसंभावनीयस्य विश्वातिशायिनो विश्वामित्र गोत्रभूषणस्य विशुद्धविद्याविहार पुण्डरीकस्य पुण्डरीकाक्षसोमसुत् सम्भवस्य अनन्तगुण शेवधेरनन्ताचार्यस्य तनयः अनन्तार्य तनयः अनन्ताचल एवभावि भगवदवतारंज्ञात्वा अनन्तार्यरूपेण अवतीर्ण इतिहि प्रसिद्धिः

(अनन्तार्य तनयः) அனந்தார்ய; அநந்தஸூரிகளுக்கு, தநய; திருக்குமாரர். எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதி பதிகளான ஆசார்ய புருஷர்களில் ஒருவர் அனந்த ஸோமயாஜி. இவ்வர்த்தம் பரகாலஸ்வாமிகள் அருளிச் செய்த மூவாயிரப்படி குருபரம்பரையில் ப்ரஸித்தம். அவரது திருக்குமாரர் புண்டரீகாக்ஷயஜ்வா, அவரது குமாரர் அநந்தஸூரிகள், அவருடைய திருக்குமாரரென்றபடி. இவ்வநந்தஸூரிகள் திருமலையாழ் வாருடைய அவதார விசேஷம், அதெங்ஙனேயென்னில்? தம்மிடத்தில் வஸியாநின்ற ஶ்ரீநிவாஸன் பூமியில் தேசிகனாக அவதரிக்கப்போவதால் தாம் அவருக்கு ஆதாரமாக வேணுமென்று முந்தியே புண்டரீகாக்ஷ யஜ்வாவுக்குத் திருக்குமாரராக அவதரித்தார். இங்கு ஐதிஹ்யங்களை வேறு க்ரந்தங்களிற் கண்டுகொள்வது.



() वेङ्कटाधिपः

                    सर्वपापानिवेंप्राहुः कटस्तद्दाह उच्यते| सर्वपाप दहोयस्मात्वेंकटाचलसज्न्तितः  इतिदर्शनमात्रेण सर्वपापनिवर्तकतया प्रसिद्ध वेंकटाचलाधिपस्यावतार रूपत्वात् वेंकटाधिपः
                    (वेंकठाधिपः) திருமலைக்கு நாதனான ஶ்ரீநிவாஸனுடைய அவதாரம். வேம்  என்று ஸர்வ பாபங்களையும் சொல்லி ‘’கட’’ அதுகளை தஹிக்குமது என்றும் பொருளாலே ஸர்வபாபஹரம் என்பதாயிற்று. இப்படி தர்சந மாத்திரத்தாலேயே ஸர்வ பாபஹரமான வேங்கடகிரிக்கு நாதனான ஶ்ரீநிவாஸனுடைய அவதார விசேஷமென்றபடி. “ वेंकटेशावतारोऽयं, श्रीमान् वेंकटनाथोऽसौ साक्षाद्वेदान्त देशिकः” இது முதலானதுகளை இங்கே அனுஸந்திப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக