வியாழன், 3 மே, 2018

அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்


அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமல னின்மல னீதிவானவ னீண்ம திளரங்கத்தம்மான் றிருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
.  (1)

(   1)அமலன்தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து பெருமாளை யணுகுவதால் பெருமாளுக்கு என்ன அவத்யம் விளையுமோவென்று மிகக் கவலை. நம் ஞானத் தெளிவினால் அக்கவலையை நிவர்த்திக்கிறார். பெருமாளுக்கு ஒன்றும் ஹேயமில்லை. எல்லாம் அவருக்கு அனுகூலமே. அவர் உபயலிங்கர். அகிலஹேய ப்ரத்யநீகர். அவர் ஸ்வபாவத்தாலேயே அமலர். யாதொரு மலமும் தன்னைத் தீண்ட முடியாத ஸ்வபாவமுடையவர். அவர் எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக ஓர் விக்ரஹத்தோடு வஸிப்பவர். ततो विजिगुप्सते (ந ததே விஜிகுப்ஸதே) அவர் எவர் நெஞ்சினுள்ளும் நெருங்கி உட்புகுந்து வஸிக்கக் கூசுவதில்லை. இந்த அற்புதமான ஸ்வபாவத்தைத் திரும்பவும் திரும்பவும் நினைந்து பேசுவதும், தம்மால் வரக்கூடிய அவத்யத்திற்குப் பயந்தே. “அமலன்”, “நிமலன்”, “விமலன்”, “நின்மலன்’ “அரங்கத்தமலன்என்று இச்சிறு கிரந்தத்தில் ஐந்து தடவைமலமற்றவன்”, “மலம் நெருங்கக்கூடாத ஸ்வபாவ சக்தியுடையவன்என்கிறார். “வளவேழுலகில்போல் பயந்து உடனே பரிஹரித்துக் கொள்கிறார். பெருமாள் திருமுன் நிற்பதே இவருக்கு ஸங்கோசமாயிருக்கிறது. மிகவும் விரைவாகத் தம் ப்ரபந்தத்தை முடித்துவிட ஆசைப்படுகிறார். பெருமாள் நிர்ப்பந்தத்தை எத்தனை நாழிகைதான் இவர் ஸஹிப்பார்? நீண்டதொரு க்ரந்தம் செய்யத் தெரியாதவரல்லர். ஒரே தசகம் பாடி உடனே மோக்ஷத்தைப் பெறுவதால் அகன்று போவதற்கும் போதில்லை.

2) ஆதி என்று காரணத்வத்தைத் தொடக்கத்திலேயே அனுஸந்தித்துப் பேசுகிறார். சில வித்யைகளில் காரணத்வத்தையும் சேர்த்து அனுஸந்திப்பதில் ருசி. कारणं तु ध्येय: (காரணம் து தயேய:) (அதர்வசிரஸு) என்றபடி த்யானத்திற்கு விஷயமான பொருள் ஆதிகாரணமே. ஆகிலும் காரணத்வத்தை சேர்த்தும் சேர்க்காமலும் உபாஸிக்கலாம். இவர் காரணத்வத்தைச் சேர்த்து உபாஸிப்பதில் ருசியுள்ளவர். உலகத்திற்குக் காரணமாவதில், விகாரம் அசுத்தி ஸம்பந்தம், ஸாவயவத்வம் ஜடத்வம் முதலிய பல தோஷங்கள் வரக்கூடும். அந்த தோஷங்கள் ஒன்றும் வருவதில்லை, ப்ரஹ்மம் காரணமாகவிருந்தும் தன் சுத்தியைக் கொஞ்சமேனும் விடுவதில்லை, அசுத்தியென்பது தீண்டுவதேயில்லை என்று சோதக வாக்கியங்கள் நமக்குத் தெளிவிக்கின்றன. காரணத்வத்தைஆதிஎன்று சொல்லுவதற்கு முன்பே, இவர்அமலன்என்று அசுத்தி ப்ரஸங்கத்தை வாரணம் செய்கிறார். ஸத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்கள் ஸர்வ வித்யைகளிலும் உபாஸ்யம். இந்த குணங்களின் அறிவில்லாமல் ப்ரஹ்மத்தின் அறிவே சித்திக்காது. सत्यं ज्ञानमनन्तं भ्रह्म (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி) அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம், அதீர்க்கம்” (ப்ருஹதாரண்யகம்அக்ஷரவித்யை), “அசப்தமஸ்பர்சம்” (கடவல்லி),  முதலிய சோதக வாக்யங்கள்அமலன்என்பதால் தொடக்கத்திலேயே ஸூசிக்கப் படுகிற அழகு மிக ரஸிக்கத் தக்கது. தைத்திரீயத்திலும் . सत्यं ज्ञानमनन्तं भ्रह्म (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம)(ஆனந்தவல்லி) என்று முதலில் சோதக வாக்கியத்தைப் படித்து, பிறகு लस्माद्वा एतस्मादात्मन आकाशस्स्संभूत: आकाशद्वायु” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசத்வாயு:) என்று காரண வாக்யத்தைப் படித்தது. आनन्दादय: प्रधानस्य (ஆனந்தாதய: ப்ரதானஸ்ய) என்ற ஸூத்திரத்தில் ஆநந்தத்வம், ஸத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம் என்ற குணங்களை எல்லா வத்யாநிஷ்டரும் உபாஸித்தே தீரவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இங்கேஅமலன்என்றது அந்த நாலுக்கும் உபலக்ஷணம். நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யம். ஆகையால் அதை முதலில் பேசி மற்ற நான்கையும் உபலக்ஷண முறையாக ஸூசிக்கிறார். இங்கே ஸூசிக்கும் ஆனந்தத்வத்தைஎன் அமுதினைஎன்று முடிவில் ஸ்பஷ்டமாகக் கூறுகிறார். ஆனந்தத்தோடு முடிக்கிறார். एतं आनन्दमयमात्मानानं उपसंक्रम्य (ஏதம் ஆனந்தமயமாத்மாநம் உபஸம்க்ரம்ய) என்றபடிக்கு यत्र नान्यत्पश्यति (யத்ர நாந்யத் பஸ்யதி) என்று நிரதிசய ஸுகத்தையும் விளக்கும் பூமவித்யைப் படிக்கும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத, அதீதமான ஆனந்த ப்ரஹ்ம ப்ராப்தியோடு முடித்துத் தாமும் பேரின்ப முடிவு பெற்றார்.