ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு இராகம் உசேனி தாளம் ஆதி
பல்லவி
மங்களாசாசனமும் ரங்கநாயகர்க்கேசெய்
யுங்கண்டாகிருதிவாதிசிங்கரே.
அனுபல்லவி
பொங்குகாவிரிநடுப் பங்கசாசனன்தொழு
மங்கனாமணியாம்ஸ்ரீ ரங்கநாயகியுடன். (மங்க)
சரணங்கள்
ஆர்த்திநீர்ப்பெருமாளையுஞ் சேர்த்தியிலெழுந்தருளச்
சேர்த்தகோபணாரியன்றன் கீர்த்தியேவளர்கவென்று (மங்க)
ஆனியாநீலமென்றுந் தானந்தக்கோபணாரிய
னானவன்மீதுசுலோகம் மானுபாவர்சொன்னாரே, (மங்க)
தினவரிசையோடாரா தனவரிசையுச்சவக்
கனவரிசையுந்தான்னிய தனவரிசையும்மிஞ்ச (மங்க)
பாங்குகோயிற்றிருமலை யாங்குளபெருமாள்கோயி
லோங்குநாராயணமுதற் றீங்குவராதபடிக்கு (மங்க)
வகையாம்பாஷியஞ்சுருதப்பிரகா சிகைமுதலாங்கிரந்தங்களைச்
சகமதிற்பிரவர்த்திசெய்ததே சிகன்திருவுள்ளமகிழ்ந்து (மங்க)
அண்டர்நாயகனேயென்றுங் கொண்டல்மேனியனேயென்றும்
மண்டலமெங்குங்கொண்டாடுந் தொண்டர்களுடனேகூடி (மங்க)
விருத்தம்
சீரிலங்குமுபயகாவேரிரங்கர்
திருவடிக்கேயுபயகவிசிறந்துநாளும்
பேரிலங்குமுபயவேதாந்தாசார்யார்
ப்ரபலராம்வாதிசிங்கரெனவேவந்த
காரிலங்குமேனிவேங்கடேசனென்னுங்
கண்டாவதாரரிவர்தேவிகூடப்
பாரில்வந்துதிவ்யதம்பதிசங்கற்பம்
பலிக்கின்றார்கீர்த்திகொண்டுசொலிக்கின்றாரே.
தரு இராகம் மோகனம் தாளம் ஆதி
பல்லவி
வேங்கடநாதார்யரிருந்தாரே -- தென்னரங்கத்தில்
வேங்கடநாதார்யரிருந்தாரே.
அனுபல்லவி
பாங்காவரங்கப் பதிமிகவிளங்கப்
பரிந்துதரிசனப் ப்ரவர்த்தகமிலங்க (வேங்க)
சரணங்கள்
தெரிசனர்கூடித் திருவடிநாடி
ஸ்ரீவைட்ணவர்கோனே தேவரீரெனத்தானே (வேங்க)
வருகவிவாதி வணங்கிடவோதி
மண்டலமெங்குங்கீர்த்தி வஹித்ததேசிகமூர்த்தி (வேங்க)
அதிகாரப்பட்ட மவரிடுஞ்சட்டம்
ஆரும்பூசித்துப்போற்ற அநந்தகவியுமேத்த (வேங்க)
தெம்பதிவிரதர் செல்வரும்வரதர்
சீஷரெல்லாரும்வேண்டத் தெரிசனத்தையேயாண்ட (வேங்க)
விருத்தம்
கவிவாதிசிங்கர்தாந்திவ்ய
கண்டாவதாரரிவரரங்கங்கந் தன்னிற்
செவையாகத்தரிசனத்தைநடத்திவந்தார்
தெளிந்தவிவர்பின்வரதநைனார்தாமும்
புவியெங்கும்வாதியரைவென்றடக்கிப்
பொருந்தியவித்தரிசனத்தைவாண்டாரித்தைச்
செவிகொள்வோர்வேண்டியதைப்பெற்றுவாழ்வார்
சித்தந்தானென்பதும்ப்ரசித்தந்தானே.
ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
ஸ்ரீவேதாந்ததேசிகவைபவப்பிரகாசிகைக்கீர்த்தனை
முற்றிற்று.

சனி, 29 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு இராகம் தன்னியாசி தாளம் ஏகம்
பல்லவி
சிந்தைசெய்தாரே -- வேதாந்த - தேசிகர்தாமே
அனுபல்லவி
அந்தச்சீரங்கநாயகரைநாந் தினமுமறவேனே -- என்று (சிந்தை)
சரணங்கள்
தற்பரமாகியதேவசம்பந்த சாந்திநாமாவைக் கொண்டே
அற்புதமாகவுதயஞ்செய்த வரங்கநாமாவைச் (சிந்தை)
மிஞ்சுபுகழ்க்கதிர்வீசுமரங்கவி மானமதின்பாலே - நல்ல
மஞ்சுழைக்குண்மரகதமென்னுமணிதனைப்போலே
ஆதிசேடனைசயனமெத்தையாயங்கைதலைக்காணி -- கடல்
மாதுயிராகநீண்டகண்வளர் வனைமனதூணி (சிந்தை)
திருவரங்கப்பெருநகருள் தெண்ணீரென்றெடுத்து -- நல்ல
கருமணியைக்கோமளத்தைக்கண்டேனெனத்தொடுத்து (சிந்தை)
மாயோனேயென்றுமடியவரென்றும்வாழ்த்திடுபாசுரமே -- இவை
வாயாற்சொல்லிமனத்தாற்சிந்தித்துவந்ததுமீகரமே

தேசிகன் கோயிலுக் கெழுந்தருளியது
விருத்தம்
சிந்தைசெய்துசத்தியாகாலந்தன்னிற்
றேவியுடன்குமாரனையும்வைத்தரங்கம்
வந்துசேர்ந்தடியவரோடிருந்துபிள்ளை
மங்களாசாசனஞ்செய்திருக்கும்நாளி
சைந்துகாவிரிக்கரைமண்டபத்தரங்கர்
தாந்திருவோலக்கமாயிருந்ததோர்நா
ளந்தநாட்டுருக்கர்வந்தசெய்தி
யார்கடாஞ்சொல்வரந்தப்போர்கடாமே.
இராகம் ஆரபி தாளம் ஆதி
கண்ணிகள்
மோகாந்தகாரர்க்கொள்ளைக் காரத்துருக்கர்படை
முடுகிவந்தெனவேயொருவர்பார்த்தவுடன்
ஏகாந்தகாரமாகச்சொல்ல அதிகாரிதானுடனே
யெம்பெருமான்முன்னேசாந்துகாப்புச்சாத்த
அங்கிருந்துபிள்ளைமுதலானோர்கள்திருவுள்ள
மறிவதாகப்பார்க்கச்சீட்டுப்போட்டு
அங்கதுபுறப்பட வேண்டாமென்றிருக்கவே
அறிந்துகொண்டனைவருமிருந்தாட்டு
எதுவந்தாலும்வரட்டு மென்றுநிர்ப்பயராகி
யிருந்தார்தூப்புற்பிள்ளையாமிவர்வாசித்து
அதிகாரியதைவிசுவசியாமற்பிள்ளைலோகா
சார்யருடனேதானாலோசித்து
கொண்டுமுன்னோர்விக்கிரகமேறியருளப்பண்ணிக்
கொண்டோலக்கமீதிலுமாராதனங்
கண்டருள்கிறாரென்று திரைவளைத்துப்பாவாடை
கட்டிக்கொண்டிருப்பார்போல் பேதனம்
நாடியழகியமணவாளப்பெருமாளையும்
நாச்சியாரையுந் திருப்பெட்டகத்தில்
மூடியெழுந்தருளப்பண்ணிக்கொண்டவர்தாமே
முனைந்துசெல்கிறாரையா காட்டகத்தில்
பிள்ளைலோகாசாரியருமவர்களும் வில்லுக்கொண்டு
பின்செல்வாரில்லாமையால்தாமுஞ்சென்றார்
கொள்ளைக்காரத்துருக்கர்கள்பரிமேலேவரக்கண்டு
கொண்டுதிருவோலக்கங்கலைந்துநின்றார்
பெருகுங்கலகத்தையானென்னசொல்வேன்சந்நிதியிற்
பெருமாளையுங்காணாமையதினாலே
பரபரப்புடனோடமாட்டாதிருக்கும்வேளை
பாருமவ்வளவிலேயிங்குமேலே
சுருதப்பிரகாசிகசாசார்யர்தாமெழுதியருளிய
சுருதப்பிரகாசிப்பட்டோலையையந்தச்சிட்டர்
அதுதன்குமாரறியாப்பிள்ளைகள்வேதாந்தா
சார்யபட்டர்பராங்குசபட்டர்
தாமவரிருவரையும்வேதாந்ததேசிகர்
சந்நிதிதன்னிலே காட்டிக்கொடுத்துப்
பூமியினீரெப்படியேனும்பிழைத்திருந்து
புகழ்சுருதப்பிரகாசிகையைத்தொடுத்து
பார்த்துப்பிரபலஞ்செய்தென்குமாரரிருவரையும்
பரிபாலனஞ்செய்குவீரென்றுநாட்டி
ஏத்தினர்துருக்கர்கள்கூடிவந்தங்குள்ளாரை
யிமிசைசெய்தாரய்யாதீமைசூட்டி
அழகிய மணவாளர் காடேற எழுந்தருளியதும்,
சுருதப்பிரகாசிக பிரவசனமும்
பத்தியென்பதொன்றுமில்லாப்பவதுருக்கப்
படைவருவதறிந்தெழுந்திட்டிவரேநல்ல
புத்திமான்காவேரிமணலிலங்கே
புதைத்தசுருதப்பிரகாசிகையையேந்திக்
கற்றறிந்தார்சுருதப்பிரகாசிகார்யர்மைந்தர்
காணுமரங்கந் துருக்கர்காடாய்கண்டிச்
சத்தியாகாலந்தனிலேகண்டாவ
தாரர்தாமிருந்தனர்கம்பீரர்தாமே.
இராகம் பூரிகல்யாணி தாளம் ஆதி
கண்ணிகள்
ராமானுஜர்க்கபி மதமாம்- திரு
நாராயணபுர மிதமாம் - என்று
காமிதம்கொண்டாங்கே நாடித் -- திருக்
கல்யாணியிலே நீராடி
பிரபத்திமார்க்கங்களாஞ் சாஸ்த்ரம் -- நெறி
பிரபலமிகுந்திடு ஸ்தோத்ரம்
கபர்த்திமதமென்று சந்தித்துப் -- பாஷ்ய
காரர்திருவடி வந்தித்து
நாற்றிசையும்புகழ் வெள்ளையே -- செல்ல
நாரணனைச்செல்வப் பிள்ளையே
போற்றியதுகிரி நாச்சியார் -- தாமே
புருஷகாரமாக வாய்ச்சியர்
இந்தவிருவரைப் பணிந்தே -- நெஞ்சி
லெம்பெருமானென வணிந்தே
அந்தத்தேசந்தன்னைத் தேறியே-- மங்க
ளாசாசனஞ்செய்து கூறியே
சத்யகாலமென்ற வூருக்கே -- வந்து
தானேரங்கநாதன் பேருக்கே
நித்தியானுசந்தானம் பண்ணுவா -- ரிடர்
நீங்கும்படியாக எண்ணுவார்
துலுக்கர்நாடாகவே மண்டிற்றே -- இதைத்
தொலைப்பதெப்போதிங்கே கண்டித்தே
சிலுக்குக்கொத்தாகவேகொத்தியே -- வினை
தீர்ந்துநமக்கென்றும் வெற்றியே
கண்டழகிய மணவாள -- ரரங்
கத்தில்வரவோண நாளர்
விண்டுவபீதித் தவத்தையும்
விண்ணப்பஞ்செய்தா ரனைத்தையும்
என்னசொல்வோமின்னஞ்சொல்லுவோம் -- வினை
யேதேதுவந்தாலும் வெல்லுவோம்
பொன்னிரிசூழரங்கந் தனையே -- விட்டுப்
போந்தருளிமுனை வனையே
கூடிவெங்கானலி நூடே -- வழி
கொண்டுசிலவும்பி நோடே
கூரடியறிந்திட்டார் கள்ளர்கள் -- வந்து
கொள்ளையிட்டார்கபட் டுள்ளார்கள்
அப்படியேலோகார்யர் தடுக்க -- வந்து
அவர்பொருளுங்கொள்ளை கொடுக்க
இப்படிப்பட்டுப் படாமலே - யந்த
எம்பெருமானை விடாமலே
சோதிடபுரத்திற் சேர்த்தன --- ரங்கே
சுரத்தாற்றிருநாட்டைப் பார்த்தனர்
சோதனையைநிரு வகிப்பா-- ரென்றுந்
தொண்டர்துன்பத்தைச் சகிப்பார்
பெருமாள்விளையாட்டை யாடுவார் --அதைப்
பிரமருத்திராதிகள் தேடுவார்
திருமாலிருஞ்சோலை வாசந்தான் -- குல
சேகராழ்வார்திவ்ய தேசந்தான்
கொல்லங்கொச்சிகூட நாட்டிலே -- வாசங்
கொண்டிருந்துங்கோழிக் கூட்டிலே
செல்லவதின்பின்னுநம் மாழ்வார் -- திவ்ய
தேசந்தனைச்சேர்ந்தங்கும் வாழ்வார்
அருகுள்ளவெம் பெருமான்களை -- யவ
ராதரித்தோங்கிநல் லாங்களைத்
திருமுத்தின் சிங்காதனத்திலே -- கூடச்
சேர்த்துநம்மாழ்வார் மனத்திலே
நேராய்வரிசை சமர்ப்பித்தார்--- அங்கே
நின்றும்புங்கனூர் தனையுற்றார்
நாராயணபுரத் துள்ளேயே -- வாழநி
னைத்தழகின்செல்வப் பிள்ளையே
கூடவுங்கொண்டிருந் தலத்திலே-- வட
குன்றுதிருவேங்க டத்திலே
நாடினதம்மலை யோகந்தான் -- வெகு
நாளிருந்ததும்வை போகந்தான்

விருத்தம்
மிஞ்சுபுகழ்வேங்கடமாமலையின்மீதே
வீற்றிருந்தாரழகுமணவாளரங்கே
செஞ்சியதிபதிகோபணார்யனென்பான்
சேஷகிரிவாசனையேபணியவந்து
கொஞ்சுபரியானைமேலுங்காணிக்கை
கொண்டுவந்துதுருக்கர்செய்ததறிந்துபின்னும்
வஞ்சனையாய்ப்படையெழுப்பித்துருக்கர்பொல்லா
மண்டைதானுருட்டியதோர்சண்டைதானே.

தரு இராகம் மோகனம் தாளம் ஆதி
பல்லவி
பாரியானசண்டையே -- கோப -- ணார்யராஜின்சண்டையே
அனுபல்லவி
பாரியதாய்ரண பேரிமுழக்கொரு
சாரியதாகவே வீரியர்சூழ்வரு
பாரினிலேமுனை நேரிடுவார்கள்
போரிடுவார்வெகு பேரிடுவாருடன்
பரவுபடைநெருக்க -- வருமெதிரிகள்வெஃகத்
தரணிமன்னர்பிரமிக்க -- வுரசுவிருது மிக்க (பாரி)
சரணங்கள்
திருவேங்கடபதி சந்நிதிமுன்சென்று
சேவிக்கவென்றவன் பண்டு
வரவேதிருமலை தன்னிலுமழகிய
மணவாளரிருப்பதைக் கண்டு
ஒருதிருவிளையாட் டிதுவென்றுமனுதாபத்
துடனேகோயிலிற் கொண்டு
பெருமாளையெழுந்தருளப் பண்ணவேணுமென்று
பெரியதாகியபத்தி யுண்டு -- அதைப்
பிலுக்கவே காட்டி --அநியாயத்துலுக்கரைவாட்டி -- தருமத்தின்
பெருங்கணையெடுப்பேன் -- மனுநெறியொருங்குடன்றொடுப்பேன்
-- என்றுசொல்லிப்
பிசகாமற்பெருமாளைப் பரவிக்கைகுவித்தா
னிசைசிங்கிபுரத்திலே யெழுந்தருளுவித்தான்
பெரிதானகோயிற்குள முண்டாக்கிநண்ணினான்
பரிவாயனைத்தழகுங் கண்டருளப்பண்ணினான்
பின்புதுலுக்கரை வெல்லத்தென்புகொண்டதுவுநல்ல
பேரானதீர னையா வீராதிவீரனையா (பாரி)
ஆரெங்கும்புகழ்கின்ற சிங்கிபுரத்தில்வாச
மாமழகியமண வாளன்
ஸ்ரீரங்கநகரத்தைத் துருக்கனுஞ்சூறையாடிச்
சேர்ந்திருந்தானைய சண்டாளன்
கோரங்களாகக்கண்ண புறத்திலிறங்கிக்கொண்டு
கோட்டையெடுக்கக் குண்டகோளன்
பாரெங்கும்புகழ்கோடி மதிள்கள்கோபுரங்களைப்
பற்றிக்கொண்டொரு காணியாளன் -- அவன்
பங்கிலுற் றானே திருமணற்றூண் சிங்கப்பி ரானே -- வேதையது
பண்ணினான் வஞ்சந் --தயிரியந்தா னெண்ணினானெஞ்சம் --இந்தச்சீமை
பணங்கள்காசுகள் மலைமலையாகக்கொட்டிக்
கொணர்ந்துகுவித்துக்கோட்டை கொம்மைகளையுங்கட்டிப்
பண்ணிச்சகலகாரிய நான்செய்குவேன்முன்ன
மென்னைப்பிரதானிக்கமாய் வைத்திடிலென்ன
பலுக்கிச்சொல்லவுந்தொட்டான் -- துலுக்கனப்படி விட்டான்
பப்பளிக்கையின்றிமெய்தான்கொப்பணார்யன்வரச்செய்தான் (பாரி)
துலுக்கன்கீழ்துரைகளை உளவாக்கிக்கோட்டைவாசல்
துறந்துவிட்டதி னாற்பாரி
வலுக்கும்ரேகலாவோடு பீரங்கிதுபாக்கியின்
வரிசைபட்டாகத்தி கடாரி
குலுக்குஞ்சுக்குமாந்தடி யெறியீட்டியெறியம்பு
குறுந்தடிகுண்டார் தடிசூரி
பிலுக்கும்படைகளொடு சதுரங்கபலத்துடன்
பேரிகர்ணாடங் காபூரி - வெகு
பிரபலங் கொண்டு -- கொப்பணார்யன் வருவது கண்டு -- நவசிங்கப்
பிரானெதிர் சாற்றத் -- துலுக்கனுக்குச் சுராபான மேற்ற -- அந்தவேளை
பிலுக்கியளவுகண்டு கோட்டைலங்கையேறினான்
துலுக்கர்களைவளைத்து மாட்டிவெட்டிச்சீறினான்
பிணக்காடிரெத்தவெள்ள மானசண்டைதாக்கினான்
வணக்கமில்லாதவரை மறலிநாட்டிற்போக்கினான்
பிண்டமாகச் சிலபேர்கள் -- முண்டமாகச் சிலபேர்கள்
பிரமத்துவேஷிகளைப்போக்குந் --தரிசனவிரோத நீக்கும் (பாரி)
அழகியமணவாளர்கோயிலுக்கெழுந்தருளியதும்
அபீதிஸ்தவம் அருளியதும்.

விருத்தம்

கெடியேற்றியிப்படிக்கேகோபணார்யன்
கீர்த்தியாய்த்துருக்கர்களைச்செயித்தநல்ல
குடியேற்றிக்கோயிலெல்லாமலங்கரித்துக்
கொண்டழகுமணவாளர்தமையுமங்கே
படியேற்றிநாச்சிமாருடனேசேர்த்த
பரிவுகண்டுசகுடும்பராகப்பிள்ளை
அடியேற்றிமங்களாசாசனந்தா
னளிசெய்தாரரங்கர்திருப்பளிசெய்தாரே.

(நாளை முற்றும்)









ஞாயிறு, 23 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிகவைபவப்ரகாசிகைகீர்த்தனைகள்

இராகம் புன்னாகவராளி தாளம் சாப்பு
கண்ணிகள்
களங்கமில்லாச்சத்தியாகாலமெனுமக்கிர
காரமிவராலேசிறந்தது -புகழ்
விளங்குமக்காலத்தி லட்சுமணாரியர்திரு
மேனியில்வைவர்ணியம்பிறந்தது

குமாரருமின்றி யிருந்திடவுங்கண்டு
கொண்டவர்தேவிகள் ஓலுவரே - எங்கும்
சமானமிலாத பாகவதாப
சாரமிதுவென்றுசொல்லுவரே

வேதாந்தாசாரியர் சன்னிதியினாஞ்சென்று
வேண்டியபசாரக்ஷாபணஞ் - செய்தால்
சாதாரணமாகவெல்லாநன்மையுந்
தாமுண்டாவென்றதேசோபனம்.

இங்கிதைக்கேட்கவந்த லட்சுமணாசாரியரு
மேற்றுக்கொண்டார்கிருபாவருஷரே - தவள
சங்கத்திருப்பல்லக்குமுதலாகிய
சம்பிரமுள் ளமாபுருஷரே.
தமதுவிருதெல்லாங்கோயிலிலேவைத்துத்
தாமுந்தேவிகளுமாகவே -- பாத
கமலநடையாகச்சத்தியகாலத்துக்கே
கண்ணனருள்பாடியேகவே.

சதிராகலட்சுமணசாரியரும்வேதாந்த
சாரியர்தமைத்தேடிநண்ணினா -- ரங்கே
எதிர்கொண்டுசாஷ்டாங்கமாகப்பிரணாமந்தா
னெங்கள்வேதாந்தாசாரியர்பண்ணினார்.

அங்கவர்தந்திருமாளிகையிலெழுந்
தருளச்செய்துபசரித்தனர் -- வேத
புங்கவர்லட்சுமணாசாரியார்வந்தவகை
பொருந்தவெல்லாமும்விரித்தனர்

தினந்தோறும்பாஷியவியாக்கியானமேகால
க்ஷேபமாகவேசாதித்து -- அதி
னனந்தரம்பிள்ளைஸ்ரீபாததீர்த்தத்தை
யங்கீகாரஞ்செய்துபோதித்து

தேவிகளுக்கும்பிரசாதித்திருக்வத்
திர்த்தத்தின்வைபவத்தாலே -- அவ
ராவியுடலுக்குமானந்தமாயொரு
ஆண்டுக்குள்ளாயுடன்மேலே

சேர்ந்துஇருந்திட்டரோகமுந்தீர்த்துடன்
தேவிகளுங்கர்ப்பந்தரிக்க -- மனங்
கூர்ந்தலட்சுமணாசாரியரும்மகிழ்ச்சி
கொண்டுமிகவுபசரிக்க

அத்புதவேதாந்தாசாரியார்தம்முடை
அநுமதிபெற்றுநீடி - நாளுங்
கற்புமிகுந்திடுந்தேவிகளுடனே
கலந்திருந்துகொண்டாடி

நாற்றிசைசொல்லுமரங்கந்தனைச்சேர
நல்லகுமாரரும்பிறக்க -- அந்தத்
தீர்த்தமகிமையால்வந்தபிள்ளைநாமந்
தீர்த்தப்பிள்ளானென்றுசிறக்க

பிரபலமாகுந்திருத்தந்தைபேருடன்
பிள்ளைக்கிசைந்திடும்பேர்கள் -- நலந்
தரவேயாயியாழ்வார்பிள்ளையென்றுகூட்டிச்
சாற்றினாரென்றுஞ்சொல்வார்கள்

ஏற்குந்தீர்த்தப்பிள்ளானாயியாழ்வார்பிள்ளான்
என்றேயிரண்டுபேர்தாங்கி -- இந்தப்
பார்க்குள்ளேலட்சுமணாசார்யர்குலந்தான்
கனைத்ததையாபுகழோங்கி

மண்டலமீதிலேயெங்கெங்கேதான்கவி
வாதிசிங்கர்க்கிணைதேசிகர் -- ஆருங்
கண்டதுண்டோசொல்லும்வெகுப்ரபந்தத்தைக்
காட்டியருள்செய்தார்பூசிகர்

பிள்ளையென்றால்தூப்புற்பிள்ளைமற்றப்
பிள்ளையெல்லாமணிற்பிள்ளையே - யென்று
தெள்ளுமொழியாகவெங்குஞ்சொல்லப்பைய
தீட்சிதரேவெள்ளையே
சாண்கட்டைமீதிலேயாயிரத்துவாரத்தைத்
தானிட்டவேதாந்தமூர்த்தியே -- இவரை
காண்கநினைக்கவேயெண்ணியதெல்லாந்தாம்
கைகூடுமென்பதுங்கீர்த்தியே.

கொச்சகக்கலிப்பா
பாயுநீர்பொன்னிசூழ்ந்த பதிசத்தியாகாலமென்னும்
மேயினவக்கிரகாரத் தேகாந்தமிசைந்தபிள்ளை
மாயிருஞாலத்தேயாழ் வார்கடாம்பதின்மர்பாடுங்
கோயிலினைப்பைநெஞ்சிற்கொண்டிட்டார்கண்டிட்டாரே.

வியாழன், 20 நவம்பர், 2008

தரு - இராகம் - மத்தியமாவதி - தாளம் - சாப்பு
பல்லவி
சொல்லக்கேளுமே -- தேசிகர்வைபவம்
சொல்லக்கேளுமே.
அனுபல்லவி
மல்லருடன்பொருங்கச்சி வரதரருளை
யேத்திச்சொல்லுவீரேதோதாரம்மன் சுகுமாரரிவர்கீர்த்திச் (சொல்)
சரணங்கள்
நாதமிகுந்தவடக்கே யேகசீல
ராங்கரிராஜமஹேந்திர பட்டணபால
மாதவநாயகன்றன்மன தனுகூல
மைந்தன்சர்வஞ்ஞசிங்கர்க்கருளி யதுசால (சொல்)
உறுதிபரமைகாந்தி தருமத்திலேபுத்தி
யுண்டானவனாகிக் கொண்டிருப்பதைநத்தித்
திறராமானுஜதரிசனத்தை நிலைநிறுத்திச்
சிறந்திருப்பாரிவரென் றறிந்ததுவேவெற்றி (சொல்)
ஸ்ரீரங்கநகரத்தின் ஞானாதிகுணத்தேட்டுப்
பாரெங்கும் புகழிவர் ஸன்னிதிக்கன்புபூட்டும்
படிதானிரண்டுவைஷ்ணவர்களை வரக்காட்டும் (சொல்)
தத்துவ விஷயமுடன் ரகசியவிஷயமாகத்
தனக்குஞானமுண்டாக ஹிதவுபதேசமாக
வைத்தருள்செய்யவேண்டி விண்ணப்பம்பரிவாக
வரவிட்டதுங்கண்டு வகையும்விவரமாக (சொல்)அந்தவகையுள்ளவன்மனத்தைச் சோதித்துக்கொண்டு
அறிந்துசுபாஷிதநீவி யென்பதுகண்டு
சந்ததத்துவரகசிய சந்தேகமென்றிரண்டு
தாமிந்தமூன்றுகிரந்தஞ்செய்தாரின்னமு முண்டு (சொல்)
சத்துக்களாம்பெரி யோர்களைநீநாடு
சமயாசாரமதை நிலைநிறுத்தவுங்கூடு
உற்றபிரஹ்மஞான விரோதரைத்தள்ளிப்போடு
உண்மையிதென்றுமின்ன மெழுதியதின்சூடு (சொல்)
எந்தநாளுமுனது பாரமெல்லாமுற்று
லக்ஷ்மிநாயகரிடமது தனிலேவைத்து
கந்தபயோதரத்தை நாடுஞ்சாதகமுற்றுக்
கார்மேனியனைநாடென் றெழுதியதையுற்று (சொல்)

புதன், 19 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

படம் நன்றி: ஸ்ரீ ஸ்ரீதர் (சித்ர தேசிகீயம்)
“மின்னுமின்னுபூச்சி போலேயிருக்கிற
வேடிக்கையென்னென்று பேசுவார்......
.....................புழுவென்று வீசுவார்)


நிகம பரிமளம் அருளிச் செய்தது.

இதுவுமது (விருத்தம்)
பிள்ளையினிடத்திற்பிள்ளைலோகாரியர்
பேரியற்பாஷியம்படித்தார்
பிரபலமதுதானப்படியிருக்கப்
பேசினாரவர்சீஷர்முன்பாய்த்
தெள்ளியமொழிநம்மையருமீட்டைச்
செய்துநம்பிள்ளையாங்குருமுன்
சீர்பெறக்காட்டவீயுண்ணிமாதவர்
செங்கையிற்றந்ததாமென்ன
விள்ளுவார்கோசமேகொண்டுபார்த்தல்
விதியதோவுபதேசமுறையே
வேண்டுமென்றார்சீஷர்தாம்வந்து
பிள்ளையில்லாவுடமையா
கொள்ளையாவிங்குளாரிடம்படிக்கக்
கூறுவீரென்றதையறிந்தே
குருமணிநிகமபரிமளமருள்செய்
குருகிருபாநிதியிவரே.
தரு - இராகம் - அடாணா - தாளம் -- ஆதி
பல்லவி
விள்ளுவாரெங்கள் துன்பத்தைத்தள்ளுவாரே
வேதாந்தப்பொருளையெல்லாம்
அனுபல்லவி
விள்ளுவார்த்திருக்குருகைப்பிரான்
பிள்ளானிட்டவாறாயிரப்படிப்பொருள்
உள்ளதைத்தமக்குபதேசமாக அப்
புள்ளாரவரிதையனுபவமாக (விள்)
சரணங்கள்
அமுதமயநிகமபரிமளமென் றுரைசெய்யுமென்பதி
னாயிரப்படிதிருவாய்மொழி வியாக்கியானமும்
அமலனாதிபிரானுக்குமுனிவாகனபோகமென்
றுண்டாக்கியதொன்றான வியாக்கியானமும்
சமரசமாங் கண்ணினுண் சிறுத்தாம்புக்கொரு வியாக்கியானமும்
சங்கிரஹத்திருவாராதனக்கிரம ஞானமும்
குமுகுமுவென்றேமணந் தருமல்லிகை புஷ்பவாசனை
கொண்டவாக்குத்தனமாகப்பிரசண்டவாரிதிநிதானமும் (விள்)
பிரபத்திசாஸ்திரத்திற் சங்கிரகமாய்வேணுமென்றங்குளபெரியோர்
பிரார்த்திக்கநியாசவிஞ்சதி நாட்டியே
பிரபந்தசாரமென்றுசொல்லியாழ்வார்களுடைநாளூர்திங்கள்
பேசிவந்தமுதமயமாய்ச் சூட்டியே
பிரபன்னருக்கு உண்மையாகவர்ச்சியாவர்ச்சியத்தெளிவுகொண்டு
பேர்பெறுமாகாரநியமப் பாட்டுமே
பிரபலமானசர்வாதிகாரமா நித்தியானுசந்தேயப்
பெருகுமந்திரமாகுநல்லதிருமந்திரச்சுருக்குங்கூட்டமே (விள்)
கேளுமையாதுவயச்சுருக்குசரமசுலோகச்சுருக்குடனே
கீதார்த்தசங்கிரஹப்பாட்டும் பாடினார்
தோளிலெக்கியோபவீதப்பிரதிஷ்டாவ்தாயகமான
சுலோகங்கள்செய்தருளிப்புகழ் தேடினார்
ஆளுமெம்பெருமான்கச்சிப்பேரருளாளர்
ஹயக்ரீவாராதனங் கூடினார்
மீளுமிந்தவைபவஞ்சொன்னபேர்பாடினபேர்கள்
வேண்டுவதெல்லாம்பெறவேயாண்டவர்கிருபை நீடினார் (விள்)
கட்டளைக்கலித்துறை
பாடிப்படித்துமனப்பத்திவேண்டுமிப்பாரிடத்தே
நீடித்தகீர்த்திசெய்வேங்கடநாதனைநெஞ்சில்வைத்தால்
நாடிக்கொள்யாவுங்கைகூடுங்கண்டீர்நன்னிலந்தனிலே
கோடிக்குள்ளே யொருஞானியுண்டாமென்று கூறுவதே.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

கட்டளைக்கலித்துறை

மோகாடவிதன்னைநீகின்றதீரமுமுக்ஷுவிவர்
யோகாதிசயமதென் சொல்லாமிவ்வுலகத்திலே
தேகாபிமானங்களின்றிநின்றாரெங்கள்தேசிகரே
ஏகாதசிவிரதந்தவறாமலிருந்தவரே.

தரு-இராகம்-கவுளிபந்து-தாளம்-ஆதி

பல்லவி

வேதநியமனமே - வேங்கட
நாதர்நியமனமே.

அனுபல்லவி

மாதிரமேல்விசுவா மித்திரர்கோத்திரர்
சாதகராமா நுஜதயாபாத்திரர் (வேத)

சரணங்கள்

இச்சையில்லமற்சில ரசூயையைத்தொடுத்தாரே
யேகாதசிவிரத மதனில்வந்தடுத்தாரே
அர்ச்சகருக்குப்பரி தானமுங்கொடுத்தாரே
அருட்பாடென்றுதயிர்த் திரளையையெடுத்தாரே (வேத)
வாங்குமெனப்பெருமாள் சன்னிதிமுன்சென்றாரே
மஹாப்ரசாதம்சிர சாவகிக்கின்றாரே
தாங்குமோலைப் புறத்து நியமத்துநின்றாரே
சாட்சாத்நியமனமோ வடியேனுக்கென்றாரே (வேத)
அறிவுமிகுந்தசோதை திருமுலைப்பாலுண்டாரே
அர்ச்சகரிடத்தினி லாவேசமுங்கொண்டாரே
முறையிதுநாநியமிக்க வில்லையெனவிண்டாரே
முன்புநியமனமே நியமமெனக்கண்டாரே. (வேத)

விருத்தம்

குண்டலத்தினாலென்னகடுக்கனென்ன
கொண்டவிரலாழியென்னசாலுவென்ன
கொண்டலர்த்தித்திரிவதினாலாவதென்ன
குவலயத்தில்விபுதர்களேசொல்லக்கேண்மோ
விண்டலத்தினார்பரவுமரங்கர்மீது
வேதாந்ததேசிகன்றந்றேவியார்க்கு
மண்டலத்தின்மின்னுமின்னுப்பூச்சியாம்பொன்
வராகந்தானிவர்க்குமனவிராகந்தானே

கீர்த்தனைகள் தொடரும்

வியாழன், 6 மார்ச், 2008

ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்

கனகதாராஸ்தவம் அருளிச் செய்தது.

விருத்தம்

நலந்தர வேவெண்பரிமுகத்தால்வந்த
லாலாமுதஞ்சிந்தியிருந்ததெல்லாங்
கலந்தெடுத்துத்தேவிகள்கைகொடுத்துவைத்தா
கதிகொண்டேசிறுகுழந்தைவரதநாதன்
மலர்ந்தகையாலெடுத்துண்ணப்பின்புகேட்டு
மைந்தனிவன்செய்ததிதோவென்றுதானே
குலந்தழைக்குமென்பதற்கு வேறாய்ச்சொன்ன
கூறுதானடைந்ததுமவ்வாறுதானே.

தரு - இராகம் - சாவேரி - தாளம் - ஆதி

பல்லவி

சாமியெங்கள்கருணாநிதி - குருசாந்த - வேதாந்தநிதியிவர்தாமே.

அனுபல்லவி

பூமிபுகழுங்கச்சிப் பேரருளாளர்பாதப்
பூங்கமலம்பரவும் வேங்கடநாதகுரு (சா)

சரணங்கள்

அந்தநாள் பிரமசாரி யொருத்தன்வந்து
அங்கங்கேதனவான்க ளாரென்றெங்கும்விசாரித்
தெந்தன்கலியாணத்துக்கே யெவர்கள்சொன்னங்கள்வாரித்
தந்திடுவாரென்றானே தந்ததிவர்சொன்னமாரி (சா)

இதுதருணத்தினல்ல தனவானிவரென்று
இவர்திருமாளிகையைக் காட்டியேசிலர்சொல்ல
அதுநிசமாமென்றெண்ணி யவனுமிவர்பாற்செல்ல
மதுரமிகுந்தகவி மாரிபொழியவல்ல (சா)

பரிவாயனுக்கிரகித்த பாகவதர்கள்சொற்ற
படியேபெருமாள்கிருபை பண்ணுவாரென்றுமெத்த
பெரியபிராட்டியார்மேல் சீர்த்துதிய்ன்றுரைத்த
வரிசையதினாற்சொன்னம் வாரிவாரிக்கொடுத்த (சா)

புதன், 20 பிப்ரவரி, 2008

ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்

ஸ்ரீ ஹயக்ரீவப்பெருமான் நிமந்திரணத்துக்கு
                எழுந்தருளியது.

                    விருத்தம்

பொறுமைமிகுமிவருக்கேவரதநாதன்
         புத்திரனாயவதரித்துவளருநாளிற்
சிறிதுபேர்தரிசினத்தார்தாமேகூடித்
        திருவத்தியயனத்தில்விரோதஞ்செய்தார்
திறமையுள்ளவிவரறிந்துகலக்கமில்லாச்
        சித்தசுத்தராயிருந்த தெளிவினாலே
உறுதிகொண்டுவெண்பரிமுகத்தர்தாமே
       யுண்டிட்டாரமுதுசெய்யக்கண்டிட்டாரே.

தரு - இராகம் - கலியாணி -- தாளம் - ஆதி

                    பல்லவி

அமுதுசெய்யக்கண்டுகொண்டாரே
யருளாளரயக்கிரீவரைக்கண்டாரே.

                அனுபல்லவி

திமிரந்தன்னைத்தீர்க்குந்தேசிகர்க்கேயுகந்து
திருத்தந்தையனந்தார்யர்திருவத்தியயனத்தில்வந்து  (அமு)

                சரணங்கள்

திருவத்தியயனத்தின்முதனாட்டானேயிவர்
    ஸ்ரீவைஷ்ணவர்க       ணிதானம்
வரணஞ்செய்திருக்கவேசிலர்களசூயையாலவ்
    வைஷ்ணவர்களுக்குப்    பரதானந்
தரவும்வாங்கிக்கொண்டவர் மோசஞ்செய்துபுசித்துத்
     தாம்பூலந்தரித்து         மஞ்ஞானம்
விரவியிருந்தவர்கடிருவத்தியானகார்ய
       விக்கினஞ்செய்யக்கண்டந்தவேளை யெம்பெருமானும்
                                                                                       (அமு)

அந்தவேளையில் ஸ்ரீவைணவர்கிடையாமை
       யாலேவிசாரங்கொண்டு       தேடிச்
சிந்தைசெய்திவர்பின்புதெளிந்து நம்குல
      தெய்வம்வரதரென்று           நாடி
எந்தமயக்கிரீவருமிருக்கக்குறையென்னென்
       றிதயத்தில்வைத்தங்கே நீராடி
வந்துதான்கேசவாதிநாமங்களையுஞ்சாத்தி
       மற்றுந்திருவத்தியனகிர்த்தியத்தில்வந்து  கூடி  (அமு)

வகைகொண்டேமூவன்னமும்வரிதங்கேயயக்கிரீவர்
     வந்தருள்வாரென்றன்பு         மீறிச்
சகலபதார்த்தங்களும்பரிபாகமானதெல்லாந்
      தளிகைதன்னிலே           பரிமாறிச்
செகந்நாதரானவயக்கிரீவரைத்தியானித்தங்கே
       திரைபரிமாறித்துதி        கூறிச்
சுகமாய்வெளியில்வைஷ்ணவபிதுருமந்திரங்களைச்     
  சொல்லிக்கொண்டிருக்கின்ற நல்லவேளையிற்  றேறி
                                                                              (அமு)

கட்டியசோறுடன்  கறியுந்தயிருமெல்லாங்
    கலந்துடனுண்டார்வாசு      தேவர்
ஒட்டியமுதுசெய்யு    மோசையுமுறிஞ்சலி
      னோசையுமாயிருந்திங்         கிவர்
சிஷ்டராம்விதுரான்னம்   புசித்ததுபோலேகொண்டார்
      திருப்தியடைந்தார்பிதிரு           தேவர்
சட்டமதாயிருந்து       தாம்பூலாதிவகையுஞ்
      சமர்ப்பிக்கலாலாமுதந்    தந்தாரேயயக்கிரீவர்  (அமு)  

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

தேசிக கீர்த்தனைகள்

கட்டளைக்கலித்துறை

நடையுடைபாவனையெல்லாநடத்தையுஞானமுமே
புடைசூழ்பெரியவர்கொண்டாடவேவந்தபுண்ணியர்காண்
தடையானதில்லைநிகமாந்ததேசிகர்தாரணிமேல்
விடையவிரத்திதொடுத்தாரெனச்சொல்லிவேண்டுவமே.

தரு - இராகம் - பியாகடை - தாளம் - ஆதி

பல்லவி

தொடுத்தாரேவிரத்திவிரதத்தின்மனங்கொடுத்தாரேதேசிகரே.

                அனுபல்லவி

தொடுத்தார்வைராக்கியநிதியென்றும்போதா
வெடுத்தேயருளாளரிவர்சொப்பனத்தில்வரத்        (தொ)

சரணங்கள்

உம்முடையவிரத்திகண்டுகந்தோமானாலு
    முமக்குக்குமாரர்பெற்று    மின்ன
இம்மையிலொருநாளாகிலுந்தேவியா
    ரிடத்தினிற்பிரவர்த்தியு   மென்ன

எம்மாலென்றவவருமனுஷ்டானஞ்செய்வதற்
     கேற்குமோவென்னவும்பிர  சன்ன
செம்மையாயுமக்குநாம்புத்திரராகவந்து
     செகத்திலவதரிப்ப     மென்னத்                  (தொ)

நமக்காகநீருமொருநாள்கர்ப்பாதானஞ்செய்வீர்
    நாட்டினிஷித்தமல்ல     பாரு
முமக்குப்பிறக்குஞ்செல்வர்தமக்குத்திருநாம
     முண்மையாய்ச்சாற்றுமன்பு    கூரு

மெமக்குப்பிரீதியென்றேவரதரருளிச்செய்ய
     விவருமனதிசைந்து      நேரும்
இமைக்குந்திருக்கண்விழித்தாச்சரியங்கொண்டார்
     வயிராக்கியநிதியென்றுயர்     பேரும்            (தொ)

அவனுக்குவுகப்பாகிலப்படிச்செய்வோமென்று
      அருளாளர்கிருபைதன்னை      யேற்றுக்
கவனத்துடனேகர்ப்பாதானஞ்செய்வதற்குயர்
       காலஞ்சோதிஷநூலைப்      பார்த்து
நலமுற்றகிரஹங்களுஞ்சுபமாய்ப்பனிரண்டாண்டி
      னல்லநாளொன்றொன்றுக்குக்   காத்துத்
தவமிக்கதேவியரிடத்திற்கர்ப்பத்தைத்தாமே
      தரிப்பித்தருளியன்பு       சேர்த்து               (தொ)

நயினாராசாரியர்   திருவவதாரம்

கற்பனைசேர்பாமாலைகண்ணனடிக்கேசாற்று
மற்புதவேதாந்தார்யரவர்தாஞ் -- சொப்பனத்தில்
வந்தருளுங்கச்சிவரதர்திருவருளாற்
றந்தருளுஞ்செல்வரைப்பெற்றார்.

தரு - இராகம் - மத்திமாவதி - ஏகதாளம்

பல்லவி

செல்வரைப்பெற்றார்திருவேங்கடநாதர் செல்வரைப்பெற்றார்

அனுபல்லவி

செல்வரைப்பெற்றாரேகல்விமிகுத்தாரே
    சீராருந்தூப்புற்றிருவேங்கடநாதர்               (செல்)

சரணங்கள்

திருநக்ஷத்திரநாற்பத்திரண்டினிற்
     சேர்ந்திடுநளசம்வச்சரத்திலே
பெருமையாகிய வாவணிரோகிணி
      பேரருளாளர்குமாரராகிவரச்                   (செல்)

வருகுமாரர்க்குச்சாதகன்மநெறி
      வண்மையாய்ச் செய்துமீராறுநாளிலே

வரதராசர்தந்நியமனப்படி
     வரதநாமமெனத் திருநாமம்செய்               (செல்)

திருவிளையாட்டுமாடிக்கொண்டேயிந்தச்
     செல்வர்வளர்ந்திட்நாளிலயக்கிரீவர்
திருவிளையாட்டின்மகிமைக்கண்டவர்
      தெரிசனத்தையு  நிலைநிறுத்தினார்          (செல்)

சனி, 9 பிப்ரவரி, 2008

வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகை கீர்த்தனை

இராகம் - கேதாரகவுளம் -தாளம் - சம்பை

கண்ணிகள்

1. சருவதந்திரசுவதந்திரர்திரு - வரங்கமதிற்றரிசனமே
         தழைக்கவளர்நாளதனி   னேரே
    உரிமைகொண்டுமிவர்தந் திருவடியில்விசேஷக்கியரெல்லா
        முண்மையாகவந்தாசிரயித்தாரே.

2. அவர்களிற்பேரருளாள --ரெனுமொருவர்குணசீல
        ரதிகமேதாவியதினாலே
    குவலயதிற்கீர்த்திபெறு - மெதிராசார்க்கந்தரங்கர்
        கூரத்தாழ்வானவரைப்போலே

3. பரிந்திவர்க்குமந்தரங்கர் -- பேரருளாளருமாகிப்
      பஞ்சசமுஸ்காரமுதல்  வாய்ந்த
    விரிந்துபயவேதாந்த - சகலசாஸ்திரங்களையு
        மிகவுமதிகரித்ததில்வேதாந்த

4.  பூர்ணராயிருக்கையினால் -- பிரமதந்திரசுதந்திரரென்று
        புகழ்ந்துதிருப்பேருங்  கொடுத்தாரே
     காரணப்பேர்கொண்டவர்நல் -- விரத்தியாற்சன்னியசித்துக்
        கார்த்திருக்கவந்து         தொடுத்தாரே

5.  பிரமதந்திரசுவதந்திரசீயர் -- பிரபாகரசீயரெனும்
         பிரபலராம்வெண்ணெய்க்கூத்த   சீயர்
     தரணிதனிலெங்கும்புகழ் -- வீசும்பூரிராமாநு
         சாசாரியராகிவந்த      தூயர்

6. ஒப்பிதஞ்செய்திவர்கண்முத -- லானோர்க்கும்ஸ்ரீபாஷ்ய
        முடையவர்பிரபந்தங்களி   னீதி
    அப்புள்ளார்தமக்குமுன்சொல் -- திருக்குருகைப்பிரான்புள்ளா
        னாராயிரப்படியு     மோதி

7. மற்றுமின்னஞ்சாரார்த்த -- சதுஷ்டயமும்ரகசியார்த்த
         வரிசைகளெல்லாமருளிச்   செய்தே
    தத்துவடீகைமுதலான -- சமஸ்கிருதங்களும்ரகஸ்ய
         சாலங்கள்செய்ததுமப்  போதே

8. தானிதெல்லாமிங்கிவர்க -- ளானசிஷியர்களுக்கேபிர
         சாதித்திருக்கிறநாளி  லங்கே
    ஞானபத்தியுடனேவை -- ராக்கியசம்பத்தையுமாசா
          ரவிருத்திகளையுங்கண்டு   மிங்கே

9.  நடக்குமிவர்பாஷ்யகார -- ரவதாரமென்றிவர்சன்
        னிதிகண்டேபத்திகொண்ட    வாயர்
     வடக்குத்திருவீதிப்பிள்ளை -- யென்னுமவர்தந்திருகு
          மாரராம்பிள்ளைலோகா      சார்யர்

10. உண்மையாம்ஸ்ரீபாஷ்யந் -- தேசிகனையாசிரயித்து
         உபதேசமாகவுங்     கொண்டாரே
      வண்மையாமெதிராசர் -- பிரபந்தமேகாலக்ஷேப
          மாயிருக்கயாவருங்      கண்டாரே

11. பிரபலமாய்முப்பத்தொரு -- பாஷ்யம்வேதாந்தகுரு
         பிரசாத்திதருளின    வராமே
     வருதிரும்சத் துவாரஞ்சிரா -- விதசாரீகபாஷ்யவகையை
           யருளினவரிவர்    தாமே.   

தரிசனத்தார்  அசூயை கொள்ளல்.

கட்டளைக்கலித்துறை

கவிவாதிசிங்கமென  வேதிருவரங்கத்திலிருந்
துவியாக்கியானம்பயில்கின்றநாளிலசூயையினாற்
செவையாகமுன்வந்தழைத்தார்கள்வாதிற்றெரிசனத்தா
ரிவர்தாம்பொறுமையிற்பூமியென்றேசொல்லுமெங்கணுமே.

தரு -இராகம் - மாஞ்சி - தாளம் -- சாப்பு

பல்லவி

பொறுமைக்குள்நிகமாந்ததேசிகனே-- இந்தப்
பூமண்டலத்திலெங்கும் --பூசிகனே.

அனுபல்லவி

வறுமைதவிர்க்குங்கச்சிவரதரேகுலதெய்வ
முறுதியென்றுபணிந்து உலகம்புகழவந்தார்.

சரணங்கள்

வாதத்துக்கழைத்தார்கள்  தரிசனத்தர் -- பாக
   வதபசாரமிதென்றே  தெரிமனத்தர்
ஆதலால்வாராதுகண்டசாமர்த்யரிவரென்று
பாதரக்ஷைவாசற்படிமுன்கட்டக்கண்டாரே.        (பொ)

ஞானத்தைப்பிடிப்பார்கள் சிலபேர்கள் - கர்ம
    நடத்தைகைப்பிடிப்பார்கள் சிலபேர்கள்
ஆனத்தினாலேநாங்களரிதாசர்பாதுகையைத்
தானத்தைச்சிரமேல்வைத்தானந்தம்பெற்றோமென்றார்   (பொ)

அவர்களெல்லாருமிவர்   மகிமைகண்டார் - வந்து
     அபசாரக்ஷாபணங்கள்செய்துகொண்டார்
அவதாரபுருஷர்வேதாந்தாசாரியரென்று
இவரேவைராக்கியநிதியிவரேகலியாணகுணர்        (பொ)

செவ்வாய், 1 ஜனவரி, 2008

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்
[Note: you will notice a few mistakes. But they are not typing errors. I am just reproducing what is in the original. For example line 3 and 4 in "Venba". I did not attempt to correct it as my knowledge on sampradhaya is limited and as I am not a scholor in Tamil also]

திருமேனி வர்ணணை

வெண்பா

வேண்டுவீரன்புபெறுவீரேபவக்கடலைத்
தாண்டுவீர்ஞானத்தனிவிளக்கைத் -- தூண்டுவீர்
தானிவர்னனையுரைக்குஞ்சாந்தவேதாந்தகுரு
மேனிவர்னனையுரைக்கவே.

தரு - இராகம் -- முகாரி -- தாளம் -- சாப்பு.

கண்ணிகள்
கதிர்வீசுமிரவிபோற்கரந்திசேருந்திவ்ய
மங்களவிக்கிரகவேதாந்த தேசிகரே
புதுமலர்ச்சியாகியசெந்தாமரைமலரைப்
போன்றபொன்னடியுள்ள தேசிகரே

களங்கமில்லாமல்மனோகரங்களாகிய
திருக்கனைக்கால்களுமிலங்குந் தேசிகரே
விளங்கிநிற்கிறநல்லமுழந்தாளுடைய
திருவேங்கடநாதார்ய தேசிகரே

திருவரையுமதிற்சாத்தினதிருப்பரி
வட்டச்சேர்த்தியாலும்விளங்கும் தேசிகரே
திருநாபிக்கமலமுந்திருவுத்தரியச்
சேர்வும்சிறந்துவிளங்குமெங்கள் தேசிகரே

மருவுமுந்நூலுந்திருமணிவடத்துடன்
கூடும்மார்பினணிதுலங்குந் தேசிகரே
திருவாழிதிருச்சங்குந்திகழ்புஜங்க
ளுடனேசெழிப்பான நிகமாந்த தேசிகரே

பவித்ரங்களையணிந்தபங்கஜகர
தீர்க்கபாணியுகம்பொருந்தும் தேசிகரே
குவித்தேதிருமந்திரமுங்கொண்டதுவய
முச்சரிக்குந்திருப்பவளவாய்த் தேசிகரே

கிருபைக்குள்ளாய்க்கடாக்ஷிக்கிற
திருக்கண்களென்றேகீர்த்திக்கவேவளருந் தேசிகரே
உருகித்தற்காலங்கண்டுசார்த்தினபனிரண்டு
ஊர்த்துவபுண்டரங்களேற்குந் தேசிகரே

மண்டலந்தனிற்புகழ் கொண்டகண்டாவதாரர்
மவுலிமூடத்துலங்குந் தேசிகரே
தொண்டர்கள்மனத்தன்பு கொண்டிடுஞ்சர்வ
தந்திரசுவதந்தராரியரெங்கள் தேசிகரே

கட்டளைக்கலித்துறை

வடத்தேறுகண்டுயில்கொண்டான்மடுவின்மணியாவின்
படத்தேறுதாண்மிதித்தாடியுங்கோவியர்பாரமுலைக்
குடத்தேறுமார்பர்தங்கண்டாவதாரரைக்கூப்புகையர்
கடத்தேறுவார்கள்கவிவாதிசிங்கரைக்கண்டவரே

தரு - இராகம் -- பரசு -- தாளம் -- ஏகம்

பல்லவி
வெகுவிதமகிமைகள் கொண்டார் -- கவிவாதிசிங்கரே
விருதாங்கித ராவரே.

அனுபல்லவி

இகபரந்தருஞ் சேஷகிரிவேங்க
டேசன்ஸ்ரீநிவாஸனேதந்த (வெகு)

சரணங்கள்

காஞ்சிதமான காஞ்சிமாநக
ராஞ்சனனமுமிவர்க்கே -- விசு
வாமித்திரகுல மாமத்திக்கொரு
சோமசற்குணநாமத்தற்புதர் (வெகு)

ஆக்ஷிபுண்டரீகாட்சராகிய
தீக்ஷிதர்திருப்பேரர் -- எங்கள்
அநந்தாசாரியர்மனந்தனில்மகிழ்
தினந்தோறுஞ்சுனந்தனரிவர் (வெகு)

நன்னலயதி மன்னர்தமையே
யுன்னுவதுசீவனராம் -- நம்ப
ராங்குசர்பதந் தாங்குமனதி
லோங்குபர காலாங்கிரிகொண்டார் (வெகு)

உற்றொருநாவில் வித்தையாவுங்கொள்
புத்திமானிவர்தாமே -- வெகு
உறுதியுள்ளாரென்றறி வீர்கலைக
ணெறிகளறிந்துபொறுமையுள்ளவர் (வெகு)

ஓங்குலகினி லீங்குசொன்னமோட்
டாங்கிளிஞ்சிலாயெண்ணினார் -- வெகு
யோக்கியர்வை ராக்கியத்திற்சி
லாக்கியசுகராக்குமிவரே. (வெகு)

வெண்பா

தரமாங்கண்டாவுருவந்தாங்குவேதாந்தகுரு
வரமாங்கவரடிமையாமெனவே -- மீமாஞ்சை
நல்லவரும்பொருளைநாடினவராகியபே
ரெல்லவருங்கைதொழுவாரே.




ஞாயிறு, 23 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவப்ரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்- ஆனந்தபைரவி-தாளம்-ரூபகம்

பல்லவி

கண்டீரவர்வாதிகள்கண்டீரவர்சேஷகிரி
கண்டாமணிரூபகர்கண்டரேபிரசண்டரே

அனுபல்லவி

மண்டலமீதில்வரதராஜர்பாதம்
வந்தனைசெய்யுமனந்தகுருமைந்தர்
அண்டியபேர்க்கருளேசெய்யும்வேதாந்தா
சாரியபரசூரியரேகாணும் (கண்டீ)

சரணங்கள்

தத்துவத்திரயசுளகமிரகஸ்யத் திரயசுளகமென்றிரண்டு
தத்துவமாதிரிகைரகஸ்யமாதிரிகை தத்துவபதவிரகஸ்யபதவி
தத்துவநவநீதம்ரகஸ்ய நவநீதமென்னுமின்னந்
தத்துவரத்தினாவலி சரளரகஸ்யரத்தினாவலி
பத்தரெல்லாஞ்சொல்லும் ப்ரதிபாத்தியஸங்கிரகமிசை
மற்றினனம்ரகசியரத்தினாவலியிருதயமுஞ்சொலிமகிமைசேர் (கண்டீ)

பரமபதசோபானமும் பகரும்பிரதானசதகம்
தருமபயப்ரதானசாரம் சம்பிரதாயபரிசுத்தியும்
உரமிகுந்த உபகாரசங்கிரகமுமுசிதமாகிய
திரசாரசம்க்ஷேபந் திருமடியடைவுடனிவையெல்லாங்
கரதலாமலகமாய்க்கண்டமணிப்பிரவாளப் பிரபந்தங்கள்
தரணிமேல்ரகஸ்யார்த்த்ங்களின்சம்பிரதாயங்களும் பிரபலமே (கண்டீ)

வெற்றிவிரத்திகூரத்தாழ்வான்வித்தைதனிற்பட்டரென்பார்
நத்திமிக்கானஞானத்தினில் ஞானத்தொருமூர்த்திநிகராய்ப்
பத்திதான்ஒருவடிவுகொண்டாரென்றேபன்னிப்பன்னிச்
சத்துக்களதிசயிக்கவே க்ஷமையிற்பூமியென்றே தரிசன
னத்தர்கள்கொண்டாடு மிராமானுஜன்னிவர்தாமென்றேபிர
சித்தராய்வைபவப்ரகா சிகைவிளங்குந்தேசிகசிகாமணி (கண்டீ)

சத்காரகாளகூடந் தருணிகுணபஞ்சபாபுசங்கி
தக்கராஜதானியுங்கும்பீபாகஞ் சமனாகயெண்ணிப்பரிகரி
சற்குருவாஞ்சருவதந்திரசுவதந்திராரியர்தாமிவரே
மிக்கானசீர்வைஷ்ணவர்விளங்கவேயெம்மைவிற்கவும்பெறுவர்
எக்காலுமென்றேதானினை யுஞ்சாந்தாதிகுணபரிபூரண
கற்கடகவிந்துமேகம்போற் கவிமாரிபொழிதிவ்யவாக்குள்ளார் (கண்டீ)

வைதிககர்மானுஷ்டிப்பு

வெண்பா

வாக்குமிகவுண்டாம்வரதரரருள்பெறுவ
தாக்குமவர்கருணையாநந்தந் --தேக்கும்
வனசரிகையைச் சொல்லிவாழ்த்துந்தூப்புல்லார்
தினசரிகையைச்சொல்வதே.

தரு-இராகம்-கல்யாணி-தாளம்-சாப்பு

பல்லவி

தினசரிகைகளைச் சொல்லுவோஞ் -- சொல்லியேயெங்கள்
வினைகள்யாவையும் வெல்லுவோம்

அனுபல்லவி

வனமாலிகாலங்கிருத மஞ்சுளகந்தரரென்னும்
பனகசயனரடி பணிகவிவாதிசிங்கர் (தின)

சரணங்கள்

பெருமைசிறந்த கலைக்கு -- முதலானவர்
பிரமமுகூர்த்தந் துவக்கு -- எழுந்திருந்து
திருவடிகளை விளக்கிச் -- சுத்தாசமனஞ்
செய்தருளவரன் முறைக்கு -- இசைந்துநல்லா
தரவுடனென்னுயிர் தந்தளித்தவரெனும்படி
குருபரம்பரையாய்க்கொண் டடிபணிந்திடும்பிள்ளை (தின)

உதயகாலத்திற் சிந்தித்துத் -- தோத்திராதிகளை
யுறுதியாயனு சந்தித்து -- யோகசமாப்தியதை
பூர்வகமாய் வந்தித்துச் -- சங்கற்பஞ்செய்து
அபிகமனத்தை சிந்தித்துத் -- திருக்காவேரி
நதிக்கேகவெழுந்தருளிநாடிச்சுருதிசொன்ன
ததிசவுசாசமனதந்ததாவனாதிசெய்குரு (தின)

தீர்த்தமுறையைப் போற்றி -- நீராட்டஞ்செய்து
திருப்பரிவட்ட நேர்த்தி -- யாய்த்தரித்தேபின்
ஊர்த்துவபுண்டரங்கள் சார்த்திப் -- பவித்திரபாணி
யுடனனுஷ்டான மேத்தித் -- தொண்டர்வினையை
மாற்றுமெம்பெருமானைமங்களாசாஸனஞ்செய்து
கீர்த்திமிகுங்கோயிலுக்கெழுந்தருளுந்தேசிகன் (தின)

தரணிசொல்முப்பத்தி ரண்டு -- என்றபசாரத்
தையும்பரிகரித்துக் கொண்டு -- சேவாக்கிரமத்தில்
திருவடிதொழுவ துண்டு -- அங்கங்கேதானே
சிறந்ததற்காலங் கண்டு -- பிரபந்தங்களாந்
திருப்பள்ளியெழுச்சிநந்திருப்பாவைகத்தியமுதல்
வரப்பெறுந்தோத்திரங்களைவழுத்தும்வேதாந்தகுரு. (தின)

அருளையுள்ளத்திற் றரித்து -- ஆபாதகேச
மாகக்கொண்டு முச்சரித்துக் -- கண்டுபெரிய
பெருமானைநமஸ் கரித்து -- உடனேதீர்த்தப்
பிரசாதமுஞ்சுவீ கரித்துத் -- தம்முடையன்பு
பெருகியாராதனமாம்பேரருளாளரையும்
வருமயக்கிரீவரையும்வந்திக்குங்கண்டாவதாரர். (தின)

அபிகமனத்தை யெடுத்து -- வியாக்கியானகூட
மதனில்வந்தே யடுத்து -- அவரவர்க
ளபேக்ஷாகுணங்கள் கொடுத்துச் -- சீபாஷியமுத
லானகிரந்தங்கள் தொடுத்து -- மணிப்பிரவாள
விபவரகசியார்த்தங்கள்விளங்கப்பிரஸாதித்தங்கே
சுபமேவுஞ்சருவதந்த்ரசுவதந்தராரியர் செய்யுந் (தின)
தக்கசிஷ்யர்மனத்தியா னத்தைப் -- பொருந்திக்கொண்டு
சமர்ப்பித்தஉபதா னத்தைப் -- பாத்திரமேயத்
தஸ்கரகிராகிய மானத்தைக் -- கொண்டுமேயாரா
தனஞ்செய்தருளி ஞானத்தை -- விளக்கவந்தார்
முக்கியமாமகத்தியசாகம்முதலாந்திரவியமுடனே
மிக்கதளிகையைச் சமர்ப்பிக்குநிகமாந்தகுரு. (தின)

உச்சிதவைசுவ தேவாதி -- களைச்செய்து
உண்மையாகமந்த்ர மோதி -- யாகாந்தரத்தில்
இச்சையைச்சமர்ப்பித்து மேதி - னியிற்புகழும்
இராமாநுஜானுபவ ரீதி -- ஆழ்வார்கள்சொல்லும்
மெய்ச்சுருதிப்பொருள்களுமேன்மையாம்புராணவகை
அச்சுதகுணவர்ணனையாவுந்தொண்டர்க்கருள்குரு. (தின)

காலாழுநெஞ்சழியு மென்னும் -- சொல்லின்படியே
கண்டனுபவித்தவர் முன்னுஞ் -- சாயங்காலத்தில்
மாலாயனுஷ்டானத்தின்பின்னும் -- அருளாளரை
மங்களாசாஸனஞ்செய்துன்னும் -- அந்தரங்கத்தில்
மேலானதொண்டருக்குமிகுந்துசூக்ஷுமார்த்தங்கள்
லாலாமுதமுண்டவர்சல்லாபமாயருளிச்செய்யும் (தின)

கண்வளர்தலென்பது முண்டு -- சுபத்தினீகனாங்
கண்ணனைமனதினுட் கொண்டு -- யோகநித்திரை
பண்வளர்வந்தவர் கண்டு -- எழுந்திருந்தே
பண்டுபோலேநாள்தோறுங்கொண்டு -- மாலுக்கேசெய்வார்
எண்வளரும்பிரபந்தங்களெங்கணும்பிரசித்தமாக
விண்வளரும்நிலவென்னவிளங்கும்வேங்கடநாதர் (தின)

சனி, 1 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

பாம்பாட்டியின் கருவமழித்தல்

                  விருத்தம்

தாம்பாண்டிநாடுமலைநாடுஞ்சோழ
         தரணியிலுளமுளதிவியதேசமேயெல்
லாம்பாண்டித்தியஞ்சிறந்தபிள்ளைதாமுல்
         லாசமதாய்த்தொழுதுகொண்டுகாஞ்சிசேர்ந்தார்
வீம்பாண்டிறமைசொல்லும்வாதிமாரை
         வென்றடக்கிவேதாந்தம்விளக்குநாளில்
பாம்பாண்டியொருவன்வந்துவாதுசொல்லப்
         பார்க்கின்றார்ஜயவிருதையேற்கின்றாரே.

தரு- இராகம்- புன்னாகவராளி- தாளம்-ஆதி
                       பல்லவி

வேண்டிமந்திரம்கற்றாரே - வாதியானபாம்
பாண்டிதனைச்            செயித்தாரே.

                  அனுபல்லவி

பாண்டவர்க்குத்தூதாகத் தாண்டிநடந்த பாத
நீண்டவரதரருள் பூண்டவேதாந்த குரு.              (வே)

                   சரணங்கள்

          சோளிகை  நரேந்திரனே - இவர்தந்திரு
           மாளிகைவாசன்முனே

நாளொன்றுபவாசத்தால் மீளுங்கோபத்தாற்சொல்வான்
கேளுமென்னைச்செயித்தானீளுங்கீர்த்தியென்றானே.(வே)

            சர்வதந்த்ர   சுவதந்த்ரம் -- விருதுபெற்ற
            நிர்வாகர்பாம்பு   மந்திரம்
அறிவிராகிற்பிடாரன்நெறிகண்டுநாகங்களைக்
குறிகண்டுதடைகட்டிமறியும் பார்ப்போமென்றானே.  (வே)

        இவனோடென்ன    விவாத -- மென்றிருந்தாலும்
        அவனோபுசியான்           சாதம்.
எவர்தாமாகிலும்வந்தொ ருவர்வாசல்காத்திருந்தாற்
கவலையைவிசாரிப்பார் குவலயத்தில்வழக்கம்.            (வே)

         பார்த்துவாவென்று  கூறிக் -- கோயின்முன்னெழு
         கீற்றையிவர்தாங்        கீறி
ஏற்றவுன்னிடத்திலே வாய்த்தபாம்புகளெல்லாஞ்
சேர்த்துவிடுவாயென்றே சாற்றினாரெங்கள்குரு.          (வே)

          மிடுக்குடன்பாம்    பாட்டி -- மாநாகங்கள்
          விடுக்குந்திறமை           காட்டித்
தொடுக்குந்தருணங்கீற்றைக் கடக்கமாட்டாததுகள்
முடக்கங்கொடுத்ததுகண் டெடுக்குங்கோபமிஞ்சவே.

           வாசுகிதட்சக        சமான - நாகங்களை
           வீசியேவவு        மங்கான
பேசியொன்றிரண்டான ராசிரேகையிற்சென்று
கூசிநின்றதுகண்டு    மேசிவப்பானான்கண்கள்.        (வே)

         அங்குரேகையைத் தாவச் -- சர்வபூத
         சங்குபாவனை      யேவப்
புங்கமாயேழுகீற்றை  யுங்கடந்ததுமிவ
ரங்கந்தொடவரக்கண்டுங்  கருடனையெண்ண           (வே)

            இவ்விதங்கருடன்      வந்தே -- சங்கபாலனைக்
            கவ்விக்கொண்டு     பறந்தே
செவ்வையெழுந்தருள  அவ்விஷவயித்ய
னெவ்வயணமறிவான் றிவ்யபாதந்தொண்டென்றான்.(வே)

           உந்தமதடிமை    காணுன்ஞ் -- சங்கபாலனைத்
           தந்துரக்ஷிக்க       வேணும்
எந்தங்குருவேயென்று  வந்தான்கருடதண்ட
கந்தன்னாற்சங்கபால னும்திரும்பிடத்தந்தார்.          (வே)

                      விருத்தம்

புண்ணியகோடிகட்கெல்லாமிடமாங்காஞ்சி
        புரந்தனிலே சிலகாலமிருந்துபின்னு
மெண்ணியதெல்லாங்கொடுக்கும்வேங்கடத்தி
        லேகியேமங்களாசாசனந்தான்
நண்ணியபின்றிருவரங்கப்பதியைநெஞ்சி
          னாடியேயெழுந்தருளிவந்தாரெங்கள்
பண்ணியமிக்கானதபோபலன்கைவந்த
          பலத்தினார் தூப்புலென்னுந்தலத்தினாரே.

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்-சவுராஷ்ட்ரம்-தாளம்-- ஆதி

பல்லவி

பிள்ளையென்றாலிவரே       பிள்ளை
ப்ரபலங்கொண்டதூப்புற்     பிள்ளை                 (பிள்)

அநுபல்லவி

வெள்ளைப்பரிமுகங்    கொண்டார்
  மிகுந்துலாலாமுத      முண்டார்                         (பிள்)

சரணங்கள்

ஏற்குங்கோயிலுக்கே      நண்ண
   எழுந்தருளியோர்நா     ளுண்ண
மார்க்கத்திற்றளிகை       பண்ண
    வாய்க்காமலரியை     யெண்ண

வழியிலங்கடியிலுள்ள   அவரைது
   வரைகோதுமைகொள்ளுமுதலாகியவற்றைப்
பழுதில்லாதவேதம்பரவுமெங்கள்வெள்ளைப்
   பரிமுகரமுதுசெய்திடவைத்தாரே.                       (பிள்)

கோமுட்டிகள்கண்டு       வெள்ளைக்
    குதிரையாரதிந்தக்      கொள்ளை
தாமிட்டுத்தின்பதும்         சள்ளை
   தானென்றோட்டிவிடப்  பிள்ளை
திரைவர்ணிகராகும்வைஷ்ணவர்க்ருஹத்தில்
   தங்கவங்கணுமப்படிக்கேசெய்தருள
இவ்வண்ணஞ்செய்ததிதாரதெனவேவேங்க
  டேசதேசிகரதென்றறியவைத்த                              (பிள்)

இம்மஹிமையுள்ள               வரிங்
   கிவரைவந்தேயெல்லாந்    தெரி
யும்முடையவெள்ளைப்        பரி
   யோங்கியெங்கடலைப்    பொரி
உள்ளவையெல்லாந்தின்றதிருகால்முக்கால்நாற்கா
    லோட்டிவிடப்போகவில்லைநீர்கட்டுமென்றார்
பிள்ளைவெள்ளைப்பரிமுகரேபட்டினி
   பொறாதமுதுசெய்தகிருபையறிந்தனரே                  (பிள்)

பரமாத்துமசமாரா          தனம்
  பண்ணாதிருந்தவ        யனம்
தெரிவார்பாலமுத          சனஞ்
  செய்யும்விதிகண்ட       தினந்
திருக்கண்வளரப்பிள்ளையக்ரீவருஞ்
     சிறந்துபூரணராயெழுந்தருளினாரே
பெருக்கமிகுமிதைத்திரைவர்ணிகர்கண்டு
     பிரபலவதிசயந்தனைக்கொண்டாடினாரே              (பிள்)

விருத்தம்

வித்தியாவைபவரானவிவர்தாமுஞ்சீர்
      வெள்ளறைப்பங்கயச்செல்விபுருஷகார
சத்தியானுசரிதமாய்க்கொண்டுமேசெந்
      தாமரைக்கண்ணரைத்தொழுதுதிருக்காவேரி
மத்தியராமரங்கரடிபணிவாரங்கே
      வந்துதொண்டுசெய்தவைஷ்ணவர்க்காக
நித்தியானுஸந்தேயரகஸ்யார்த்தங்கள்
     நிலையிட்டார்மகிமையுள்ளகலையிட்டாரே.
 

ஞாயிறு, 18 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப்ரகாசிகைக் கீர்த்தனைகள்

வெண்பா

ஆழமண்டவும்படரவாமடுவிலோலமிட்ட
வேழமண்டவுக்கராவேசிதைந்து - வீழமண்ட
 சூழமண்டவாழியனைத்தூப்புலார்சேவிப்பர்
சோழமண்ட லந்தனில்வந்து
.

தரு-இராகம்- சங்கராபரணம்- தாளம்- சாப்பு.

பல்லவி

சேவித்தார்  எங்கள்திருவேங்கடநாதாரியர் - சேவித்தார்

அனுபல்லவி

வாவிகூவநிறைந்தகாவிரிவளநாட்டில்

மேவுசோழமண்டலத்தேவர் திருப்பதியை           (சேவி)

சரணங்கள்

திருப்பேர்நகரிலப்பக்     குடத்தானை - அம்பில்
     சேர்ந்தநாகத்தணையாந்  தடத்தானை - மிக

விருப்பமாங்கண்டியூரி   னிடத்தானை -அங்கே
       மிண்டியரசன் சாபந்தீர்   திடத்தானை --யின்ன

மருப்பரவியதஞ்சைமாமணிக்கோயில்வளர்ந்
      திருக்குமெனக்கரசை  யென்றஞ்சையாளியையும் (சேவி)
 

வடகரைப்புள்ளம்பூதங்குடி    கொண்டே வளர்
     வல்வில்லிராமனடி    யிணைகண்டே -- பணிந்

தடைவுடனாதனூர்   தனிற்பண்டே -- படி
  
     யாண்டளக்குமய்யர்க்கு வெகுதொண்டே - செய்து
தடமீதுவந்துகவித்தலத்திற்கண்ணனுக்கே
 யன்பிடுவார்கூடலூர்க்காவிரிப்பெருநீர்வண்ணனைக்கண்டு (சேவி)

மணந்தரும்பொற்றாமரைப் படர்ந்தையே -செழு
    மாமணிசேருந் திருக்    குடந்தையே - மலர்
அணிந்தகோமளவல்லி  மடந்தையே-  வாழு
    மன்பர்க்கேயிவரரு     ளுடந்தையே -- யென்று
தணிந்தேவணங்கியானந்தவெள்ளம்பெருகக்கொண்டு
     பணிந்தாராராவமுதத்தைப்பருகியனுபவித்து      (சேவி)

நந்திபுரவிண்ணகர     நாதனைத் - திரு
     நறையூர்நம்பியாம்வேதப்   பாதனை - யருள்
தந்ததிருச்சேறையின்    மீதனை - யெங்கள்
      தண்சேறைவள்ளலாம்வி   நோதனைப் -- பணிந்
துந்திருவிண்ணகரிலும்பர்கள்தொழவரும்
    அந்தவிண்ணகர்மேயப்பனடியைக்கண்டுஞ்   (சேவி)

கண்ணமங்கையிற்பத்த    ராவியே-- கண்டு
     கண்ணாலாநந்தவாரி    தூவியே - செய்ய
கண்ணன்மகிமையைக்கு     லாவியே - திருக்
     கண்ணங்குடியதனை     மேவியே - நல
மென்னுஞ்சிலையினாலிலங்கைதீயெழச்செற்ற
      அண்ணலுடனேநாகையழகியாரையுங்கண்டு  (சேவி)

திருக்கண்ணபுரத்துறை     கின்றானை -- அங்கே
     சேர்ந்துகருவரைபோல்  நின்றானை - வலம்
பெருக்குந்தொண்டர்வினையை வென்றானை - நல்ல
     பேறாஞ்சிறுபுலியூர  னென்றானை - அந்த
அருண்மாகடலமுதத்தையும்வெள்ளியங்குடியில்
      வருகோலவில்லிராமனையுமனதுட்கொண்டு   (சேவி)

திருவணியழுந்தூரில்     வந்தனை - செய்து
   தெய்வத்துக்கரசை    முகுந்தனை - யின்னந்
திருவிந்தளூரதனைச்    சிந்தனை - கொண்டு
   சேர்ந்து மருவினிய    மைந்தனைப் -- புகழ்
விரவுதலைச்சங்கத்தில்விண்ணோர்நாண்மதியையும்
     பரவியெம்பெருமானைப்படியளந்தோனேயென்று  (சேவி)

நலமேவியதுளவத்   தோளனை --நாளும்
    நான்மறைபரவிய  தாளனை - யென்று
நிலமையாகியகிருபை  யாளனை -- வள
    நேர்வயலாலிமண    வாளனைத் - தமிழ்க்
கலியன்முன்னிலையாகக்காணும்பரிவுகொண்டு
    நலதிருவாலிதிருநகரிதனிலேகண்டு                 (சேவி)

விருத்தம்

புயலாலிணைகளேசொல்லும்பூமேனியவனைவண்டு
செயலாலிகூறுகின்றதிருத்துழாய்மார்பினானை
வயலாலிதனிலேயேத்திவருகவிவாதிசிங்கர்
கயலாலிசையுஞ்செய்நன்னாங்கையில்வந்துபரவினாரே.

தரு - இராகம் -முகாரி - ஆதி.

கண்ணிகள்

நாங்கூர்ப்பதியினில் - மணிமாடக்கோயில்
   நந்தாவிளக்கையுமேத்திப் - புகழ்
வீங்கும்வைகுந்தவிண்ணகரிற்பின்னைசெவ்
     வித்தோள்புணர்ந்தானைப்போற்றி                       (1)

அரிமேயவிண்ணவர்குருமணியென்னா
    ரமுதத்தைவந்தனைநீடித் - தமிழ்
மருவுந்திருத்தேவனார் தொகைமேவிய
    மாதவப்பெருமானைப்பாடி.                                  (2)

சீர்புருஷோத்தமத்தண்ணனைவான்செம்பொன்
    செய்கோயில்வானவர்கோனைத் - தொழு
வார்திருத்தெற்றியம்பலத்திற்செங்கண்
    மாலானவானந்தத்தேனை.                                   (3)

மின்மணிக்கூடத்திற்கடுமழைகாத்த
     வேந்தினைக்காவளம்பாடி - நாகத்
தின்னடுக்கந்தீர்த்தானையெம்மண்ணலைத்
     திருவெள்ளக்குளத்திலேகூடி                                  (4)

பார்த்தன்பள்ளியிற்செங்கண்மாலவனைப்
     பணிந்தருள்பெற்றவிசேஷம் -  மிகுஞ்
சீர்த்தியாங்காழிச்சீராமவிண்ணகர்
     தில்லைத்திருச்சித்ரகூடம்                                      (5)

வந்துவிளங்கியகோவிந்தராஜனை
    மங்களாசாஸனங்கூறி - யங்கே
முந்துபரமாசாரியனாநாத
    முனியென்னும்பிரானருள்வீறி                                (6)

கொண்டுவீரநாராயணபுரத்திற்
     குருகாவலப்பன்பிரானைத் -  தேவ
மண்டலம்போற்றுந்திருமுட்டமேலாதி
    வராகநயினாரென்கோனை                                  (7)

திருப்பதிகளின்மீதிற்சிறந்தவான்சுடரைச்
    சேவைசெய்துமுகந்தாரே - அன்பு
பெருக்கியபேரருளாளரைச்சேவிக்கப்
       பெருமாள்கோயில் வந்தாரே.                            (8)

செவ்வாய், 13 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்ததேசிக வைபவப்பிரகாசிகைக் கீர்த்தனைகள்

திவ்யதேச மங்களாசாஸனத்துக்கெழுந்தருளியது
கட்டளைக் கலித்துறை

பதின்மர்தம்பாக்கொண்டருளியங்காவிரிப்பாங்கரங்கப்
பதியருள்கொண்டுநந்தூப்புல்வந்தார்தொண்டர்பாடிமனம்
பதிபதபங்கயவேதாந்ததேசிகர்பாங்குதிருப்

பதிகளின்மேற்சென்றுமங்களாசனம்பண்ணினரே.

தரு-இராகம்-கேதாரகவுளம்-தாளம்-ஆதி
பல்லவி

தெரிசித்தாரையா - திருப்பதிகளையெல்லாம்
திருவேதாந்தகுருவே.

அனுபல்லவி

திருக்கோட்டியூரிலென் னுருவிலரியையும்
திருமெயத்திலின்ன முதவெள்ளத்தையும்
திருமாலிருஞ்சோலை தனிற்சுந்தரமாலையும்
திருமோகூர்க்காளமேகன் றிருவடியையும் (தெரி)

சரணங்கள்

மல்லாண்டதிண்டோளனை மதுரைதனிலேகண்டு
மங்களாசாசனஞ்செய்தேத்தி
புல்லாணிதனிற்றெய்வச் சிலையாரைச்சேவித்துப்
புகழ்திருவணையாடிவாழ்த்தி (தெரி)

மீண்டுந்தண்காவிற்றிறல் வலியைக்கண்டு வணங்கி
வில்லிபுத்தூரில் வந்துசேர்ந்து
வேண்டிப்பெரியாழ்வாரைப் புருஷகாரமாய்க்கொண்டு
வியந்து மனது களிகூர்ந்து (தெரி)

கொண்டேவடபெருங் கோயிலுடையான்சூடிக்
கொடுத்தநாச்சியாரையும்பாடித்
தண்டமிழோர்கள் சொல்லுந் திருநகரியில்வந்து
சடகோபன்றனையே கொண்டாடி (தெரி)

நிரஞ்சனமயஞ்சனவென்னுஞ்சுலோகத்தாலே
நிறையுமன்பொடுநம்மாழ்வாரைப்
பொருந்தியடிபணிந்தேயவரை முன்னிட்டுக்கொண்டு
பொலிந்துநின்றபிரானென்பாரை (தெரி)

அங்குள்ளவிரட்டைத் திருப்பதியிதென்றுசொல்வ
தான தொலைவில்லிமங்கலந்தானே
பொங்கமிருந்துவளரர விந்தலோசனைப்
புகழ்ந்துபணிந்து நலந்தானே (தெரி)

கலந்துதிருப்பேரையில் மகரநெடுங்குழைக்
காதனடிக்கேயன்புசார்த்தி
சொலுந்திருப்புளிங்குடிக் காசினிவேந்தரையும்
தொழுததும் வெகுநேர்த்தி (தெரி)

வரகுணமங்கையிலெம் மிடர்கடிவானையவ்
வைகுந்தத்திற்கள்ளப்பிரானைப்
பரவித்தென்குளந்தையில் மாயக்கூத்தனென்னும்
பாஞ்சசன்னியக்கரத்தானை (தெரி)

மாவளம்பெருகிய திருக்கோளூர்தனில்
வைத்தமாநிதியையுமீண்டு
சீவரமங்கைநகர் வானமாமலையும்
சேரப்பரவியருள்பூண்டு (தெரி)

வருகுறுங்குடியில் ஸ்ரீவைஷ்ணவநம்பியருள்
மருவித்தி ருவண்பரிசாரம்
திருவாழ்மார்பனுடன் வாட்டாற்றிலாழ்வானைச்
சிறந்து தொழுது வேதசாரம் (தெரி)

திருவநந்தபுரத்தில்வளர் பதுமநாபனையுந்
திருவடிதொழுதங்கே நின்றும்
அருமையாகியமலை நாடேறவேயெழுந்
தருளிமனத்துட்கொண்டுசென்றும் (தெரி)

தென்காட்கரையின்மீதிலுறையுமென்னப்பனைநற்
றிருமூழிக்களத்தோன்சுடரென்றே
நின்கருணைதாவென் றேத்தித்திருப்புலியூர்
நின்றமாயப்பிரானையென்றே (தெரி)

திருச்சங்கனூரிலமர்ந்தநாதனையத்
திருநாவாய்மாமணிவண்ணத்தோனைத்
திருவல்லவாழில் நின்றபிரானைத் திருவண்வண்டூர்
சேர்ந்தகனிவாய்ப்பெருமானைத் (தெரி)

கருதும்வித்துவக்கோட்டிற் களிறட்டானைமெய்த்
திருக்கடித்தானத்துமாயப்பிரானை
திருவாறன்விளையினந் தெய்வப்பிரானென்று
சேர்ந்துதலத்திலுறைவானை (தெரி)

நின்றிப்படியேதானே மலைநாடதனிற்சொல்லி
நிறைதிருப்பதியன்புகூர்ந்து
தென்றிருப்பதிகளு மலைநாட்டுப்பதிகளுஞ்
சிறந்துபணிந்த ரங்கஞ்சேர்ந்து (தெரி)

செவ்வாய், 16 அக்டோபர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

விருத்தம்

பத்திராலம்பனம் பண்ணிவந்த பண்டிதன் கண்டி தமடைந்து

பணிந்துபின் பேகஅரங்கநாயகரும் பரிவொடுபேர்தாக்கிருபை

வைத்துநீருபயவேதநூல்களையும் வியாக்கியானம்புரிந்திங்கே

வசியுமென்றதையேசிரமதாய்ப்பெரிய வாச்சான்பிள்ளையைமுதலாய்ச்

சுற்றியசுருதப்பிரகாசிகாபட்டர் சுதரிசனாசார்யரிவர்கள்

துதிசெயநிகமாந்தப்பிரவசனந் தொடர்ந்திருந்தங்குளோர்புகழ

உற்றிடுவாதிபஞ்சானனனெனவே யுபயகாவேரிரங்கத்தி

லுபயர்தாமுஞ்செயு பீயநாமங்களுபயவேதாந்ததேசிகனே.

                                                இதுவுமது

திருவாங்கங்கோயில் வாழ்ந்திருந்தியவர் கெடி

செலுத்திருவருகாலத்திலோர்

தினமிரவிலெதிவரருமிவர் சொப்பனத்திற்

சிறந்தெழுந்தருளிவந்து

திருவடியையிவர்சிரசில்வைத்துப்பதித்து நீர்

தெளிந்துநம்பாஷ்யமதனைக்

செகத்திற்பிரவர்த்திக்கை செய்தும்பிரபந்தங்கள்

திரளாகவுதவுமென்னக்

கருணைபெறவேகொண்டு திருவேணுதாரியிவர்
கண்ணனொரு வேணுவென்றே

கருத்தோத்தபத்தியாய்ச் சாரீரகத்தைவெளி 

கண்டுதிருவோலக்கமேல்

தருகருணைபாடிடப் பெற்றுநமிராமாநு

ஜன்பாஷ்யந்தொடங்குஞ்

சருவப்பிரபந்தகுரு வுறுதியெங்குருசர்வ

தந்திரசுதந்திரகுரு .

            இரகசியாதி கிரந்தங்கள் சாதித்தருளியது

நுவலுதிருவோலக்கந்தனிலே ராமா

நுஜபாஷ்யந்தொடங்கிப்பிரசங்கஞ்செய்த

இவரேவேதாந்தாசாரியராமென்று

மெம்பெருமானுகந்து திருப்பேரைச் சாற்றத்

தவறாமற்சீரங்கநாச்சியாருஞ்

சர்வதந்த்ரசுதந்த்ரரென் றுசாற்றக் கொண்டு

குவலயத்திற்பமதநிரசனமாகக்

கூட்டினார் பிரபந்தநிலைநாட்டினாரே.

            தரு-இராகம்-தோடி-தாளம்-ரூபகம்

                                    பல்லவி

பரமதநிரசனபூர்வக சுவமதஸ்தாபனரே  வாதிபஞ்சானனரே.

                                    அனுபல்லவி

திருமங்கையாழ்வார்மீனோடாமைகேழலெனுமதுபோல்

தசாவதாரத்துதியருள்-செய்யுபயவேதாந்ததேசிகர்                (பா)

                                    சரணங்கள்

தத்துவமுத்தாகலாபம்                                      சருவார்த்தசித்தியுந்

தருநியாயசித்தாஞ்சன                                               நியாயபரிசுத்தியுந்

தத்துவடீகையதிகரண                                                சாராவலியாமுயர்த்தியுந்

தாத்பர்யசந்திரிகைவாதித்திரயகண்டனப்பிரசித்தியுஞ்செய்து      (பா)

பூமித்துதிநீளாத்துதி                                          யெதிராசசத்ததியும்

புகழ்சேசுவரமீமாஞ்சையெனவே                     சொலும்பத்ததியும்

மீமாம்ஸாபாதுகையும்                                       நியாசதிலகமாநிதியும்

விளங்கவேயரிதினகிருத்தியகத்தியவியாக்கியானவிதியுஞ் செய்து (பா)

ஈசாவாசியோபநிடவியாக்கி                             யானரகசியரக்ஷை

யேற்குஞ்சத்சரித்திரரக்ஷையின்னம்              நிக்ஷேபரக்ஷை

ஆசாரவிவத்தாபக                               மானபாஞ்சராத்திரரக்ஷை

ஆளவந்தார் செய்தருள்கீ                    தார்த்தசங்க்ரகரக்ஷைசெய்து      (பா)

பகருஞ்சதுஸ்லோகிவியாக்யானம்       பண்பாமிவைதந்தார்

பாஷியகாரரவதாரமோ                         பட்டரோவெனவந்தார்

மிகவுங்கிருபைகூர்ந்து                                    ரங்கநாயகருமுவந்தார்

மேலாந்தரிசனம்விளங்கவே                யெழுந்தருளியிருந்தாரிவர்       (பா)

                                    விருத்தம்

தருபுகழ்வேதாந்தாசார்யராயிங்கே

சருவதந்திரசுவதந்திரபேர்தனியேபெற்று

வருகவிதார்க்கிகசிங்கரென்னுநாம

வைபவத்தையுடையவராய் வளருந்தூப்புல்

திருவேங்கடம் முடையானிவர்தாமந்தச்

சீரங்கநகரில் வாழ்ந்திருக்குநாளில்

வரிசைமிச்சிரதேசத்தினவர்கள் வந்து

வாதுதான்செய்தனரப்போதுதானே.

 

கிருஷ்ணமிச்சிர டிண்டிம கவிகளை வாதில் வென்றது

                                    இதுவுமது

அண்டிவரும்வாதிகளைச் செயித்திருக்க

அதைக்கேட்டுக்கிர்ஷ்ணமிச்சிரனொருவன்வாதிற்

சண்டையிட்டுமவன் தோற்றுத்தன்பிரபோத

சந்திரோதயமெனுநாடகத்தைக்காட்டக்

கண்டி தஞ்செய்தலுக்குபதிலாகவேசங்

கல்பசூரியோதயஞ் செய்தவனைவென்றார்

டிண்டிமசாருவபௌமன்வாதினிற்ப

டிக்கின்றான்கக்ஷிசொல்லி வெட்கின்றானே.

            தரு-இராகம்-சங்கராபரணம்-தாளம் ஆதி

                                    பல்லவி

கண்டாவதாரசுவாமியே  யிவர் மகிமையைக்

கண்டீர்களோ சனங்காள்.

                                    அனுபல்லவி

டிண்டிமகவிகண்டங்களை டிண்டிமவாத்தியமாகக்

கொண்டருளிய கவிசரபகண்டபேரண்டபிரசண்ட  (கண்டா)

                                    சரணங்கன்

மண்டலந்தனில்சுவ தாடியே- யாய்க்கவிவாதிகள்

மண்டிவருவரநேகங்கோடியே- அவர் கிரீடத்தில்

கொண்டமணியினுண்டாமொளி-அண்டிநிறைந்துபிரகாசமாம்

புண்டரீகப்பொற்பதமதில்-தெண்டஞ்செய்யத்தொண்டுகொண்ட (கண்)

பண்டிதன்ராகவாப்பியுதயமே-செய்தவன்காட்டக்

கண்டித்துயாதவாப்பியுதயமே-யிவரருளினார்

குண்டலத்துறையண்டர்பணி-கொண்டல்வண்ணர்சாளக்கிராம

கண்டிகையணிசேஷகிரிவை-குண்டருடைய கண்டிரண்ட       (கண்)

டிண்டிமென்றிருஸ்லோகங்கூறியே-அவன்றாடைகளில்

ரண்டினுமடிகொண்டு மீதியே- பணிந்திடும்படி

கண்டனைசெய்தாரெண்டிசைப்புகழ்- புண்டரீகாக்ஷர்தம்பேரர்

சண்டபானுவுமிவர்நேர்நவ-கண்டங்களிற்கண்டாருண்டோ               (கண்)