சனி, 4 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

                    விருத்தம்

ஆனந்ததீர்த்தியரொருவர்தம்பேர்
      அக்ஷோப்யமுனியென்பார்கலைகள்வல்ல
தானந்தவித்யாரணியர்தர்க்கித்துத்
        தத்வமஸிவாக்கியத்திற்கக்ஷியேற
ஏனந்தம்வேங்கடேசதேசிகன்ற
        மியமெதுவோவதுவேசித்தாந்தமாமென்
றேநினைந்தங்கிருவர்கக்ஷிகளையுமோலை
        தீட்டினாரிங்குவரக்காட்டினாரே.

                 வெண்பா

அக்ஷோப் பியமுநியா  மானந்த  தீர்த்தீயர்
பக்ஷந் திருவுள்ளம் பற்றியே  --  தக்ஷணமே
சிக்ஷித்தே  யவ்வித்தியாரணிய  ரைமடக்குங்
கக்ஷி யொருசுலோ  கம்.

        தரு-இராகம்-தோடி-தாளம்-ஆதி

                          பல்லவி

ஆரியரெங்கள்வேதாந்தா   சாரியர்போலே - சித்
தாந்தமார்செய்வார்               பார்மேலே.

                        அனுபல்லவி

வாரிஜாக்ஷமுகுந்தர் -- பேரிசைந்துகொண்டவ
தாரமதுவனந்த --  சூரியபிள்ளையாய்வந்த                    (ஆரி)

                     சரணங்கள்

தத்வமஸியாகிய           வஸியாலே -- இந்தத்
     தாரணியிலக்ஷோப்பிய      முனியுமேலே
வித்யாரண்யரையாரண்        யம்போலே  -- கண்டு
       வீசினாரென்றாரே         விளங்குவதர்நூலே             (ஆரி)
பரமதநிரஸக              ரிவராமே  --  இந்தப்
       பாரிற்சுமதத்தா           பனராமே
பெரியதிருவடி                மந்த்ரமாமேன் ---- மையில்
     பிரபலர்சந்நிதிகண்டால்    வினையெல்லாந்தீர்ந்துபோமே   (ஆரி)
கவிதார்க்கிகேஸரியெனும்         பேரர் ---- எங்கள்
       கமலநயநருக்கேதிருப்             பேரர்
புவியிற்புகழுந் தூப்புலெனு         மூரர் ----  தொண்டர்
     புண்ணியஸ்வரூபமாகவந்தாண்டாவ       தாரர்        (ஆரி)

                  விருத்தம்

வித்தியாரணியர்கக்ஷிதமக்குமங்கே
       மேலாகவக்ஷோப்பியமுனியென்றேதான்
ஸித்தாந்தஞ்செய்தனுப்பியிருந்தாரந்நாள்
        தென்னாடும்   வடநாடுந்தொழவே நின்ற
பத்திசேர்   திருவரங்கப்பதியிலுள்ள
        பண்புகண்டு   சகியாமற்   சகலசாஸ்த்ர
வித்தாகவிருக்கும்  பண்டிதனோர்வாது
         விளைத்திட்டானங்கு  வந்து  முளைத்திட்டானே.

                   இதுவுமது

நேரிட்டேனெனைச் செயித்துத் தரிசனத்தை
         நிலைநிறுத்திக்கொள்வீர்களென்றானங்கே
பேரிட்டெ  தரிசனத்தெவருங்கூடிப்
        பேசிவிசாரித்திங்கே  யெவருங்காணொ
மாரிட்டேயிவனைவெல்வோம்பண்டைநாட்பே
         ரருளாளர்சந்நிதியினின்றுவந்து
சீரிட்டவெம்பெருமானாரைப்போலுஞ்
        சிங்கந்தான்   கவிவாதிசிங்கந்தானே.

                          தொடரும்.

ஞாயிறு, 29 ஜூலை, 2007

புல்லாணி மாலை

 

திருப்புல்லாணி
பத்மாசனித் தாயார்

பாவை யர்க்கர சான பழம்பொருள்

தேவை யற்புத மாலைத் தினம்புணர்

பூவையைத் திருப் புல்லையிற் பொன்னியைச்

சேவை பெற்றிடத் தீவினை இல்லையே.

இல்லை இல் லையெனாம லிகபரத்
தொல்லை நீக்கித் துணை செய்குவா டிருப்
புல்லை நாயகி பூவடி போற்றினால்
தொல்லை யாளவுஞ் செய்வள் கதிக்கவே.

கதித்தன மேவு கடற் கரைப் புல்லையம்
பதித்த லம்புகல் பன்மணிக் கோயிலை
மதித்த லம்புயத் தாளை வணங்குதல்
துதித்த லம்புவித் தூயவர் செய்கையே.

செய்கை யாலுந் திறங்களி னாலின
வைகை பாயும் வளமுள சக்கரப்
பொய்கை சூழ்திருப் புல்லையி னாயகி
கைகை மேற்பலன் காட்டித் தருவளே.

திருவ னந்தனை யாள்வர் கடண்மலர்
மருவ னந்தனை யூர்மன்ன னாகிய
பருவ னந்தனைச் சேர்புல்லைப் பைங்கிளி
திருவ னந்தனைச் சேவித்த பேர்களே.

பேரி லங்கும் பெரியவள் புல்லைமால்
மாரி யங்கும் பருமுலைச் சிற்றிடைத்
தூரி யங்கொண் டெழுதவொண் ணாத்துய்ய
நாரி யெங்கள் நயனத் திருப்பளே.

திருப்புல் லாணித் திருமகள் சீரடி
விருப்பு ளோர்கள் வினைதவிர்ந் தேயன
நெருப்பு னீர் விண்ணின் மாருதத்தால் வருங்
கருப்பு காமற் கதிகொடுத் தாள்வளே.

ஆள வந்தவள் புல்லையி னாயகி
தாள லர்ந்த சரோருகத் தன்னிலெந்
நாள டங்கலும் நண்ணித் தொழாய்நெஞ்சே
கோளடங்கும் வெங்கூற்று  மடங்குமே.