சனி, 24 ஏப்ரல், 2010

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸ்ரீராமன்.

இன்றைய 4ம் நாள் உத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. காலை 10.30 மணிக்கு வீதிப் புறப்பாட்டிற்குப் பிறகு ஆச்ரமம் எழுந்தருளிய இராமன் அங்கு விசேஷ திருமஞ்சனம் கண்டருளி, மாலையில் சாற்றுமுறை கோஷ்டிக்குப் பின், கோவிலிலிருந்து வந்து இணைந்து கொண்ட பெருமாளுடன், ஆளுக்கொரு கருட வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் சென்றடைந்தார். ததீயாராதன கைங்கர்யங்களுடன் மண்டகப்படி வேலைகளும் சேர்ந்து இன்று பூரா பிஸி. இப்போதுதான் (11.30 ) முடிந்து வீட்டிற்குள் நுழைந்தேன். சோர்வு மிகுதியால் இரண்டே படங்கள் இப்போது. இரண்டாவது படம், கிட்டத்தட்ட இப்போதைய அடியேன் மனநிலையை பிரதிபலிக்கும். நாள் பூராவும் கூட இருந்தவர் இனி அடுத்த வருடம் தான் வரப்போகிறார். மீண்டும் அந்த பாக்யத்தை அடியேனுக்கு அளிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதனாலே மனதுக்குள் ஒரு வெறுமை.

  

திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 3ம் நாள்

மோகனரங்கரின் அந்தாதியில் மது உண்ட வண்டாய் மயங்கிக் கிடக்கும் ரவிசங்கர் எப்படியும் அருமையான பின்னூட்டங்கள் அளிக்கப் போகிறார். அப்புறம் நான் எதற்கு இன்றைய மூன்றாம் நாளில் காலைப் புறப்பாட்டையும், இரவில் அனும வாகனப் புறப்பாட்டையும் பற்றி சப்பென்று ஒரு முன்னோட்டம் தரவேண்டும்? இன்று படங்கள் மட்டுமே இங்கு.

IMG_7778 IMG_7779 IMG_7780 IMG_7781 IMG_7782 IMG_7786 IMG_7787 IMG_7788 IMG_7800 IMG_7801 IMG_7802 IMG_7807 IMG_7808 IMG_7809

வியாழன், 22 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 2ம் நாள் இரவில்

பங்குனி மாதம்தான் விலாவாரியாக எழுதியாச்சே! அதையே சித்திரையிலும் எழுத வேண்டுமா என நினைத்து படங்களை மட்டும் இங்கு இடுவோம் என நினைத்தால், "அவன்" என்னைக் கொஞ்சமாவது எழுத வைக்கிறான். பாருங்களேன்! இன்று இரண்டாம் திருநாள்! சிவகங்கை சமஸ்தான மண்டகப்படிசமஸ்தானம் சார்பில் யாராவது ஒருவர் வருவார். மண்டகப்படிகளிலேயே மிகவும் சீக்கிரமாகப் புறப்பாடு ஆகிவிடும் மண்டகப்படி இது. ஏழரை மணிக்கெல்லாம் புறப்பாடு சாற்றுமுறைத் துவக்கத்துடன் ஆரம்பமாகி விட்டது. அப்படிப் புறப்பாடு ஆனவுடன்,,நடுவில் எங்கும் நிற்காமல், தேரடியில் ராஜ மரியாதை(அதாவது அவர்கள் பிரதிநிதியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு) ஆன பிறகே மற்றவர்கள் கண்டருளப் பண்ண முடியும். இது தொன்று தொட்டு வரும் மரபு.  கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவில் தேசிகன் ஸந்நிதி, வானமாமலை மடம் ஆகியவை இருந்தாலும் பெருமாள் திரும்பி வரும்போதுதான் இங்கு ஒரு நிமிடம் நின்று கண்டருளப்பண்ணப் படும் உபகாரங்களை ஏற்றுக் கொண்டு செல்வார். ஆனால் இன்றோ, கோவிலை விட்டுக் கிளம்பி சரியாக தேசிகன் ஸந்நிதி வாயிலில் திடீரென ஜெனரேட்டர் பழுதாகி நின்று விட்டார். சுமார் 20 நிமிடங்கள் கழித்தே பழுது சரியானது. எங்களுக்கெல்லாம் ஒரு கற்பனை! ஒருவேளை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ ராமனுக்கு மட்டுமே கேட்கிற அளவில் தான் இயற்றிய "ரகுவீரகத்ய"த்தை ஸேவிக்க, அதைக் கேட்பதற்காகவே ராமனும் தாமதம் செய்தானோ என்று. வெளிக்கதவை மட்டும் பூட்டிவிட்டு ததியாராதன கைங்கர்யங்களை கவனிக்கச் சென்றிருந்த தேசிகன் ஸந்நிதி ஆராதகர் ஸந்நிதி வாயிலில் ராமன் நிற்பது தெரிந்து ஓடிவந்து கதவைத் திறந்த சில நிமிடங்களில் பழுதும் சரியானது. தன் சரிதத்தைப் பூராவும் கேட்டுவிட்டாரோ என்னவோ ராமனும் திருவீதிப் புறப்பாட்டைத் துவக்கி தொடர்ந்தார். சில படங்கள் இங்கு!  






















சித்திரை உத்ஸவம் 2ம் நாள் காலை





 அருளிச் செயலைத் தொடரும் ஸ்ரீராமன். ஸ்ரீமத் ஆண்டவன் நியமனத்தில் உத்ஸவ முழுமைக்கும் பாராயணத்துக்கு வந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகளுடன் பெரியநம்பி வம்சத்தாரின் பிரதிநிதி ஸ்ரீ ரகுபதி அய்யங்கார் ஸ்வாமி . இவரது ஏற்பாட்டில்  ஆழ்வார்திருநகரியிலிருந்து இருவர் பிரபந்த பாராயண கைங்கர்யத்துக்கு வந்துள்ளனர்.                                                                                               

திருவீதிப் புறப்பாட்டில் 




சித்திரத்தில் எழுதவொண்ணா எங்கள் பேரழகன்
திருமங்கை மயங்கியது ஏன் என்று புரிகிறதா!


வடமொழியாய் நின்றானைப் பின் தொடரும் வேதங்கள்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகள்


உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதைப் புரிய வைத்தவர்
பார்வைக்கு வாமனர்
வேதம் ஓதுகையில் திரிவிக்கிரமன்


"The Hindu" on Thiruppullani Chitthirai Brahmothsavam

Here is a report in "The Hindu" dated 22/4/2010 on the Chiththirai Brahmothsavam for Sri Pattabi Rama Swamy at Thiruppullani.

சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே! மின்தமிழில்

"மின்தமிழில்" திரு குமரன் மல்லி எழுதியது.

சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன்
வாழியே!<http://koodal1.blogspot.com/2010/04/blog-post_21.html>
<http://4.bp.blogspot.com/_h7qhuHzSykY/S88YksSsE0I/AAAAAAAACTw/XRGop5W...>
"எம்பெருமானாரே. தண்டமும் பவித்ரமும் அல்லவோ ஒரு முக்கோல் பகவரான துறவியின்
அடையாளங்கள். அவற்றை எங்கும் எப்போதும் தரித்துக் கொள்வது தானே துறவியரின்
கடமை. தங்களின் தண்டமும் பவித்திரமும் என்று தேவரீரால் சொல்லப்பட்டவர்கள்
தங்களின் முதன்மைச் சீடர்களான முதலியாண்டானும் கூரத்தாழ்வானும். அடியோங்கள்
கூரத்தாழ்வானின் வைபவத்தைக் கொஞ்சமேனும் பேசியிருக்கிறோம். முதலியாண்டானின்
வைபவங்களையும் பேசும் பாக்கியத்தை அடியோங்களுக்கு தேவரீர் அருள வேண்டும்!"
"சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்த முதலியாண்டானின் வைபவத்தை நீர்
பேசுவதற்கு எம்பெருமானின் திருவருள் கூடி வந்திருக்கிறது. இன்றே சித்திரை
புனர்பூசம்! முதலியாண்டானின் பெருமைகளைப் பரக்க பேசும்!"
"ஆகா. தேவரீர் கருணையே கருணை.
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!
காரேய் கருணை இராமானுச இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின் அருளாம் தன்மை?!"
***
இறைவனுடன் கூடவே இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பது ஒரு வகை. அதனை
இராமவதாரத்தில் இலக்குவனிடம் கண்டோம். அதுவே இராமானுச முனியின் வாழ்க்கையில்
கூரத்தாழ்வானிடம் கண்டோம்.
இறைவனின் திருவுள்ள உகப்பை முன்னிட்டு இறைவனின் அருகாமையைக் கூடத் துறந்து இறை
பணி செய்வது இன்னொரு வகை. அதனை இராமாவதாரத்தில் பரதனிடம் கண்டோம். இராமானுச
முனியின் வாழ்க்கையில் அதனை முதலியாண்டானிடம் கண்டோம். ஆசாரியனின் திருவுள்ள
உகப்பிற்காக தன்னுடைய கல்விப்பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு இராமானுசரின்
ஆசாரியர் பெரிய நம்பிகளின் திருமகளார் அத்துழாயின் புகுந்த வீட்டிற்கு
முதலியாண்டான் வேலைக்காரனாக சென்று வேலை செய்ததை நமது கண்ணபிரான் இரவிசங்கர்
முன்பே இங்கு <http://madhavipanthal.blogspot.com/2008/09/1.html>பேசியிருக்கிறார்.
அதனை முதலியாண்டானின் பிறந்த நாளான இன்று மீண்டும் ஒரு முறை
படிப்போம்!
***
*அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தோன் வாழியே!
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே!
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே!
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே!
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே!
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே!*
திருவத்திகிரி எனப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் பேரருளாளன் வரதராசப்
பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க! திருவருள் கூடிய பச்சைவாரணம் என்ற
ஊரில் அவதரித்தவன் வாழ்க! சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சிறப்பு பெறும்
படி அதில் பிறந்தவன் வாழ்க! ஸ்ரீபாஷ்யம் நூலை உடையவரிடமிருந்து முதல் ஆளாக
சிறப்புடன் பெற்றவன் வாழ்க! உத்தமமான வாதூல குலம் உயர வந்தவன் வாழ்க!
திருவரங்கத் திருநகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கைங்கர்யம் என்னும் நல்வழியில்
திரும்பும்படி அழகிய மணவாளனை ஊரெல்லாம் தாங்கிச் செல்லும் சீர்பாதம் என்னும்
கொத்தினை எம்பெருமானாரின் கட்டளைப்படி நிலைநாட்டியவன் வாழ்க! முதலியாண்டான்
பொற்பதங்கள் எக்காலத்திலும் வாழ்க!
***
எம்பெருமானார் இராமானுசர் அவதரித்து பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரபவ
வருடத்தில் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கும் இடையில் இருக்கும்
'பச்சைபெருமாள் கோயில்' என்னும் ஊரில் பிறந்தவர் தாசரதி என்ற இயற்பெயர் கொண்ட
முதலியாண்டான். இவர் பிறந்த ஊருக்கு 'புருஷமங்கலம்', 'வரதராஜபுரம்',
'பச்சைமங்கலம்' என்ற பெயர்களும் உண்டு. இவருடைய திருத்தகப்பனார் பெயர் அனந்தராம
தீட்சிதர். இவருடைய திருத்தாயார் பெயர் நாச்சியார் அம்மன் என்னும் கோதாம்பிகை.
இவருடைய தாய்மாமன் எம்பெருமானார். இவருடைய கோத்திரம் வாதூல கோத்ரம்.
எம்பெருமானாருடைய சீடர்கள் அனைவருக்கும் தலைவராக இருந்ததால் இவருக்கு
முதலியாண்டான் என்ற திருப்பெயர் அமைந்தது.
நம்மாழ்வாரான சடகோபன்/சடாரி எம்பெருமானின் திருவடிநிலைகளாக இருந்து
அருள்பாலிக்கிறார். அதே போல் எம்பெருமானாரின் திருவடிநிலைகளாக அவரது அந்தரங்க
அடியாராக இருந்த முதலியாண்டான் கருதப்படுகிறார். இனி மேல் இதனை நினைவில்
நிறுத்தி இராமானுசரின் சன்னிதிக்குச் செல்லும் போது 'சடாரி சாதிக்க வேண்டும்'
என்று கேட்காமல் 'முதலியாண்டான் சாதிக்க வேண்டும்' என்று வேண்டுவோம்!
***
*பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்*
யாருடைய திருப்பெயரால் எதிராசரான இராமானுசரின் திருவடிநிலைகள்
அழைக்கப்படுகின்றனவோ அந்த தாசரதியின் திருவடிகளை நான் என் தலையில் அணிகிறேன்.
*ஸ்ரீமத் தாசரதிம் வந்தே ராமானுஜ பதாஹ்வயம்
வாதூலாநாம் அலங்காரம் த்ரிதண்டாஹ்வய தேசிகம்*
ஸ்ரீ ராமானுசரின் திருவடிகள் என்ற திருப்பெயரை உடையவரும், வாதூல
கோத்திரத்தவர்களுக்கு அணிகலனைப் போன்றவரும், ஸ்ரீ ராமானுசரின் முக்கோலாகச்
சொல்லப்படுபவரும் ஆன ஸ்ரீமத் தாசரதி என்னும் குருவை வணங்குகிறேன்.
*அநந்த நாராயண கோதாம்பிகா கர்ப்ப ஸம்பவம்
பாகிநேயம் யதீந்த்ரஸ்ய பஜே தாசரதிம் குரும்*
அநந்த நாராயண தீட்சிதருக்கும் கோதாம்பிகைக்கும் திருமகனாகப் பிறந்தவரும்,
எதிராசருக்கு மருமகனும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!
*மேஷே புநர்வஸு திநே தாசரத்யம்ஸ ஸம்பவம்
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்*
மேஷ மாதமான சித்திரையில் புனர்பூச நாளில் தசரத குமாரனின் அம்சமாகப்
பிறந்தவரும், எதிராசருடைய திருப்பாதுகைகள் எனப்படுபவரும் ஆன தாசரதி எனும்
குருவை வணங்குகிறேன்!
*ய: பூர்வம் பரதார்த்தித: ப்ரதிநிதிம் ஸ்ரீபாதுகாம் ஆத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாசரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹதி நோ தைவம் குலஸ்யோத்தமம்*
யார் முற்காலத்தில் பரதனால் வேண்டிக்கொள்ளப்பட்டு அரசாளுவதற்கு தன்
பிரதிநிதியாகத் தன் திருப்பாதுகைகளைத் தந்து அருளினானோ, அந்த ராமனே தாசரதி
என்னும் பெயருள்ள ஆசாரியனாய் மீண்டும் வந்து நம்முடைய குலத்திற்கு மிகவும்
உயர்ந்த தெய்வமான ச்ரி ராமானுச பாதுகைகளாக ஆகி எல்லா உயிர்களும் உய்யும்படி
திருவருட் பேரரசை இங்கே தானே ஆண்டு கொண்டிருக்கிறான்!
தனது பாதுகைகள் கோசல சாம்ராஜ்யத்தை ஆண்டது போல் தானே இராமானுச பாதுகைகளாகி
பக்தி சாம்ராஜ்யத்தை ஆளுகிறான் தாசரதி!
*ஸ்ரீவைஷ்ணவ சிரோபூஷா ஸ்ரீராமானுஜ பாதுகா
ஸ்ரீவாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீதாசரதிரேததாம்*
ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமுடிகளுக்கு அணிகலனாக இருக்கும் ஸ்ரீ ராமானுச
திருவடிநிலைகளாக ஆகி, ஸ்ரீவாதூல குலத்திற்கு அணிகலனாக விளங்கும் ஸ்ரீதாசரதி
என்னும் முதலியாண்டான் எங்கும் வெற்றி பெறுவாராக!
முதலியாண்டான் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடி நிலைகளே சரணம்! 

தொடங்கியது சித்திரை ப்ரும்மோத்ஸவம்.

திருப்புல்லாணி ஸ்ரீபட்டாபி(ஷேக) ராமச்சந்திரமூர்த்திக்கு சித்திரைத் திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு ம்ருத்ஸங்கரஹணத்தையும் கணக்கிலெடுத்து சிலர் நேற்றே ஆரம்பித்தாயிற்று என்றும் சொல்லலாம்.

IMG_7727 மாலையில் திருமஞ்சனத்திற்குப் பிறகு, சாற்றுமுறையில் பெருமாளும் உடன் இருந்து அனுக்ரஹித்து முதல் திருநாள் ஆரம்பமானது. ஸ்ரீஆதி ஜெகன்னாதப் பெருமாள் அனுக்ரஹித்துப் பிறந்தவர்தானே ஸ்ரீ ராமச் சந்திர ப்ரபு! எனவே, அப்படிப் பிறந்த பிள்ளையின் உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்து, அனுக்ரஹிக்க பெருமாளும், அப்படி அனுக்ரஹிப்பதைக் கண்டு களிக்க நாச்சிமார்களும் இராமன் அருகில் இருந்து கடாக்ஷித்து ஆசிகூற சாற்றுமுறை நடக்கும்.IMG_7728 அதன்பின் ஸ்ரீஇராமன் சீதா, லக்ஷ்மண ஸமேதராய் சூரியப்ரபை வாகனத்திலும், பல்லக்கில் பெருமாள் தன் நாச்சிமார்களுடனும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினர்.

IMG_7735

பங்குனி மாதமே சொன்னேன். மாதங்கள் மாறி, உத்ஸவங்கள் மாறும்போது வாகனங்களில் பெருமாளுக்கு பதிலாக ஸ்ரீஇராமன் எழுந்தருள்வார். மற்றப்படி பெரிய மாற்றங்கள் எதுவும் கிடையாது என்று.

IMG_7743

 

ஆகவே, கூறியது கூறல் குற்றம் புரியாமல் உத்ஸவ படங்களை மட்டும் நாளை முதல் இங்கு இடுவேன்.

IMG_7745

 

 

பங்குனியைப் போலவே சித்திரை ப்ரும்மோத்ஸவ 11 நாட்களும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ததீயாராதன கைங்கர்யம் நடக்கிறது.

திங்கள், 19 ஏப்ரல், 2010

மைக்ரோஸாஃப்ட் வேர்டை விட்டு மாறிட்டேன்!

Devvicky Word 
மைக்ரோஸாஃப்ட் தங்கள் மென்பொருள்களுக்கு அநியாய விலை வைத்துக் கொள்ளை அடிக்கிறது என்று நிறையப் பேர் குறை சொல்வது உண்டு. அதில் உண்மை இருக்கிறது என்றாலும், என்னைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் பல மடங்கு விலையை உயர்த்த வேண்டும் என்று வாதாடுகிற கட்சி! அப்படி அவர்கள் கொள்ளையோ கொள்ளை என்று விலை நிர்ணயம் பண்ணினால்தானே இன்னும் பல ஓப்பன் ஸோர்ஸ் இலவச மாற்று மென்பொருள்கள் நமக்குக் கிடைக்கும்! இப்போதே வேர்டா வேண்டவே வேண்டாம் என்று சொல்லி ஓப்பன் ஆபீஸ் பக்கம் பலர் போகத் தொடங்கி விட்டோம். ஆனாலும், இன்னும் சிலருக்கு "அதில் உள்ள எல்லாமுமே தேவையில்லை. இவர்களும் மைக்ரோஸாஃப்ட் போலவே அனாவசியமாக எல்லாவற்றையும் தரவிறக்கி நமது வன்தட்டை நிறைக்கிறார்களே, நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தும் வேர்டு/ அல்லது ரைட்டர் இவற்றை மட்டும் தரலாமே" என்ற வருத்தம் உண்டு. இலவசம்தான், என்றாலும் திறக்க நேரமாகிறதே என்ற குறையும் உண்டு. இதற்கெல்லாம் பதிலாக ஒரு  மென்பொருள் இன்று வலையில் உலவும்போது என் கண்ணில் பட்டது. Devvicky Word என்ற அந்த இலவச மென்பொருள் வெறும் 16 MBயில் MS WORDல் நாம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு வசதி செய்வதுடன், மேலும் பல வசதிகளையும் அளிக்கிறது. அதிலும், நம்மில் பலருக்கு PDF Editor பல நேரங்களில் தேவை. ஆனால் சந்தையில் கிடைப்பவையோ,  காசு கொடுத்து வாங்கினாலும் இலவசமானாலும் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது. இதில் உங்களிடம் இருக்கும் பிடிஎப் கோப்பை நேரடியாகத் திறந்து வேண்டுகின்ற மாற்றங்களைச் செய்து நமக்கு வேண்டுகிற பைல் ஃபார்மட்டில் சேமிக்கவும் முடிகிறது.  www.devvicky.com தளத்திலிருந்து இதை இறக்கிப் பதிந்து உபயோகப் படுத்திப் பாருங்களேன்.
 ஏற்கனவே வந்த சில மென்பொருள்கள் போல் இல்லாமல் இது யுனிகோடையும் ஆதரிப்பதால் இந்திய மொழிகளில் எழுதுவோருக்கும், தமிழில் பாமினி, டாம், டாப், டிஸ்கி எழுத்துருக்களைக் கையாள்வோருக்கும் மிகப் பயன்படும். நான் இன்று தரவிறக்கி சோதித்துப் பார்த்ததில் உடனடியாகப் பண்ணிய வேலை MS Wordஐ uninstall செய்தது. இதுதான் .docx கோப்புகளைக் கூடத் திறக்கிறதே! பின் என்ன கவலை!

சிலருக்கு மட்டுமே புரியலாம்! சிலருக்கு மட்டுமே தேவைப்படலாம்

இது வழக்கமாக எனக்கு வரும் அஞ்சல்களில் ஒன்று. எனக்கு சுத்தமாகப் புரியாத, தேவைப் படாத ஒன்று. ஆனால், யாரோ சிலருக்கு பயன்படலாம். விளக்கப் படங்கள் காண லிங்கில் நுழையலாம்

Use an Ubuntu Live CD to Securely Wipe Your PC’s Hard Drive - How-To Geek
Deleting files or quickly formatting a drive isn’t enough for sensitive personal information. We’ll show you how to get rid of it for good using a Ubuntu Live CD.

sshot-1

When you delete a file in Windows, Ubuntu, or any other operating system, it doesn’t actually destroy the data stored on your hard drive, it just marks that data as “deleted.” If you overwrite it later, then that data is generally unrecoverable, but if the operating system don’t happen to overwrite it, then your data is still stored on your hard drive, recoverable by anyone who has the right software.

By securely delete files or entire hard drives, your data will be gone for good.

Note: Modern hard drives are extremely sophisticated, as are the experts who recover data for a living. There is no guarantee that the methods covered in this article will make your data completely unrecoverable; however, they will make your data unrecoverable to the majority of recovery methods, and all methods that are readily available to the general public.

Shred individual files

Most of the data stored on your hard drive is harmless, and doesn’t reveal anything about you. If there are just a few files that you know you don’t want someone else to see, then the easiest way to get rid of them is a built-in Linux utility called shred.

Open a terminal window by clicking on Applications at the top-left of the screen, then expanding the Accessories menu and clicking on Terminal.

sshot-11

Navigate to the file that you want to delete using cd to change directories and ls to list the files and folders in the current directory.

As an example, we’ve got a file called BankInfo.txt on a Windows NTFS-formatted hard drive.

sshot-15

We want to delete it securely, so we’ll call shred by entering the following in the terminal window:

shred

which is, in our example:

shred BankInfo.txt

sshot-16

Notice that our BankInfo.txt file still exists, even though we’ve shredded it. A quick look at the contents of BankInfo.txt make it obvious that the file has indeed been securely overwritten.

sshot-14

We can use some command-line arguments to make shred delete the file from the hard drive as well. We can also be extra-careful about the shredding process by upping the number of times shred overwrites the original file.

To do this, in the terminal, type in:

shred –remove –iterations=

By default, shred overwrites the file 25 times. We’ll double this, giving us the following command:

shred –remove –iterations=50 BankInfo.txt

sshot-18

BankInfo.txt has now been securely wiped on the physical disk, and also no longer shows up in the directory listing.

Repeat this process for any sensitive files on your hard drive!

Wipe entire hard drives

If you’re disposing of an old hard drive, or giving it to someone else, then you might instead want to wipe your entire hard drive. shred can be invoked on hard drives, but on modern file systems, the shred process may be reversible. We’ll use the program wipe to securely delete all of the data on a hard drive.

Unlike shred, wipe is not included in Ubuntu by default, so we have to install it. Open up the Synaptic Package Manager by clicking on System in the top-left corner of the screen, then expanding the Administration folder and clicking on Synaptic Package Manager.

sshot-2

wipe is part of the Universe repository, which is not enabled by default. We’ll enable it by clicking on Settings > Repositories in the Synaptic Package Manager window.

sshot-3

Check the checkbox next to “Community-maintained Open Source software (universe)”. Click Close.

sshot-4

You’ll need to reload Synaptic’s package list. Click on the Reload button in the main Synaptic Package Manager window.

sshot-5

Once the package list has been reloaded, the text over the search field will change to “Rebuilding search index”.

sshot-6

Wait until it reads “Quick search,” and then type “wipe” into the search field. The wipe package should come up, along with some other packages that perform similar functions.sshot-7

Click on the checkbox to the left of the label “wipe” and select “Mark for Installation”.

sshot-8

Click on the Apply button to start the installation process. Click the Apply button on the Summary window that pops up.

sshot-9

Once the installation is done, click the Close button and close the Synaptic Package Manager window.

sshot-10

Open a terminal window by clicking on Applications in the top-left of the screen, then Accessories > Terminal.

sshot-11

You need to figure our the correct hard drive to wipe. If you wipe the wrong hard drive, that data will not be recoverable, so exercise caution!

In the terminal window, type in:

sudo fdisk -l

A list of your hard drives will show up. A few factors will help you identify the right hard drive. One is the file system, found in the System column of the list – Windows hard drives are usually formatted as NTFS (which shows up as HPFS/NTFS). Another good identifier is the size of the hard drive, which appears after its identifier (highlighted in the following screenshot).

sshot-12

In our case, the hard drive we want to wipe is only around 1 GB large, and is formatted as NTFS. We make a note of the label found under the the Device column heading. If you have multiple partitions on this hard drive, then there will be more than one device in this list.

The wipe developers recommend wiping each partition separately.

To start the wiping process, type the following into the terminal:

sudo wipe

In our case, this is:

sudo wipe /dev/sda1

Again, exercise caution – this is the point of no return!

sshot-13

Your hard drive will be completely wiped. It may take some time to complete, depending on the size of the drive you’re wiping.

Conclusion

If you have sensitive information on your hard drive – and chances are you probably do – then it’s a good idea to securely delete sensitive files before you give away or dispose of your hard drive. The most secure way to delete your data is with a few swings of a hammer, but shred and wipe from a Ubuntu Live CD is a good alternative!

உடன்வருவோர்

லேபிள்கள்

Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (2) 2012 Panguni uthsavam (1) அடைவு அமைக்கும் அற்புதன். (7) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (70) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பலரும் படிக்காத ராமாயணக் கதைகள் (48) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பார்த்த‌சார‌தி (2) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மஹா பாரத வினாவிடை (28) மஹா பாரதம் வினாவிடை (28) மஹாபாரதம் வினாவிடை (26) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) ராமாயண தருமம் (6) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் (25) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)