வியாழன், 22 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

அருத்தப்பிரமகம்
931. பூதாவாசீநீபூமேவி 
         தாதூதேதாகாராநாமே 
         வாதேயோராதூநீராபூ 
         சீதாராமபாதூகாநீ                                    21

IMG_0004

சருப்பதோபத்திரம்
1 932. மாபாபாதூதூபாபாமா 
        பாபூபூபாபாபூபூபா 
        பாபூரிகாகாரீபூபா 
        தூபாகாவாவாகாபாதூ.                                22

image0001
2
933.
பாதாபாபாபாபாதாபா  
        தாதாதாதாதாதாதாதா 
        பாதாபாதாதாபாதாபா 
        பாதாதாதாதாதாதாபா                                    23

image0002
மும்மெய்
934. கோபிக்குமாகோ  
          பாபிக்குமாகும் 
          மாபக்கமாகக் 
          கோபக்கமாகா                                        24

                        ஓர்மெய்
935. தத்தாததத்தா 
         தித்தாதிதித்தா 
         துத்தாதுதுத்தா 
         தொத்தாததொத்தா.                                  25

ஓருயிரோர்மெய்ப்பல்வகைப்பெருஞ்சித்திரம்
936. யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா                    26

பின்னடிமடக்கு
937. ரகுபூபதிபாதுகைமா 
          தகுபூகதிபாதுகைமா 
          நகுகானடபாதுகைமா 
          மகமோ தணிபாதுகைமா.                      27

இரண்டாமடியமீற்றிடியுமுற்றுமடக்கு
 
938. ஆதரப்  பண்ணைபூத் தாடரங் காதி
           நாதனா நாதனா நாதனா நாதனா 
           காதிசே யம்மகங் காத்ததார் நீயலாற் 
           பாதுகாய் பாதுகாய் பாதுகாய் பாதுகாய்.         28

ஈருயிரிருமெய்முற்றுமடக்குமாலைமாற்றுயமகநாலெண்
பதினாறிதழ்ப்பதுமப்பல்வகைப்பெருஞ்சித்திரம்

939. பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா                   29
  

image0003 
image0004
கவிநாமாங்கிதவெண்டளப்பதுமபெந்தம்
940. பூவருள் பொலிவே ருருவன னனவரு பங்கய நயவம்பூ 
          பூவய நனடம் புரியர ரரயரி ணை பணிந் திடவின்பூ 
          பூவிட தினிதின் புயவலி லிலிவய மகமண மேவம்பூ 
         பூவமெ ணணிமணி யரங்கக் கரய நலம்கொள் வொருள் வண்பூ.  30

image0005
image0006

செவ்வாய், 20 அக்டோபர், 2009

BSNL Mobileலிலும் வினாடிக் கணக்கு வந்தாச்சு.


இந்திய தொலைபேசி வரலாற்றில் முதல் முறையாக வினாடிகளில் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி ஒரு பெரிய தாக்கத்தை டோகோமோ நிறுவனம் உருவாக்கியது. மற்ற நெட்வோர்க்குகளிலிருந்து டோகோமோ பயன்படுத்துவோரை எளிதில் அழைக்க முடியாத நிலை உள்ளதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் இதுநாள் வரை தூங்கிக் கொண்டிருந்த பி எஸ் என் எல்லும் போட்டிகளை சந்தித்து இழந்து வரும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பேசுகிற வினாடிகளுக்கு மட்டும் வினாடிக்கு ஒரு பைசா என்று கணக்கிடுவதை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 45 ரூபாய் வவுச்சரை வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் ஏற்றிக் கொள்ள வேண்டும். முழு விவரம் அறிய  http://tamilnadu.bsnl.co.in/Content-Launching%20of%20boosters-151009.pdf

ஆனால் என்ன செய்து என்ன பெரும்பாலான ஊர்களில், குறிப்பாகச் சென்னையில் வீதியில் நின்றால் மட்டுமே கிடைக்கும், வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காது என்ற நிலை இருக்கும்வரை வாடிக்கையாளர்களை எப்படி பி எஸ் என் எல் கவரப் போகிறது?