புதன், 3 அக்டோபர், 2018

இராமாயண தருமம்

2.

ஸ்ரீவால்மீகி ராமாயணம்

ஆரண்ய காண்டம் –– சருக்கம். 37. சுலோகம் 13

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:'””

"ஸ்ரீராமன் உருவங்கொண்ட தருமம்போலும், நற்குணமுடையோனும், உண்மையான தோள்வலியுற்றவனுமாகின்றனன்" என இராவணனுக்கு, ராமத்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.

யுத்த காண்டம் சரு.28. சுலோ.19

யஸ்மின் ந சலதே தர்மோ யோ தர்மம் நாதிவர்த்ததே| ஸ ஏஷ ராம:

எவரிடமிருந்து தருமம் சலிக்கவில்லையோ, எவர் தருமத்தைவிட்டு விலகவில்லையோ, அவரே இந்த இராமபிரான் என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

யுத்த கா. சரு.91. சுலோ. 69

தர்மாத்மா சத்ய சந்தஸ்ச ராமோ தாசர திர்யதி|
பௌருஷே சாப்ரதித்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்|||

"ஸ்ரீராமபிரான் தர்மஸ்வரூபி என்பதும், சொன்னசொற் தவறாதவர் என்பதும், இணையற்ற பராக்ரமம் உடையவர் என்பதும் உண்மையாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும் " என சபதபூர்வமாயுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்.

ஸ்ரீபாகவதம் - ஸ்கந்தம் 9 -- அத்யாயம் 10 -- சுலோகம் 55

"ஏக பத்நீவ்ரததரோ ராஜர்ஷி சரித: சுசி: |

ஸ்வதர்மம் க்ருஹமேதீயம் சிக்ஷயந்ஸ்வய மாசரந் ||'”

"இராமபிரான் ஏகபத்நீ வ்ரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவரவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரீக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப்பிரம்ம ரிஷியின் வசனம்.

கம்ப ராமாயணம்

“தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” (அயோத்தி நகர் நீங்கு. 163)

நல்லற நிறுத்த நணுகித்,
தாமராவணை துறந்து தரை நின்றவரை” (ஆரணி.விராத.30)

இராமபிரான் உலகத்தில் தருமத்தை நிலைநிறுத்தவே அவதரித்திருப்பதாக, கவிக்கூற்று.

“சூரறுத்தவனுஞ் சுடர் நேமியு
மூரறுத்த வொருவனு மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்.” (ஆரணி – அகத்தி 22)

வெம்புகண்டகர் விண்புக வேரறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற்
கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லுநம் மாணையே (கிட்கிந்தா – கிட்கிந்தை 4)

உலகத்தில் துஷ்ட நிக்கிரகமும், தர்ம ஸம்ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்.

“பின்னையேது முதவுந்துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடைநுடங்கிட விரைந்து தொடர்வா
னன்னையே யனையவன் பினாவோர் கடமைவிட்
டென்னையே நுகர்தி யென்றன னெழுந்து விழுவான் (ஆரணி. விராத. 39)

இராம லட்சுமணர் உலகத்துக்கெல்லாம் தாயைப் போன்ற அன்பினையுடைய தருமசுவரூபிகள் என சீதாபிராட்டியின் வசனம்.

ஓயாத மலரயனே முதலாக வுளராகி
மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீயாகின் முதற்றாதை நெறிமுறையா லீன்றெடுத்த
தாயாவார் யாவரே தருமத்தின் றனிமூர்த்தி

பிரமதேவன் முதலான சகல தேவர்களுக்கும், உலகத்திலுள்ள உயிர்களுக்கும், இராமபிரான் முதல் தந்தையெனவும், தருமஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.

இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரிவில்வாட் கையர் மன்மதன் மேனியர்
தருமநீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருதரைத் தேடுவார்.

ஒன்று நோக் கலரும் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்றுணர் கொள்கையார். (ஆரணி. கா. 4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை உடையவர்கள், சிறந்த தருமவழியிலே தாங்கள் நின்று ஆராய்ந்து அத்தருமத்தை உலகமெங்கும் நிலைபெறச் செய்யுங் கருத்துடையவர்கள் என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.

“சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற்றாளி
லெங்கு மித்தனையிலக்கணம் யாவர்க்குமில்லை
செங்கண் விற்கரத்தி ராமனத்திரு நெடுமாலே
யிங்குதித்தன விண்டற நிறுத்துதற் கின்னும்

கோதண்டபாணியான இராமன், தர்ம ஸம்ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதாக சுக்ரீவ மஹாராஜனிடம் தெரிவித்த நவவ்யாகரண பண்டித ரான திருவடியின் வசனம்.

“உழைத்த வல்லிருவி னைக்கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்தவற் கியல்பல வியம்பி யென்செய்தாய்
பிழைத்தனை பாவியுன் பெண்மையா லென்றான்.”

பலபிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை ஒழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங் களை எல்லாம் தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தம னான இராமபிரான், என்பதாக, தாரையிடம் வாலியின் வசனம்.

அறமன்னானுட னெம்பியன்பினோ
டுறவுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெறவொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிறவென்னா மிதின்ப மியாவதோ. (கிட்கி. சம்பாதி 45)

தர்மஸ்வரூபியான இராமபிரான் திறத்தில் ஜடாயு உயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.

இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரிதத்தினாலே, தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன என்பதற்குப் போதிய சான்றாகும்.

(தொடர்வது இராமாவதார காலம்)

.


     

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராமாயண தருமம்


IMG_0001ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சிந்தாமணி கிராம கர்ணமாக இருந்தவர் ஸ்ரீ எஸ்.கே. ரங்கஸ்வாமி அய்யங்கார். (அதாவது இன்றைய VAO) . இவர் எழுதி 1934ல் வெளியான நூல் இராமாயண தருமம். இராமாயணத்திலே மிக ஆழங்கால்பட்டுத் தான் அனுபவித்தவற்றை இப்படி ஒரு அருமையான நூலாக்கியிருக்கிறார். இந்நூலை ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் மிகுந்த ஆசையுடன் தன் பத்திரிகையில் தொடராக வெளியிட ஆரம்பித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது பல மாதங்களாக அந்த இதழ் வெளிவராத சூழ்நிலையில் இங்கே தொடராக பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்.
சில முன்னுரைகள் படங்களாக
IMG_0001IMG_0002IMG_0003IMG_0004IMG_0005IMG_0006IMG_0007IMG_0008IMG_0009IMG_0010IMG_0011

இராமாயண தருமம்.
ராமாயணம் என்ற சொல் வடமொழி.
ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து, சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்யச ப்ரியமாத்மான:
ஏதத் சதுர்விதம் ப்ராஹு: ஸாக்ஷாத் தர்மஸ்ய லக்ஷணம் என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது, ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது (1) வேதோக்தமாக இருக்கவேண்டும் அல்லது (2) ஸ்ம்ருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது (3) அது ஸத்புருஷர்களால் அனுஷ்டிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.  அல்லது (4) அது மனதிற்கு இனிப்பாகவும், ஆனந்தகரமாகவும் இருக்கவேண்டும்.
இந்த நான்கு ப்ரமாணங்களுக்கு ஸ்ரீராமாயணம் பொருத்தமாக இருக்கிறதோ என்னில்,
முதலாவது :-- வேதம்
வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதியாவார்.       (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
   அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
    இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
    இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்குப் பொருத்தமாகிறது.
இரண்டாவது:-- ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)


    வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.
ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

    (இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர். நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம் வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றாவது :-- ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

    பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி, “சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும் அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன். அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன் ‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார். இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும் ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.
நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம்
ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
    இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
    இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.
இனி ஸ்ரீராமாயணத்தில் தருமங்கள் வருணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குரிய ஆதாரங்களைக் கவனிப்போம்.  
(தொடரும்)