சனி, 9 பிப்ரவரி, 2008

வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகை கீர்த்தனை

இராகம் - கேதாரகவுளம் -தாளம் - சம்பை

கண்ணிகள்

1. சருவதந்திரசுவதந்திரர்திரு - வரங்கமதிற்றரிசனமே
         தழைக்கவளர்நாளதனி   னேரே
    உரிமைகொண்டுமிவர்தந் திருவடியில்விசேஷக்கியரெல்லா
        முண்மையாகவந்தாசிரயித்தாரே.

2. அவர்களிற்பேரருளாள --ரெனுமொருவர்குணசீல
        ரதிகமேதாவியதினாலே
    குவலயதிற்கீர்த்திபெறு - மெதிராசார்க்கந்தரங்கர்
        கூரத்தாழ்வானவரைப்போலே

3. பரிந்திவர்க்குமந்தரங்கர் -- பேரருளாளருமாகிப்
      பஞ்சசமுஸ்காரமுதல்  வாய்ந்த
    விரிந்துபயவேதாந்த - சகலசாஸ்திரங்களையு
        மிகவுமதிகரித்ததில்வேதாந்த

4.  பூர்ணராயிருக்கையினால் -- பிரமதந்திரசுதந்திரரென்று
        புகழ்ந்துதிருப்பேருங்  கொடுத்தாரே
     காரணப்பேர்கொண்டவர்நல் -- விரத்தியாற்சன்னியசித்துக்
        கார்த்திருக்கவந்து         தொடுத்தாரே

5.  பிரமதந்திரசுவதந்திரசீயர் -- பிரபாகரசீயரெனும்
         பிரபலராம்வெண்ணெய்க்கூத்த   சீயர்
     தரணிதனிலெங்கும்புகழ் -- வீசும்பூரிராமாநு
         சாசாரியராகிவந்த      தூயர்

6. ஒப்பிதஞ்செய்திவர்கண்முத -- லானோர்க்கும்ஸ்ரீபாஷ்ய
        முடையவர்பிரபந்தங்களி   னீதி
    அப்புள்ளார்தமக்குமுன்சொல் -- திருக்குருகைப்பிரான்புள்ளா
        னாராயிரப்படியு     மோதி

7. மற்றுமின்னஞ்சாரார்த்த -- சதுஷ்டயமும்ரகசியார்த்த
         வரிசைகளெல்லாமருளிச்   செய்தே
    தத்துவடீகைமுதலான -- சமஸ்கிருதங்களும்ரகஸ்ய
         சாலங்கள்செய்ததுமப்  போதே

8. தானிதெல்லாமிங்கிவர்க -- ளானசிஷியர்களுக்கேபிர
         சாதித்திருக்கிறநாளி  லங்கே
    ஞானபத்தியுடனேவை -- ராக்கியசம்பத்தையுமாசா
          ரவிருத்திகளையுங்கண்டு   மிங்கே

9.  நடக்குமிவர்பாஷ்யகார -- ரவதாரமென்றிவர்சன்
        னிதிகண்டேபத்திகொண்ட    வாயர்
     வடக்குத்திருவீதிப்பிள்ளை -- யென்னுமவர்தந்திருகு
          மாரராம்பிள்ளைலோகா      சார்யர்

10. உண்மையாம்ஸ்ரீபாஷ்யந் -- தேசிகனையாசிரயித்து
         உபதேசமாகவுங்     கொண்டாரே
      வண்மையாமெதிராசர் -- பிரபந்தமேகாலக்ஷேப
          மாயிருக்கயாவருங்      கண்டாரே

11. பிரபலமாய்முப்பத்தொரு -- பாஷ்யம்வேதாந்தகுரு
         பிரசாத்திதருளின    வராமே
     வருதிரும்சத் துவாரஞ்சிரா -- விதசாரீகபாஷ்யவகையை
           யருளினவரிவர்    தாமே.   

தரிசனத்தார்  அசூயை கொள்ளல்.

கட்டளைக்கலித்துறை

கவிவாதிசிங்கமென  வேதிருவரங்கத்திலிருந்
துவியாக்கியானம்பயில்கின்றநாளிலசூயையினாற்
செவையாகமுன்வந்தழைத்தார்கள்வாதிற்றெரிசனத்தா
ரிவர்தாம்பொறுமையிற்பூமியென்றேசொல்லுமெங்கணுமே.

தரு -இராகம் - மாஞ்சி - தாளம் -- சாப்பு

பல்லவி

பொறுமைக்குள்நிகமாந்ததேசிகனே-- இந்தப்
பூமண்டலத்திலெங்கும் --பூசிகனே.

அனுபல்லவி

வறுமைதவிர்க்குங்கச்சிவரதரேகுலதெய்வ
முறுதியென்றுபணிந்து உலகம்புகழவந்தார்.

சரணங்கள்

வாதத்துக்கழைத்தார்கள்  தரிசனத்தர் -- பாக
   வதபசாரமிதென்றே  தெரிமனத்தர்
ஆதலால்வாராதுகண்டசாமர்த்யரிவரென்று
பாதரக்ஷைவாசற்படிமுன்கட்டக்கண்டாரே.        (பொ)

ஞானத்தைப்பிடிப்பார்கள் சிலபேர்கள் - கர்ம
    நடத்தைகைப்பிடிப்பார்கள் சிலபேர்கள்
ஆனத்தினாலேநாங்களரிதாசர்பாதுகையைத்
தானத்தைச்சிரமேல்வைத்தானந்தம்பெற்றோமென்றார்   (பொ)

அவர்களெல்லாருமிவர்   மகிமைகண்டார் - வந்து
     அபசாரக்ஷாபணங்கள்செய்துகொண்டார்
அவதாரபுருஷர்வேதாந்தாசாரியரென்று
இவரேவைராக்கியநிதியிவரேகலியாணகுணர்        (பொ)

வெள்ளி, 8 பிப்ரவரி, 2008

Padhukasahasram in Tamil

தமிழில் பாதுகாசஹஸ்ரம்

சில தினங்களுக்குமுன் திருப்புல்லாணி வந்த பங்களூர் ஸ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி இன்று அடியேனுக்கு ஒரு அற்புதமான பரிசை அனுப்பியுள்ளார். ஸ்வாமி தேசிக னின் பாதுகாசஹஸ்ரத்தின் தமிழாக்கம் அது. ஆக்கூர் ஆண்டவனின் திருவடி ஆத்தூர் வீரவல்லி சந்தானம் ஐயங்கார் இயற்றியுள்ள அந்நூல் மிகவும் அருமை யாக உள்ளது. அவரே மிக எளிமையான விளக்கவுரையும் எழுதியுள்ளார். ஸ்ரீ கேசவ அய்யங்காரின் திருப்பாதுகமாலை கங்கை இது காவிரி. மாதிரிக்கு ஒரு வெண்பா கொடுத்துள்ளேன். இந்த நூல் ஸ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ், “ராம மந்திரம்”, 2, வினாயகம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033 என்ற விலாசத்தில் கிடைக்கும். விலை 60 ரூபாய்.

சீரங்கர் சேவடியை சென்னிமிசை வைத்தேத்தும்
பாரங்கர் பாதம் படிவதால் - பாரெங்கும்

ஏதமிலா சேமமே எய்தும் அவர்தம்நல்
பாதம் பணிவாம் பரிந்து.
சிந்தித்துச் சிந்தித்துச் செந்தா மரையடியை
வந்தித்து வந்தித்து வாயார -- பந்தித்து
செம்மனத்தே வைத்துச் சிறையிட்ட சீரியரை
நம்மனத்தே வைத்தல் நலம்.

திங்கள், 4 பிப்ரவரி, 2008

Sri hayagreeva Sevaka









ஸ்வாமி தேசிகனைத் தவிர தேவு மற்றறியேன் என உறுதியோடு இருப்பவர்களில் sri T.C. ஸ்ரீநிவாசன் ஸ்வாமியும் ஒருவர். பரகால மடம் சார்பில் பல காலம் வந்து கொண்டிருந்த “ஸ்ரீ ஹயக்ரீவ ப்ரியா” என்னும் மாத இதழின் ஆசிரியராக இருந்தவர். பல்வேறு காரணங்களால் இப்போது புதிதாக “ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக” என்னும் தமிழ் மாத இதழுக்கும் “Sri Vedantha Desika Vidya" என்னும் ஆங்கில மாத இதழுக்கும் ஆசிரியராக இருந்து ஸ்ரீ இராமானுஜ ஸித்தாந்தத்துக்கு அரிய பணி செய்து வருகிறார். அவரது வேண்டுகோளின் பேரில் தமிழ் இதழிலிருந்து சில பக்கங்களை இங்கே கொடுத்துள்ளேன். மாதிரிக்காகக் காட்டப்பட்டுள்ள பக்கங்களில் காணும் விஷயங்களில் உடன்பட்டு தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆண்டு சந்தா ரூ 100 செலுத்தி (தமிழுக்கு 100, ஆங்கிலத்துக்கு 100) சந்தாதாரராகலாம். மாறுபடுபவர்கள் அவர்கள் கருத்துக்களை tcs_hayagreeva@yahoo.com க்கு அனுப்பலாம். இதில் அடியேன் கருத்துக்கள் எதுவுமில்லை.


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2008

திருவருட்சதகமாலை

அநுசரசக்த்யாதி குணாமக்ரேஸர போத விரசிதாலோகாம்
ஸ்வாதீ நவ்ருஷகிரிசாம் ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமிதயாம்   11.

பின்னடைச் சத்தி யாதிப் பண்புநின் பாங்கு தாங்க
முன்னடைப் போத வெள்ளச் சுடருனக் கொளிதெ ளிக்க
நின்னயத் திருவ னென்றே நடைத்திரு விடப வெற்பன்
தன்மையொன்றுணர்த்து மாட்சித்தயையுனைத் தெரியக் கண்டேன்.  11.

சக்தி,பலம்,ஐசுவரியம்,வீரியம்,தேசுஎன்னும் குணங்களைத் தனக்குப்பின் தொடரும் ஊழியக்காரர்களாகவும், ஜ்ஞாநம் என்னும் குணம் தனக்கு முன்கையில் விளக்கை வைத்துக் கொண்டு வழிகாட்டிக்கொண்டு போகும் வெளிச்சத்தை உடையவளாயும், வேங்கட வெற்பனைத் தனக்கு ஸ்வாதீந மாக உடையவளாயும், தானே பிரபுவாயும், தானே ஆவிர் பவிப்பளாயும் உள்ள தயாதேவியே கதியென்று அவளைச் சரணம் புகுகின்றேன்.