செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம் பூர்வ‌ பாக‌ம் ச‌ம்பூர்ண‌ம்.


மேல் ஐந்து திருநாம‌ங்க‌ளாலே स्वमतस्थापकत्वம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.
संरक्षितागम:
            காப்பாத்த‌ப்ப‌ட்ட‌ ஆக‌ம‌த்தை உடைய‌வ‌ர். ஆக‌மம் என்ப‌து ஶைவாக‌மம் என்றும் வைஷ்ண‌வாக‌மமென்றும் இர‌ண்டு. அதில் இங்கு வைஷ்ண‌வ‌ ஆக‌மமான‌ ஸ்ரீபாஞ்ச‌ராத்ர‌த்தைச் சொன்ன‌ப‌டி. அதுக்கு என்ன‌ தீங்கு வ‌ந்து அதைக் காப்பாற்றினா ரென்னில், --- வைதிக‌ன் தந்த்ர‌த்தில் சொன்ன‌வைக‌ளை அனுஷ்டான‌ம் ப‌ண்ணக் கூடாது என்று ஆக்ஷேப‌ம் வ‌ந்தது. அத‌ற்கு ச‌மாதான‌ம் ப‌ண்ணினார். எங்ங‌னே யென்னில், வேத‌விருத்த‌மான‌ அர்த்தத்தைச் சொல்லுகிற‌ த‌ந்த்ர‌ம் கூடாதுதான், பாஞ்ச‌ ராத்ர‌ம் அப்ப‌டி வேத‌விருத்த‌ம‌ன்று என்றும‌வைக‌ளை ப‌ர‌ம‌த‌ப‌ங்க‌த்தில்  भगवच्छास्त्र विरोधभङ्गाधिकारத்திலும் ஸ்ரீபாஞ்ச‌ராத்ர‌ர‌க்ஷையிலும் , ஸ‌ச்ச‌ரித்ர‌ர‌க்ஷையிலும் இச் சாஸ்த்ர‌ம் வேதத்துக்கு அவிருத்த‌மான‌ அனுஷ்டான‌த்தை ப்ர‌திபாதிக்கிற‌தென்றும், சில‌விட‌ங்க‌ளில் அனுஷ்டான‌ விரோத‌ஞ்சொன்ன‌துவும் संहितान्तर  प्रविष्ट விஷ‌ய‌ மென்னும் ஸ்ம்ருதிகார‌ ஸ‌ம்ம‌த‌மாகையாலும், ம‌ஹாபார‌தத்தில் ப‌ஹுஸ்த‌ல‌ங்க‌ளிலே கொண்டாட‌ப்ப‌ட்டிருப்ப‌தாலும்,, ப்ர‌ம்ம‌ ஸூத்ர‌த்தில் விசேஷித்திருப்ப‌தாலும், வேறு த‌ந்த்ர‌ங்க‌ளைப்போலே சில‌விட‌ங்க‌ளில்தான் ப்ர‌மாண‌மின்றிக்கே எல்லா சாஸ்த்ர‌மும் ப்ர‌மாண‌மென்று ஸ்தாபித்தாரென்ற‌ப‌டி..
संखचक्र धारण रक्षिता:
            த‌ப்த‌ச‌ங்க‌ச‌க்ர‌தார‌ண‌த்தை ர‌க்ஷித்த‌வ‌ர். அதுக்கு என்ன‌ ஆக்ஷேப‌ம் வ‌ந்து ப‌ரிஹ‌ரித்தாரென்னில்:-- வைதிக‌ப்ராம்ம‌ண‌ ச‌ரீர‌த்தில் புண்ணுண்டாக்கக்கூடாதென்று சுருதி ஸ‌ம்ருதிக‌ளு சொல்லுகிற‌ப‌டியால் த‌ப்த‌முத்ரை கூடாதென்று பூர்வ‌ப‌க்ஷ‌ம். புண்ணுண்டாக்கக் கூடாதென்ற‌து வீணாக‌ப் ப‌ண்ணிக்கொள்ளுகிற‌ வ்ர‌ண‌த்தைச் சொன்ன‌ப‌டி. இந்த‌ த‌ப்த‌முத்ரா தார‌ண‌ம் ப‌ண்ணிக்கொள்ளும்ப‌டி ஆத‌ர்வ‌ண‌ ம‌ஹோப‌நிஷ‌த்தில் ப்ர‌ம்ம‌ஸூத்ர‌த்தில் விதியிருப்ப‌தாலும், செய்துகொள்ளாவிடில் தோஷ‌ம் சொல்லியிருப்ப‌தாலும் இப்ப‌டி சாண்டில்ய‌ ஸ்ம்ருதி, ம‌ஹாபார‌த‌, ஹ‌ரிவ‌ம்ச‌, ஸ்ரீவிஷ்ணுபுராண‌, பாக‌வ‌த‌ம் முத‌லிய‌ புராண‌ங்க‌ள் கோஷியாநின்ற‌ன‌வென்று ஸ்தாபித்தாரென்ற‌ப‌டி..
ऊर्ध्वपुण्ट्रांकनत्राता
               ஊர்த்வ‌புண்ட்ர‌தார‌ண‌ம் ப‌ண்ண‌க்கூடாதென்று சோத்ய‌ம் வ‌ர‌, அது ப‌ஸ்மோர்த்வ‌ புண்ட்ர‌தார‌ண‌ விஷ‌ய‌ம் என்றும், சைவாக‌ம‌த்தில் ப்ர‌விஷ்ட‌னுக்கு நிஷேத‌ விஷ‌ய‌ம் என்றும் வ்ய‌வ‌ஸ்தை ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌து. ஊர்த்வ‌ புண்ட்ர‌தார‌ண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ வேணுமென்று ய‌ஜுஸ்ஸில் க‌ட‌சாகையிலும், ஆத‌ர்வ‌ண‌த்திலும், போதாய‌ன‌ வாக்கிய‌த்திலும், நார‌தீய‌த்திலும் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.  विभूतिயால் குறுக்காக‌ த்ரிபுண்ட்ர‌ தார‌ண‌ம் ப்ராம்ம‌ண‌ விஷ‌ய‌ம‌ன்று. வைஷ்ண‌வ‌ன‌ல்லாத‌ சூத்ர‌ விஷ‌ய‌ம். ஊர்த்வ‌ புண்ட்ர‌ம் வெளுப்பு ம‌ண்ணினாலே த‌ரிக்க‌வேணும். அதுவும்  𑌸𑍍सच्छिद्रமாய் ஹ‌ரிபாதாகார‌மாய் த‌ரிக்க‌வேணும். வேறு த்ர‌வ்ய‌ங்கூடாது. ந‌டுவில் ஹ‌ரித்ராசூர்ண‌ யுக்த‌மாய் இருக்க‌வேணும் என்று ஸ்தாபித்தாரென்ற‌ப‌டி. .
सुद्धसत्वमयाकृतिः
       சுத்த‌ ஸ‌த்வ‌ப்ர‌கார‌மான‌ திருமேனியுடைய‌வ‌ர். ப‌க‌வ‌ந்நிவேதித‌ஸாத்விகா ஹார‌ம் முத‌லான‌துக‌ளாலே சுத்த‌ஸ‌த்வ‌ம‌ய‌ ச‌ரீரரென்னுமாம். ப‌க‌வ‌ந்நிவேதித்ததையே புஜிக்க‌வேணும். அது பாவ‌ன‌த‌மம். வேறு தேவ‌தைக‌ளுக்கு நிவேதிதமான‌து நிர்மால்லிய‌ம். அது புஜிக்கக்கூடாது. புஜித்தால் பாவ‌ம் வ‌ரும் என்கிற‌வைக‌ள், ப‌க‌வ‌ச்சாஸ்த்ர‌ம், ஸித்தாந்தாசார‌ ப‌த்ததி, ம‌ஹோப‌நிஷ‌த் முத‌லிய‌வைக‌ளிலே விதிக்க‌ப்ப‌ட்ட‌தென்று ஸ‌ச்ச‌ரித்ரர‌க்ஷையில் அருளிச் செய்தார்.
যত্যাচারপ্রতিষ্ঠাতা
            ய‌திக‌ளுடைய‌ ஆசார‌த்தை ஸ்தாபித்த‌வ‌ர். ய‌திக‌ள் நால்வ‌ர். குடீச‌க‌ர், ப‌ஹூத‌க‌ர், ஹ‌ம்ஸ‌ர், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌ரென்று. இவ‌ர்க‌ளுள் குடீச‌க‌ர் ப‌ஹூத‌க‌ர்க‌ளுக்கு வ‌ர்ணாச்ர‌ம‌ த‌ர்மம் வேணும், ஹ‌ம்ஸ‌னுக்கும், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌னுக்கும் வேண்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் शिखायज्ञोपवीत वस्त्रादिக‌ளாய்  সর্ৱত্রভিক্ষাচারিக‌ளாய் இருப்பார்க‌ள். இவ்விருவ‌ரில் ज्न्नानापेक्षी, तद्रहितरॆऩ्ऱुரென்று பேத‌முண்டு. ज्न्नानापेक्षि யாகில் வ‌ஸ்த்ராதிக‌ளையும் ஏக‌த‌ண்ட‌த்தையும் த‌ரித்து குருகுல‌ம் போய்  ब्रह्मज्न्नान वेदांतश्रவ‌ண‌ம் ப‌ண்ணுப‌வ‌ன். ज्न्नानापेक्षिக்கு ஒன்றும் வேண்டுவ‌தில்லை. त्यादि चोद्यं வ‌ந்தது. அதுக்குத்தர‌ம், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌ ல‌க்ஷ‌ண‌ம‌த‌ன்று, शिखोपवीतत्रिदण्डकमण्डलु काषायधारिக‌ளாய் वेदान्त विषय कालक्षेपपराযণராய், नियतभैक्षனாயிருக்கும‌தென்று सोपपत्तिकமாய் सप्रमाமாய் ச‌ததூஷ‌ணியிலே ஸ்தாபித்தாரென்ற‌ப‌டி.
सर्वत्ंत्रस्वतंत्रधीः
     उक्तानुक्तங்களான‌ व्याकरणज्योतिषगौतमीयायुर्वेदादिக‌ளான‌ ஸ‌ர்வ‌ த‌ந்த்ர‌ங்க‌ளிலும் निरंकुशமான புத்தியையுடைய‌வ‌ர். “ सर्वेषु तंत्रेषु ---  शिद्धांतेषु न्याय वैशेशिक पूर्वोत्तर मीमांसासांख्ययोगशैववैष्णवातिषु, स्वतंत्रस्य == स्वेच्छयाहंचिदर्थं स्थापयितुं दूषयितुम्वाशक्तस्यஎன்று அப்ப‌ய்ய‌ தீக்ஷித‌ராலே யாத‌வாப்யுத‌ய‌ வ்யாக்யான‌த்தில் அர்த்த‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ ப‌டியாக‌வுமாம். இத்திருநாமம் ப‌ர‌ப‌க்ஷ‌நிராக‌ர‌ண‌ ஸ்வ‌ப‌க்ஷ‌ ஸ்தாப‌க‌ங் க‌ளினாலே ப்ரீதையான‌ ஸ்ரீர‌ங்க‌நாச்சியாராலே அருள‌ப்ப‌ட்ட‌து. இவ் வ‌ர்த்தத்தை “सर्वतंत्र संकटप्रशमन विशङ्गटमतिःஎன்று ஸ‌ங்க‌ல்ப ஸூர்யோத‌ய‌த்தில் தாமே அருளிச் செய்தார். “तद्वल्लभा कृपासंप्राप्त सर्वतंत्र स्वतन्त्र ताबिरुदஎன்று गद्यத்திலும் ஸ‌ப்ததிர‌த்ன‌மாலிகையிலும் ப்ர‌ப‌ஞ்சித்தார்க‌ள். 

          இப்ப‌டி ஐம்ப‌து திருநாம‌ங்க‌ளை அருளிச் செய்து பூர்வ‌ ப‌ஞ்சாச‌த்தை நிக‌மித்து ग्रन्धपाटच्चराग्रहणार्थं स्वकर्तृக‌மென்ற‌ருளிச் செய்கிறார். (इतिश्रीशैलेत्यादिயால்). श्रीशैले என்ற‌து ஸ்ரீசைல‌பூர்ண‌ரென்ற‌ ப‌டி. नामैकदेशेनामग्रहणं, அல்ல‌து அவ‌ருக்கே ஸ்ரீசைல‌ரென்று திருநாம மாக‌வுமாம். ஆக‌வித்தால் பெரிய‌ திரும‌லை ந‌ம்பியைச் சொன்ன‌ப‌டி. அவ‌ருடைய‌ (कुल)வ‌ம்ச‌த்துக்கு, (तिलकः) அல‌ங்கார‌பூத‌ரென்ற‌ப‌டி. सर्वभूषणभूषिத‌மானாலும் முக‌ம் தில‌க‌த்தாலே சோபிக்கும‌ன்றோ! (चतुर्वेद चतक्रतु) நான்கு வேதத்தையுமோதி நூறு யாக‌ங்க‌ளையும் ப‌ண்ணி அத்தால் अन्वर्थமான‌ திருநாம‌த்தையுடைய‌ (ताताचार्य)திரும‌லை ந‌ம்பிக்கு திருவேங்க‌ட‌முடையானால் அளிக்க‌ப்ப‌ட்டும், तद्वंश्यர் க‌ளுக்கே அஸாதார‌ண‌முமான‌ தாத‌ என்கிற‌ ஆசார்ய‌ருக்கு (नन्दन) अन्वर्थமாக‌ आनन्दिப்பியா நின்றுள்ள‌ புத்திர‌னாயும், ஸ்ரீபாஷ்ய‌கார ருடைய‌ ஸித்தாந்தத்தை நிலைநிறுத்தின‌ராக‌வும், सर्वतंत्र स्वतंत्रரான‌ வேதாந்த‌ தேசிக‌னுக்கு दासानुदासனும், வேங்க‌டாசார்ய‌ ரென்று அப்பெய‌ரையே உடைய‌வ‌னுமான‌ (आचार्य) குருபூத‌னான‌ வ‌ருடைய‌ (कृतिषु) அருளிச் செய‌ல்க‌ளில் (आचार्यगुणदर्शे) आचार्य தேசிக‌னுடைய‌, गुणशान्त्याद्यगुங்க‌ளென்ன‌, कांत्यादिशरीरगुங்க‌ ளென்ன‌ , இதுக‌ளுக்கு आदर्शे = க‌ண்ணாடிபோல் ந‌ன்றாக‌ ப்ர‌காச‌மான‌ கிர‌ந்தத்தில் (पूर्व पञ्चाशत्) முன் ஐம்ப‌து திருநாம‌ங்க‌ளைச் சொல்லும் பாக‌ம் ஸ‌ம்பூர்ண‌ம்.   


உத்த‌ர‌ பாக‌ம் இருக்கிற‌து. 
அதைக் கூடிய‌ விரைவில் ப‌கிர்வேன். 

திங்கள், 30 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்ர‌ம்


सप्तभंगी विलोपनः
ஜைனர் ஸப்தபங்கீயென்று ஏற்பாடு செய்கிறார்கள். அதை லோபனம் பண்ணினவர். ஸப்தபங்கியாவது :-- स्यादस्ति, स्यान्नास्ति, स्यादस्तिच नास्तिच, स्यादवक्तव्यं, स्यादस्तिचावक्तव्यं, स्यान्नास्तिचावक्तव्यं, स्यादस्तिनास्तिचावक्तव्यं  இப்படி ஏழுவிதம். த்வயங்களுக்கும் பர்யாயங்களுக்கும் பேதாபேதங் கொண்டு, இருப்பதாகவேணும், இல்லாததாகவேணும், இருப்பதாகவும் இல்லாததாகவுமாக வேணும், சொல்லத்தக்கதன்று, உண்டென்று சொல்லத்தக்கதன்று, இல்லையென்று சொல்லத்தக்கதன்று, உண்டில்லையென்று சொல்லத்தக்கதன்று என்று இப்படிச் சொல்லுவார்கள். ஹிம்ஸை செய்யக்கூடாதென்பார்கள். தலைமயிர் பறிப்பதே தபஸ்ஸென் பார்கள். பூமி விழுந்து கொண்டே இருக்குமென்பார்கள். இதுகளுக்கு யுக்திகளையும் சில சொல்லுவார்கள். இவை அனுபபந்நமென்கிறார். இதில் முதலில் சொன்னவைந்து பங்கியையும் மாத்யமிகனிசைந்து மற்றவையை தூஷித்தான். ஆகையாலவர்களே பரஸ்பரம் தூஷித்துக் கொள்ளுகையால் நாம் சொல்லவேண்டுவதொன்றும் இல்லை. ஏழுபங்கி கட்டினதுபோல் ஸத்கோடி, அஸத்கோடி, ஸதஸத்கோடி, என்றிப்படியும் மூன்று கோடி சேர்த்து பத்து கோடி கட்டலாம். இதெல்லாம் யுக்தியாபாஸங்கள். ஒன்றுக்கொன்று விருத்தமாகையால் அநுபாதேயங்கள். அஹிம்சை பரமதர்மமென்கிறவர் கள் அந்யமத தூஷணம் பண்ணுவது கூடாது. வேதனை செய்யக்கூடாது. அவர்கள் தலைமயிர் பறிப்பதாலுண்டான வேதனையை ஸஹிப்பதும் விருத்தம். பூமி விழுந்துகொண்டேயிருந்தால், ஒரு உலோஷ்டத்தை உயரவெறிந்தால் அது பூமியில் விழாமலிருக்க வேணும். கனமான வஸ்து வேகமாய் விழுமன்றோ! லோஷ்டம் இலகு வானதன்றோ. ஆகையால் அதுவும் அஸங்கதம். இப்படி இம்மதத்தை நிரஸித்தார் என்றபடி. இவ்விடத்தி லுள்ள விசேஷங்களை பரமதபங்கத்தில் மாத்யமிக‌வாத கண்டனத்திலும், ஜைன வாத கண்டனத்திலும் ஸ்ரீபாஷ்யத்திலுங் கண்டு கொள்வது.
            இப்படி ஜைனமத நிரஸனத்தைச் சொல்லி, பாஸ்கரமத நிரஸனம் பண்ணினதைச் சொல்லுகிறார்.
भेदाभेद मतच्छेत्ता
          ஜீவனுக்கும் ப்ரம்மத்துக்கும் அல்லது உபாதிக்கும் ப்ரம்மத்திற்கும் பேதமுண்டு என்றும், அபேதமுண்டென்றுஞ் சொல்லுவார்கள். எங்ஙனே என்னில் “ப்ரம்மத்தையறிந்தவன் ப்ரம்மமாகவாகிறான்” என்று அபேதத்தையும், “அறிந்தவனொருவன், அறியாதவனொருவ னென்கையால் பேதத்தையும் சுருதிகள் சொல்லுகின்றனவென்று சொல்லுவார்கள். இது ஸர்வசுருதிகளுக்கும் ஐககண்ட்யம் பண்ணத் தெரியாமை யால் வந்த சோத்யம், ப்ரம்மமாகவே ஆகிறானென்பதற்கு ப்ரம்மத்துக்கொப்பானவனாக ஆகிறான் என்று அர்த்தம். இவ்வர்த்தத்துக்கு श्रुतिस्मृति भगवत् गीता ब्रह्मसूत्रादि களுமநுகுணங்கள் அபேதந்தோற்றினவிடங்களை பேத சுருதிக்கு விரோதமில்லாமல் அர்த்தம் கண்டு கொள்வது. ராமஸுக்ரீவர்களுக்கு ஐக்கியம்போலே. இப்படிச் சொல்லாவிடில் ஜீவகத தோஷங்களும், உபாதிகத தோஷங்களும் ப்ரஹ்மத்திலேறும். இப்படிகளால் நிரஸித்தாரென்றபடி. அன்றிக்கே, குணகுணிகளுக்கு பேதாபேதஞ்சொல்லுகிற ஆனந்ததீர்த்தீய மதத்தைச் சொன்னதாகவுமாம்.
धूतयादव कल्पनः
         ந்மாத்திர ப்ரம்மமே போக்தாவாகவும், போக்யமாகவும், நியந்தாவாக வும் பரிணமிக்கிறது யாதவமத கல்பனம். அதை நிரஸித்தவர். ப்ரம்மத்துக்கு விகாரஞ் சொல்லில் நிர்விகாரத்தைச் சொல்லுகிற சுருதிகள் பாதிக்குமென்று முதலானதுகளாலே கண்டித்தவரென்றபடி.
अनीशवाद दंभोळि
          நிரீச்வரவாதிகளான கபந்தமீமாம்ஸகர்களுக்கு இடி போல்வர். உலகில் மீமாம்ஸா சாஸ்த்ரம் கர்ம மீமாம்ஸையென்றும், ப்ரம்ம மீமாம்ஸையென்றும் இரண்டுள்ளது. இவற்றில் கர்ம மீமாம்ஸை யாகாதிகளை விதிக்கிறது. ப்ரம்ம மீமாம்ஸை ப்ரம்மோபாஸனத்தை விதிக்கிறது. இரண்டுமே சாஸ்த்ரமாயிருக்க இரண்டுக்கும் ஒரே அர்த்தஞ்சொல்லாமல் வெவ்வேறாக அர்த்தஞ்சொல்லுமவர்கள் மீமாம்ஸகர்கள். கர்மகாண்டமாகிறவுடலைத் தள்ளி ப்ரம்மகாண்டமாகிற சிரஸ்ஸை க்ரஹிக்குமவர்கள் ராஹுமீமாம்ஸகர்கள். ப்ரம்மகாண்டத்தைத் தள்ளி கர்மகாண்டத்தை க்ரஹிக்குமவர்கள் கபந்த மீமாம்ஸகர்கள். இவர்கள் ஈச்வரனில்லை கர்மமே பலப்ரதமென்பர்கள். அது ஸகல சுருதிவிருத்தமாகையாலே அஸங்கதமென்று ப்ரமாணபூர்வகமாக நிரஸித்தாரென்றபடி. இவற்றின் விரிவுகளை பரமதபங்கத்தில் நிரீச்வர மீமாம்ஸக நிராகரணாதிகாரத்திலும், சததூஷணீ முதலானதுகளிலேயுங் கண்டு கொள்வது.
 पाषाण्डमत खण्डनः
            பாஷாண்டறாகிறார் காபாலிகர், காளாமுகர், சைவர், பாசுபதர் முதலானவர்கள், அவர்கள் மதம் சிவனே எல்லாவற்றிற்கும் மேலானவர், அவரே உபாஸ்யர், அவரே பலப்ரதர், இப்படி சுருதிகள் சொல்லுகிறதென்று சொல்லி, சிவனுடைய உபாஸனத்துக்காகக் கபாலம் முதலானதுகளைத் தரித்துக் கொண்டுமிருப்பவர்கள். அவைகள் ப்ரம்மமூலங்கள். எங்ஙனேயென் னில் :-- அசுரமோஹனத்துக்காக மோஹன சாஸ்த்ரத்தைப் பண்ணு என்று புருஷோத்தமனாலே ஏவப்பட்டவரான சிவனாலே சொல்லப்பட்டமையால் அதுகளை ஸாதுக்கள் க்ரஹிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் சொல்லவேண்டு மவைகள் கீழே “பரதேவதா பாரமார்த்யவித்” என்கிற திருநாமவிளக்கத்தில் சொல்லப்பட்டன. பரமதபங்கம் முதலானதுகளிலும் கண்டுகொள்வது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்


साकारधीनिराकर्ता
ஞாநமானது குடம் முதலானவுருக்களாகவேயிருக்குமென்று யோகாசாரனால் சொல்லப்பபட்ட மதத்தைக்கண்டித்தவர். அஃதெப்படிபென்னில், குடத்தை யானறிகிறேனென்று எல்லாருமொப்புக்கொள்வதால் அது கர்த்தாவையும் வஸ்துவையுங் குறிப்பிடுவதால் புத்தியானது நிர்விஷயமாகில் அப்படியறி வது கூடாதாகையால் என்று யோகாசாரமதத்தைக் கண்டித்தவரென்ற தாயிற்று.

शून्यवदतमोनुदः  शून्य = சூந்யமென்று, वाद =வாதம் பண்ணுகிற மாத்யமிகனுடைய மதமாகிற, तमः:= இருளைப்போக்குமவர். அதெப்படியென்னில். எல்லாம் சூந்யமென்னில் சூந்யமென்று ஸ்தாபிக்கிற ப்ரமாணமும் சூந்யமாகையால் ஸ்தாபிக்கமுடியாது. ப்ரமாணந்தவிர மற்றது சூந்யமென்னில் எல்லாம் சூந்யமென்பது கூடாது, ஆகையாலந்தமதம் ஒருபடிக்கும் ஸரியன்று. என்று மாத்யமிக மதத்தைக் கண்டித்தவரென்றதாயிற்று.. இப்படி பளத்தமதத்தை கண்டித்து ப்ரச்சந்ந பளத்த மதத்தை நிராகரிக்கிறது.

कुदृष्ट्युरगपक्षीशः कुदृष्टि = விருத்தமாக நோக்கமுடையவர்கள், இவர்கள் ப்ரச்நாபளத்தர்கள். பளத்தர் இருவகையர், ப்ரகடரென்னும் ப்ரச்சங்கரென்னும், ப்ரகடசராவார். வெளிப்படையாக ஸர்வம் சூன்யமென்பவர், அதாவது ஸத்யம் போலே சொல்லி முடிவில் சூந்யமாகச்சொல்லுமவர். இவர்களை பொய்ய ரென்றும் சொல்லுவார்கள் அவர்களாகிற (उरग) பாம்புகளுக்கு, இங்கு "कुदृट्युरग என்பதால் த்ருஷ்டிவிஷமான பாம்பு களென்றபடி. அவர்கள் தங்கள் முகங்கள் நின்றுமுண்டான குதர்க்கங்களாகிற விஷங்களாலே ஜகத்தை நாசம் பண்ணுகையாலே பாம்புகளாகச் சொல்லிற்றாகவுமாம். அவர்களுக்கு (पक्षीशः) கருடன் போன்றவர். கருடனைக்கண்ட பாம்பு நிலைநில்லாதுகளிறே, அவர்கள் மதமும் அதுக்குக் கண்டனமும் व्यावृत्त तत्त्वाच्च என்று முதலான காரிகை களால் சொல்லப்பட்டது. அதின் தாத்பரியமெழுதப்படுகிறது. அவர்கள் மதமாவது நிர்குணமான ப்ரம்மமொன்றுமே ஸத்யம், அதற்கு வேறானவை கள் ஸர்வமும் மித்யை, இப்படி மித்யையான மாயையானது ஞானஸ்வரூப மான ப்ரம்மத்தை மறைக்கிறது, அதனால் ப்ரம்மம் தன்னை (नानाभेद) வேறுவேறாக ப்ரமிக்கிறது. வேறாக நினைப்பதே ஸம்ஸாரம், ஒன்றாக நினைத்தலே மோட்சம். அந்த பேதவாஸனை  போவதற்காக பேச்சுமட்டில் ஸத்யங்களான வேதங்களைக்கொண்டு உபாஸநம் முதலானதுகள் சொல்லப் பட்டதுகள் . அதுகளாலிடைவிடாமல் अभेदज्ञानम् ஒன்றே என்கிற ஞானமுண் டாகும், அதுவே மோட்சம். இப்படிச் சொல்லும். அது கண்டிக்கப்பட்ட தெங்ஙனேயெனில் ஞானஸ்வரூபமான ப்ரம்மத்தை அஜ்ஞானமான மாயை மறைக்கமாட்டாது. அப்படி மறைக்கில் அதுக்கு விலக்குமதொன்றுமில்லை.  தேஜஸ்ஸை இருள் மறைக்காதிறே மேலும் பொய்யான வேதம் முதலானதுகளாலுண்டாஞாமும் பொய்யானதால் பொய்ஞானம் மெய்ஞாநத்தைக் காட்டமாட்டாது. ஆகையால் அந்தமதம் பொய்யானதே இப்படிக் கண்டித்தவரென்றதாயிற்று, இங்கு வேண்டுவன விஷயங்களை ஸ்ரீ பாஷ்யம் முதலா விடங்களிற் காண்க,