அழகியசிங்கர் அருளமுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகியசிங்கர் அருளமுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

HH Azhakiasingar's anugraha bhashanam 6-2-2012

பெண்களே! உங்களால்தான் முடியுமாம்! என்று தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருப்புல்லாணியில் அருளிய அனுக்ரஹ பாஷணத்தை நிறைவு செய்திருந்தேன். இப்போது இங்கு முகாமிட்டுள்ள ஸ்ரீமத் அழகியசிங்கர் கடந்த நான்கு நாட்களாக அருளி வரும் அனுக்ரஹ பாஷணத்தில் பெண்களுக்கான ஸ்த்ரீ தர்மங்களைப் பற்றிச் சொல்லி இன்றைய தனது அனுக்ரஹபாஷணத்திலும் பெண்களால்தான் நாட்டையும் வீட்டையும் வளப் படுத்த முடியும் ஆனால் அதற்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என்ன என்பதை மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். கேட்கும்போதே இக்காலப் பெண்கள் அவை எதையும் பின்பற்றுவதில்லை என்ற அவரின் வருத்தம் புரியும். முழுவதையும் கண்டிப்பாய்க் கேளுங்கள். பெண்களையும் கேட்க வையுங்கள். தெரிந்தவர் அறிந்தவர் என எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.


அடியேனது ப்ரார்த்தனையை ஏற்று ராமாயணத்தில் சரணாகதியைப் பற்றி ஒரு அனுக்ரஹ பாஷணம் அருளினார் அது இங்கே

வியாழன், 2 பிப்ரவரி, 2012

HH Azhakiasingar's anugraha bhashanam on 02-2-2012

பெண்களால்தான் ஒரு குடும்பம் செழிக்க முடியும் என்று விரிவாக எடுத்துரைத்து அதற்காக பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று மிக அற்புதமாக விரித்துரைத்த இன்றைய அனுக்ரஹபாஷணத்தை மீடியாபையரிலிருந்து நகலிறக்க

ஆன் லைனிலேயே கேட்க விரும்புகிறவர்களுக்காக

ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் மங்களாசாஸனம்

எல்லாரும் அடியேனை மன்னிக்க வேண்டும். அனைவரும் விரும்பும் இந்த ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் மங்களாசாஸனக் காட்சிகளின் போட்டோக்கள் ஏனோ நேற்றிலிருந்து வலையேற்றுவதில் பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பிகாஸா 3.9க்கு மாறியதிலிருந்து அது பிடிவாதமாக கூகுள்+க்குத்தான் அனுப்புகிறதே ஒழிய பிகாஸா வெப் ஆல்பத்துக்கு அனுப்ப மறுக்கிறது. கூகுள்+லிருந்து ஒரு வழியாக பிகாஸா ஆல்பத்துக்கு அனுப்பினாலும் திருப்தியாயில்லை. நேற்று மாலையிலிருந்து போராடிவிட்டு, இன்று மாலை முதல் போட்டோபக்கெட்டில் முயற்சி பண்ணினால் அது ஏதோ பிடிவாதமாக கடைசியிலிருந்து முதல் எனக் காண்பிக்கிறது. தயவு செய்து பொறுத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன். நாளைக்குள் அஹோபில மடம் மானேஜர் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் எடுத்துள்ள வீடியோக்களை வலையேற்ற முயற்சிக்கிறேன்.

HH Azhakiasingar's anugraha bhashanam on 1-2-2012

HH Srimad Chinna Azhakiasingar continued his anugraha bhashanam today. It was delivered just before the mangalasasanam at Sri Adhi Jegannatha Perumal temple. In today's episode HH describes the role of women and their importance.
Today's anugraha bhashanam is available for download at
http://www.mediafire.com/?82b1rktk0315pzj 
 
Those who like to listen online may play it here

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

எங்கள் தாயார்!

  எத்தனையோ முறை எத்தனையோ ஆயிரமாயிரம் பேர்களுக்கு எங்கள் தாயார் அருளியதுண்டு. அவர்களை ஆனந்தப்பட வைத்ததுண்டு. ஆனால் அவையெல்லாம் சம்பந்தப் பட்டவர்கள் அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் என சிலர் மட்டுமே அறிந்தவை.

      ஆனால், தன்னுடைய சக்தி என்ன,  தன்னை நாடி வந்தவர்களை ரக்ஷிப்பதிலே தான் எவ்வளவு நிகரற்றவள், தன் கருணை எந்த அளவு எல்லாரையும் மகிழ்வித்து உலகம் உய்ய வழி செய்யும் என்பதை  உலகுக்கு இரண்டாவது முறையாகவும் வெகு அற்புதமாகக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். அதனால் திருப்புல்லாணியில் வாழ்கின்ற பாக்யம் பெற்றோரையும் பெருமிதப் பட வைத்திருக்கிறாள்,

  2008ல் ஸ்ரீமத் ஆண்டவன் திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய சங்கல்பம் என முடிவு செய்து ,  சாதுர்மாஸ்ய காலம் நெருங்குகையில் திருமேனியில் நோவு சாற்றிக் கொள்ள, சிஷ்ய வர்க்கங்களெல்லாம் திருப்புல்லாணியில் முறையான வைத்திய வசதி இல்லையே, என பயந்து திருப்புல்லாணி போக வேண்டாம் எனத் தடுத்த நேரத்தில் தாயார் தன்னைப் பாதுகாப்பாள் என்று அபார நம்பிக்கையுடன் ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு எழுந்தருளி சங்கல்பம் மேற்கொண்டதும், தினமும் கோவிலுக்கு எழுந்தருளி அவள் அனுக்ரஹத்துக்கு ஆளாகி அதன் பலனாய்  உடல்நிலை தேறி முதலில் பயந்தவர்கள் எல்லாம் மகிழும்படியாகச் செய்து உலகெங்கும் வாழ்கின்ற ஆச்ரம சிஷ்யர்களையெல்லாம் பரவசப் படுத்தியது முதல் முறை.

           இந்த 2011ல் ஸ்ரீமத் அழகியசிங்கரை அனுக்ரஹித்து மீண்டும் ஒரு முறை எல்லாரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள் என்றால் மிகையில்லை. உண்மை தவிர வேறில்லை. பெரிய அழகியசிங்கரின் உடல்நிலை காரணமாகக் கடைசி நிமிடம் வரை சங்கல்பம் திருப்புல்லாணியில் இருக்குமா என்று சந்தேகம் நிலவிய வேளையில், தங்கள் முடிவில் மாறாத அழகியசிங்கர்கள், சுற்றிலுமிருந்தவர்கள் தடுத்தும், என்ன ஆனாலும் திருப்புல்லாணியில்தான் சங்கல்பம் என்று இங்கு எழுந்தருளினர். இருவருமே தாயாரிடம் அபார நம்பிக்கை வைத்ததின் விளைவு வந்த சில நாட்களிலேயே பெரிய அழகிய சிங்கர் உடல்நிலை முன்னேறத் தொடங்கி ஆகஸ்ட் 15ல் பல மாதங்களுக்குப் பின் அவரே திருவாராதனம் செய்து சமாச்ரயண, பரந்யாஸங்களும் செய்து வைக்கின்ற அளவுக்கு, மூன்று வேளை திருவாராதனங்களிலும் முழுமையாக இருந்து சிஷ்யர்களுடன் உற்சாகமாக உரையாடி ஆசீர்வதிக்கின்ற அளவுக்கு மாறியுள்ளது. சின்ன அழகியசிங்கர் தினமும் மாலையில் கோவில் மங்களாசாஸனம் செய்து வந்தார். சிஷ்யர்கள் ஆசார்யன் உடல்நிலை தேறுவதற்காக தினமும் தாயாருக்கு விசேஷ அர்ச்சனைகள் செய்து வந்தனர்.    அகமகிழ்ந்த தாயார் இந்த 60நாட்களிலும் பெரிய அழகியசிங்கருக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல் பாதுகாத்திருக்கிறாள்.  இதோ இன்று மிக அருமையாக, கடைசி நாளின் நிகழ்வுகள் அமைந்து உத்தானத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.  பக்கத்திலுள்ள பரமக்குடியில் பெரிய கலாட்டா என்றாலும்கூட, இன்று சுமார் 70க்கும் மேற்பட்ட  சிஷ்யர்கள் வந்திருத்தனராம். பல திவ்ய தேச, அபிமான ஸ்தலங்களிலிருந்தும் மாலை மரியாதைகள் வந்து அழகியசிங்கர்களுக்கு மரியாதை ஆகியிருக்கின்றது. அழகியசிங்கர்கள் மிக மகிழ்ந்து ஆலய கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் புடவை வேஷ்டியுடன் புஷ்கலமாகச் சம்பாவனைகளும் செய்து கௌரவித்தாயிற்றாம். ஆக, இந்த அளவு பெரிய அழகியசிங்கரின் தேக ஆரோக்யத்தையும் முன்னேற்றி, திருப்புல்லாணியில் நடந்த இரண்டாவதும், ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் முதலாவதுமான (திருப்புல்லாணியில் அழகியசிங்கர்களின் முதல் சங்கல்பம்) சங்கல்ப வைபவத்தை வெற்றிகரமாக நடத்தி வைத்து அனுக்ரஹித்து இரண்டாவது முறையும் எங்கள் தாயார் தனது கருணையை உலகுக்கு உணர்த்தியுள்ளாள்,

தனி நபர்கள் ப்ரார்த்தனைகளையே ஏற்று வேண்டியதை வாரி வழங்குபவள் அவள். தங்களுக்காக ஏதும் வேண்டாமல்,  தங்கள் திருமேனி நோவுகளையும் பாராமல், சிஷ்ய வர்க்கம் உய்யவேணுமென்ற ஒரே நோக்கிலே செயல்படுகின்ற நம் ஆசார்யர்களை அவள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து நம்மையெல்லாம் அனுக்ரஹிக்க நிச்சயம் அருள்வாள்.

முடிந்த போது (போதெல்லாம்) வாருங்கள் எங்கள் தாயாரை ஸேவிக்க!அவள் கருணை மழையிலே நனைய! வர முடியாவிட்டாலும் பரவாயில்லை! இருக்கும் இடங்களிலிருந்தே நம் ஆசார்யர்கள்,அனைவருக்காகவும் அவளிடம் ப்ரார்த்தியுங்கள்! 

202 Thaayaar 

தாயாரின் உடல்நிலையால்,  இன்றைய தினத்தில் தேரழுந்தூரோ திருப்புல்லாணியோ செல்ல முடியாமல் சென்னையிலேயே இருக்க நேரிட்ட துரதிர்ஷ்டசாலி!

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தாய்க்குலமே! தர்மத்தைக் காப்பாற்ற உங்களால்தான் முடியுமாம்!

5ம் தேதி. மாலையில் சென்னை கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஸ்ரீதரன் இன்று ஏராளமான சிஷ்யர்களின் வேண்டுகோளை ஏற்று அனுக்ரஹ பாஷணம் ஆரம்பமாகப் போகிறது என்று தகவல் கொடுத்தார். அடியேன் என்றும் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் ரகமில்லை. கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்கிறவன். 40 வருடம் சேரில் உட்கார்ந்தே தூங்கிப் பழக்கமாகையால் ( இப்போது retirementக்கு அப்புறம் அந்த சுகம் இல்லை என்பது வேறு விஷயம்) அனுக்ரஹ பாஷணத்தைப் பதிவு செய்துவிட்டு சென்னை போகலாம் என்று முடிவெடுத்து சின்ன அழகியசிங்கர் ஆஸ்ரமத்துக்குப் போன போது ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களாகி விட்டது. எனவே முதலிலிருந்து ஆரம்பிக்காமல் இருக்கும் இந்தப் பதிவுக்காக அடியேனை க்ஷமிக்க வேணும்.

பூராவும் கேளுங்கள். பெண்களால்தான் தர்மங்களைக் காப்பாற்ற முடியும் என்று அழகியசிங்கர் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதை நன்கு மனத்தில் வாங்கி அவரவர்கள் வீட்டு ஆண்களை அழகியசிங்கர் திருப்பித் திருப்பிச் சொல்வதான நித்ய கர்மானுஷ்டானங்களை அனுஷ்டிக்க வைப்பது இனி உங்கள் பொறுப்பு.

   இன்று முதல் உத்தானம் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் அனுக்ரஹ பாஷணம் நடந்தால் ஸ்ரீ முத்துகிருஷணன் பதிவதாகச் சொல்லியிருக்கிறார். அடியேன் பதிந்த இந்த கடைசி ஒன்று வீடியோவாக அமைந்ததும் விசேஷமே.

திங்கள், 5 செப்டம்பர், 2011

திருப்புல்லாணியில் ஆவணி ஸ்வாதி!

மூலை கருடன்! எத்தனை பேர்கள் பார்த்திருப்பீர்கள்! எத்தனை ஊர்களில் இப்படி மூலை கருடன் என்று விசேஷமாக இருக்கின்றது என்பது அடியேனுக்குத் தெரியாது. ஆழ்வார்திருநகரி, திருக்கோஷ்டியூர், திருப்புல்லாணி போன்ற சில இடங்களிலே மட்டும் இப்படி மூலை கருடன் விசேஷமாக அமைந்திருக்கிறார். அதென்ன மூலை கருடன்? பெருமாள் கோவில் திருமதில் சுவர்களில் ஈசான்ய மூலையில் இருப்பதால் இவர் மூலை கருடன்.

இப்படி திருப்புல்லாணியில் கம்பீரமாக ஈசான்ய மூலையில் இருக்கும் கருடன் அபார சக்தி படைத்தவர். இங்குள்ளவர்களுக்கு, என்ன கோரிக்கை என்றாலும் நடத்திக் கொடுப்பவர். இவரைப் ப்ரார்த்தித்து ஒரு சிதறு காய் போட்டால் எப்பேர்ப்பட்ட சிரமமான காரியம் என்றாலும் எளிதாக நடந்து விடுவதை அனுபவிப்பவர்கள் நாங்கள். இவருக்கு ஆடி ஸ்வாதி அன்று மட்டும் மிக விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்று அமிர்தகலசம் படைப்பது எங்களூர் வழக்கம். அன்று இன்னொரு விசேஷம் கூட. மற்றைய நாட்களில் கோவிலில் எந்த விசேஷம் என்றாலும் முதல் மரியாதை இராமநாதபுரம் ராஜாவுக்கோ அல்லது அவர் ப்ரதிநிதிகளுக்கோதான். உபயதாரர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு மரியாதை என்பது அப்புறம்தான். ஆனால் இந்த ஸ்வாதியில், முதல் மரியாதை ஆழ்வார்கள் சார்பில் கோவில் முதல் தீர்த்தகாரருக்கு அப்புறம்தான் ராஜாவுக்கு!

திருமஞ்சனம் என்று எளிதாக எழுதிவிட்டேன். ஆனால் அதைப் பண்ணுவதற்குள் ஆலய அர்ச்சக, கைங்கர்யபரர்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஒரே ஒரு பாதம் மட்டும் வைக்கும் அளவில் இருக்கும் இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் நின்று அவர்கள் திருமஞ்சனம் செய்ய வேண்டும். கொஞ்சம் தவறினாலும் 30 அடியில் கீழே தரையில் விழ வேண்டியதுதான்.

இப்படி சென்ற ஆடியில் ஸ்வாதியில் விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்றபோது பெரிய அழகியசிங்கர் தற்செயலாக அங்கு வந்திருந்து முழுமையாக அனுபவித்து ஆனந்தப் பட்டதை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அப்பொழுதே அவர் ஆவணி ஸ்வாதியில் மீண்டும் ஒரு முறை விசேஷமாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டுமென்று திருவுளப் பட்டதை, ஆலயத்தாரும் ஏற்றுக் கொண்டு அதன்படி இந்த ஆவணியில் மிக விசேஷமாக நடந்த திருமஞ்சனத்தின்போது இரண்டு அழகியசிங்கர்களும் எழுந்தருளி கண்டு களித்த காட்சிகளை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.

திருமஞ்சனத்தை மட்டும் கண்டு களித்துவிட்டுப் போகாமல், இரண்டு ஆசார்யர்களும் மிக்க பரிவுடன் தங்களைச் சூழ்ந்து நின்ற ஆடுகளின் மீதும் வாத்ஸல்யத்துடன் கருணை மழை பெய்திருக்கிறார்கள். தினமும் தங்கள் வாக்கால் உலகெங்கும் இருக்கும் சிஷ்ய வர்க்கத்தாருக்கு செவிக்கு உணவு இடுபவர்கள் அந்த ஆடுகளுக்கு வயிற்றுக்குப் பிடித்தமான உணவு அளிப்பதையும் ---- முந்திரிப் பருப்பாம், ஒரு கிலோவுக்கு மேல் இருக்குமாம், அதன்பின் ஏராளமான வாழைப் பழங்களாம் முத்துகிருஷ்ணன் சொன்னார் –  அவர் பதிந்திருக்கிறார். அந்த புகைப் படங்கள் இங்கு

Avani Swathi at Thiruppullani

Sundayன்னா மூணு

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸ்ரீ ஆதி சேதுவில் ஸ்நாநம் செய்த காட்சியினை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் மானேஜர் முத்துகிருஷ்ணன் மிக அருமையான விடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்கிறார். அன்று அங்கே போயிருந்தவர்கள் வீடியோவில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளலாம். போகமுடியாதவர்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

அன்று இங்கு வந்திருந்த ஸ்ரீ அய்யம்பேட்டை தேவநாத அய்யங்கார் ஸ்வாமியும் சில வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றை

http://www.youtube.com/user/rdevanathan1?feature=mhsn சென்று பார்க்கலாம்.

DSC03045இன்று 4-9-2011 திருப்புல்லாணியில் ஒரு முக்கியமான நாளாக அமைந்தது. திருப்புல்லாணி பத்மாசனித் தாயாருக்கு ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வெள்ளி ஷோடசோபசாரங்களை சமர்ப்பித்தார்கள். திருமேனி களைப்பினால் தான் வரமுடியாததால், பெரிய அழகியசிங்கர் அனுக்ரஹித்துக் கொடுத்ததை, சின்ன அழகியசிங்கர் கோவிலுக்கு நேரில் வந்து சமர்ப்பித்தார். இன்று வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு அது ஒரு ஆனந்த அனுபவமாக அமைந்தது. பெருமாளிடம் முதலில் சமர்ப்பித்து அவர் அனுமதியுடன்,

DSC05134

தாயாரிடம் அழகியசிங்கர் சமர்ப்பித்தது அனைவரையும் பரவசப் படுத்தியது. 2008ல், ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்தபோது பெருமாளுக்கு யக்ஞோபவீதம் சமர்ப்பித்தார். இப்போது தாயார் முறை. அதனால் ஒன்றுக்கு ஐந்தாகத் தாயார் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.

இங்கு இருக்கும் படங்கள் திரு முத்துகிருஷ்ணன் எடுத்தவை. அடியேன் ஏதோ அந்தக் கால மார்க்கஸ் பார்ட்லே என்ற நினைப்பில் ஒரு கையில் காமிராவும் ஒரு கையில் வீடியோ காமிராவுமாக எடுத்ததன் விளைவு விட்டலாசார்யா படங்களில் வரும் மாயா ஜாலக் காட்சிகள் போல் தெரிந்தும் தெரியாமலும் அமைந்துவிட, பாவம் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எதையாவது எப்படியாவது சரி பண்ணி அந்த வீடியோவை மட்டுமாவது உலகுக்குக் காண்பித்து விடுகிறேன் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.

DSC03033  DSC03036

DSC03038DSC03039

DSC03043

DSC03049

DSC05144

எல்லா சந்நிதிகளிலும் மங்களாசாஸனம் செய்த ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒவ்வொரு சந்நிதியிலும் அந்தந்த சந்நிதியின் சிறப்புகள், அங்கு எழுந்தருளியிருக்கும் அர்ச்சா மூர்த்திகளின் விசேஷங்களை சிஷ்யர்களுக்கு அருளி பெரு மகிழ்வடைய வைத்ததும் இன்றைய தினத்தில் அடியோங்கள் பெற்ற பாக்யங்கள்.

மூன்றாவது விசேஷம் அழகியசிங்கரின் வழக்கமான அற்புதமான அருளுரை.

ஆன்லைனில் கேட்பவர்களுக்காக இங்கே!

 

இல்லை இல்லை குடும்பத்தோடு எல்லாரும் கேட்கவேண்டும் கேட்டு அழகியசிங்கர் சொல்வதைப் போல நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக
http://www.mediafire.com/?3u095o6ucvh5ubb

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

HH Azhakiasingar’s anugraha bhashanam on 1-9-2011

Sri Sudarsana Srinivasan, of Nanganallur and working at Bangaluru, is one among the persons whom adiyen admire most. On earlier occasions adiyen made some references about him. He was one among those who were at Thiruppullani on the day of sethu snanam by HH Azhakiasingars and also attended the anugraha bhashanam in the evening. Sensing some communication difficulty (as the uploading of the anugraha bhashanam was delayed) Sri Sudarsan voluntarly sent the anugraha bhashanam that he recorded. adiyen thank him very much for this help which in turn enabled me to share with you all’

As usual, it can be heard on line here

 

For those who want to download and listening to it leisurely the link is here 

http://www.mediafire.com/file/x07v206g1hgxhsw/Anubha%201-9.mp3

வியாழன், 1 செப்டம்பர், 2011

திருப்புல்லாணியில் நேற்றும் இன்றும்

திருப்புல்லாணியிலிருந்து எங்கள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மானேஜர் ஸ்ரீமான் ஸ்ரீதர், “30-8-2011 மற்றும் 31-8-2011  இரு நாட்களும் ஏராளமாகக் கூடியிருந்த சிஷ்யர்களின் ப்ரார்த்தனையின்பேரில் ஸ்ரீமத் 46ம் பட்டம் அழகியசிங்கர் அனுக்ரஹ பாஷணங்கள் அருளினாரென்றும், 30ம் தேதி சரியாகப் பதிவு செய்ய முடியவில்லையென்றும், நேற்று 31ம் தேதி பதிவு செய்ததாகவும்” சொல்லி பதிவு செய்த அனுக்ரஹ பாஷணத்தை அடியேனுக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அதை கீழே உள்ள லிங்குகளில் சென்று கேட்கலாம்.

இன்று 1-9-2011 காலை அபிகமன ஆராதனங்களுக்குப் பின் இரு அழகியசிங்கர்களும் இன்று அங்கு பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 250+ சிஷ்யர்களுடன் ஸ்ரீசேது சமுத்திர ஸ்நாநம் கண்டருளினார்கள் என்று திருப்புல்லாணியிலிருந்து சற்று முன் செய்தி வந்திருக்கிறது. திருப்புல்லாணி  ஸ்ரீஅஹோபில மடம் மானேஜர் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் ஏராளமான படங்களாகவும் முழுமையான வீடியோவுமாகவும் அந் நிகழ்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இது தவிர வந்திருந்தோரில் அனேகர் தங்கள் காமிராக்களில் அதைப் பதிவு செய்திருக்கிறார்களாம். அடியேன் எப்போது இந்தப் புகைப் படங்கள்/ வீடியோக்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடியுமோ தெரியவில்லை. அதற்கு முன் சேதுக்கரையில் இன்று இந்த பாக்யத்தை அனுபவித்தோரில் யாராவது உலகத்தாருடன் அந்த சந்தோஷமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டால் அது மிக விசேஷமாக அமையும்.

31/8 அன்றைய அனுக்ரஹ பாஷணத்தை on lineல் கேட்க

 
To download from mediafire

சனி, 27 ஆகஸ்ட், 2011

மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன்.

சில நாட்களுக்கு முன்னே இங்கு எழுதியதை, யாஹு குழுமங்களில் அறிவித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். வரும் செப்டம்பர் 1ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களும் ஸ்ரீ ஆதி ஸேதுவுக்கு எழுந்தருளி ஸேது ஸ்நாநம் செய்யவிருக்கிறார்கள். ஏற்கனவே இதை அறிந்து திட்டமிட்டு வரப் போகிறவர்களுக்கு அடியேனது ஸ்வாகதம். P1010684போன 2010 ஏப்ரல் 5ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களுடனும் ஸ்நாநம் செய்யக் கொடுத்துவைத்தவர்கள் அந்தக் காட்சியை இங்கு க்ளிக் செய்து அனுபவிக்கலாம். http://thiruppul.blogspot.com/2010/04/blog-post_07.html

P1010692சென்ற முறை தவறவிட்டவர்கள் இந்த முறை அவஸ்யம் வரவேண்டும் என்ற காரணத்தாலே விடுமுறை நாளாகப் பார்த்து ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸேது ஸ்நாந நாளைத் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அவஸ்யம் வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

   P1010696

 போன வருடம் இப்படிக் கூடியதெல்லாம் ஒரு கூட்டமா! இந்த முறை பாருங்கள் இன்னொரு ஆடி அமாவாசையோ என்று திருப்புல்லாணிக் காரர்கள் ஆச்சரியப்படும் அளவில் வந்து குவியப் போகிறோம் என்று நீங்களெல்லாம் தயாராயிருப்பீர்கள் என்றும் தெரியும். இப்படி போட்டோ, வீடியோவெல்லாம் போட்டு அழைத்து விட்டு ஆச்ரமத்தில் தங்க இடம் கேட்டால் இடம் இல்லை என்று சொல்கிறீர்களே என்று சிலர் பல்லைக் கடிக்கும் ஓசை கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆசாரிய பக்தி முக்கியம்! அவருடன் ஸ்நாநம் செய்யும் பாக்யம் மிக மிக முக்கியம்! அதனால் தங்க இடம் இல்லை என்றால் என்ன! வேறு என்ன சிரமங்கள் எதிர்வந்தாலும் என்ன! என்று நீங்களெல்லாம் வந்து நிறைந்து ஆசார்யர்கள் மனதை மகிழ்விப்பீர்கள்தானே! ரயில், பஸ் இவைகளில் இடமில்லையானாலும், வான் Van  பிடித்தாவது வந்து கூடியிருந்து மனம் குளிர மாட்டீர்களா என்ன! ஸேதுவைக் கண்ணாலே பார்த்தாலே கிடைக்கும் புண்ணியங்களை ஆதி சேஷனும் கூற முடியாதாம். அதில் நாம் தனியாகத் தீர்த்தமாடினால் சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்று ஆசார்யர்கள் எல்லாரும் அருளியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஸேதுவில் ஆசார்யர்களுடன் ஸ்நாநம் செய்தால் கிடைக்கப் போகும் நன்மைகளை, புண்யங்களை யாரால் சொல்ல முடியும்? தவறவிடுவீர்களா என்ன?  பயணத்துக்கு ரெடியாயாச்சா?

புதன், 17 ஆகஸ்ட், 2011

Saatthumurai on 16-8-211 morning at Sri Ahobila Matam, Thiruppullani

Enjoy a few minutes of Satthumurai at Sri Ahobila Matam, Thiruppullani on the Araadhana dhinam of 44th Azhakiasingar Srimad Mukkur Azhakiasingar. Please also listen to the AtharvaNa vedam recitation by adhikaris from Patna for a few seconds which is very rare . 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

On this Independence Day at Thiruppullani Sri Ahobila Matam

நாடு விடுதலை அடைந்த நன்னாளை நாம் எத்தனையோ விதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நெய்வேலி ஸ்ரீஅஹோபில மட நித்யாராதன கமிட்டிக்காரர்கள் இந்தத் திருநாளை ஸ்ரீஅஹோபில மடம் மாலோலன், மற்றும் அவனுடன் மகிழ்ந்து உறைகின்ற கண்ணன், மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களோடு கொண்டாடுவதை கடந்த இருபது ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.எவ்வளவு உயர்ந்த நோக்கம்! அந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் உளம் குளிர்ந்தால் நாடும் நகரும் செழிக்கும், அதனால் ஸர்வே ஜனோ சுகினோ பவந்து என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம். அந்த வழக்கப்படி இன்று 15/8/2011 அன்று திருப்புல்லாணியிலும் மிக மிக விசேஷமாக அவர்கள் திரளாக வந்திருந்து கொண்டாடி கூடியிருந்த அனைவரையும் ஆனந்தப்பட --- இல்லை இல்லை கைங்கர்யபரர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக ஸ்ரீமடம் ஆராதன மூர்த்திகளுக்கு செய்த கைங்கர்யங்களைக் கண்டு உளம் நெகிழ ---- வைத்தனர். நெய்வேலிக்காரர்கள் உபயமாக இன்று நடந்தது பெரிய திருமஞ்சனம். இந்த ஆண்டு அவர்களுடன் டோம்பிவிலி ப்ருஹஸ்பதி ஸ்ரீ சந்தானம் வாத்தியாரும் உபயதாரராக சேர்ந்து கொண்டார். பெரிய திருமஞ்சனம் என்றால் மாலோலன் முதல் ஆராதன மூர்த்திகள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் மிக விசேஷமான திருமஞ்சனம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த திருமஞ்சனம். திருமேனி தளர்வையும் பொருட்படுத்தாமல் கூடவே இருந்து பெரிய அழகியசிங்கரும், சின்ன அழகியசிங்கரும் நடத்தி வைத்த திருமஞ்சனம். பார்த்தவர்கள் எல்லாரும் மெய்மறந்த திருமஞ்சனம். கண்டு களித்தோரெல்லாம் நெய்வேலிக்காரர்களை  மனம் நிறைந்து வாழ்த்த வைத்த திருமஞ்சனம்.
”வாழி நரசிங்க மால்கழல்கள் மாலடியார்
வாழி அகோபிலத்து மாதவர்தாள் – வாழி
அழகிய சிங்கர் அணிமரபு வாழி
பழகிய மெய்ச்சீர் பயின்று”
என்று பரவிப் பரவசப்பட வைத்த திருமஞ்சனம்.
சரி!சரி! திருமஞ்சன வீடியோ எங்கே? அதைக்காட்டாமல் என்ன வசனம்? என்கிறீர்களா?
தீர்த்தக்கரைப் பாவி என்று சொல்வார்களே! இன்று அடியேன் நிலையும் அதேதான்! மேலே வர்ணித்ததெல்லாம் பார்த்தவர்கள் சொல்லி மகிழ்ந்தது. அடியேனுக்கு அந்த பாக்யம் இன்று கிட்டவில்லை. வேறு ஒரு காரியத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபட வேண்டியிருந்ததால் இங்கேயே இருந்தும் மடத்தின் பக்கம் திருமஞ்சனங்கள் முடியும்வரை போகவே முடியவில்லை. அதனால் அதைப் பதிவு செய்யும் நல்வாய்ப்பும் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக யாரை ஸேவிக்க வேண்டுமென்று மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தேனோ, யாரால் இன்று இந்திய மொழிகள் பலவற்றில் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக எழுத முடிகிறதோ,  யார் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களிலும் நிகரற்ற தேர்ச்சி பெற்று, கணிணி தொழில்நுட்பங்களிலும் அகில உலக அளவில் பேசப்படுகிறாரோ, அந்த ஸ்ரீ சோகத்தூர் ராமானுஜம் ஸ்வாமியை, அவராகவே அடியேனைப் பார்க்க விரும்பிய நேரத்திலும், அடியேனுடைய கமிட்மெண்ட் பார்க்க விடாமல் செய்தது அடியேனுடைய மிகப் பெரிய துர்பாக்யம்.
ஆக மடத்தில் திருமஞ்சனங்கள் முடிந்து தீர்த்த கோஷ்டி ஆகி ததீயாராதனம் நடந்தபோது மணி மாலை 4-30. மாலோலனை விட்டு மனம் அகலாமல் இருந்த நிலையில் யாருக்கும் பசிக்கவுமில்லை. இன்று வந்திருந்த சுமார் 250 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் நிதானமாக இருந்து ததீயாராதனத்தில் அந்வயித்து பலமந்த்ராக்ஷதை பெற்றுச் சென்றது மற்றும் ஒரு சிறப்பு.

இழந்தோமே ஒரு நல் வாய்ப்பை என்று கவலைப்பட்டவனுக்கு மாலையில் ஒரு சந்தோஷம் காத்திருந்தது. இந்த நெய்வேலிக்காரர்கள் வழக்கமாக டோலோத்ஸமும் பண்ணுவார்களாம். சுமார் 7 மணிக்கு ஆரம்பித்த அந்த டோலையும் தொடர்ந்த ஆராதனங்களும் கோஷ்டியும் முடிய 9 மணிக்கு மேலாகி விட்டது.  அப்பப்பா! ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத கைங்கர்யபரர்கள்! அதைக்காட்டிலும் அசராத மடைப்பள்ளிக்காரர்கள்! இரவு கோஷ்டியில் வந்துகொண்டே……….யிருந்த ப்ரஸாதங்கள்! மலைக்க வைத்தன. 
இப்போதைக்கு டோலையின்போது எடுத்த சில படங்கள் மட்டும் இங்கே! வீடியோ யூட்யூபில் ஏறிக்கொண்டிருக்கிறது. அதை நாளை தருவேன். இப்போதே மணி 12 ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். யூட்யூப் அடியேனைப் போல் சோம்பேறியல்ல என்று நிரூபித்து விட்டது. இதை எழுதி முடிப்பதற்குள் அது பதிந்து விட்டது. வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது. 
ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வரும் செப்டம்பர் முதல் நாள், 1.9.2011, அதாவது 44ம் பட்டம் முக்கூர் அழகியசிங்கர் திருநக்ஷத்திரத்துக்கு மறுநாள், ஸ்ரீஆதி ஸேதுவில் சமுத்திர ஸ்நானம் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்கள். அன்று விநாயகர் சதுர்த்தி. அரசு விடுமுறை. ஸ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள் இல்லயா! அவசியம் வந்து அழகியசிங்கர்களுடன் சமுத்திர ஸ்நானம் செய்யும் பாக்யசாலிகளாகப் போகிறார்கள்தானே! தங்குவதற்குத் தனி அறைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! இருக்கிற இடத்தில் சமாளித்துக் கொள்வோம் என்று இப்போதே பயணத்திற்குத் தயாராகிவிடுவார்கள்தானே!

டோலையில் எடுத்த சில படங்கள் இங்கே! கண்ணனை கண்ணாரக் கண்டு  அவன் அணிந்து நம்மை மகிழ்விக்கின்ற அந்த ஆபரணங்களை, குறிப்பாக அந்த ஜடை அலங்காரத்தைக் கண்டு களியுங்கள்.

 

இப்போது
“மாற்றுயர்ந்த செழும்பொன்னால் கால்கள் நாட்டி
வலிமிகுந்த வச்சிரத்தால் விட்டம் போட்டுத்
தோற்றமுறு மாணிக்கத் தொடர்கள் பூட்டித்
துங்கமுது நீலமணிப் பலகை தூக்கி
ஏற்றுதிரு மாமணிமண் டபத்தின் னூசல்
எழிலுடனா டியபடியே யிங்கு மன்பர்
ஆற்றலுறக் கடைக்கணித்தே யாடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

செங்கமலத் தோள்புரிந்த மாயங் கண்டு
சிறுவரோடு கன்றினமாய்ச் சென்றே யன்பர்
தங்கள்மனம் களித்திடவு மலரோன் கொண்ட
தருக்கன்று தாழ்ந்திடவுந் தாள்செய் திம்பர்ப்
பொங்கிவளந் தழைத்திடச்செய் யமுனை யாற்றிற்
போராவி னடித்ததகை தீரக் கொண்ட
அங்கைநவ நீதமுனீ ராடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

அண்டமெனுங் கூடத்தை நாள்கோள் தம்மால்
அலங்கரித்து மேருவினைத் தூண்க ளாக
விண்டலமார் துருவநிலை விட்ட மாக
விரவுதுரு வச்சுழல்சங் கிலிக ளாகக்
கண்டலஞ்சேர் வதிர்க்கடவுள் பலகை யாகக்
காலமெனுங் கடவுளுளக் கனிவொ டாட்டப்
பண்டைமறைப் பரம்பொருளே யாடி ரூசல்
பரிதினுட் பரஞ்சுடரே யாடி ரூசல்.”

என்று அன்று திரு ஹரிஹர அய்யர் பாடியதற்கேற்ப அந்த மாயக் கண்ணன் டோலையிலே வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.


 
 

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு ஒரு நன்னாள்.


            நம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் பெருமாள் ஒரு காரணம் வைத்திருக்கிறார். சிறுமதி படைத்த நமக்கு அவை உடனே விளங்குவதில்லை. பின்னால்தான் உணர்கிறோம். ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை செல்வதாக ஸ்ரீமத் அழகியசிங்கர்களிடம் விஞ்ஞாபித்து திருப்புல்லாணியிலிருந்து கிளம்பி, மதுரை சென்று மாமனார் அகத்திலே இரு நாட்கள் இருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிற நேரத்திலே, அடியேனுடைய 40 வருட பி எஸ் என்எல் “ஸேவை” (?) யில் அடியேன் சண்டை போடாத, அடியேனால் மிக மதிக்கப்பட்ட ஒரே ஒரு உயர் அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு திருப்புல்லாணி திரும்புகையில் அதன் உண்மையான காரணத்தை அடியேனால் சரியாக உணரமுடியவில்லை. இன்று, காயத்ரி ஜபத்தன்று, ஸ்ரீ அஹோபில மடத்தில், பெரிய அழகியசிங்கரே திருவாராதனங்களைப் பண்ணியதைப் பார்க்கும் பாக்யம் கிடைத்த பிறகுதான், ஆஹா! இந்த சந்தோஷத்தை உலகெங்கும் உள்ள ஸ்ரீ மடம் சிஷ்யர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு பேறுக்காகத் தான், அந்த அதிகாரியை வ்யாஜ்யமாக வைத்து, பெருமாள் அடியேனைத் திருப்புல்லாணி வர வைத்திருக்கிறார் என்று புரிந்தது. தன்னை நம்பி வரும் சாமானியர்களுக்கே வேண்டியதைச் செய்து அருள் பாலிக்கும் எங்கள் பத்மாசனித் தாயார்,  சிஷ்ய வர்க்கங்களை அன்புடன் பரிபாலிக்கும் அழகியசிங்கர் மீது தன் கருணை மழையைப் பொழிந்து அவரது திருமேனி நாளும் திடமடையச் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லைதான். ஏற்கனவே 2008ல் முதன்முதலாக ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யத்துக்கு எழுந்தருளியபோதும், பட்டிக்காடே, அங்கு வைத்ய வசதிகள் கிடையாதே என்ற ஆதங்கத்தில் வரவேண்டாம் என்று அன்பின் மிகுதியால் மன்றாடியவர்களும் பிரமிக்கும் வகையில் ஸ்ரீமத் ஆண்டவனின் திருமேனி ஸௌக்யங்களுக்கு அனுக்ரஹித்தவள் அவள். இன்றும் அதே அற்புதங்களைச் செய்து, எல்லாரையும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வைத்திருக்கிறாள். உலகெங்கும் இருக்கும் சிஷ்யர்கள் ஒருமுகமாக அவளைப் ப்ரார்த்தித்தால், ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் இங்கிருந்து உத்தானமாகி யாத்ரை கிளம்புவதற்குள், பெரிய அழகியசிங்கர் ஸ்ரீ அஹோபில மடத்திலிருந்து நடந்தே வந்து தன்னை மங்களாசாஸனம் செய்யவும் வைப்பாள். ப்ரார்த்திப்போம்.
பெரிய அழகியசிங்கர் திருவாராதனம் செய்யும் இந்த வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழ்வதற்கு முன், அடியேனை க்ஷமித்துக் கொண்டு தொடரவேணும். அவசரத்தில், காமிரா லென்ஸில் இருந்த தூசியைக் கவனிக்காததால் வீடியோ அனைவரும் விரும்பும் வகையில் தெளிவாக இல்லை. ஆனால், அடியேன் நோக்கம், ஒரு பட்டிக்காட்டில் இருக்கிறாரே, திருமேனி எப்படி இருக்கிறதோ, என்ன சிரமப்படுகிறாரோ என்று தினமும் கவலைப் படும் சிஷ்யர்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதுதான். எனவே, வீடியோவின் தரம் பற்றி மிகவும் கவலைப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. 
To enjoy the video visit
http://youtu.be/nfneX9Pxxdc

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 20

சாப்பிட உட்கார்ந்து இலையில் அன்னம் பரிமாறியவுடன் தீர்த்தத்தை சுற்றினால் அது பரிசேஷணமா? அதன் முறை என்ன? ப்ராணாயா ஸ்வாஹா அபானாய ஸ்வாஹா …… என்று சொல்லும்போது எந்த விரல்களால் எப்படி அன்னத்தை வாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? அழகியசிங்கர் இப்படி தர்மசாஸ்திரம் சொல்லலாமா? எதற்காக சொல்கிறார்? விவரங்கள் இன்றைய 20வது அனுக்ரஹண பாஷணத்தில்.

இன்று இன்னொரு சந்தோஷம். இணையத்தில் நம்மை சந்தோஷப்படுத்தும்  கோயமுத்தூர் ஸ்ரீ சடகோப அய்யங்கார் ஸ்வாமி இன்று இங்கு வந்திருந்து அடியேன் குடிசையிலும் சில நிமிடங்கள் இருந்து அடியேனை கௌரவித்தார்.

2வது அனுக்ரஹபாஷணத்தை தரவிறக்க

Media fire link

http://www.mediafire.com/?zxjgvnt2sqsnywb

Windows skydrive link

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42%21922

To listen online

சனி, 6 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அனுக்ரஹபாஷணம் 19 + தேரழுந்தூர் செய்திகள்

To day is Adi swathi, the birth star of Sri Garuthman. Because of activities on this Swathi at Sri Ahobila Matam, Thiruppullani, there was delay for thatheeyaaraadhanam which took place by 4 PM. And tired he was, HH initially postponed his anugraha bhashanam to tomorrow. But within minutes, he changed his decision, sent for me at my “house” and delivered his anugraha bhashanam. The reason for changing his decision was told by HH himself during the anugraha bhashanam itself.

And on this Adi swathi day, there will be a grand thirumanjanam in the evening  for the Garudan on the Isanya corner of the Temple wall – more popularly known as moolai garudan. Thirumanjanam for moolai garudan is performed only in a very few places like Thiruppullani, Thirukoshtiyur, Alwar Thirunagari etc. While we were enjoying the thirumanjanam, quite surprisingly Periya Azhakiasingar turned up there on his wheel chair and was enjoying it till the end (nearly 40 minutes) . He was so involved in it and immediately asked the temple authorities to perform thirumanjanam on next Swathi. Eventhough, so far thirumanjanam for moolai Garudan is performed only on Adi Swathi, the temple authorities immediately accepted . So next Swathi nakshathram will be a special as far Thiruppullani is concerned and who ever visits Thiruppullani on that day will be grat bhagyasalis. Please plan yourself.

Today’s anugraha bhashanam can be heard on line here.

To download from mediafire, visit

http://www.mediafire.com/?zb7ksc9ck3nvgnb

All the 19 anugraha bhashanams are available at

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42%21922

Sri Rajagopalan swamy of Mumbai who was fortunate to be at Therazhundur on Thiru Adi Pooram, has shared some videos and photos taken during theertthavari. they are available at

VIDEOS: http://www.youtube.com/playlist?list=PL6C3041C626170950
PHOTOS: https://picasaweb.google.com/rajagopalan.t/ThiruAdiPuramTherazhundurSelvarTeerthaVari2011JPG?authuser=0&feat=directlink

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 18

HH Srimad Azhakiasingar, the 46th jeeyar’s anugraha bhashanam on 5-8-2011 can be heard on line at

 
To download today’s episode from mediafire please log on to
All the 18 days files can be downloaded from
 

Azhakiasingar AruLamuthu 17

Srimad Azhakiasingar’s anugraha bhashanam on 4-8-2011 can be heard on line here.

To download from media fire

http://www.mediafire.com/file/6ue5fjewtjkj56i/HHAZanubha%2017.mp3

To download all the 17 anugraha bhashanams please visit

https://skydrive.live.com/#cid=4809C9EB88545E42&id=4809C9EB88545E42!922

 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 15

இன்று ரொம்ப சந்தோஷமான நாள். எங்களூர் ஸ்தல புராணத்தில் நாங்கள் சொல்வது உண்மையே  என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவாக்காலே அறிந்த நாள். எங்கள் ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாளை வணங்கி அவர் அனுக்ரஹம் கிடைத்த பின்பே தசரதன் அயோத்தியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து இராமனைப் பெற்றான் என்பது எங்கள் ஸ்தல புராணம். வழிவழியாகச் சொல்லி வருகிறோம். அதற்கான சான்றை இன்று ஸ்ரீமத் அழகியசிங்கர் வால்மீகி வாக்காலே சொன்னபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி அளவு கடந்த ஒன்று. அதேபோல, இன்றைய அனுக்ரஹ பாஷணத்தைக் கவனித்துக் கேட்டால், எங்கள் ஊரைப் பற்றி, அதாவது சேதுக்கரை விசேஷத்தைப் பற்றி இதுவரை நாங்கள் யாருமே கேட்டிராத ஒரு அற்புதமான தகவலைச் சொல்லியிருப்பது தெரிய வரும். திருமங்கை மன்னன் எங்கள் திருத்தலத்தைப் பற்றிப் பாடியதை, பௌராணிகர்கள் வழியிலிருந்து வேறுபட்டு, ஆழ்வார் அருளிய சொற்களுக்கெல்லாம் வேதப் பிரமாணத்தை நிலைநிறுத்துகின்ற அந்த அற்புதமான அனுக்ரஹ பாஷணத்தை இங்கேயே கேட்க

தரவிறக்க

http://www.mediafire.com/?yi28i827c46bnua

இதுவரை கேட்காதவர்கள் 15 நாள் அனுக்ரஹ பாஷணங்கள் அனைத்தையும் தரவிறக்க

https://skydrive.live.com/#!/richupload.aspx/Azhakiasingar%20anugrahabhashanam?cid=4809c9eb88545e42&sc=documents

ஞாயிறு, 31 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 14


குடகில் ஒரு சிறு ஊற்றாய்த் தோன்றி படிப்படியாய் விரிந்து பின்னர் அகண்ட காவிரியாய் ப்ரவாகமாய் மாறுவதைப்போல ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளும் அனுக்ரஹ பாஷணங்கள் முதலில் 20 நிமிடங்களாய் ஆரம்பித்து சிறிது சிறிதாக ஒரு மணி நேரம் வரை நேரம் போவதே தெரியாமல் அமுத வெள்ளமாய் அமைந்து வருகின்றன. நேற்று வரை நாம் அவஸ்யம் அறிந்து கடைப் பிடிக்க வேண்டிய தர்ம சாஸ்த்ரங்களை அருளிய அழகியசிங்கர் இன்று முதல் ஆழ்வார்கள் அருளிச் செயலில் திருப்புல்லாணி பற்றி திருமங்கையாழ்வார் அருளியவற்றை அனுக்ரஹிக்க ஆரம்பித்துள்ளார். அதன் அவதாரிகையாக இன்று அவர் அருளியது நாம் எல்லாரும் அறிந்து அனுபவித்து ,அனைவரையும் கேட்டுப் பயனுற வைக்க வேண்டியதாய் அமைந்தது.
      நம் எல்லாருக்கும் அருளிச் செயல்கள் வேதங்களின் சாரம் என்று தெரியும்தான். ஆனால் யாராவது அது எப்படி என்றால் நம்மில் பெரும்பாலோர் அடியேனைப் போலவே திருதிரு ஆகிவிடுவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீமத் அழகியசிங்கரோ பூர்வாச்ரமத்தில் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். வார்த்தை வார்த்தையாகப் பொருளுணர்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர். அதனால் இன்று வேதமே பிரபந்தம் பிரபந்தமே வேதம் என்பதற்கு அளித்த நிரூபணங்கள் ஏராளம். அது மட்டுமல்ல, ஆழ்வார்கள் தோன்றி அருளிச் செயல்களை அருள்வார்கள், இராம சரித்திரம் நடக்கும் என்பதையெல்லாம் வேதம் முன்கூட்டியே சொல்லி விட்டது என்பதையெல்லாம் வீளங்க வைத்தார். ஸ்வாமி தேசிகன் அருளியதைப் போல, கன்றென நம்மை எண்ணி சொல்லமுதம் சொரிந்தார். வார்த்தை விடாமல் கேளுங்கள். முக்கியமாக வீட்டில் உள்ள எல்லாரையும், முக்கியமாக தங்கள் அறியாமையாலே திசை மாறி, சம்ப்ரதாயத்தின் ஏற்றம் உணராமல் இருக்கின்ற இளையவர்களைக் கேட்கச் செய்யுங்கள். ஒரு முறை கேட்டால் போதும் தன்னாலேயே ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தமை குறித்து பெருமை தானாகவே எற்பட்டுவிடும் என்பது உறுதி.
இங்கேயே கேட்க,



தரவிறக்கிக் கேட்க, சேமிக்க,
http://www.mediafire.com/?bm3a61od5qa727a
All the files are available here.
https://skydrive.live.com/P.mvc#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42!922