சனி, 18 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் -- டிப்பணி 2

நேற்று வெளியிட்ட டிப்பணி ஒரு சோதனைக்காக -- க்ரந்த லிபியில் வெளியிட்டால் சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தால் --  இடப்பட்டது.  ஆனால்  பலரிடமிருந்து அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடியேனைத் திருத்திப் பணி கொள்ள மாறன் சுடராழி க்ருபை ஆகிய மூவரும் தயாராய் அப்பொழுதுக்கப்பொழுது பிழைகளையெல்லாம் சரி செய்து உதவும்போது, அடியேன் இனி தயக்கமில்லாமல் தொடர்ந்து டிப்பணியை இங்கு இடுவேன்.  இனி டிப்பணி மீண்டும் முதலிலிருந்து


ப்ரபந்தானுஸந்தான க்ரம டிப்பணி

1.  ஸர்வதேஶ தஶா காலேஷு அவ்யாஹத ப்ராக்ரமா  என்றது ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் நித்யமாகச்  செல்லுகிற  பராக்ரமத்தையுடைய  என்றபடி. ‘ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா’ என்றது இப்படித்  திருவத்யயனோத்ஸவ பக்த  விக்ரஹ ப்ரதிஷ்டாதிகளைக்  கோயில் முதலான  திவ்ய தேஶங்களில் செய்யும்படி நியமித்தருளின எம்பெருமானாருடைய  திவ்யாஜ்ஞை என்றபடி. ’வர்த்ததாம்  அபிவர்த்ததாம்’ என்றது ஸர்வ தேஶங்களிலும் நித்யமாக அபிவ்ருத்தி அடையக்கடவது என்றபடி.

வாழித்திருநாமத்திற்கு இங்கு ப்ரசுரிக்கப்படும் வ்யாக்யானம் ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யர் அருளிச் செய்தது.

’ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி  வாஸர முஜ்வலா திகந்த வ்யாபிநீபூயாத்’ என்றது எம்பெருமானாருடைய திவ்யாஜ்ஞையானது ப்ரதி தினம் அபிவ்ருத்தையாய்க் கொண்டு திகந்தங்களிலும் செல்லக்கடவது என்றபடி. ’ஸா ஹி லோக ஹிதைஷிணி’  என்றது விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே சதையுடலம் நால் வகையும் சரணளிப்பான் எனத் தவிழ்ந்து பதவி அறியாதே பழம் பாழில் உழலுகிற ஜனங்களுக்கும் அந்தத் திவ்யாஜ்ஞையே திவ்ய தேஶ திவ்ய ப்ரபந்த நிர்வாஹாதிகளால் தத்வ ஹித புருஷார்த்தங்களைத்  தெளியும்படி செய்து ஹிதத்தைப் பண்ண வேணும் என்ற இச்சையையுடையது  என்றபடி.

’ஸ்ரீமந் ஸ்ரீரங்க ‘  என்றது பிரிவற்ற சேர்த்தியையுடைய பெரிய பிராட்டியையுடையவரே! ஆகையினால் நித்ய ஸ்ரீயான அழகிய மணவாளனே! என்றபடி. ஶ்ரியம்” என்றது இப்படிக்கொத்த  ஸ்ரீவைஷ்ணவ  ஸம்ருத்தி ரூபமான ஸம்பத்தை என்றபடி. ”அனுபத்ரவாம்’ என்றது அநீஸ்வர அத்வைதாதி  வாதிகளாலும் துர்ஜ்ஜனாதிகாரிகளாலும்  உண்டாகிற  உபத்திரவம்  நமக்குப் பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தில் கலசாதே  இருக்கும் படியாக என்றபடி.  ’அனுதினம் ஸம்வர்த்தய’ என்றது ’தொக்க அமரர்கள்   குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்’ என்னும்படி முளைத்த கொடி விளாக்கொண்டு படருமாப்போலே இஸ்ஸம்ருத்தியும் நித்யாபிவ்ருத்தமாம்படி பண்ணியருள வேண்டும் என்றபடி. அன்றிக்கே ‘ஸ்ரீமந்’ என்று ஸம்போதித்து ’ஸ்ரீரங்க ஶ்ரியம்’  என்று அந்வயிக்கவுமாம்.  அப்பொழுது অত্র্রৈৱ শ্রীরঙ্গেসুখমাস্ৱ  (அத்ரைவ ஶ்ரீரங்கே ஸுகமாஸ்வ)’ என்கிற இடத்தில்போலே ஸ்ரீரங்க ஶப்தம் பகவத் பாகவத அதிஷ்டித திவ்ய தேஶ ஸாமாந்ய வாசகமாய் அந்த ஸம்பத்தின் ஆனுஷங்கிகமாய் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தையும் சொல்ல வேண்டும். இவ்விரண்டு யோஜனைகளையும்  நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வர்கள்.  

    வேதாந்தார்த்த ப்ரதாயிநே’ என்றது திருமந்திர  மந்திரார்த்த  பாஷ்ய பகவத் விஷயாதி ஸர்வோபதேஷ்டாவான  என்றபடி. ’ஆத்ரேய பத்மனாபார்யஸுதாய’ என்றது கிடாம்பி ஸ்ரீரங்க ராஜருடைய குமாரரான  என்றபடி. ’குணஶாலிநே’  என்றது  ஸத்குண பூர்ணரான  என்றபடி. ’ராமானுஜார்யாய’ என்றது அப்பிள்ளார்  பொருட்டு  என்றபடி. ’நம:’  என்றது இவ்விபவம்  எல்லாம் அவர்  கடாக்ஷத்தால்  வந்ததாகையினால்     அவரையே ஶரணம் அடைகிறேன்  என்றபடி.  ‘யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்  எங்கள் வார்த்தையுள் மன்னியதே’ என்னக் கடவதிறே.  (இங்கு  ইতি যতিরাজ মহানস পরিমৰ পরিৱাহ ৱাসিতাম্  ৱিবত’ என்றதையும்  ‘கிடாம்பிக் குலபதி அப்பிளார்  தம் தேமலர்  சேவடி சேர்ந்து    பணிந்தவர்  தம்மருளால்    நாவலரும்  தென்வடமொழி  நற்பொருள்  பெற்ற  நம்பி ‘  இத்யாதிகளையும்  அனுஸந்திப்பது.)



      ’இராமானுசப் பிள்ளான்  மா  தகவால்  வாழு  மணி  நிகமாந்த  குரு வாழி’  என்றது  அப்பிள்ளார்  பரம  க்ருபையாலே  அபிவ்ருத்தரான  ஸர்வாலங்கார பூதரான  நிகமாந்த  மஹா தேஶிகன்  ஜயஶீலராகக் கடவது  என்றபடி.  அன்றிக்கே  ’இராமானுசன்’   எம்பெருமானாராய், ’பிள்ளான்’  திருக்குருகைப்  பிரான் பிள்ளானாய், அவர்களுடைய  பரம க்ருபையாலே  என்னவுமாம்.  [தர்ஶந  ப்ரவர்த்தகர்  என்கிற  ஏற்றம்  பெற்றவரும்,  பெரிய  முதலியாருடைய  திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம்  அருளிச்  செய்தவருமான  எம்பெருமானாருடையவும் பகவத் விஷய  ப்ரவர்த்தகரான   திருக்குருகைப்  பிரான்  பிள்ளானுடையவுமான  க்ருபையினால்  வாழ்ந்தபடியினாலேயிறே  உபய வேதாந்தாசார்யர்   என்பது  இவர் ஒருவரிடமே  அந்வர்த்தமாய்  நின்றது.  இத்தால்  ஸத்பாத்திரத்தில்  வினியோகிக்கும்படி  ஆச்சான்  பிள்ளானுக்கு  நியமித்தருளின  எம்பெருமானார்  சரமோபதேஶம்  சொல்லித்தாய்த்து.  ’அவன்  மாறன்  மறையும்  இராமானுசன்  பாஷியமும்  தேறும்படி  உரைக்கும்  சீர் வாழி’  என்றது   நாத முனிகளுக்கு  அருளிச் செய்கையாலே  நாலாயிரமும்,  மாறன் மறையாய்  அதில் நூற்றந்தாதி  சேர்ந்ததாகையினால் அந்நாலாயிரங்களையும்  ’இராமானுசன்  பாஷியம்’  என்றதால்  ஸ்ரீ  பாஷ்யாதி  ஆசார்ய  ஸமஸ்த  திவ்ய ஸூக்திகளையும்  உபலக்ஷித்து  உபய வேதாந்தார்த்தங்களும்  இவ்வுலகத்தில்  பெருமை பெறும்படி  அவைகளை ஸார்த்தமாக  உபதேஶித்தருள்கிற  அந்தத் தேஶிகனுடைய  சீர்மை  ஜயஶீலமாகக் கடவது  என்றபடி.  [இத்தால்  தங்களை  எம்பெருமானாருடைய  திருவடி  ஸம்பந்திகள்  என்று  சொல்லிக்கொண்டு  ভাষ্য௦  তু পররঞ্জন௦  (பாஷ்யம் துரரஞ்ஜனம்) என்றிவை  முதலிவைகளிற்படியே ஸ்ரீபாஷ்யம்  பர ரஞ்ஜனார்த்தம் என்றும்,,  ஸ்ரீ கீதா பாஷ்யம்  வேண்டாச்சுமை  எடுப்பிக்கைக்காகவும்  என்றும்,  ஸர்வேஶ்வரன்  அவதரித்தாப் போலே  திருவவதாரம்  செய்தருளிய ஆழ்வாரை  நித்ய  ஸம்ஸாரி  என்றும் சொல்லுமவர்கள்  ஆழ்வார் எம்பெருமானாருடைய  பெருமையை  வெளியிடுமவர் களன்று   என்பது  தெரிவிக்கப் பட்டதாகிறது.  ஸ்வாமி  தேஶிகன்  ஒருவரேயிறே  உபய வேதாந்தார்த்தங்களும்  ஒரே அர்த்தத்தை  வெளியிடும்  ப்ரகாரத்தை    দেৱ: শ্রীমান শ্ৱশিডে:করণমিতি ৱদন্নেকমর্থ௦ ,  স্ৱপ্রাপ্তে স্সাধন௦ চ  স্ৱযনিতি হি পর௦ ব্রহ্ম তত্রাপি চিত্যে௦  இத்யாதிகளிலே  நிரூபித்து, அவற்றில் சித்த ரஞ்ஜனத்தோடே ஸர்வரையும்  எளிதாகத் தெளிவிக்கும்  ஏற்றம்  முதலியவைகளைக் கடாக்ஷித்து  த்ரமிட  வேதங்கள்  ஸம்ஸ்க்ருத  வேதங்களை விட  உத்க்ருஷ்டங்கள்  என்பதை  শ্রুতি পরিষদি তস্যা௦ সளরভ௦ যোজযন্তি ” শ্রুতীনা௦ ৱিশ্রমাযাল௦ শঠারি௦ ‘ প্রাচীনানা௦ শ্রুতি পরিষদা௦ পাদুকে পূর্ৱগণ্যা’ என்றிவை  முதலியவைகளில்  அருளிச் செய்தது என்றபடி  ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில்  இவ்வர்த்தங்கள்  ஸத்ஸம்ப்ரதாயத்தோடே ஸ்ரீபாஷ்யத்தைச் சிர  பரிச்சயம்  பண்ணின  ப்ராஜ்ஞர்களுக்கல்லது  நிலமாகாது  என்றது  இங்கு அனுஸந்தேயம்]



         இவ்வர்த்தத்தையே  விவரிக்கிறார்.  – “வஞ்சப் பல சமயம்”  இத்யாதி.  வஞ்சப் பல சமயம் மாற்ற வந்தோன்  என்றது வஞ்சகங்களான  பஹு ஸமயங்களை  மாற்றுகைக்காக  வந்தவர்  என்றபடி.  மன்னு புகழ்ப்  பூதூரான்  மனமுகப்போன்  என்றது  அவர் ஸித்தாந்தத்தை  வளர்க்கையாலே  ‘தேசமெல்லா முகந்திடவே  பெரும்பூதூரில்’  என்னும்படி  ஸ்திர கீர்த்திகளையுடைய  ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த  எம்பெருமா னாருடைய  திருவுள்ளத்தை  உகப்பிக்குமவர்  என்றபடி.  கஞ்சத்திருமங்கை உகக்க  வந்தோன்   என்றது  இராமானுஜன்  ஶ்ரிய:பதியின்  வைபவத்தைப்  பரக்க  வெளியிட்டாப்போலே  ராமானுஜ தயா பாத்ரரும்  ஸ்ரீயின்  வைபவத்தைப் பரக்க  வெளியிட்டாராகையால்  பத்ம வாஸினியாய்  நாரீணாம்  உத்தமையுமான  பெரிய பிராட்டியார்  உகக்கும்படி  வந்தவர்  என்றபடி.  கலியனுரை  குடி கொண்ட கருத்துடையோன்  என்றது கலியன் உரையான நமஶ் ஶப்தார்த்தமான  திருமொழி, ஶரணாகதி ப்ரதிபாதகமாகையினால் அத்திருமொழி ப்ரதிபாத்யமான ந்யாஸ  வித்யையில்  குடி கொண்ட  நெஞ்சினரானவர்  என்றபடி.  செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன்   என்றது  செஞ்சொல்லான  தமிழ் மறைகளை  அபாதிதமாகத்  தாம்  தெளிந்து  மற்றவர்களும்  தெளியும்படி  அருளிச் செய்யுமவர்  என்றபடி  শঠচিট্কলিধ্ৱ௦সিমুখ্যোদিতানা௦| অৱিচ্ছিন্নসত্স௦প্রদাযার্ধৱেদি গুরুর্ৱেঙ্কটেশ: என்னக் கடவதிறே.  திருமலைமால் திருமணியாய்ச்  சிறக்க வந்தோன்   என்றது  திருமலையில்  நின்ற  திருவேங்கடமுடையானுடைய  திருமணியாழ்வார்  அவதாரமாய்  இவ்வுலகு  சிறந்து  வாழும்படி  வந்தவர்  என்றபடி..  ঘণ্টাহরে স্সমজনিষ্ট যদাত্মনেতি என்னக் கடவதிறே.  ............................. (தொடரும்)





















    

          







           

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் --- டிப்பணி


ப்ரபந்தானுஸந்தான க்ரம டிப்பணி
1.  ஸர்வதேஶ தஶா காலேஷு அவ்யாஹந ப்ராக்ரமா  என்றது ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் நித்யமாகச்  செல்லுகிற  பராக்ரமத்தையுடைய  என்றபடி. ‘ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா’ என்றது இப்படித்  திருவத்யயனோத்ஸவ பக்த  விக்ரஹ ப்ரதிஷ்டாதிகளைக்  கோயில் முதலான  திவ்ய தேஶங்களில் செய்யும்படி நியமித்தருளின எம்பெருமானாருடைய  திவ்யாஜ்ஞை என்றபடி. ’வர்த்ததாம்  அபிவர்த்ததாம்’ என்றது ஸர்வ தேஶங்களிலும் நித்யமாக அபிவ்ருத்தி அடையக்கடவது என்றபடி.
வாழித்திருநாமத்திற்கு இங்கு ப்ரசுரிக்கப்படும் வ்யாக்யானம் ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யர் அருளிச் செய்தது.
’ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி  வாஸர முஜ்வலா திகந்த வ்யாபிநீபூயாத்’ என்றது எம்பெருமானாருடைய திவ்யாஜ்ஞையானது ப்ரதி தினம் அபிவ்ருத்தையாய்க் கொண்டு திகந்தங்களிலும் செல்லக்கடவது என்றபடி. ’ஸா ஹி லோக ஹிதைஷிணி’  என்றது விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே சதையுடலம் நால் வகையும் சரணளிப்பான் எனத் தவிழ்ந்து பதவி அறியாதே பழம் பாழில் உழலுகிற ஜனங்களுக்கும் அந்தத் திவ்யாஜ்ஞையே திவ்ய தேஶ திவ்ய ப்ரபந்த நிர்வாஹாதிகளால் தத்வ ஹித புருஷார்த்தங்களைத்  தெளியும்படி செய்து ஹிதத்தைப் பண்ண வேணும் என்ற இச்சையையுடையது  என்றபடி.
’ஸ்ரீமந் ஸ்ரீரங்க ‘  என்றது பிரிவற்ற சேர்த்தியையுடைய பெரிய பிராட்டியையுடையவரே! ஆகையினால் நித்ய ஸ்ரீயான அழகிய மணவாளனே! என்றபடி. ஶ்ரியம்” என்றது இப்படிக்கொத்த  ஸ்ரீவைஷ்ணவ  ஸம்ருத்தி ரூபமான ஸம்பத்தை என்றபடி. ”அனுபத்ரவாம்’ என்றது அநீஸ்வர அத்வைதாதி  வாதிகளாலும் துர்ஜ்ஜனாதி காரிகளாலும்  உண்டாகிற  உபத்திரவம்  நமக்குப் பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தில் கலசாதே  இருக்கும் படியாக என்றபடி.  ’அனுதினம் ஸம்வர்த்தய’ என்றது ’தொக்க அமரர்கள்   குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்’ என்னும்படி முளைத்த கொடி விளாக்கொண்டு படருமாப்போலே இஸ்ஸம்ருத்தியும் நித்யாபிவ்ருத்தமாம்படி பண்ணியருள வேண்டும் என்றபடி. அன்றிக்கே ‘ஸ்ரீமந்’ என்று ஸம்போதித்து ’ஸ்ரீரங்க ஶ்ரியம்’  என்று அந்வயிக்கவுமாம்.  அப்பொழுது অত্র্রৈৱ শ্রীরঙ্ক সুখমাস্ৱ  (அத்ரைவ ஶ்ரீரங்க ஸுகமாஸ்வ)’ என்கிற இடத்தில்போலே ஸ்ரீரங்க ஶப்தம் பகவத் பாகவத அதிஷ்டித திவ்ய தேஶ ஸாமாந்ய வாசகமாய் அந்த சம்பத்தின் ஆனுஷங்கிகமாய் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தையும் சொல்ல வேண்டும். இவ்விரண்டு யோஜனைகளையும்  நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வர்கள்.  
           

வெள்ளி, 17 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 4 --- இறுதிப் பகுதி.


 நம் தேஶிகன் திருநாட்டுக்கு எழுந்தருளின பின்பு ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் முதலான முதலிகளோடே நைனாராசார்யர் திவ்ய தேஶ மங்களா ஶாஸனமும் திக் விஜயமும் செய்தருளி, கோயிலேற எழுந்தருளி, ஒரு புரட்டாசித் திருவோணத் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதி முன்பே அர்ச்சையாக எழுந்தருளியிருக்கிற நம் தேஶிகனுக்கு திருமாலை பரியட்டம் முதலானதுகளை அழகிய மணவாளர் ப்ரஸாதித்தருளின போது ப்ரபந்தானுஸந்தானம் முடிந்தவாறே அத்திருவோலக்கப் பெருமையைக் கண்டு அத்தலைக்கு மங்களாஶாஸனமாய்,



வாழி அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்

வாழி அவன் பாதாரவிந்த மலர் – வாழி அவன்

கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்

தீதிலா நல்லோர் திரள்

என்கிற பாட்டை ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் விண்ணப்பம் செய்ய, நைனாராசார்யரும் திருநக்ஷத்திரத் திருநாள் பெருமையை

வாதாசனவரரிவரென வரு மா பாஷியம் வகை பெறு நாள்

வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசி அறிந்திடு நாள்

பேதாபேதம் பிரமமெனா வகை பிரமம் தெளிவித்திடு நாள்

பேச்சொன்றுக்குச் சத தூஷணியைப் பேசிய தேசிய [க] நாள்

தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்

திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்

ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள்

உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனு நாளே.

என்கிற பாட்டால்  அருளிச் செய்ய, அத்தைக் கேட்ட வெண்ணைக் கூத்த ஜீயரும் அப்படியே

செங்கமலத்தயனன்னவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்

சீர் கொளிராமானுசவெனு மந்திரம் பதிகளில் வாழ்ந்திடு நாள்

செங்கயல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு நாள்

சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடு நாள்

தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடு நாள்

சீர் மதி யாகம மௌலிதந் தேசிகர் பிறந்து வளர்ந்திடு நாள்

பங்கய மாமலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்

பார் புகழ் பாத்திரபதத் திருவோணமெனும் திருநன்னாளே

என்கிற பாட்டை அருளிச் செய்தார். அங்குள்ள பெரியோர்கள் இம்மூன்று பாட்டுக்களையும் வாழித் திருநாமத்தின் முடிவில் அனுஸந்திக்கும்படி ப்ரார்த்திக்க, நைனாராசார்யரும் திருநக்ஷத்திரத் திருநாளில்  இம்மூன்று பாட்டுக்களையும் முடிவில் அனுஸந்திக்கும்படி நியமித்தருளினார்.

        பின்பு ப்ரும்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயருடனே திக் விஜயமும் அந்தந்த திவ்ய தேஶங்களில் ஸ்ரீதேஶிகனுடைய திவ்யார்ச்சா ப்ரதிஷ்டையும் செய்துகொண்டு தஞ்சை மா நகரில் எழுந்தருளியிருக்கும்பொழுது அங்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருக்கார்த்திகைக்குப் பின்பும் திருவத்யயனோத்ஸவம் முடிவதற்கு முன்பும் அதாவது அனத்யயனம்  எனப்படும் காலத்தில் திருநாட்டுக்கு எழுந்தருள, அது குறித்து என் செய்யக் கடவது என்று அந்த திவ்ய தேஶத்து எம்பெருமானான நீலமேகப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த நைனாராசார்யரிடம் விண்ணப்பம் செய்ய , அந்த எம்பெருமான் நியமனத்தாலும் அங்குள்ளார் ப்ரார்த்தனையினாலும் நாலாயிர திவ்ய ப்ரபந்த தனியன்களை முதலில் அனுஸந்தித்து, பிறகு ஸ்ரீ தேஶிகன் விஷயமாகப் பிள்ளை லோகாசார்யர் அனுஸந்தித்த

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்

பாரொன்றச் சொன்ன  பழமொழியுள் --  ஓரொன்று

தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு

வானேறப்  போமளவும் வாழ்வு

என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு, திவ்ய ப்ரபந்தத்திலுள்ள இருபத்தி நாலு ப்ரபந்தங்களுக்கு ஸத்ருஶமாயிருக்கிற ஸ்ரீ தேஶிக ப்ரபந்தங்கள் இருபத்தி நான்கையும் அனுஸந்தித்து, முன்பு ஸ்ரீமந் நாத முனிகள் ஆழ்வார் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பை முதலாயிரத்தின் முடிவில் சேர்த்தாப் போலே ஸ்வாமி தேஶிகன் விஷயமான  பிள்ளையந்தாதியை  ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்துடன் சேர்த்து, இதைக் கொண்டு இயல் ஸேவையை நடத்தி, முடிவில் “பொய்கை முனி பூதத்தார்” என்றா ரம்பிக்கும்  பாசுரம் முதலாக ‘ஆளும் அடைக்கலம்’ என்னுமளவாக உள்ள ஏழு பாசுரங்களையும், ’விண்ணவர்  வேண்டி’ என்கிற பாசுரத்தையும் ஸேவித்து முடித்து, இதற்கு இயல் சாற்று என்று திருநாமம் என்று நியமித்தருளினார். ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தில் அதிகார ஸங்க்ரஹம், ப்ரபந்தஸாரம், பிள்ளையந்தாதி இவைகள் ஒவ்வொன்றிலும் கடைசி இரண்டு பாட்டுக்களையும் சாற்றுமுறைப் பாட்டுக்கள் என்று நியமித்தார்.

      பிறகு ப்ரதி ஸம்வத்ஸரம் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் ஸ்ரீ தேஶிகனுக்கு அருளுப்பாடிட்டருளி, ஸ்ரீ தேஶிக ப்ரபந்தங்களை  முழுமையும் ஸேவித்து சாற்றுமுறை செய்யும்படிக்கும், அதற்குப் பிறகு பெரிய பிராட்டியார் ஸந்நிதியில் தினம் ஒரு பத்தாக திருவாய்மொழியை ஸேவித்து சாற்றுமுறை செய்யவேண்டும் என்றும் நியமித்தருளினார். இதற்கு சிறிய திருவத்யயனோத்ஸவம் என்று திருநாமம். இது முடியும் வரையிலும் அனத்யயன  நியமமுண்டு. சில திவ்ய தேஶங்களில்  தை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் வரையில் அனத்யயனம் கொண்டாடுகிறார்கள். சில திவ்ய தேஶங்களில் தை மாதப் பிறப்போ சிறிய திருவத்யயனோத்ஸவத்தின் முடிவோ இவற்றில் எது பின்னால் வருகிறதோ அது வரையில் அனத்யயன நியமம் கொண்டாடுகிறார்கள். நாலாயிர ப்ரபந்தானுஸந்தானம் செய்யும் ஸந்தர்ப்பங்களில் ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தையும் ஸேவித்து, நாலாயிர ப்ரபந்தத்தைச் சாற்றுமுறை செய்து, ‘அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே’ என்றனுஸந்தித்த பிறகு ஸ்ரீதேஶிக ப்ரபந்தத்தை சாற்றுமுறை செய்து, பிறகு வாழித் திருநாமத்தை ஸேவிக்க வேண்டும் என்று நியமித்தருளினார். அனத்யயன காலங்களில் கீழ் நிரூபித்தபடியே நடத்த வேண்டும் என்றும், ஆழ்வார்கள் திருநக்ஷத்திர தினங்களில் ப்ரபந்தானு ஸந்தானத்திற்குப் பிறகு ப்ரபந்தஸாரத்திலுள்ள அந்தந்த ஆழ்வார் விஷயமான பாசுரங்களை ஸேவிக்க வேண்டும் என்று நியமித்தருளினார்.
       எந்நாளும் காலையிலும் மாலையிலும் ப்ரபந்தஸாரத்தையும், பிள்ளை யந்தாதியையும் அனுஸந்திக்க வேண்டும் என்றும், அனத்யயன காலத்தில் மட்டும் சீர்பாடல் வரும்பொழுது ‘ராமானுஜ தயாபாத்ரம்’ என்று துடங்கி பொதுத் தனியன்களை அனுஸந்தித்து, ஆண்டாள் விஷயமான ‘ அல்லி நாள் தாமரை மேல்’ என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு யதா க்ரமம் ஸம்பந்திகளின் சீர் பாடுகிறது என்றும், ஸ்ரீசூர்ண பரிபாலனத்தில் திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருவாய்மொழி, நூற்றந்தாதி, இவைகளின் தனியன்களை ஸேவித்து, ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தில் ஸ்ரீபரமபத ஸோபானத்தையும், பிள்ளையந்தாதியையும் ஸேவிக்கும்படி நியமித்தார். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் திருமாளிகைகளில் திவ்ய ப்ரபந்தானுஸந்தானம் செய்யும் காலங்களில் ஆழ்வார், எம்பெருமானார் ஸ்ரீதேஶிகன் இவர்களுக்கு ஸம்பாவனை பண்ண வேண்டும் என்றும், சீர் பாடலில் ஆண்டாள் விஷயமாகிய ‘ வாரணமாயிரம்’ என்னும் திருமொழியை சாற்றுமுறை செய்யும் பொழுது ஆண்டாள் ஸம்பாவனையும், பின்பு பெருமாள், பிராட்டியார் ஆழ்வார், எம்பெருமானார்  ஸ்ரீதேஶிகன் இவர்களுடைய ஸம்பாவனையும் செய்ய வேண்டும். இயல் ஸேவை பண்ணும்பொழுது நூற்றந்தாதியில் எம்பெருமானார் ஸம்பாவனை யும், பிள்ளையந்தாதியில் ஸ்ரீதேஶிகன் ஸம்பாவனையும் செய்ய வேண்டும். ப்ரபந்தங்களைச் சாற்றும்பொழுது ஆழ்வார் எம்பெருமானார் ஸ்ரீ தேஶிகன் இவர்கள் ஸம்பாவனையைச் செய்து பிறகு அவரவர்கள் ஆசார்யர்களுக்கு ஸம்பாவனையும் செய்ய வேண்டும்.  

வியாழன், 16 ஜூன், 2011

Re: downloading Natteri swami's upanyaasams

adiyen receive many mails expressing difficulties in listening to Natteri swamy's tele-upanyasams from Esnips folders.
As an alternative adiyen has given one more link here. Kindly verify whether it is easy and if so leave your comments below.


ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 3


ஒரு ஸமயத்தில் எம்பெருமானார் விஷயமாக திருவரங்கத்தமுதனார் விண்ப்பம் செய்தருளிய நூற்றந்தாதியை  இயற்பாவுடன் சேர்த்துப் பாட்டுக்களினாலும் நாலாயிரமாக்கி, அதையும் திவ்ய ப்ரபந்தத்துடன் அனுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதன் நியமித்தருளி, எம்பெருமானாருக்கு  அருளுப்பாடிட்டருள, இச்செல்வம் நித்யமாகச் செல்ல வேணுமென்று

ஸர்வ தேஶ தஶா காலேஷ்வவ்யாஹத பராக்ரமா
   ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்த்தாம் அபிவர்த்ததாம்”

என்கிற ஶ்லோகத்தை பிள்ளான்  விண்ணப்பம் செய்ய, அதைக் கேட்டு முதலியாண்டானும்,

ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸர முஜ்வலா
திகந்தவ்யாபிநீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ

என்கிற ஶ்லோகத்தை விண்ணப்பம் செய்ய, அவ்விரண்டையும்  கேட்டுகந்து,

ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ஶ்ரியமனுபத்ரவா மனுதினம் ஸம்வர்த்தய!

என்கிற வாக்யத்தை எம்பெருமானார் பெருமாளிடத்தில் விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் இஶ்லோக வாக்யங்களை ப்ரபந்தானுஸந்தான முடிவிலே அனுஸந்திக்கும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானாரும் அப்படியே நியமித்தருளினார்.

         இப்படியே மற்ற எல்லா திவ்ய தேஶங்களிலும் ஆழ்வார்களின் அர்ச்சா விக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து, திருவத்யயனோத்ஸவத்தை ஒவ்வொரு வருஷமும் நடத்த வேண்டுமென்றும், ப்ரபந்தானுஸந்தான  காலங்களில் ,

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்

யோ நித்யமச்யுத

என்கிற கூரத்தாழ்வான் அருளிச்செய்த தனியன்களையும்,

மாதா பிதா

இத்யாதி பெரிய முதலியார் அருளிச்செய்த தனியன்களையும்,

பூதம் ஸரஶ்ச

இத்யாதி பிள்ளான் அருளிச்செய்த தனியனையும் எல்லாவற்றிற்கும் முதலிலே அனுஸந்திக்க வேண்டும் என்றும், இப்படியே ஆழ்வார் ஆசார்யர்களுடைய திருநக்ஷத்திர தினங்களில் ப்ரபந்தானுஸந்தானம் செய்ய வேண்டும் என்றும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அபர க்ரியை முடிந்ததும் அதாவது பனிரண்டாவது நாள் மாலையில் ப்ரபந்தானுஸந்தானத்தை உபக்ரமித்து, மறு நாள் காலையிலும் ஸேவித்து, நூற்றந்தாதியைக் கொண்டு இயல் நடத்தும்படிக்கும், திவ்ய ப்ரபந்தங்களில் எந்த ப்ரபந்தத்தை அனுஸந்தித்தாலும் திருப்பல்லாண்டான முதல் திருமொழியை முதலிலும், அதின் முதல் இரண்டு பாட்டுக்களை முடிவிலும், திருவாய்மொழி அனுஸந்தானத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் , கண்ணி நுண் சிறுத்தாம்பையும் அனுஸந்திக்க வேண்டும் என்றும் நியமித்தருளினார்.

      பிறகு அவரால் பகவத் விஷய ஸிம்மாஸனத்தில் நியமிக்கப் பெற்றவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்தந்த ப்ரபந்த விஷயமான தனியன்களை அந்தந்த ப்ரபந்தானுஸந்தான காலங்களில் கீழ் நிரூபித்த பொது தனியன்களுக்குப் பிறகு அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தார்.

      பிறகு கோயிலிலே துலுஷ்காதிகளால் வந்த விபத்துத் தீர்ந்தவாறே திருநாராயணபுரத்தில் நின்றும்  பெரிய பெருமாள் ஸ்வப்ந நியமனப்படிக்குக் கோயிலேற எழுந்தருளி, எம்பெருமானார்  காலத்தில் போலே நின்றிருந்த திருவத்ய யனோத்ஸவத்தை நம் ஸ்வாமி தேஶிகன் நடப்பிவிக்கும்போது துர்வாதிகள் ப்ரபந்தானுஸந்தானத்தையும் ஆழ்வார்கள் வரிசையையும் தடுத்து, வாதத்தில் ஜயித்தாலல்லது உத்ஸவத்தை நடப்பிவிக்கக் கூடாது என்று அதிகாரி முன்பாக நம் தேஶிகன் ஸந்நிதியில் விவாதப்பட, நம் தேஶிகனும் அவர்களை ஶாஸ்திரங்களினால் ஜயித்து முன்பு போலே குறைவறத் திருவத்யயனோத்ஸவத்தை நடத்தியருளினவாறே. அப்போதுள்ள பெரியோர்களின் ப்ரார்த்தனைப் படிக்கு அழகிய மணவாளனும்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
 ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தானுஸந்தானம் பண்ணும்படி அர்ச்சக முகேந அரையருக்கு நியமித்தருளி, நம் தேஶிகனுக்கு ”இராமாநுசன் பொன்னடி” என்று அருளுப்பாடிட்டருள, அரையரும் ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தத்தை முடித்து,

“ஸர்வ தேஶ” ********* “ஸம்வர்த்தய”

என்னுமளவாக அனுஸந்திக்க, நம் தேஶிகனும்,

ஸ்ரீமந் ஸ்ரீரங்க” ******* ஸம்வர்த்தய”

என்கிற வாக்யத்தை ஆதரத்தால்  ஆவ்ருத்தி செய்து, இது அப்புள்ளார் கடாக்ஷ விஶேஷம் என்று அவர் விஷயமாய் முன்பு தாம் ஆஶ்ரயித்த தஶையில் செய்தருளிய

நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே
 ஆத்ரேய பத்மநாபார்யஸுதாய குணஶாலிநே!

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்திக்க, அதைக் கேட்ட முதலிகளும் முடிவில் ஆசார்யாபிவந்தனம் பண்ணினதாய்,

ராமாநுஜ தயாபாத்ரம்

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்திக்க, அதை அழகிய மணவாளனும் உகந்தருளி, அப்படியே எப்பொழுதும் அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தருளினான். பின்பு ஸ்ரீரங்க நாச்சியார் நியமனப்படிக்கு அவர் ஸந்நிதி முன்பே காலக்ஷேபம் செய்து கொண்டிருக்க, அத்தலைக்கு மங்களா ஶாஸனமாய்

வாழி யிராமானுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணி நிகமாந்த குரு – வாழியவன்
மாறன் மறையும் இராமானுசன் பாஷியமும்
தேறும்படி உரைக்கும் சீர். 

வஞ்சப் பல சமயம் மாற்ற வந்தோன் வாழியே
    மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே
     கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
      திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப்  பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
     செந்தமிழ் செய் தூப்புல் திருவேங்கடவன் வாழியே”

 என்கிற பாட்டுக்களை நைனாராசார்யர் விண்ணப்பம் செய்ய, அத்தைக் கேட்ட ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்,

நானிலமும் தான் வாழ நான் மறைகள் தாம் வாழ
  மா நகரில் மாறன் மறை வாழ --- ஞானியர்கள்
 சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
 இன்னமொரு நூற்றாண்டிரும்”
 என்கிற பாட்டை விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் ப்ரார்த்தனைப்படி நாச்சியாரும் ப்ரபந்தானுஸந்தானத்தின் முடிவில் இம்மூன்று பாட்டுக்களையும் அனுஸந்திக்கும்படி  நியமித்தருளினார். நைனாராசார்யரும்  ஸர்வ தேஶ” இத்யாதியாய் வேதாந்த தேசிகனே இன்னமொரு நூற்றாண்டிரும்” என்னுமளவாக உள்ள ஶ்லோக வாக்ய காதைகளை பெருமாள் நாச்சியார் நியமனப்படிக்கு திவ்ய தேஶங்கள் தோறும் அனுஸந்திக்கும்படிக்கும், இதை  வாழித் திருநாமம்  என்று சொல்லக்கடவது என்றும் நியமித்தருள, பெரியோர்களும் அப்படியே செய்ய அடுக்கும் என்று உகந்தருளினார்கள்.

புதன், 15 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 2


பிறகு ஸ்ரீமந் நாத முனிகள் அவதரித்து  திவ்ய தேஶ யாத்திரை செய்துகொண்டு வரும் காலத்தில் திருக்குடந்தையில் ஆராவமுதனை மங்களாஶாஸனம் செய்தபொழுது, அங்கு அந்த எம்பெருமான் விஷயமான ஆராவமுதே என்கிற திருவாய்மொழி மட்டும் அனுஸந்திக்கப்பட, அதின் நிகமனப் பாட்டிலிருந்து அப்படிப்பட்ட பாட்டுக்கள் ஆயிரம் உண்டு என்று அறிந்து, அவற்றைத் தெரிந்து கொள்ளுவதற்காக அனேகம் திவ்ய தேஶங்கள் சென்று விசாரித்தும் பயன்படவில்லை. கடைசியில், ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலத்தை அடைந்து, அங்கும் அகப்படாமல் ஶோகித்துக்கொண்டிருக்கிற பொழுது ஸ்ரீ மதுரகவி வம்ஶஸ்தரான ஒரு பெரிய வ்ருத்தரிடம் இருந்து ஆழ்வார் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை  உபதேஶிக்கப் பெற்று, அதை ஆழ்வார் முன்பு பல காலம் ஆவ்ருத்தி செய்து கொண்டு வந்தார். அப்பொழுது ஒரு நாள் பகவானுடைய நியமனத்தினால் ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு ஸகல ஶாஸ்திரார்த்தங்களையும் த்ரமிட வேதங்களான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களையும் உபதேஶித்து அவற்றை ப்ரவசனம் செய்யும்படி நியமித்தருளினார். ஸ்ரீமந்நாத முனிகளும் அதி ஸந்துஷ்டராய், முன்பு வ்யாஸர் ஸம்ஸ்க்ருத வேதங்களை வகுத்து ப்ரவசனம் செய்ததோ பாதி தாமும் த்ரவிட வேதங்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா  என நான்கு பாகங்களாகப் பிரித்து , இவைகள் பண்ணமர்ந்து நிற்பதைக் கடாக்ஷித்து இவைகளுக்கு ராக தாளாதிகளை வகுத்து ப்ரவசனம் செய்து கொண்டு வந்தார். “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்என்று ஆசார்யனும் இந்த ஏற்றத்தை அனுஸந்தித்தார்.

              இப்படி இவற்றை ப்ரவசனம் செய்துகொண்டு ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும்பொழுது மறுபடியும் ஆழ்வார் விக்ரஹத்தைத் திருக்குருகாபுரி யிலிருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, மார்கழி ௴ சுக்ல பக்ஷ ஏகாதஶிக்கு முந்திய பத்து நாள்களில் முதல் ஐந்து நாள்களில் முதலாயிரத்தையும், பின் ஐந்து நாள்களில் திருமொழியையும், திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் இவைகளையும் , ஏகாதஶி முதல் பத்து நாள்களில் திருவாய்மொழியில் தினம் ஒரு பத்தையும், கடைசியில் திருவடி தொழுகையையும் , மறு நாள் இயற்பாவையும் ஸேவிக்கும்படிக்கும், இப்படியே ப்ரதி ஸம்வத்ஸரம் நடக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தருளினார்.

         இப்படித் திருக்கார்த்திகை முதல் திவ்ய ப்ரபந்தானுஸந்தானம் இல்லாமையினால் இந்தக் காலத்திற்கு அனத்யயனம் என்று திருநாமம். இக்காலத்தில் திவ்ய ப்ரபந்தத்தை ஸேவிப்பதில்லை. இயற்பா சாற்று முறையான பிறகு திருப்பல்லாண்டு துடங்கி அப்புறம் யதாக்ரமம் ப்ரபந்தங்களை அனுஸந்திக்க வேண்டும். மார்கழி மாதத்தில் ப்ரதி தினமும் அதி காலையில் திருப்பள்ளியெழுச்சியையும், திருப்பாவையையும் ஸேவித்து, பிறகு திருப்பாவையில் அந்நாள் பாட்டை  மறுபடியும் ஸேவிக்க வேண்டும். திருவத்யயனோத்ஸவம்  மார்கழி மாதத்திற்குள்ளேயே  முடிந்து விட்டால் மார்கழி மாதம் முடியும் வரையில் அனத்யயன நியமம் உண்டு.

          இப்படி இந்தத் திவ்ய ப்ரபந்தம் மறுபடியும் இந்தப் பூலோகத்தில் பரவுவதற்குக் காரணமாயிருந்த ஆராவமுதன் ஸந்நிதியில் மார்கழி ௴ முதல் தேதி துடங்கி இருபத்தோரு நாள்கள் இந்த  திருவத்யயனோத்ஸவத்தை  நட்த்தி வைத்தார். இதற்காக இந்த க்ஷேத்திரத்தில் ஆழ்வாருடைய அர்ச்சை ஒன்றை திருப்ரதிஷ்டை செய்வித்தருளினார். திவ்ய தேஶங்கள் தோறும் ப்ரதி தினமும் காலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை இவைகளையும், மாலையில் திருப்பல்லாண்டு, பூச்சூடு, காப்பீடு, சென்னியோங்கு, அமலனாதிப்பிரான், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அந்தந்த திவ்ய தேஶ விஷயமான திருமொழி, திருவாய்மொழி இவைகளை அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தருளினார். இதற்கு  நித்யானுஸந்தானம்  என்று திருநாமம். எம்பெருமான் ஆஸ்தானத்தை விட்டு வெளியே எழுந்தருளி ஸேவை ஸாதிக்கும் காலங்களில் திருவாய்மொழியைத் தவிர மற்ற மூவாயிரங்களை க்ரமமாக  அனுஸந்திக்க வேண்டும்.  ப்ரும்மோத்ஸவத்தில்  ஸந்நிதியில் பகவான் எழுந்தருளியிருக்கும்பொழுது  தினம் ஒரு பத்தாகத் திருவாய்மொழியை ஸேவித்து, புஷ்ப யாகத்தில் (பத்தாவது தினத்தில்)  கடைசி பத்தை ஸேவித்து சாற்றுமுறை செய்ய வேண்டும்.

           ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் விவாஹ மஹோத்ஸவத்தில் நாச்சியாருக்கு ஸம்பாவனை செய்து, வாரணமாயிரம்  என்னும் திருமொழியை ஸேவித்து பிறகு சீர் பாடலை ந்டத்த வேண்டும் என்று நியமித்தருளினார்.

         ஸ்ரீவைஷ்ணவர்களுடைய நிர்யாணாநந்தாம் ஸ்ரீ சூர்ண பரிபால்னம் நடத்த வேண்டும். அதாவது அந்த ஸமயத்தில் திருப்பல்லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு, சூழ் விசும்பணி முகில், முனியே நான்முகனே, இவைகளை அனுஸந்தித்து , திருவிருத்த த்தைக் கொண்டு ப்ரும்ம ரதம் நடத்த வேண்டும் என்று நியமித்தார்.
       பிறகு எம்பெருமானார் திக்விஜயம் செய்துகொண்டு எழுந்தருளியிருக்கும் பொழுது சோழ ராஜனுடைய உபத்திரவம் தீர்ந்ததும் கால வைஷம்யத்தாலே முன்போல ஆழ்வாரைத் திருநகரியில் நின்றும் எழுந்தருளப் பண்ண முடியாமல் இருப்பதைப் பார்த்து, அவருடையவும் மற்றைய ஆழ்வார்களுடையவும் விக்ரஹங்களை  திருப்ரதிஷ்டை செய்வித்து முன்பு ஸ்ரீமந் நாதமுனிகள் நடத்தினாப் போலே திருவத்யயனோத்ஸவத்தை யதா க்ரமம் நடத்தி வைத்தார்.  

செவ்வாய், 14 ஜூன், 2011

Swami Desikan and kaliyan

Please enjoy "swami Desikan and Kaliyan" [ஸ்வாமி தேசிகனும் கலியனும்]in the 13-6-2011 tele-upanyasam on "Guru paramparai" by Sri Natteri Swamy

Get this widget | Track details | eSnips Social DNA



ப்ரபந்தானுஸந்தான க்ரமம்


ப்ரபந்தானுஸந்தான க்ரமம்
ஸ்ரீ சேட்லூர் நரஸிம்மாச்சாரியார் எழுதிய தேசிகப்ரபந்த வ்யாக்யானம் தேசிகனடியார் ஒருவரிடமிருந்து கிடைத்தது. அந்த நாள் நடைமுறைப்படி எளிய தமிழ் என்ற பேரிலே மணிப்ரவாளமாக எழுதப் பட்டிருக்கும் அந்நூலை பைண்டிங்கைப் பிரித்து ஸ்கான் செய்து பயன்படுத்திக் கொள்ள அந்த அன்பர் அனுமதி அளித்திருக்கிறார் என்றபோதும் நூலைப் பிரித்தால் பல பக்கங்கள் பொடிப் பொடியாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது என்பதால் அதற்கு அடியேன் துணியவில்லை. இருந்தாலும் ஆசை விடவில்லை. க்ரந்தாக்ஷரங்களை தமிழில் எழுதி வலைப்படுத்தலாம் என்ற முயற்சியில் அந்நூலின் முதலில் அவர் எழுதியிருக்கும் ப்ரபந்தானுஸந்தான க்ரமம்என்ற அத்யாயத்தை இங்கு சிறிது சிறிதாகத் தருகிறேன். அதிலேயே டிப்பணியாக வருபவற்றை --- அது ஒரே தொடராக இருப்பதால் தனியே எழுதுவேன். நூலில் உள்ளபடியே எழுத இங்கு வகையில்லை.
இந்நூல் 1934ல் சென்னை நிகம பரிமள அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.
ப்ரபந்தானுஸந்தான க்ரமம்
ஸ்ரீ சேட்லூர் நரஸிம்மாச்சாரியார் ஸ்வாமி அனுக்ரஹித்தது
பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண் பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்ய குலசேகரன் நம் பாணநாதன் தொண்டரடிப்பொடி மழிசைவந்த சோதி வையமெல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ்மாலைகள் திவ்யப்ரபந்தங்கள் எனப்படும். இவற்றை அனுஸந்திக்கும் க்ரமாதிகள் ப்ரபந்தானுஸந்தான தீபிகை முதலியவைகளில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அவற்றின் ஸங்க்ரஹம் இங்கு நிரூபிக்கப் படுகிறது.
நல்லடியோர் வானாரின்பம் இங்குறுவதற்காக  ஶ்ரிய:பதியான பகவான் மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப் பின்னும் இராமர் இருவராய்ப் பாரில் துன்னிய பாரம் தீர்க்கும் அவரை மன்னனுமாய் நானா உருவம் கொண்டு அவதரித்தும் அத்தால் தான் கொண்ட கருத்து நிறைவேறாதது கண்டு, ‘ பூர்வோத்ப1ந்நேஷு பூ3தே1ஷு தே1ஷு தேஷு கலௌ ப்ரபு4: அநுப்ரவிஸ்ய கு1ருதே1 யத்ஸமீஹி த1மச்யுத1:’ என்கிறபடியே பராங்குபரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தஶாவதாரம் செய்தருளினான். அவர்கள் ஸாக்ஷாத்கரித்து வெளியிட்டருளிய  ப்ரபந்தங்களே திவ்யப்ரபந்தங்கள் எனப்படும். இவற்றின் உத்கர்ஷமும், உட்பிரிவுகளும், ஸங்க்யைகளும் திவ்யப்ரபந்த வைபவம் என்னும் க்ரந்தத்தில் பரக்க நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.
      இப்படி பகவதவதார பூதர்களான ஆழ்வார்களில் அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் நிற்க, அவனை விட்டு, அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்று, தொல்வழியே தோன்றக் காட்டின ஸ்ரீ மதுரகவிகள் நம்மாழ்வாரை ஆஶ்ரயித்து, அவர் விஷயமாகக்  கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தை அனுஸந்தித்துக்கொண்டு, ஆழ்வார் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளின பிறகு அவருடைய அர்ச்சா விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்து உத்ஸவாதிகளை நடத்திக் கொண்டு வந்தார்.
      இவருக்குப் பிறகு அவதரித்த வையமெலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்கோன் ஒரு திருக்கார்த்திகை மஹோத்ஸவத்தில் அரங்கத்தரவணையானைத் தம்முடைய திருநெடும் தாண்டகத்தின் அனுஸந்தானத்தினால் மகிழ்விக்க, ப்ரீதனான பெரிய பெருமாளும், “ ஆழ்வீர்! உம்முடைய ப்ரபந்தானுஸந்தானம் மிகவும் ஶ்ராவ்ய மாயிருந்தது, உமக்கு என்ன வரம் வேண்டும், அதைக் கேளும்” என நியமிக்க, கலியனும், “திருக்குருகையிலிருந்து ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, அவர் ஸாக்ஷாத்கரித்தருளின திருவாய்மொழியை தேவரீர் திருச்செவி சாற்றியருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதனும் தம்முடைய அநந்த கொத்துப் பரிஜனங்களையும் திருக்குருகை சென்று ஆழ்வாருடைய விக்ரஹத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும்படி நியமித்தருள, அவர்களும் உடனே புறப்பட்டுப் போய்விட்டார்கள். பெரிய பெருமாளை ஆஸ்தானத்திற்கு எழுந்தருளப் பண்ணுமவர்கள் இல்லாமையினாலே அர்ச்சகர்களே கைத்தலத்தில் எழுந்தருளப் பண்ணும்படி நேர்ந்தது. இந்த வ்ருத்தாந்த விஶேஷத்தை இப்பொழுதும் ஒரு பெரிய உத்ஸவமாகக் கொண்டாடுகிறார்கள். இது முதல் ஆழ்வார் எழுந்தருளுகிற வரையில் ஒரு புறப்பாட்டு உத்ஸவமும் நடக்கவில்லை. ஆழ்வார் எழுந்தருளினதும் அவருக்கு அருளுப்பாடிட்டருளி, மார்கழி ௴ சுக்ல பக்ஷ ஏகாதஶி முதல் ப்ரதி தினமும் மாலையில் திருவாய்மொழியில் ஒரு பதத்தைத் தாம் கேட்டருளி, கடைசியில் ஆழ்வார் ப்ரார்த்தித்திருக்கிறபடியே அவரைத் தம் திருவடிகளில் சேர்க்கும்படிக்கும் நியமித்தருளினார். கலியனும் லோகோஜ்ஜீவனார்த்தமாக ஆழ்வாரை மறுபடியும் ப்ரஸாதித்தருளும்படி ப்ரார்த்தித்தார். அப்படியே ஸ்ரீரங்கநாதனும் அனுக்ரஹித்தார். இந்த வ்ருத்தாந்தமும் ஆழ்வார் திருவடித் தொழுதல்  என்று ஒரு உத்ஸவமாக நடத்தப் பட்டு வருகிறது. இப்படியே ப்ரதி ஸம்வத்ஸரமும் நடத்தப்பட்டு வந்தது.
      இப்படிப் பல வருஷங்கள் நடந்து வந்து பிறகு கால வைஷம்யத்தினால்  நடைபெறாமல்  நின்று விட்டது. இன்னும் சில காலம் சென்றதும் அந்த ப்ரபந்தத்தின் அனுஸந்தானத்திற்கே முற்றிலும் லோபம் வந்துவிட அந்த ப்ரபந்தமே லுப்தமாய் விட்டது.  

  
   

திங்கள், 13 ஜூன், 2011

நம்மாழ்வார்

இன்று நம்மாழ்வார் அவதரித்த திருநாள். உலகமெல்லாம் அவரைக் கொண்டாடி மகிழ்கின்ற நன்னாள். அப்படி உலகெலாம், லக்ஷோபலக்ஷம் பேர்களை அவர் அனுக்ரஹிக்க வேண்டியிருப்பதால், அவரை இந்தத் திருப்புல்லாணியிலாவது கஷ்டப் படுத்த வேண்டாமென்று இங்கு ஒரு விசேஷமும் நடக்கவில்லை. அவரை ஏகாந்தமாக அவர் சந்நிதியிலே, திருக்கதவைக்கூடத் திறக்காமல் , அவரை சிரமப்படுத்தாமல் இருந்துவிட்டோம். அவரோ எப்போதும் ஸ்ரீமந் நாராயணனுடன் நித்யவாசம் செய்பவர், எனவே இன்று ஒரு நாள் ஏன் மங்களாசாசனம் ! அதுவும் வேண்டாம் என்று இருந்து விட்டோம். அவரை எங்கள் பக்கம் திருப்பாமல் இருந்தமையால் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் அவரை நன்றாக அனுபவித்திருப்பார்கள், அவரது திவ்ய கடாக்ஷத்திற்கு பாத்திரமாயிருப்பார்கள் என்ற எங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுவீர்கள்தானே?