स्तोत्रं मया विरचितं त्वधीन वाचा
त्वत्प्रीतये वरद यत् तदिदं न चित्रम्
वर्जन्ति ह्रुदयं कलु शिक्षकाणां
मञ्जूनि पञ्जर शकुन्त विजल्पितानि ||
ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வததீந வாசா
த்வத்ப்ரீதயே வரத யத் ததிதம் ந சித்ரம் |
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு ஶிக்ஷகாணாம்
மஞ்ஜூநி பஞ்ஜர ஶகுந்த விஜல்பிதாநி || (6)
வரதநின் வசமா மென்றன்
வாக்கினைக் கொண்டு நானே
புரிதுதி யுனக்கு வப்பா
மென்பதோர் புதுமை யாமோ?
பரிவுடன் பஞ்ச ரத்துப்
பறவையின் பிதற்ற றானு
மருமையி லுணர்த்தி னோர்த
மதங்களிப் பிக்கு மன்றோ (6)
(பஞ்சரம் --- பக்ஷிக்கூடு)
(பா.ரா.தா)
வித்தகனே நின்னருளால் வல்லமையும் பெற்றதனால்
அந்தமிலா நின்புகழை சொல்லிடவும் கற்றதனால்
அச்செயலும் என்செயலாய் எண்ணிடுதல் எவ்வகையாம்?
தத்தைசொலும் சொல்லுக்கு தகுதியது பெற்றிடுமோ! (6)
ஏ! வரத! உனக்கு அதீனமான என் வாக்குகளைக் கொண்டு நான் புரியுந் துதியானது உனக்கு சந்தோஷத்தை யுண்டாக்குமென்பது ஒரு அதிசயமோ? ஒரு கூட்டிற் கட்டியிருக்கும் கிளியினது பாடனச் சொற்கள் பழக்கினவர்க்கு அருமையாகி அவருக்கு சந்தோஷத்தை உண்டுபண்ணுகின்றன வன்றோ?
यं चक्षुषामविषयं हयमेध यज्वा
द्राघीयसा सुचरितेन ददर्श4वेधा: |
तं त्वां करीश करुणा परिणामतस्ते
भूतानि हन्त निखिलानि निशामयन्ति ||
யம் சக்ஷுஷாமவிஷயம் ஹயமேத யஜ்வா
த்ராகீயஸா ஸுசரிதேந ததர்ஶ வேதா: |
தம் த்வாம் கரீஶ கருணா பரிணாமதஸ்தே
பூதாநி ஹந்த நிகிலாநி நிஶாமயந்தி || (7)
கண்ணினாற் காண வொண்ணா
நின்னையே கமல யோனி
புண்ணிய மகத்தி லன்று
புரிந்த மா மகத்திற் கண்டான்
நண்ணிய வண்ண மாருள்
நன்னல வடிவை நாத
கண்ணுறு முயிரெ லாமுன்
கருணையா லின்று மாதோ (7)
(பா.ரா.தா)
அருவினன் அளவிலன் கரந்தெங்கும் பரந்தவன்
அரிய(அ)வன் அயனவன் நெருப்பினுள் நின்றவன்
பரிவுடன் பயந்தனன் படைப்புயிர் கண்டிட
வரந்தரு வரதனாய் திகைத்திட நின்றனன்!! (7)
ஏ! நாத! ப்ராக்ருதமான கண்களினால் காண முடியாத நின்னை பிரமன் தன்னுடைய மகத்தான புண்ணிய பலத்தினால் அசுவமேதம் பண்ணிக் கண்டான். அத்தன்மையான உன் திவ்ய மங்கள ரூபத்தை உன் கருணையால் ஸமஸ்த ஜந்துக்களும் இன்றும் நோக்குகின்றன. இதென்ன ஆச்சரியம்! ( பிரமன் அசுவமேத யாகம் புரிந்து கண்ட தன்னை, இன்று அகில லோகமும் எவ்விதப் பிரயாசையுமில்லாமல், கண்குளிரக் காணும் வகை செய்து நிற்கின்றான், என்னே அவனது இன்னருள் --- வில்லிவலம் நாராயணாசாரியார் ஸ்வாமி)
तत्तत्पदैरुपहितेऽपि तुरङ्ग मेधे
शक्रादयो वरद पूर्वमलब्ध भागा: |
अध्यक्षिते मखपतौ त्वयि चक्षुषैव
हैरण्य गर्भ हविषां रसमन्वभूवन्||
தத்தத்பதைருபஹிதேsபி துரங்க மேதே
ஶக்ராதயோ வரத பூர்வமலப்த பாகா: |
அத்யக்ஷிதே மகபதௌ த்வயி சக்ஷுஷைவ
ஹைரண்ய கர்ப ஹவிஷாம் ரஸமந்வபூவந் ||(8)
வேதன் பரி மேதமதி லும் விபுதருக்குரிய
வேத விதிகொண்
டோதி யவி யிட்டுமவ ருக்குரிய பாகமுன
மொன்று மடையார்
மேதபதி யேவரத விண்ணவ ரடங்கலுமுன்
மேனி யிலகக்
கோதிலாவி சாரபலன் கொண்டனுப வித்தனர்தங்
கோல விழியால். (8)
பா.ரா.தா
சீர்மிகு அத்தி கிரியுறை நாத
நான்முகன் வேள்வி பலன்பெற வேண்டி
வானவர் நிற்க உதித்தனை தீயுள்
வேள்வியின் நாயகன் நின்னருள் போற்றி
தேவரும் ஏற்றனர் கண்ணுகர் உண்டி. (8)
ஏ! வரத! பிரமன் செய்த அசுவமேத யாகத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்குரிய வாசக சப்தங்களை உச்சரித்து ஹவிஸ்ஸை அக்நியில் ஹோமம் பண்ணியிருந்தும் (சர்வ சப்தவாச்யனான நீ எல்லா ஹவிஸ்ஸுகளையும் வாங்கிக் கொண்டபடியால்) தங்கள் தங்களுக்குரிய பாகத்தை யொருவரும் முன்னம் அடையாதவராகி, நீ ப்ரத்யக்ஷமானவுடனே ஸர்வரஸனாயிருக்கு முன்னை தம் கண்களாற் கண்டு பிரமன் தந்த ஹவிஸ்ஸுக்களின் ரஸத்தையெல்லாம் தம் கண்களினாலேயே அனுபவித்தார்கள்.
सर्गस्थिति प्रळय विभ्रम नाटिकायां
शैलूषवत् विविधवेष परिग्रहं त्वां।
संभावयन्ति हृदयेनःकरीश धन्याः
संसार वारिनिधि सन्तरणैक पोतं॥ (9)
ஸர்க ஸ்திதி ப்ரளய விப்ரம நாடிகாயாம்
ஶைலூஷவத் விவித வேஷ பரிக்ரஹம் த்வாம் |
ஸம்பாவயந்தி ஹ்ருதயேந: கரீஶ தந்யா:
ஸம்ஸார வாரிதிநி ஸந்தரணைக போதம் || (9)
ஓடுலகம் யாவுமுள வாக்கறிதி
நீத்தலெனுன் லீலை யதுவாம்
நாடக மநேகவித வேடமுட
னாடிநட னாகி நலிவார்
பாடுபவ வாரிதி கடக்கவரி
தானபட காகிய நினை
யீடுபடு தந்நியர் கரீசவித
யத்திலுற வின்பு றுவரே (9)
(பா. ரா. தா.)
அரனும் நீயே அயனும் நீயே
கரந்தாய் பரந்தாய் நிலவிசும் பெங்கும்
ஆக்கலும் அழித்தலும் காத்தலும் ஆக
உண்டுமிழ் விளையாட் டுடையவ னான
பற்றுவர் உனையுளம் பிறப்பொழித் தாரே (9)
ஏ! கரீச! ஜகத் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாகிற உன் லீலைகளை யுடைய நாடகத்திலே பல வேஷங்களைத் தரித்துக்கொண்டு நடனம் செய்யும் ஒரு நடனைப் போன்றவனும் நலிவை உண்டு பண்ணும் இந்த ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு வேண்டிய ஒரு ஓடம் (ஸாதனம்) போன்றவனுமான உன்னை தந்யர்கள் தங்கள் விசுத்தமான மனதில் தியானம் செய்து மகிழ்ச்சி யடைகின்றார்கள்.
प्राप्तो दयेषु वरद त्वदनुप्रवेशात्
पद्मासनादिषु शिवादिषुकञ्चुकेषु ।
तन्मात्र दर्शन विलोभित शेमुषीकाः
तादात्म्य मूढ मतयो निपतन्त्यथीराः|| (10)
உந்திவரு மந்தன னுருத்திரர்க
ளாதிபல ருண்ணி லவநீ
வந்தவர்நின் கஞ்சுகமெ னாதுவர
தாதனிய மைந்த வரெனும்
புந்தியின்மெய்ஞ் ஞானமற வானவரை
யான்மவெனப் பூதி* விழுவார்
சிந்தையினி னீயொருவ னேயெனுமோர்
திண்ணமுறுந் தீர மிவரே. (10)
*பூதி --- நரகம்
(பா.ரா.தா.)
அரனிலும் அயனிலும் உள்ளுரைப் பொருளாய்
அருவுரு பயந்திட அவ்வுரு தனியே
அவரவர் தனியொரு மெய்யுரு எனவே
அவருரு எனதொரு பொய்யுரு அறியார்
உயர்வற மதிநலம் மங்கிய வகையால். (10)
ஏ! வரத! உன் நாபீ கமலத்துதித்த பிரமனும், ருத்திரனும் இவர்போன்ற பலரும் உன் அநுப்ரவேசத்தால் உண்டானவர்களாதலால், உன் கஞ்சுகம் (சட்டை) போன்றவரே என்று கிரகியாமல், தமக்குத் தாமே வந்தவரென்றெண்ணும் (விபரீத) புத்தியால் மெய்ஞ்ஞான மற்றவராய், (உன்னால்) ஆக்கப்பட்ட இவர்களுக்கும் உனக்கும் அபேதந்தா னென்னும் மூட புத்தியை யுடையவர்களாய், அந்தர்யாமியாயிருக்கும் நீ ஒருவனே பரமாத்மா வென்னும் நிச்சய ஞானத்துடன் கூடின தீரமில்லாதவர்களய் நரக ப்ராப்தியடைகின்றனர்.
मध्ये विरिञ्चि शिवयोर्विहितावतार:
ख्यातोऽसि तत्समतया तदिदं न चित्रम् |
माया वशेन मकरादि शरीरिणं त्वां
तानेव पश्यति करीश यदेष लोक: || (11)
மத்யே விரிஞ்சி ஶிவயோர்விஹிதாவதார:
க்யாதோsஸி தத்ஸமதயா ததிதம் ந சித்ரம் |
மாயா வஶேந மகராதி ஶரீரிணம் த்வாம்
தாநேவ பஶ்யதி கரீஶ யதேஷ லோக: || (11)
மூவரெனு மூர்த்தியவ தாரமதின்
முக்கணன் விரிஞ்ச னிடை நீ
மேவியவ ரோடுசம மான துவி
ளங்குமிதின் விந்தை யிலதாம்
ஆவலினு னாணையுறு மீனமுத
லாகுமவ தாரங் களிலுந்
தேவவினை சேரிவுல கவ்வ வின
மாகவுனைத் தேர்தலுறுமே. (11)
(பா.ரா.தா)
அயன்அரி அரன் என வழங்கிய வகையால்
அவரொடு சமமென வழங்கிடு தகமை
வியப்பிலை சரியென உலகினில் பகர்தல்
பலப்பல உருதனில் அதுவது உணர்தலில்! (11)
ஏ! தேவ! திருமூர்த்தி அவதாரங்களில் பிரம ருத்திராதியருக்கு நடுவில் நீ தங்கி அவர்களுக்கு சமனாக விளங்குகின்றாய். இது ஒரு ஆச்சரியமன்று. ஏனெனில் உன் ஸங்கல்பவசத்தினால் கேவலமான மச்ச கூர்மாதி சரீரங்களோடு நீ அவதாரங்களெடுத்த போழ்தும் (யதாவஸ்தித ஞானத்துக்கு ப்ரதிபந்தகமான) பாவங்களடர்ந்த இவ்வுலகானது உன்னை அவ்வவ் வினமாகவே தேர்தலடைந்திருக்கின்றது.
ब्रह्मेति शङ्कर इतीन्द्र इति स्वराडि (ति)
आत्मेति सर्वमिति सर्व चराचरात्मन् |
हस्तीश सर्व वचसामवसान सीमां
त्वां सर्वकारणमुशन्त्यनपाय वाच: (12)
ப்ரஹ்மேதி ஶங்கர இதீந்த்ர இதி ஸ்வராடி (தி)
ஆத்மேதி ஸர்வமிதி ஸர்வ சராசராத்மந் |
ஹஸ்தீஶ ஸர்வ வசஸாமவஸாந ஸீமாம்
த்வாம் ஸர்வகாரணமுஶந்த்யநபாய வாச: (12)
சகலசரா சரங்களையு நின்னுடலாய்த்
தரித்தருளுந் தந்தி* யீச
அகிலஜகத் கா ரணனா யெவ்வுரைக்கு
மன்வயமா யாகு நின்னை
விகசிதமா முதுவேத வான்மொழிகள்*
விதியென்றுஞ் சம்பு வென்றும்
மகபதிசு ராட்டென்று மற்று யிர்*சர்
வம்மென்றும் வழங்கு மாதோ (12)
தந்தி == யானை; வான்மொழிகள் == ச்ரேஷ்டமான வாக்குகள்; உயிர் == ஆத்மா.
(பா.ரா.தா)
அனைத்திலும் உயிராய் பரந்துள வரதனே
அரன் அயன் சுரனாய் படைப்பொருள் அனைத்துமாய்
அனைத்தினின் முடிவாய் வினைவியல் கடந்தனை
அளப்பரி மறையால் சொலப்படு பொருளே. (12)
சகலசராசரங்களையும் உன் சரீரமாகவுடைய ஏ! கரீச! நிஷ்களங்கமான ஆதிவேதங்கள் ஸர்வ ஜகத் காரணனாயும் ஸமஸ்த சப்தங்களுக்கும் விஷய பூதனாயுமுள்ள உன்னை, பிரமன் என்றும், சங்கரன் என்றும், இந்திரன் என்றும், சுவராட் என்றும், ஆத்மாவென்றும், ஸர்வம் என்றும் சொல்லுகின்றன.
आशाधिपेषु गिरिशेषु चतुर्मुखेष्व (पि)
अव्याहता विधि निषेध मयी तवा तवाज्ञा ।
हस्तीश नित्यमनुपालन लङ्घनाभ्यां
पुंसां शुभाशुभ मयानि फलानि सूते ।। (13)
ஆஶாதிபேஷு கிரிஶேஷு சதுர்முகேஷ்வ (பி)
அவ்யாஹதா விதி நிஷேத மயீ தவாஜ்ஞா |
ஹஸ்தீஶ நித்யமநுபாலந லங்கநாப்யாம்
பும்ஸாம் ஶுபாஶுப மயாநி பலாநி ஸூதே || (13)
நின்விதி விலக்குகனெ னாணையய
னித்தன்*றிசை பால கர்களும்
வன்மையி றகைவற வகிக்கும் வகை
வாய்த்துளது மாவி* னிறையே
யன்புடனனந்தரமு னாணையினை
யாளுதலு மீறி விடலும்
முன்புறு சுபாசுப முகங்களின்
பலன்கள்விளை விக்கு முறையே. (13)
நித்தன் == சிவன்; மாவினிறை == கஜேந்த்ரனை ரக்ஷித்த நாதன்
(பா.ரா.தா.)
பலப்பல திசைச்சுரர் எண்மரும் பிரம்மரும்
பலப்பல பதினொரு ருத்திரர் யுகங்களும்
வகுமுறை வழுவிலர் அத்திறம் படைத்தனை
வகைதொகை இவையென நல்மறை உணர்த்தின
அதுவகை இசைபட உய்வமே வரதனே! (13)
ஏ! ஹஸ்தீச! விதிவிலக்குகள் ரூபமான உனது ஆக்ஞையை பிரம ருத்ராதிகளும் திக்பாலர் முதலானவரும் யாதொரு தடையுமின்றி தம் தம் சிரஸ்ஸுகளில் வகித்துக் கீழ்ப்படிகின்றார்கள். ஸர்வகாலத்திலும் உன் ஆக்ஞையை அநுபாலனம் பண்ணுபவர்க்கு சுப பலன்களையும், அதிக்ரமித்து நடப்பவர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்குகின்றது.
त्रातापदि स्थिति पदं भरणं प्ररोह:
छाया करीश सरसानि फलानि च त्वम् ।
शाखागत त्रिदश बृन्द शकुन्तकानां
किं नाम नासि महतां निगम द्रुमाणाम् ।। (14)
த்ராதாபதி ஸ்திதி பதம் பரணம் ப்ரரோஹ:
சாயா கரீஶ ஸரஸாநி பலாநி ச த்வம் |
ஶாகாகத த்ரிதஶ ப்ருந்த ஶகுந்தகாநாம்
கிம் நாம நாஸி மஹதாம் நிகம த்ருமாணாம் || (14)
வானவர் சமூகமாஞ் சகுந்தம்* வைகுஞ் சாகை*யின்
மகத்ததா மறைக ளென்னுந் தாரு*விற் கிடர்வரின்
தீனபந்து வாயிடுக்கண் தீர்த்த ளித்துஞ் செம்மையிற்
றிதிபதத்த னாகியும் பரித்துஞ் சீரின் விழுதுமாய்
கானலின் கடூரதாப மாற்றுஞ் சாயை* தானுமாய்க்
கனிந்து நின்ற பக்குவத்தி னின்சுவைய கனியுமா
யானநீய வேத பாத வங்*களுக்கெ வீதமே
யாயிலா யனைத்துமாகி நின்ற வத்தி யீசனே. (14)
சகுந்தம் == பக்ஷிகள்; சாகை == மரக்கிளை, வேதசாகை; தாரு == மரம்; சாயை == நிழல்; பாதவங்கள் == மரங்கள்
(பா.ரா.தா.)
மறையும் மறையதன் கிளையும் ஆனாய்
மரம்சேர் சுரரெனும் பறவை ஆனாய்
மரம்நில் நிலமதும் விழுதும் ஆனாய்
மரந்தரு நிழலுடன் கனியும் ஆனாய்
மரமது செழித்திடு பொருளும் ஆனாய்
எதுவது இலவென வரதன் ஆனாய்!! (14)
ஏ! ஹஸ்தீச! கிளைகள் போன்ற தைத்ரியம் முதலான பாகங்களில் பக்ஷிகள்போல் வந்திருக்கும் தேவர் குழாங்களையுடையதும், மகா பெரியதுமான வேத விருக்ஷத்துக்கு ஆபத்து வந்த காலத்தில் ரக்ஷகனாயும், மூலாதாரனாயும் போஷிக்கின்றவனாயும், விழுதாயும், தாபமாற்றும் நிழலாயும், பக்குவமாய்க் கனிந்திருக்கும் மதுரமான பலனாயுமிருக்கிற நீ, அவ்விருக்ஷத்திற்கு எதுவாகத் தானாகவில்லை?
(ஸர்வ விதமாயுமிருக்கின்றாய்; ஸகல வேதங்களுக்கும் தாத்பர்ய விஷய பூதன் எம்பெருமானே என்பது பொருள்)
सामान्य बुद्धि जनकाश्च सदादि शब्दा:
तत्वान्तर भ्रम कृतश्च शिवादि वाच:।
नारायणे त्वयि करीश वहन्त्यनन्यम्
अन्वर्थ वृत्ति परिकल्पितमैक कण्ठ्यम् || (15)
ஸாமாந்ய புத்தி ஜநகாஶ்ச ஸதாதி ஶப்தா:
தத்வாந்தர ப்ரம க்ருதஶ்ச ஶிவாதி வாச: |
நாராயணே த்வயி கரீஶ வஹந்த்யநந்யம்
அந்வர்த்த வ்ருத்தி பரிகல்பிதமைக கண்ட்யம் ||
சத்தசத் தான்மா வென்னுஞ்சா மான்ய
மதிதருஞ் சொற்களும் பரம
தத்துவம் வேறுண் டெனமய லூட்டுஞ்
சங்கர னாதியர் பெயரு
மெத்திறத் தாலு மமையுமோர் கருத்தா
லிசைந்துள நாரண னாகி
நித்தனாய் நின்ற நின்னையே குறிப்ப
நீதியா லத்திகி ரீச. (15)
(பா.ரா.தா)
பொதுவில் தோன்றும் மறையுரை மறைச்சொல்
தனியில் தோன்றும் பதிபல உரைப்பதாய்
உணர்வில் கொள்மின் மறையுரை மறைச்சொல்
அறுதிச் சொல்வது வரதனே தெளிமின்! (15)
ஏ! ஹஸ்திகிரீச! ஸத்து, அஸத்து, ஆத்மா முதலான ஸாமான்ய புத்தியைத் தரும் சொற்களும், உன்னைவிட பரதேவதை வேறொன்றுண்டென்று பிரமத்தை உண்டுபண்ணும் “சங்கரன்” முதலாகிய பெயரும், நித்யனாயும், நாராயணனாயும் நிற்கும் உன்னையே ஸகல விதத்தாலும் பொருந்திய கருத்தினால் குறிக்க (ஸாமான்ய விசேஷ ஞாயம் என்னும்) நீதியால் (ஐக்யகண்ட்யத்தை) ஒற்றுமையைப் பெற்றுள்ளன.