சனி, 24 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

 

கோதா ஸ்துதி

ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.

த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

சுலோக‌ம் 6

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

சுத்த‌வித‌ழ்ச் சோணையினாற் றொய்யிற் ற‌ன‌த்துங்க‌
ப‌த்திரையாய் வாணிநிறை பாணியாய் -- முத்தி
விர‌சையாய்க் கோதையாய் விண்டுவுக்கே யானாய்
ச‌ர‌ச‌முறு ந‌ர்ம‌தையாய்ச் சார்ந்து. .6.

ப‌த‌வுரை

த்வ‌ம் -- நீ, அத‌ரே -- திருவ‌த‌ர‌த்தில், ஶோணா அபி -- சோணாநதியாக‌வும், (சோணையாயிருந்தாலும்), (சோணாநதியோ), குச‌யோ -- ஸ்த‌ன‌ங்க‌ளில், துங்க‌ப‌த்ரா அபி -- துங்க‌ப‌த்ரா நதியாக‌வும், (துங்க‌ப‌த்ரையாயிருந்தாலும்), (துங்க‌ப‌த்ரா நதியோ) வாசாம் பிர‌வாஹ‌விப‌வே -- வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹித்து ஓடி வ‌ரும் பெருமையில், ஸ‌ர‌ஸ்வ‌தி அபி -- ஸ‌ர‌ஸ்வ‌தியாக‌வும், (ஸ‌ர‌ஸ்வ‌தியாயிருந்தாலும்), (ஸ‌ர‌ஸ்வ‌தியோ), அப்ராக்ருதை: ர‌ஸை: -- ப்ர‌க்ருதி ஸ‌ம்ப‌ந்த‌மே யில்லாத‌ திவ்ய‌ர‌ஸ‌ங்க‌ளால், விர‌ஜா அபி -- விர‌ஜாநதியாக‌வும், (விர‌ஜையாயிருந்தாலும்),(விர‌ஜா நதியோ), ஸ்வ‌ப‌வாத் -- உன் த‌ன்மையால், (உன் ஸ்வ‌பாவ‌த்தாலே), கோதா அபி -- கோதாவ‌ரியாக‌வும், (கோதாவ‌ரியாயிருந்தாலும்), (கோதாவ‌ரியோ), தேவி -- திவ்ய‌ம‌ஹிஷியே, (விளையாடும் த‌ன்மை உடைய‌வ‌ளே), கமிது: -- ஆசைப்படும் நாயகனுக்கு, நநு நர்மதா அஸி -- நீ நர்மதை தானம்மா. நீ நர்மதையோ, நர்ம பரிஹாஸப் பேச்சுக்களைப் பேசி ரமிப்பிக்கிறாய்.

(1) பாசுரங்களைப் பாடும் உன் திருப்பவழத்தைப் பார்க்கையில் (சிவப்பினால்) நீ சோணா நதியோ என்றும், பாடுங்கால் உயர்ந்ததும் ஜகன்மங்களமுமான ஸ்தனங்களைக் கொண்டு துங்கபத்ரா நதியோ என்றும், உன் வாக்குகளின் ப்ரவாஹப் பெருமையைப் பார்த்தால், நீ ஸரஸ்வதியோ என்றும், ப்ரக்ருதி ஸம்பந்தமேயில்லாத திவ்யரஸங்களால் நீ விரஜையோ என்றும், உன்னுடைய ஸ்வந்தத்தன்மையாலே கோதாவரியோ என்றும் உல்லேஹிக்கப்படுகிறாய். உன்னுடைய காந்தனுக்கோ என்றால் நிச்சயமாய் நீ (மனதை ஹரிக்கும் நர்மஹாவசனங்களைக் கொடுப்பதால்) நர்மதா நதியாகவே இருக்கிறாய்.

(2) அல்லது, திருப்பவழத்தில் சோணையாயிருந்தாலும், தனங்களில் துங்கபத்ரையாயிருந்தாலும், வாக்ப்ரவாஹ மஹிமையில் ஸரஸ்வதியாக இருந்தாலும், அப்ராக்ரத ரஸங்களாலே விரஜையாயிருந்தாலும், ஸ்வயமாக நீ கோதை (கோதாவரியாக) இருந்தாலும், உன் காந்தனுக்கு நீ நர்மதைதான்.

(3) அல்லது, ஓரோர் காரணத்தால் சோணையாகவும், துங்கபத்ரையாயும், ஸரஸ்வதியாயும், விரஜையாயும், கோதாவரியாயும் இருக்கும் நீ உன் காந்தனுக்கு நர்மதையாகவே இருக்கிறாய். எல்லாப் புண்ய நதிகளின் சுத்தியும், மஹிமையும் உன் ஸரஸ்வதி வெள்ளத்தில் சேர்ந்துளது.

அவதாரிகை

(1) என் வாக்கை ஸரஸ்வதி என்றீர், நான் வாக்தேவியாகேனோ? என்னை ஸரஸ்வதியாக வர்ணித்து என்னை உபாஸிக்கவேண்டாவோ? அம்மா, நீ ஸரஸ்வதிதான். 'ஸரஸ்வதீ த்வம்'

(2) நதிகள் ப்ராயேண ப்ராசீமுகமாகப் போகும். என் ஸரஸ்வதியும் அப்படித்தானோ? ப்ரத்யக்முகமாக (ஆத்மா என்னும் ப்ரத்யக் வஸ்துவைக் குறித்ததாய் அத்யாத்மமாய்) இருக்குமோ? அம்மா, உன் வாக்குகள் சோணாநதி, அது மேற்கு முகமாக ஓடும் நதி. உன் வாக்கும் ப்ரத்யங்முகம். அது சோணை போன்றது.

(3) அரங்கனுக்கு இனிப்பான வாக்கு வேணுமென்கிறீர். அரங்கத்தில் என்ன ரஸம்? மிக்க விநோதம் விளைவிக்கும் ஹாஸ்யரஸம் வேண்டுமே? அம்மா, உன் வாக்கு நர்ம பரிஹாஸங்களமைந்துளது. அது அரங்கனுக்கு மிக்க இனிப்பை உண்டாக்கும்.

அபி என்பதற்கு மூன்று விதப் பொருள்கள் கொள்ளலாம். (1) அந்த நதியோ, இந்த நதியோ என்று உல்லேஹிக்கும்படி யிருப்பது ஓர் பொருள். (2) ஓர் நதியாயிருந்தும் மற்றோர் நதியுமாவாய் என்று விரோதிஸமுச்சயம். வேறுவேறான பல நதிகளாயிருந்தும், விரோதமில்லாமல் உன்னிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன. (3) இந்த நதியும் அந்த நதியுமாகப் பல புண்ய நதிகளும் உன்னிடமும் சேர்ந்துள என்பது கூட்டுப் பொருள். முதல் பொருளில் ரஸமதிகம்.

அதரே -- வாக்கை உச்சரிக்கும் திருப்பவழத்தில். உன் நாயகன் உன் வாக்குகளால் கட்டுப்படுவதற்கு இதெல்லாம் ஓர் ஓர் விசித்ர நிமித்தம். பேசும் திருப்பவழத்தைப் பார்க்கையில் அவன் என் செய்வான், எப்படித் தப்பிப்பான்!

அபி ஶோணா -- (ஶோணாபி) சோணாநதியோ. சோணா என்பது சிவப்பு நிறத்தைச் சொல்லும். ஒருவளே எப்படிப் பல நதிகளாவது? ஓர் ஓர் அவயவத்தால் ஓரோர் குணத்தால், ஓர்ஓர் நதியாகிறாள். சோணை மேற்குமுகமாக (ப்ரத்யங்முகமாக) ஓடும் நதி. உன் வாக்கு சோணாநதியைப்போல் ப்ரத்யங்முகம் (அத்யாத்மம்) ஸ்வாபதேசம் கனத்தது. அத்யாத்மப் பொருளிலேயே முக்கிய நோக்கம் உள்ளதென்பதைக் காட்ட உபக்ரமத்திலேயே சோணையாக நிரூபித்தது. இதனால் சொல்லப்படும் அத்யாத்ம நோக்குக்கு அநுகுணமாகவே மற்ற குணங்களும் உல்லேகங்களும் பொருந்தும். ஸ்ரீஹர்ஷ சரித்திரத்தில் பாணபட்டர் என்னும் கவி ஸரஸ்வதிதேவி பூலோகத்தில் ஓர் சாபவசத்தினால் ஓர் பெண்ணாக அவதரிக்கையில், சோணா நதிக்கரையில் இறங்கியதாகச் சொல்லி, அந்த நதியை அழகாக வர்ணித்திருக்கிறார். அதுவும் ஸ்வாமி திருவுள்ளத்திலுள்ளது. மேற்கு முகமாகப் போகும் ஆற்றை நதமென்று புமானாகச் சொல்லுவர். இங்கே கவி பெண்ணானதால் சோணத்தை சோணா என்கிறார். ஹர்ஷ சரித்திரத்தில் "ப்ரஹ்மாவின் பிள்ளையாகிற ஹிரண்யவாஹரென்ற பெயரையுடைய மஹாநதம், எதை ஜனங்கள் சோண: என்று வழங்குகிறார்களோ" என்பது ஸரஸ்வதி பேச்சு. "மதுரமான மயில் த்வனிகளோடும், பரிமளத்தால் மதங்கொண்ட வண்டுகளின் தொடர்ந்த வரிசைகளான வீணைக்கரும்கம்பிகளின் ரீங்கார கானங்களோடும் ரமணீயமும், மந்தாகினியின் பெருமையை மந்தமாகச் செய்வதாயுமுள்ள இம்மஹாநதத்தின் அருகேயுள்ள ப்ரதேசங்கள் என் மனதை ரமிப்பிக்கின்றன" என்பது அடுத்த வாக்யம். 'மந்தாகினியை மந்தப்படுத்தும் வாக் ப்ரவாஹங்கள்' என்று ஸ்வாமி வர்ணிப்பது பாணகவி வர்ணனத்தை அநுசரிப்பது ஸ்பஷ்டம்.

குசயோ: அபி துங்கபத்ரா -- இரு ஸ்தனங்களும் உந்நதம். பேசுகையில் இன்னும் உயரும். துங்கத்தின்பேரில் துங்கமாகும். சைதந்யஸ்தந்யத்தைக் கொடுக்கும். ஜகன்மங்களமான (பத்ரமான) ஸ்தனங்கள். ஸ்தனங்கள் ஓர் திருமேனியில் இரட்டையாக அமைந்திருப்பதைப்போல், இயற்கையாய் துங்கா பத்ரா என்று இரண்டு சேர்ந்த துங்கபத்ரையை எடுத்தது அழகு. நீ பாடும்போது உயர்ந்து அமரும் உன் பத்ர ஸ்தனங்களைப் பார்த்து அவன் எப்படி வ்யாமோஹ பரவசனாகாமல் தப்புவான்?

வாசாம் ப்ரவாஹவிபவே -- பாஹ்யமான திருப்பவழத்தின் அழகாலும், ஸ்தனங்களின் அழகினாலும் மட்டுமா நீ பாடும் பாசுரங்களுக்குக் கௌரவம்? லாவண்யமுடைய யுவதி பாடுகிறாள் என்பதாலா உன் பாசுரங்களுக்குக் கௌரவம்? உன் வாக்குகளின் ப்ரவாஹம் ஸ்வயம் ஸரஸ்வதீப்ரவாஹம். பாடும் உன்னுடைய அழகால் ஆரோபிதமான பெருமையன்று. ஸ்வயம் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி யாகும். அரும்பெரும் கருத்துக்கள் உள்ளே ஆழ்ந்து கிடக்கும். உள்ளேயிருந்து கந்தம் வீசும். அந்த ஸ்திர பரிமளம் உன் ஸரஸ்வதி. மறையேயம்மா, மறையிலும் மறை. பொருள்கள் உள்ளே மறைந்திருந்தாலும், உள்ளே அவிச்சின்ன ப்ரவாஹமாக ஓடிக்கொண்டேயிருக்கும். நீ பூமிதேவியானதால் உன் ஸரஸ்வதி பூமிக்குள் மறைந்து ஓடுகிறதோ? உம்மை ஒரு க்ஷணமேனும் த்யானிப்பவர் அநிவாரிதமான வாக்குகளின் ப்ரவாஹங்களால், மந்தாகினியையும் மந்தமாகச் செய்கிற சக்தியை உடையவராவார் என்று உன் நாயகன் ஹயக்ரீவரைத் துதிக்கையில் கங்காப்ரவாஹத்தை அதிசயிப்பதைப் பேசினேன். கங்கை அந்தர்வாஹினி யன்று. இங்கே அந்தர்வாஹினியான ஸரஸ்வதி நீ என்று வ்யதிரேகம் (உயர்வு).

அப்ராக்ருதை: ரஸை: -- கவிஸிம்ஹமே, என் ப்ரபந்தங்களில் என்ன ரஸங்கள்? ப்ரக்ருதரஸங்களா? அலௌகிக திவ்யரஸங்களா? அதிலுள்ள ச்ருங்கார ரஸத்திற்கு என்ன ஸ்தாயீபாவம்? ப்ரக்ருதி மண்டலத்தில் பூமியிலோடும் (இந்த மானவாவர்த்தத்தில் ஓடும்) நதிகளாக என்னை வர்ணிப்பது உசிதமா? அம்மா, கவிமுறையில் பலபலவிதமாய் உல்லேகாலங்காரமாகப் பேசினேன். தேவதைகளான புண்ய நதிகளாகப் பேசினேன். உன் ஸ்வபாவத்திற்குத் தக்கபடி உள்ளபடி பேசினால் உன் கவி ரஸங்களெல்லாம் திவ்யரஸமாயிருப்பதால் நீ விரஜையம்மா. 'ஸ்வபாவாத்' என்பதை இங்கேயுமொட்டலாம். பின்பும் ஒட்டலாம். அது 'மத்யமணி'. வாக்ப்ரவாஹத்தை வர்ணித்தீரே! ப்ரவாஹமானால் ரஜஸ் இல்லாமல் இருக்குமோ? இல்லையம்மா! உன் வாக்ப்ரவாஹம் ஸ்வத்ஸித்தம். நித்யமாயுளது. புதிதாக உற்பத்தியாகி ஓடிவருவதன்று. ஸ்வபாவாத் -- ஸ்வாபாவிகம் -- நித்யம். ஆகையால் ரஜஸ்ஸுக்கிடமில்லை. ச்ருங்கார ரஸத்திற்கு ரதிதான் ஸ்தாயீபாவம். ஆனால் இது ஆத்மாதி, ப்ராக்ருதியன்று. அலௌகிகாதி,ப்ரத்யங்முகமான ரதி. 'அத்யாத்ம ஜ்ஞானத்ருப்தத்வம்'

ஸ்வபாவாத் விரஜா அஸி -- எங்கள் ரஜஸ் தமஸ்ஸுகளை எல்லாம் போக்கி திவ்யவிபூதியை உடனே அடையச் செய்யும் உன் வாக் ப்ரவாஹத்தில் ரஜஸ்ஸுக்கு ப்ரஸக்தியேது?

ஸ்வபாவாஅபி கோதா -- கோதா என்னும் சப்தம் கோதாவரி நதியையும், ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெண்ணையும் சொல்லும் என்று நிகண்டு. நீ ஸ்வயம் கோதாவரியாவாய். நீ கோதாவரி என்பதற்கு ஓர் குணவிசேஷத்தைக் கொண்டு ஆரோபிக்க வேண்டியதில்லை. நீ கோதாவரி என்பதில் ஆரோபமுமில்லை. யமுனை கண்ணன் யௌவன விஹாரங்களுக்கு சாக்ஷி. பஞ்சவடியில் சிரகாலம் ராமவைதேஹீ விஹாரங்களுக்கு கோதாவரி சாக்ஷியாவாள். ஜனகராஜன் புத்திரியாகிய ஜானகி நீராடினதால், புண்யமான நீர்களையுடையதாக, கோதாவரி தீர்த்தத்தைக் காளிதாஸர் மேகஸந்தேச ஆரம்பத்தில் வர்ணித்தார். உத்தமராமசரிதத்தில் பவபூதியின் வர்ணனங்களையும் நினைக்கவேணும்.

கமிது: நநு நர்மதா அஸி -- இத்தனை நதிகளாக இருக்கையிலும், உன் நாயகனுக்கு நீ நர்ம பரிஹாஸவார்த்தைகளைப் பேசுவதில் உள்ள விநோதம் எல்லையற்றது. ராமாயண ரஸங்களைப் பேசுகையில், ஆதிகவி "ஹாஸ்யச்ருங்காரபீபத்ஸ" என்று ஹாஸ்யரஸத்தை முதலில் பேசினார். எங்கள் அநாதிகாலமான கொடிய அந்த அபராதங்களினால் உள்ள சீற்றத்தை மாற்ற ஹாஸ்ய ரஸம்தான் சிறந்த உபாயம். அந்த நதியோ, இந்த நதியோ என்று ஓரோர் காரணத்தையிட்டு உல்லேகம். உன் காந்தனுக்கு நீ நர்மதை என்பதுதான் தத்துவம். நர்மதா த்வம் அஸி, ஸா த்வமஸி! (6)

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

 

கோதா ஸ்துதி

ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.

த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

 

சுலோக‌ம் 5

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளிதாம்நா
த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||

நாறும‌ல‌ர்க் கோதாயு னாத‌னெனைப் போல‌ற‌த்தி
னாறறியா வாத‌ர்க் க‌ருள் புரித‌ல் -- தேறு நின்பா
மாலையினும் வ‌ண்குழ‌ல்சேர் வாட‌ற் ப‌ழ‌ஞ்சருகு
மாலையினுங் கொண்ட‌ ம‌ய‌க்கு.

ப‌த‌வுரை

தேவி -- தேவி கோதாய்! அப‌க்ருதௌ -- அப‌ராத‌ம் செய்வ‌தில், சிர‌தீக்ஷிதாநாம் -- வெகுகால‌மாய் தீக்ஷையாய்க் கொண்டிருக்கும், அஸ்ம‌த்ருஶாம் -- என் போன்ற‌வ‌ரிட‌ம், அஹ்நாய‌ -- உட‌னே, அஸௌ முகுந்த‌ -- இந்த‌ முகுந்த‌ன், த‌ய‌தே இதிய‌த் -- த‌ய‌வு ப‌ண்ணுகிறான் என்ப‌து யாதொன்று உண்டோ, தத் -- அதான‌து, த‌வ‌ -- உன்னுடைய‌, மௌளிதாம்நாம் -- சிரோமாலையின் நாரினாலும், த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ -- வீணைக்க‌ம்பிக‌ளின் நாதத்தைப்போல் ம‌துர‌மான‌, த‌வ‌ -- உன்னுடைய‌, கிராம் நிகும்பை: -- நூல்க‌ளாலும், நிய‌மித‌: -- நிய‌மிக்க‌ப்ப‌ட்டான், நிஶ்சித‌ம் -- நிச்ச‌ய‌மாய்.

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகுகால‌மாகக் கொண்டிருக்கும் என்போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான் என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக்க‌ம்பிக‌ளின் நாதத்தைப்போல் ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலேதான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

அவ‌தாரிகை

(1) என் வாக்கில் முறைப்ப‌டி ஈடுப‌ட்டு ர‌ஸிப்ப‌வ‌ர் இனிய‌ க‌விக‌ளாகித் தேன்மொழி செவிக‌ளார‌ப் பொழிகிறாரென்றீர். என் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் எப்ப‌டி இனிய‌தோ? க‌விஸிம்ஹ‌மே! உம் வாயால் கேட்க‌வேணும். அர‌ங்க‌ன் புக‌ழ்வ‌து போதாது. என்ன‌து என்று ப‌க்ஷ‌பாதத்தால் புக‌ழ்வ‌ர்.

(2) ய‌ஜ்ஞ‌ங்க‌ளால் (தீர்த்த‌ங்க‌ளால்) சுத்திய‌டைந்து என் வாக்கை அறிய‌ விரும்புகிறார்க‌ள் என்று ய‌ஜ்ஞாதி சுருதியைப் பேசினீர். உம்முடைய‌ த‌க‌ப்ப‌னார் , பாட்ட‌னார் யாக‌தீக்ஷித‌ர்க‌ள். நீரும் தீக்ஷித‌ரோ?

(3) விப‌ஞ்சீஸ்வ‌ர‌ம‌துர‌ம் வைத‌ர்ப்ப‌ரீதியென்ப‌ரே! என் வாக்கு அந்த‌ ல‌க்ஷ‌ண‌த்திற்கு ஏற்ற‌தோ?

தேவி -- கோதா தேவியே! மோக்ஷ‌ப்ராப்தியையும், மோக்ஷ‌ப்ராபண‌த்தையும் பேசுகிற‌ப‌டியால் இங்கே தேவி என்று கூப்பிடுகிறார்.

அப‌க்ருதௌசிர‌தீக்ஷிதாநாம் -- ஒரு விதத்தில் நானும் தீக்ஷித‌ன்தான். யாக‌தீக்ஷித‌ர்க‌ள் யாக‌மென்னும் "க்ருதி"யில் தீக்ஷித‌ர். நாங்க‌ள் "அப‌க்ருதி"யில் தீக்ஷித‌ரென்று வேடிக்கையாகக் காட்டுகிறார். வெகுகால‌மாய் நாங்க‌ள் இப்ப‌டி அநாதி தீர்க்க‌ஸ‌த்ர‌த்தில் தீக்ஷித‌ர்க‌ள்.

அஸ்மாத்ருஶாம் -- என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, ப‌க‌வ‌த்த்ருஶேப்ய‌: என்ப‌துபோல‌, அஸௌ -- உன் துதியைக் கேட்க‌ இதோ நிற்கிறாரே, "அஸ்மாத்ருஶாம்" என்ப‌து ப‌ரிஹாஸ‌ வ‌ர்ண‌ன‌ம்.

முகுந்த‌: -- மோக்ஷ‌த்தைய‌ளிக்கும் முகுந்த‌ன். இத‌னால் செய்யும் த‌ய‌வு மோக்ஷ‌ம‌ளிப்ப‌தென்ப‌து ஸூசிக்க‌ப் ப‌டுகிற‌து.

அஹ்நாய‌ -- தாம‌தியாம‌ல், உட‌னே, அன்று தின‌மே. நாங்க‌ள் சிர‌(चिर)கால‌ம் அப‌ராத‌ தீக்ஷித‌ர்க‌ள். "ஸுசிரேண‌" விள‌ம்ப‌மில்லாம‌ல் உன் நாய‌க‌ன் அன்றே மோக்ஷ‌ம‌ளிக்கிறான். மோக்ஷ‌ம‌ளிக்க‌ அவ‌ர் வெகுகால‌ தீக்ஷை!

த‌ய‌தே ய‌த‌ஸௌ -- அவ‌ன் த‌ய‌வு செய்வ‌து என்ப‌து எதுவோ

தத் -- அது, நிஶ்சித‌ம் -- க‌ட்டாய‌மாக‌. த‌வ‌ மௌளிதாம்நா -- உன் கூந்த‌லில் சூடிக்கொடுத்த‌ மாலைக் க‌யிற்றாலும்

த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ --வீணையின் நாதத்தைப் போல் இனிமையான‌. (த‌வ‌) கிராம் நிகும்பை: -- அழ‌காகக் கோர்த்துள்ள‌ உன்னுடைய‌ வாக்குக‌ளால் (பாமாலைநார்க‌ளால்). இர‌ண்டுவித‌ மாலைக‌ளும் அவ‌னைக் க‌ட்டியிழுத்துச் சொன்ன‌ப‌டி கேட்க‌வைக்க‌ உப‌யோக‌ப்ப‌டுகிற‌து. குடுமியைக் கொடுத்துவிடுகிறார். உன் பாமாலைக்கு த்ருஷ்டாந்த‌மான‌ வீணையிலும் த‌ந்திக் க‌ம்பிக‌ளிருக்கின்ற‌ன‌ என்று த‌ந்த்ரீ என்னும் ப‌தத்தால் வேடிக்கையாகக் காட்டுகிறார்.

நிய‌மித‌ -- க‌ட்டுப்ப‌டுகிற‌த‌னால்தான். வீணைக்க‌ம்பியின் நிநாத‌ம் வாக்குக‌ளின் நிகும்ப‌ங்க‌ள், எல்லாம் நிய‌ம‌ன‌த்திற்கு உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌ன‌. "அள‌க‌நித‌மிதாபி:" என்று முடிவிலும் சாதிக்க‌ப் போகிறார். "நிஶ்சித‌ம்", "நிய‌மித‌ம்" என்னும் ப‌த‌ங்க‌ளின் சேர்த்தியும‌ழ‌கு. முன் ச்லோக‌த்தில் "அநு"வைக் கார்ய‌கார‌ண‌ங்க‌ளில் கோர்த்தது. இங்கே "நித‌ராம்" என்னும் பொருளுடைய‌ "நி" என்ப‌தைக்கொண்டு கோர்வை. பூமாலை கோர்ப்பது போல‌. இத்த‌னை கால‌ம் ப‌ல‌ம் கைகூடாம‌ல் தாம‌தித்தது (சிர‌ம் चिरं) நிச்ச‌ய‌மாய் எங்க‌ள‌து. இப்பொழுது தாம‌த‌மே யில்லாம‌ல் வெகு சீக்கிர‌த்தில் ப‌ல‌ம் ஸித்திப்ப‌து (த‌வ‌) உன் பெருமை. (5)

வியாழன், 22 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

(அன்பில் கோபாலாசாரியார் உரை)

தமிழாக்கம் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 11

 

சுலோகம் 4

க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுகாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)

யாதவர்கோ னாடலினான் யாமுனையை நேருனது
நாதவிசை வாணிதனை நன்முறையா -- யோதியளைந்
தாடுவோர் கோதா யதிமதுர நாற்கவிகள்
பாடுவா ராவர்சுயம் பா. (4)

பதவுரை

கோதே -- கோதாய், க்ருஷ்ணாந்வயேந -- கிருஷ்ண ஸம்பந்தத்தால்; யமுனானுபாவம் -- யமுனையின் பெருமையை; தததீம் -- தரிப்பவளான; தே -- உன்னுடைய; ஸரஸ்வதி -- ஸரஸ்வதியை (வாக்கை, நதியை); தீர்த்தை -- குருக்களின் முகமாக; (இறங்கும் துறைகள் வழியாக); ததாவத் -- உள்ளபடி (சாஸ்திரமுறைப்படி); அவகாஹ்ய -- இறங்கி ஸ்நானம் செய்து; பவதீகடாக்ஷாத் -- உன் கடாக்ஷத்தால்; விகஸ்வரதியாம் -- மலர்ச்சி அடைந்த புத்திகளையுடைய; கவீநாம் -- கவிகளுடைய; வாச: -- வாக்குகள்; மகரந்தமுச: -- தேனைப் பொழிந்துகொண்டு; ஸ்புரந்தி -- விளங்குகின்றன.

கோதாய்! க்ருஷ்ணஸம்யோகத்தால் யமுனையின் பெருமையை உடையதான உன்னுடைய ஸரஸ்வதியை (வாக்கை, நதியை), குருக்களின் முகமாக (இறங்கும் துறைகள் வழியாக) உள்ளபடி (சாஸ்த்ரமுறைப்படி) இறங்கி ஸ்நானம் செய்து உன் கடாக்ஷத்தால் மலர்ச்சியடைந்த புத்திகளையுடைய கவிகளுடைய வாக்குகள் தேனைப் பொழிந்துகொண்டு விளங்குகின்றன.

அவதாரிகைகள்

(1) என் நாயகனுடைய ஓர் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தியை நீர் துதிக்கையில் ம‌ஞ்சுப்ர‌ணாத‌ம் ம‌ணிநூபுரம் தே ம‌ஞ்சூஷிகாம் வேத‌கிராம் ப்ர‌தீம‌: என்று பேசினீர். அவ‌ர் ர‌த்ன‌ச் சில‌ம்பின் இனிய‌ ஓசையில் வேத‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ள் பெட்டியில்போல் அட‌ங்கியிருக்கின்ற‌ன‌ என்று பாடினீர். இங்கே பெண்பிள்ளையாகிய‌ என் சில‌ம்பின் ஓசையைப்போல் இனிய‌ வாக்கென்கிறீர். இர‌ண்டிட‌த்திலும் "ம‌ணிநூபுர‌ம்" என்று ஒரேவித‌ப் பேச்சு. அங்கே 27ம் சுலோக‌த்தில் க‌டாக்ஷா: ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருத‌ம் க்ஷ‌ர‌ந்தீம் ஸ‌ர‌ஸ்வ‌தீம் திஸ‌ந்து என்று பாடினீர். உம்முடைய‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் ம‌நுஷ்ய‌ர்க‌ள் காதுக‌ளில் அம்ருதத்தை வார்க்கும் ஸ‌ர‌ஸ்வ‌தியை என‌க்க‌ருள‌ வேணும் என்று ஹ‌ய‌க்ரீவ‌தேவ‌னைப் பிரார்த்தித்தீர். அம்ருத‌ வாக்கை அவ‌ரிட‌மே ப்ரார்த்திக்க‌லாமே! அவ‌ரிட‌ம் ப்ரார்த்தித்ததை அவ‌ர் முன்பே உம‌க்கு அருளியிருக்கிறார். இப்பொழுது வெறும் பேச்சாக‌ முக‌ஸ்துதியாக‌ நீர் அதே வார்த்தைக‌ளைக்கொண்டு யாசிக்கிறீர். ஹ‌ய‌க்ரீவ‌னிட‌மிருந்து அடையாம‌ல் என்னிட‌மிருந்து பெற‌வேண்டிய‌து மீதியுண்டோ?

இத‌ற்கு ப‌தில் கூறுகிறார்:-- அம்மா! நீ ந‌ன்றாய்க் க‌வ‌னிக்க‌வேண்டும். ப‌ர‌மபுருஷ‌னாகிய‌ உன்னுடைய‌ நாய‌க‌ன் காதுக‌ளில் அம்ருதத்தை வார்ப்ப‌துபோல் இனிமையான‌ வாக்கைய‌ல்ல‌வா நான் முன் சுலோக‌த்தில் ப்ரார்த்தித்தது! என் இஷ்ட‌ தெய்வ‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ரை "பும்ஸாம்" என்று பொதுவாக‌ ம‌நுஷ்ய‌ர்க‌ள் செவிக‌ளுக்கு இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியைத்தானே ப்ரார்த்தித்தேன்! இங்கே உன்னை யாசிப்ப‌து ப‌ர‌மபுமானுடைய‌ செவிக‌ளுக்கு அம்ருத‌மான‌ சொற்க‌ள். உன் நாய‌க‌ன் ர‌ங்க‌ந‌ட‌ர‌ல்ல‌வோ? சில‌ம்பில்லாம‌லும், சில‌ம்போசையில்லாம‌லும் ந‌ர்த்த‌ன‌ம் செய்வ‌ரோ! நான் ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ உண்மையாக‌த்தான் துதிக்கிறேன். ஹ‌ய‌க்ரீவ‌ ஸ்தோத்ர‌த்தில் "க‌டாக்ஷா: திஶ‌ந்து" என்று அனேக‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் நேர்ந்து வாக்கை அனுக்ர‌ஹிக்க‌ட்டும் என்று ப்ரார்த்தித்தேன். உன்னுடைய‌ ஒரு க‌டாக்ஷ‌த்தைப் பெற்றுத் தேன் பொழியும் ப‌ல‌ வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹிக்கும் என்று இந்த‌ சுலோக‌த்தில் "ப‌வ‌தி க‌டாக்ஷாத் வாச‌: ஸ்புர‌ந்தி" என்று பேச‌ப் போகிறேன் அம்மா!

(2) என் க‌விக‌ளைக் க‌ற்று யாரேனும் க‌விஞ‌ர்க‌ளானார்க‌ளா? அம்ருத‌வாக்கைப் பெற்றிருக்கிறார்க‌ளா? வாக்தேவியான‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை உபாஸித்துக் க‌விக‌ள் அம்ருத‌ வாக்கைப் பெறுவ‌ரென்ப‌ரே! "தேவீம் வாச‌முபாஸ‌தே ஹி ப‌ஹ‌வ‌: என்ப‌ர். இத‌ன் ப‌தில்:-- உன்னுடைய‌ வாக்குத்தான் ப‌ரிசுத்த‌மான‌ ஸ‌ர‌ஸ்வ‌தி ர‌ஸ‌ம் ஓர் அவிச்சிந்ந‌ ப்ர‌வாஹ‌மாக‌ப் புண்ய‌நதியைப்போல் பெருக்கு உடைய‌து. உன் ஸ‌ர‌ஸ்வ‌தியை குருக்க‌ள் முக‌மாகக் க‌ற்றுத் தேன் மொழியைப் பெற்று ப்ர‌காசித்த‌வ‌ர் ஆள‌வ‌ந்தார், ஆழ்வான், ப‌ட்ட‌ர் முத‌லிய‌வ‌ர். ஸ‌ர‌ஸ்வ‌தி தேவி க‌டாக்ஷ‌ம் பெற்ற‌ க‌விக‌ளிலும் ந‌ம் பூர்வாசார்ய‌ரான‌ க‌விக‌ள் சிற‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் க‌விக‌ள் இனிப்போடு நிக‌ர‌ற்ற‌ ப‌ரிசுத்தியையுமுடைய‌ன‌. உன் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் ப‌ரிசுத்த‌மான‌ இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி, அவ‌ர்க‌ள் வாக்ஸ‌ர‌ஸ்வ‌தியும் அப்ப‌டியே. "த‌ச்சாவ்யாஜ‌வித‌ப்த‌முப்த‌ம‌துராம் ஸார‌ஸ்வ‌த‌ம் ஶாஶ்வ‌த‌ம்" என்று அவ‌ர்க‌ள் வாக்கை வ‌ர்ணித்துள்ள‌து. அவ‌ர்க‌ள் ம‌தியும் வாக்கும் ஆஜாந‌சுத்த‌ம். "செஞ்சொற்க‌விக‌ள்"

க்ருஷ்ணாந்வ‌யேந‌ -- க்ருஷ்ண‌ன் ஸ‌ம்ப‌ந்தத்தால். க்ருஷ்ண‌ த்ருஷ்ணாம‌ய‌ம் உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி. க்ருஷ்ண‌னிட‌ம் சுத்த‌மான‌ பாவ‌ம் ஓர் ஸ‌ர‌ஸ்வ‌திவெள்ள‌மாக‌ப் பெருகியுள‌து. க்ருஷ்ண‌ர‌ஸ‌ நதியாகுமுன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ. க்ருஷ்ண‌னிட‌ம் ஸ‌ம‌ந்வ‌ய‌முடைய‌ன‌ உன் காவ்ய‌ங்க‌ள். ப்ர‌ஹ்ம‌த்தினிட‌த்தில் வேதாந்த‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ளுக்கு ஸ‌ம‌ந்வ‌ய‌த்தை நிரூபிக்கும் ப்ர‌ஹ்ம‌ஸூத்ர‌ங்க‌ள் க்ருஷ்ண‌னென்னும் அம்ருத‌ ஸ‌முத்ர‌த்தில் த்ருஷ்ணையைப் பெருக்குகின்ற‌ன‌ என்று ஸாராவ‌ளியில் பேசியுள‌து. ம‌ஹ‌ர்ஷியின் ஸூத்ர‌ங்க‌ளே அப்ப‌டி க்ருஷ்ண‌ த்ருஷ்ணையைப் பெருக்கும்பொழுது, ப்ரிய‌த‌மையான‌ பெண்க‌ளின் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் க்ருஷ்ண‌த்ருஷ்ணையைச் சூழ்ந்தத‌னிற் பெரிய‌தாக‌ப் பெருக்குவ‌தில் என்ன‌ ஸ‌ந்தேக‌ம்? க்ருஷ்ண‌ன் ஒருவ‌னிட‌த்திலேயே உன் ஸ‌ர‌ஸ்வ‌தி அவ்வித‌ம். பூமிப்பிராட்டி கோதை. "ய‌த் க்ருஷ்ண‌ம் தத் வ்ருத்திவ்யா:" என்ப‌து வேத‌ம். பூமியின் வ‌ர்ண‌ம் க‌ருப்பு (க்ருஷ்ண‌ம்) ய‌முனை நீரும் க்ருஷ்ண‌ வ‌ர்ண‌ம். க்ருஷ்ண‌வ‌ர்ண‌ தத்வ‌ம் கோதைக்கே.

ய‌முனாநுபாவ‌ம்:-- க்ருஷ்ண‌ ஸ‌ம்ப‌ந்தத்தால் "தூய‌பெருநீர் " ய‌முனையின் பெருமையுள‌து உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ. க்ருஷ்ண‌னுடைய‌ யௌவ‌ன‌ லீலைக‌ள் க்ருஷ்ணா நதியிலும், அந்நதிக்க‌ரையிலும் நிக‌ழ்ந்த‌ன‌. "ய‌முனாஸாக்ஷிக‌யௌவ‌ன‌ம் யுவாந‌ம்" யௌவ‌ன‌ கேளிக்கைக‌ளுக்கெல்லாம் ய‌முனை ஸாக்ஷி. அநுபாவ‌ம் என்ப‌து ம‌ன‌தில‌ழுந்தியிருக்கும் ச்ருங்கார‌பாவ‌த்தை ஸூசிக்கும் விகார‌சேஷ்டைக‌ளையும் சொல்லும். முகுந்த‌ன் வேணுகான‌த்தைக் கேட்ட‌ நதிக‌ள் ம‌ன்ம‌த‌விகார‌ம் நிர‌ம்பி "நெஞ்ச‌ழியும், க‌ண்க‌ழ‌லும்" என்ப‌துபோல், ம‌னோவிகார‌ங்க‌ளைச் சுழ‌ல்க‌ளாலும், குமிழிக‌ளாலும் காட்டிக்கொண்டு, க‌ண்ண‌னை ஆலிங்க‌ன‌ம் செய்ய‌ ஆசையைக் காட்டுவ‌துபோல், அலைக‌ளாகிய‌ கைக‌ளை உய‌ர்த்திக்கொண்டு, ஆவ‌லுட‌ன் க‌ரையிலிருக்கும் க்ருஷ்ண‌னிட‌ம் ஓடிவ‌ந்து தாம‌ரைம‌ல‌ர்க‌ளை அவ‌ன் திருவ‌டிக‌ளில் ஸ‌ம‌ர்ப்பித்துத் திருவ‌டிக‌ளைத் த‌ழுவுகின்ற‌ன‌போலும்" என்று சுக‌ர் வ‌ர்ணித்தது ய‌முனா நதி விஷ‌ய‌ம். பின்பு ய‌முனை (காளிந்தீ) க‌ண்ண‌னுக்கு அஷ்ட‌ம‌ஹிஷிக‌ளில் ஓர் ம‌ஹிஷியானாள்.

அநு+அயம் அந்வயம் , அநு+பாவம் அநுபாவம் -- காரண கார்யங்களுக்கு ஆநுரூப்யம்

தததீம் -- உன் ஸரஸ்வதிநதி யமுனையின் பெருமையை உடையது (வஹிக்கிறது). தூயபெருநீர் யமுனை என்று யமுனைத்துறைவன் ஸம்பந்தமுடையதாக (அந்வயமுடையதாக) யமுனை நீரை வர்ணித்தாய். அப்படி வர்ணிக்கும் உன் ஸரஸ்வதிக்கும் அந்த வர்ணனம் தகும். இங்கே ததாநாம் என்று ஆத்மநேபதமாக ப்ரயோகிக்காமல் தததீம் என்று பரஸ்மைபதமாக ப்ரயோகித்தது ரஸம். க்ருஷ்ணரஸவெள்ளத்தில் நீ நீராடி மகிழ்வதைப்போல், உன் ஸரஸ்வதியில் நீராடுகிறவர்களும் அதில் ஆழ்வதால், அந்த ரஸமுள்ள கவிதையை அவர்களும் பெற்று உத்தம கவிகளாகும்படிக்கும் செய்கிறாய்.

தே ஸரஸ்வதீம்:-- உன் ஸரஸ்வதியை. உன் க்ருஷ்ணபக்திரஸ கவிதா நதியில். ஸரஸ்வதீம் என்பதால் நுட்பமான பொருள் உள்ளே மறைந்திருப்பதனையும் கொள்ளவேணும். வ்யங்கியமே மிகுதி.

தீர்த்தை:-- வெள்ளமிட்டோடும் ரஸப்ரவாஹ நதியில் இறங்கும் துறைகளைக் காட்டும் பல ஆசிரியர்கள் முகமாக. 'அனேக குருக்களிடம் அனேகம்தரம் கேட்கவேண்டும்' என்பதைக் காட்டுகிறது பன்மை. 'தீர்த்தம்' என்பதற்குள்ள அனேகம் பொருள்களையும் கொள்ளவேணும். சாஸ்த்ரங்களை எல்லாம் கற்று உன் ஸரஸ்வதியில் நீராடவேணும். யஜ்ஞங்களை அநுஷ்டித்து சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டு உன் பரிசுத்த ஸரஸ்வதியில் இறங்கவேணும். 'விவிதிஷந்தி யஜ்ஞேந'

யதாவத்:-- உள்ளபடி உன் ஸரஸ்வதியின் ஹ்ருதயத்தை குருமுகமாக அறியவேணும். சாஸ்த்ரவிதிப்படி நீராடவேணும். சுத்த சுபஸங்கல்பம் செய்துகொண்டு மனச்சுத்தியோடு நீராட வேணும். அந்தர்வாஹினியானதால் (பொருள்கள் உள்ளே மறைந்து கிடப்பதால்) உள்ளபடி உன் கருத்தை அறிய ஆசிரியர்கள் வழிகாட்ட வேணும். படிப்படியாய் உன் பா4வங்களிலாழ வேண்டும்.

அவகாஹ்ய:-- இறங்கி நீராடி. ராமாயணகவி "இதமேவா வகாஹிஷ்யே தமஸாதீர்த்தமுத்தமம்" என்று புண்ய நதியிலே நீராடி அந்நதிக்கரையில் ராமாயணம் பாடினார். அதுபோல, உன் ஸரஸ்வதியில் எங்கள் பெரியோர் நீராடி மஹாகவிகளானார்கள்.

கோதே -- நீ இன்பத்துடன் கவி பாடினதால் உன் காவ்யத்தில் இனிய ரஸமுடையவருக்கு உன் கடாக்ஷத்தால் உன் போன்ற வாக்கைக் கொடுக்கக் கவிதானம் செய்பவளே

பவதீகடாக்ஷாத்:-- உன் க்ருஷ்ணரஸ நதியான ப்ரபந்தங்களில் ரஸிப்பவரை நீ கடாக்ஷிக்கிறாய். உன் ஒரு கடாக்ஷம் போதும் அவர்களுக்கு அனேக உயர்ந்த புத்திவ்ருத்திகள் கொழுந்துவிட்டு மலரும்படி செய்ய. கடாக்ஷத்தில் ஒருமை, அதனால் மலர்ந்து வளரும் புத்திகளில் பன்மை. 'விகஸ்வரதியாம்" என்பது பன்மை. 'பவதீ கடாக்ஷாத்' என்னுமிடத்தில் பவதீ என்பது ஸர்வநாம சப்தமன்று. அப்படியிருந்தால் 'பும்வத்பாவம்' வரும். கோதை கல்யாணம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கும் அது அநுசிதம். எல்லோரையும் சொல்லக்கூடிய ஓர் ஸர்வநாமசப்தத்தால் 'நாரீணாம் உத்தமவது'வான கோதையைச் சொல்லுவது அழகல்ல. வேறு உணாதிவிகுதியை உடைய சப்தம் இது. இங்கே வர்ணிக்கப்படும் கவிகள் பட்டர் முதலியவர். "பவதீ ஸம்பந்தத்ருஷ்ட்யா ஹரிம்" என்று ப்ரயோகிப்பவர் அப்பெரியோர். அவர்கள் வாக்குகளை வர்ணிக்கையில் அவர்கள் ப்ரயோகத்தை அநுஸரிப்பது அழகு.

விகஸ்வரதியாம்:-- புத்தியும் புஷ்பமாயிற்று. அதற்கு மலர்ச்சியும், மலருகையில் வீசும் மணமுமுண்டு. பூமாலை கோதை அனுக்ரஹிக்கும் வாக்கும் கவிபுத்தியும் புஷ்பமாக வர்ணிக்கப்படுவது உசிதமே.

கவீநாம்:-- ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், அம்மாள் முதலிய கவிகளுக்கு.

மகரந்தமுச:-- தேன் பொழிவதான

வாச: -- வாக்குகள், ஸ்புரந்தி -- ப்ரகாசிக்கின்றன. இத்தேனைக் காதாலும் பருகலாம், கண்ணாலும் காணலாம் போல் இருக்கிறது. "முடியானே"யிற்போல் அநுபவம். (4)

செவ்வாய், 20 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி


சுலோகம் 3

த்வத்ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
         துல்யாம் த்வதீயமணிநூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
         வாசம் ப்ரஸந்நமதுராம் மம ஸம்விதேஹி ||  .3.

கண்ணன் செவிக்கினிமை காட்டுனது காற்சிலம்பின்
பண்ணமையு மோசையினிற் பல்லணிகொண் டெண்ணறுநின்
சீரெலா மோதவருள் செய்வாய் திருக்கோதை
யேருலா மின்னே யெனக்கு                 .3.
(ஸ்ரீ ஆண்டாள் மாலை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 11 
27 - 7 - 1941ல் வெளியிட்ட நூலிலிருந்து)

         உன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும், உன்னுடைய மணிச்சிலம்பி னோசைக்குத் துல்யமானதும், உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத் தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.

தாத்பர்யம்



         (1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர். ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம். (2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர். முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே! திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் ! வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும், உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும் இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது! அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல. தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம்? வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார். ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார். உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ? எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும். எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும். தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார். ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார். ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய் பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும். அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார். அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.

         உனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும். என்னதென்பதே கூடாது. உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர். அதனிலும் இனியது அவர் செவிக்குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும்! "மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் (गजगामिनि) ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும். விக்ரமோர்வசீயம் என்னும் த்ரோடகத்தில் விக்ரமன் "பூதா நூபுரசப்தமாத்ரமபிமே காந்தாச்ருதள பாதயேத்" (ஊர்வசி வருவாளோ, அவள் சிலம்பின் ஓசையை மட்டும் என் காதில் விழச் செய்வாளோ, பின்னாலே மெள்ள வந்து தன் தாமரைக் கைகளால் என் கண்களைப் பொத்துவாளோ) என்று தன் ஆசையைப் பேசின சுலோகம் இது. இங்கே கவி நெஞ்சிலோடுகிறது. கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார். சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு. அவள் "வந்த்ராரவிந்த மகரந்த துல்ய"மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும். "கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி" வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே. தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர். 'ஜநநி' தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக. (பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே "பவதி பிக்ஷாம் தேஹி" என்று என்று குழந்தைகள் யாசிப்பர்! பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, 'ஸம்ஹிதேஹி' என்று ஸாதித்தார். நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும் ! உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன்! நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும். க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும். "நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ?" என்று நீ கேட்பாயோ? நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம். உன் நாயகன் கேட்பதே போதும். த்வதபிஷ்டவார்ஹாம். கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே. இங்கே 'அபிஷ்டவம்' என்னும் பதத்தைக் கவனிக்க வேணும். கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும் "இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ" (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில் நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும் ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை "அபிஷ்டவம்" என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை. திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் "அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்" என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார். ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை "அபிஷ்டௌதிஸ்துத்யாம்" என்று அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ், அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா? தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும் (விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் "கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:" என்று பாடியிருக்கிறீரே ! கவிஸார்வபௌமரான காளிதாஸருக்கு கௌடரீதி வராது. உமக்கு அதுவும் வச்யம். உமக்கு இத்தனை ரீதியும் வச்யமென்றீரே! என்னை ஏன் யாசிக்க வேண்டும்? உன்னுடைய அபீஷ்டவத்திற்கு அர்ஹமான வாக்கு எனக்கில்லை. ஆகையாலுன்னை நான் யாசித்துத் தானம் வாங்கித்தான் தீரவேணும். மேல்மேல் கோடி சொல்வதில் நீர் சளைக்க மாட்டீர். வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும், மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும். விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை. கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று. ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும். ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. 'ப்ரஸந்ந' என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார். இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன். உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன். புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும்! நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும். (அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி. அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.  

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி


சுலோகம் 2
வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம்
        வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
        மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2. 

         "எண்ணிறந்த சுருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என்போன்றவருடைய எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல் சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள் என் வாயைத் திறந்துவைத்துப் பேசச் செய்கின்றன."

தாத்பர்யம்


         கோதா என்கிற திருநாமத்தைச் சொல்லி அவளைச் சரணமடைகின்றேன் என்றார். தேவஜாதியர் பரோக்ஷணமான பேச்சில் ரஸிப்பர். தேவியான கோதையை 'கோதையைச் சரணமடைகிறேன்' என்று முதலில் த்வயமந்த்ரத்தில்போல பரோக்ஷமாகப் பேசிச் சரணம் புகுந்தார். மஹாகவியான கோதை, கண்டையின் அவதாரமான உத்தம (த்வநி) கவி தேசிகன் ப்ரயோகித்த 'கோதா' சப்தத்தின் த்வயர்த்தத்தை உடனே அறிந்தாள். பரிகராங்குராலங்காரத்தால் ஆசைப்படுவது கவிதை என்பது வஸ்துத்வனி. தன்னைத் துதிக்க அர்ஹமான உத்தம வாக்கைக் கேட்கிறார் இவர் என்று அறிந்து கொண்டாள். "ஸ்ரீரங்கராஜனுடைய திவ்யாஜ்ஞையால் வேதாந்த தேசிகன் என்றும், அவர் திருவோலக்கத்தில் பெரியோரால் கவிதார்க்கிக ஸிம்ஹம் என்றும் பிருதளிக்கப்பட்ட நீர் என்னைத் துதிக்க கவிதா பிக்ஷை கேட்பீரேயானால், எம் நாயகன் கொடுத்த பிருதங்கள் பொய்யாகாவோ? ரங்கபர்த்தா தானம் செய்த வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞையை அந்வர்த்தமாகச் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து, ஸஹஜபஹுகுணமான ஸ்ரக்தரைப் பாற்கடலான ஸாராவளியைப் பாடினீரே? எம் நாயகர் கொடுத்த கவிதைப் பிச்சையால் நீர் பூரணரல்லவா? அரை வயிற்றுக்குத்தான் "கொள்ளக்குறைவிலனும் வேண்டிற்றெல்லாம் தருபவனுமான" ஸ்ரீரங்கராஜன் பிச்சை கொடுத்தாரோ? நீர் வேதாந்த தேசிகராயிற்றே, நான் ஈச்வரியாயிருந்தாலும், ஈச்வர தத்வத்தின் நிலையை வேதாந்தங்கள் அறியாவோ? வேதாந்த தேசிகருக்கு வேதாந்தங்களுக்கு நிலமான ஈச்வர மஹிமை நிலமாகாதோ? ஓய் தேசிகரே" என்று கோதை வினவ,

         உன் மஹிமையிருக்குமூரிலேயே வேதாந்தங்கள் அணுகக் கூடவில்லை. வேதாந்தங்களுக்கு உன்னுடைய மஹிமை வைதேசிகம் என்பதால் கைமுத்யத்தால், வேதாந்த தேசிகனுக்கும் அவன் பெருமை வைதேசிகமென்று ஸித்திக்கிறது. ஒருவர் ப்ரபாவம் அவருக்கு ஸமீபத்திலிருந்தால் தெரியலாம். ஒரே ஊரிலிருந்தாலும் தெரியலாம். ஸாமீப்யம் அல்லது ஸாலோக்யமாவது இருக்க வேணும். ஸாலோக்யமேயில்லை. ஸாமீப்யத்திற்கு ஆசையேது? வேதங்கள் அனந்தங்களென்பர். என் போன்றவர்களுக்கு சில எழுத்துக்கள் கூட்டத்தான் தெரியும். என் போன்றவர் எழுத்துகளுக்குள் உன் மஹிமை அளவடங்குமோ? வர்ணம் என்பது எழுத்தையும் சொல்லும். ஸ்தோத்ரத்தையும் சொல்லும். (வர்ண்யதே அநேந -- இதனால் வர்ணிக்கப் படுகிறது) எங்கள் எழுத்துக்களிலடங்காது. நாங்கள் வெட்கத்தைவிட்டுக் கோணாமாணாவென்று ஸ்தோத்ரங்களை (வர்ணங்களால் வர்ணநங்களைச்) செய்தாலும் உன் மஹிமை அதிலடங்குமோ? துதிப்பாடலுக்கும் வர்ணமென்று பெயர். 'உபாத்தவர்ணே சரிதே பிநாகிந:" என்று குமார ஸம்பவம். இந்த ச்லோகத்தில் 'கர்த்தும் ததீய மஹிமஸ்துதிம்' என்ற ஆளவந்தார் ச்லோக வார்த்தை ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. துதியென்றால் மஹிமையின் துதியாகும். மஹிமையை அறியாமல் எப்படித் துதி செய்கிறது? 'யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம் பசா:' என்று யாதவாப்யுதயத்தில் 'வேதங்களே பாடிப்பாடி ஓரோர் குணத்தின் ஏகதேசத்திலே சோர்வடையும் விஷயத்தில் மிதக்ஞரானவர் யதாவத்தாய் உள்ளபடி வர்ணிப்பதில் ஸமர்த்தராகாரென்பதற்குக் கேட்க வேணுமோ?' என்று ஸாதித்ததை நினைக்க வேணும். உள்ளபடி வர்ணிப்பது வர்ணமென்னும் துதி. அங்கே கைமுத்யம் ஸ்பஷ்டமாக்கப்பட்டது. இங்கே கைமுத்யம் வ்யஞ்ஜிதம். என் அறியாமையை நான் நன்கறிந்தும் திடீரென்று பலாத்காரமாய், உன் குணங்கள், உன் சிசுவாகிய நான் ஊமையாயிருப்பதை ஸஹிக்காமல், என் மௌனத்தின்மீது கோபித்து, என் வாயைத் திறந்துவிட்டு என்னைப் பேச்சைக் கொடுக்கும் வ்யாபாரத்தில் தள்ளி விடுகின்றன. 'ஸஹஸைவ' அதிவேகமாகவே, பலாத்காரமாகவே. ஒன்றுமறியேனென்கிறீர், மௌனத்தைக் காணோமே, வாய் திறக்கிறீரே, இதென்ன ஸாஹஸம் என்பாயோ? அம்மா இது உன் குணங்களின் ஸாஹஸம், அவற்றின் பலாத்காரம், என் ஸாஹஸமல்ல. உன் குணங்கள் உன் குழந்தையாகிய என் மௌனத்தைக் கோபிக்கின்றன. பெருமாள் குணங்கள் மௌனத்தை நிர்ப்பந்திக்கும். அவர் ஆனந்த குணத்தைப் பேசி ஓய்ந்து வாயை மூடிக்கொண்டு சும்மாயிருப்பதே அழகு என்று வேதம் நிவ்ருத்தி அடைந்தது. 'முகலாயம் நிலில்யே' 'ஊமையாக லயமடைந்தது' என்று ஸ்ரீபட்டர் ஸாதித்தார். பெருமாள் குணங்கள் அவருடைய ஐச்வர்யப் பெருமையால் மௌனத்தையும், ஊமைத் தன்மையையும் ஸஹிக்கும். பேசாமலும் செய்யும். தாயாகிய உன்னுடைய குணங்களோ குழந்தை வாயை மூடி ஊமையாயிருப்பதை ஸஹிக்காது. மௌனத்தைக் கோபித்து வாயை உடனே திறந்து விடும். வேறொன்றையும் உன் குணங்கள் கோபிக்கமாட்டா. மௌனத்தை மட்டும் கோபிக்கும். பெருமாள் குணங்களுக்கும் உன் குணங்களுக்கும் இந்த வாசியுண்டு. என்ன குணங்கள்? முன் ச்லோகத்தில் மூன்று சொன்னேன். அவையென்ன? க்ஷமை, கருணை, கோதை என்ற திருநாமத்திற்கேற்ற "வாக்கைத் தானம் செய்வதென்னும் குணம்". என்ன பிதற்றினாலென்ன? சொற்குற்றம், பொருள் குற்றம் எத்தனையிருந்தாலுமென்ன? உன் பொறுமை அதையெல்லாம் பொறுக்காதோ? ஏன் அஞ்ச வேணும்? உன்னைத் துதி செய்தாலல்லது நான் தரிக்க முடியாத என் ஆர்த்தியைக் கண்டும் உன் கருணை என்னைக் கைவிடுமோ? "கோதா -- வாக்கையளிப்பவள்" என்னும் உன் திருநாமம் கோபியாதோ? இரண்டுக்கும் பரஸ்பரம் சத்ருத்வமில்லையோ? வாக்கைக் கொடுக்கும் குணம் கொள்வாரில்லாமற் போனால் கானக நிலவு போல வீணாகாதோ? "முகரயந்தி" என்பதிலும் மிக்க ரஸமுண்டு. 'முகம்' என்பது வாய்க்குப் பெயர். லக்ஷணையாக வாய்ப்பேச்சை, வாக்கைச் சொல்லும். முகத்தைக் கொடுப்பது முகரம். முகம்ராதி. ராதி என்பதற்கு, கொடுக்கிறது என்று பொருள். வாய்ப்பேச்சை, வாக்கை, துதியைக் கொடுப்பது முகரம் -- வாயைக் கொடுக்கச் செய்கிறது என்று மொத்தப் பொருள். என் வாயைக் கொடுக்கச் செய்தால்தானே, உனக்கு கோதா என்னும் திருநாமம் நிலைக்கும். பேரருளாளனைத் துதிக்கையில் உம்முடைய வாத்ஸல்யமே என்னை முகரனாகச் செய்கிறது என்று ஸாதித்த ச்லோகத்தின் வ்யாக்யானத்தில் இதை விஸ்தரிக்கிறோம்.    (2)                

திங்கள், 19 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

இது ஆண்டாள் மாதம். திரும்பும் இடங்களிலெல்லாம் திருப்பாவை உபந்யாஸங்கள். இணையத்திலெல்லாம் திருப்பாவை வ்யாக்யானங்கள். சமீபத்திய வர்தா புயல் சென்னையைப் புரட்டிப் போட்டபோதும் சென்னை மக்கள் ஆண்டாளை அனுபவிப்பதைப் பார்க்க முடிந்தது. அந்தப் புயல் பாதிப்பிலும் அடியேனுக்கு ஒரு அருமையான நூல் கிடைத்தது. அது திருப்பாவையை அருளிய ஆண்டாளைப் போற்றி ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்ரீ தேசிகன் இயற்றிய ஸ்ரீ கோதா ஸ்துதிக்கு, ஸ்வாமி தேசிகனின் பரம ரசிகரான அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமி 1937ல் எழுதிய ஒரு அற்புதமான உரை.  கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் அந்நூல் முழுவதையும் ஸ்கான் செய்ய முடிந்தது. அதில்  கிரந்த எழுத்துக்கள்  பரவி வருவதால் அவற்றைத் தமிழ்ப்படுத்தி இங்கு பகிர ஆரம்பிக்கிறேன். தினம் ஒரு சுலோகமாவது பகிர்ந்து ஆண்டாள் தன் திருக்கல்யாண தினமான தை முதல் நாளுக்குள் பூர்த்தி பண்ண அனுக்ரஹிக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையுடன் இந்த முதல் சுலோக விரிவுரை இங்கே.

||ஸ்ரீ:||

ஸ்ரீ கோதா ஸ்துதி

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
         ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ஹ‌ரிச‌ந்த‌ன‌ யோக‌த்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லாமிவாந்யாம்
         கோதாம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே ||   (1)

         ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும், ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும், க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

தாத்ப‌ர்ய‌ம்

         முன்பு தேவ‌ப்பெருமாளும் பெருந்தேவித் தாயாருமாகிய‌ திவ்ய‌ த‌ம்ப‌திக‌ளிட‌ம் இவ‌ர் (நிஜ‌) ப‌ர‌த்தை ஸ‌ம‌ர்ப்பித்து நிர்ப்ப‌ரரான‌வ‌ரே -- இங்கு கோதையைச் ச‌ர‌ண‌ம் புகுவ‌து எத‌ற்காக‌? கோதையை அம்ருத‌வாக்கால் துதிக்க‌ வேண்டிய‌த‌ற்கு ஸாம‌க்ரியான‌ ஓர் அத்புத‌ க‌விதாச‌க்திக்காக‌ க‌விப்பெண்ணான‌ கோதையை இங்கே ச‌ர‌ண‌ம் புகுகிறார். "கோதா" என்கிற‌ திருநாம‌த்தைச் சொல்லி ச‌ர‌ண‌வ‌ர‌ண‌ம் செய்வ‌தாலே இது ஸூசித‌ம். "கோ" என்ப‌து "வாக்கை, ஸ‌ர‌ஸ்வ‌தியை"ச் சொல்லும். கோதா என்ப‌த‌ற்கு "வாக்கைக் கொடுப்ப‌வ‌ள்" என்று அர்த்த‌ம். வேத‌ங்க‌ளால் க‌வி என்று புக‌ழ‌ப்ப‌டுப‌வ‌ரும், கீதை பாடிய‌வ‌ருமான‌ பெருமாளுக்கு அத்புத‌மான‌ பாமாலை கொடுப்ப‌வ‌ள். என்ன‌ க‌விஸிம்ஹ‌மானாலும், ஸ்வ‌ய‌ம் அத்புத‌ க‌வியான‌ கோதைக்கு ஸ்தோத்ர‌மாலை கொடுக்க‌த் த‌ம‌க்குச் ச‌க்தி போதாதென்று ப‌ய‌ந்து, அவ‌ளே அவ‌ளைப்பாட‌ ப்ர‌ஸூம‌துர‌மான‌, ப‌ஹுகுண‌ர‌ம‌ணீய‌மான‌, ஸ‌ர‌ஸ்வ‌த்யாதி புனித‌மான‌ ம‌ஹாநதிக‌ள் போன்ற‌ க‌விதா ப்ர‌வாஹ‌த்தை அளிக்க‌ வேண்டும் என்று இங்கே ச‌ர‌ண‌ம‌டைகின்றார். இதை மூன்றாவ‌து சுலோக‌த்தில் "தாயே! நீயே உன்னைத் துதிக்க‌ யோக்ய‌மாக‌ ப்ர‌ஸ‌ந்ந‌ம‌துர‌மான‌ வாக்கு என‌க்க‌மைய‌ க்ருபை புரிய‌வேணும்" என்று ப்ரார்த்திப்ப‌தாலும், க‌டைசி சுலோக‌த்தில், "ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியால் ப‌ஹுகுண‌ர‌ம‌ணீய‌மான‌ இந்த‌ கோதா ஸ்துதி வெளிப்ப‌ட்ட‌து" என்று தாம் கோரிய‌ ப‌ல‌ம் ஸித்தித்ததைப் ப‌ணிப்ப‌தாலும் விள‌க்குகிறார். ஸீதாதேவி த‌ன் தாய் பூமிதேவியின் ச்ரோத்ர‌மென்னும் வ‌ல்மீக‌த்தில் தோன்றிய‌வ‌ரும், த‌ன்னுட‌ன் பிற‌ந்த‌வ‌ருமான‌ வால்மீகிக‌வியைக் கொண்டு ராமாய‌ண‌த்தைப் பாடுவித்தாளேயொழிய‌, தானே க‌வி பாட‌வில்லை. ருக்ம‌ணீதேவி விவாஹ‌த்திற்கு முன் ஸ‌ப்த‌ப‌தியென்னும் விவாஹ‌ப்ரார்த்த‌னைக்காக‌ ஏழே சுலோக‌ம் பாடினாள். தேவிமாரில் ஒருவ‌ரும் ஆண்டாளைப்போல‌க் க‌வி பாட‌வில்லை. ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி குளிர்ந்த‌ ப்ர‌ஹ்ம‌குண‌ வெள்ள‌த்தில் நீராடி ம‌கிழ‌ச் செய்யும் நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தி. அது ஒரு அத்புத‌மான‌ ப‌க்தி வெள்ள‌ம். ப‌க்தி ப்ர‌வாஹ‌த்தில் நீராட‌ ஒரு அழ‌கிய‌ துறை. "ஸ‌ம்ஸார‌ ம‌ருகாந்த‌ர‌த்தில் ப‌ரிச்ராந்த‌ரான‌ தேஹிக‌ளுக்குப் பெருமாள் விஷ‌ய‌மான‌ ப‌க்தியென்னும் அம்ருத‌வாஹினியில் அவ‌காஹ‌ந‌ம் உப‌தேசிக்க‌ப்ப‌டுகிற‌து" என்று ஸாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அப்ப‌டி அவ‌காஹிக்க‌ ஆண்டாளுடைய‌ நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தியாகிய‌ ப்ர‌ஹ்ம‌ நதி சிற‌ந்த‌ ஸாத‌ன‌ம், மார்க்க‌த‌ர்சி. ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை ய‌முனாம‌ஹாநதியாக‌ வ‌ர்ணிக்க‌ப் போகிறார். ஸ்ரீ என‌ற‌ பெரிய‌ பிராட்டியார் திருநாம‌த்தோடு ம‌ங்க‌ள‌மாக‌த் துதியை ஆர‌ம்பிக்கிறார். இங்கே கோதைக்கு ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னுடைய‌ யோக‌ம் ஏற்ப‌டுவ‌தை இர‌ண்டாம் அடியில் ஸாதிக்கிறார். யோக‌ம் என்ப‌து முன்பு அடைய‌ப்ப‌டாத‌ பொருள் புதிதாக‌ அடைய‌ப்ப‌டுவ‌தைச் சொல்லும். இங்கே இருவ‌ருக்கும் அல‌ப்ய‌லாப‌மான‌ விவாஹ‌ம‌ங்க‌ள‌ யோக‌த்தைச் சொல்லும். க‌ற்ப‌கக்கொடி புதிதாக‌ ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தைச் சுற்றி அணைவ‌தை இங்கே ஸாதிக்கிறார். "சூதேன‌ ஸ‌ங்க‌த‌வ‌தீ ந‌வ‌மாலிகேயம்" என்று சாகுந்த‌ல‌த்தில் , க‌ண்வ‌ர், த‌ன‌க்கு இர‌ண்டு க‌வ‌லையிருந்தது, -- அதாவ‌து ஆச்ர‌ம‌த்திலுள்ள‌ ந‌வ‌மாலிகைக்கொடி சூத‌மென்னும் மாம‌ர‌த்தில் ஏறிச்சுற்றி அணைய‌வேண்டும், ச‌குந்த‌லை என்னும் பெண்கொடி அழ‌கிய‌ ம‌ணாள‌னை அணைய‌வேண்டும், -- இவ்விர‌ண்டு ஆசைக‌ளும் நிறைவேறிற்று என்ற‌ பேசுகிறார். இய்த‌ விவாஹ‌ம் பெரிய‌பிராட்டியாரால் கோடிக்க‌ப்ப‌ட்டு ந‌ட‌ப்ப‌தாக‌ இர‌ண்டாம‌டியில் ர‌ங்க‌ராஜ‌னுக்குமுன் ஸ்ரீயை நிவேசிப்ப‌தால் காட்டுகிறார். ஒருத‌ர‌ம் முத‌ல் பாதத்தில் ஸ்ரீயைச் சொன்ன‌தோடு த்ருப்தியில்லை. திரும்ப‌வும் திருவின் திருநாம‌த்தை நிர்தேசிப்ப‌தால், இந்த‌ விவாஹ‌ ம‌ங்க‌ள‌த்தை நிறைவேற்றுவ‌தில் ஸ்ரீக்கு அத்த‌னை த்வ‌ரையும், பாரிப்புமிருக்கின்ற‌தென்று அழ‌காக‌ ஸூசிக்கிறார். இந்த‌ யோக‌த்தை அத்ய‌ந்த‌ ம‌ங்க‌ள‌மாக‌ க‌(घ)ட‌னை செய்ய‌வேண்டுமென்று ம‌ங்க‌ள‌தேவ‌தையான‌தால் தானே எல்லாத்துக்கும் முன்வ‌ந்து கோடித்து ம‌கிழ்ந்து நிற்கிறாள். யாரோடு யோக‌ம் (சேர்த்தி)? பெரிய‌பிராட்டியாரோடும் ர‌ங்க‌ராஜ‌னோடும் சேர்த்தி. அதிலும் முன்பு திருவோடு சேர்த‌தி. பின்புதான் பெருமாளோடு. கோதையைத் த‌ன் ஸ்த‌ன‌ம் முத‌லிய‌ போக‌ஸாத‌னாவ‌ய‌மாக‌ப் பாவிப்ப‌தால், கோதையோடு யோக‌ம் த‌ன் (ஸ்ரீயின்) ஸ்த‌ன‌த்தோடு யோக‌மாகிற‌தென‌று ஸ்ரீப‌ட்ட‌ருடைய‌ அழ‌கான‌ ப்ர‌த‌ர்ச‌ன‌ம். த‌ன்னோடு யோக‌த்திலும் த‌ன் த‌ன‌த்தோடு யோக‌ம் ப்ரிய‌த‌ர‌மே. கோதை ஓர் க‌ற்ப‌கக் கொடி. பூந்தோட்ட‌த்தில் ஆவிர்ப‌வித்த‌ கோதை ஓர் தைவ‌க்கொடியே. இந்த‌க் கொடி அணைவ‌த‌ற்கு ஹ‌ரி என்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌மான‌ தேவ‌ வ்ருக்ஷ‌ம் அநுரூப‌மாகும். இர‌ண்டும் தேவ‌ஜாதி. இர‌ண்டும் வேண்டிற்றெல்லாம் த‌ரும். "ராம‌னென்று பேருடைய‌ ஹ‌ரி" என்று ராம‌னைக் காளிதாஸ‌ர் வ‌ர்ணித்தார். ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென‌னும் ஹ‌ரி என்றும் பிரிக்க‌லாம். அப்பொழுது "ச‌ந்த‌ன‌" என்று ச‌ந்த‌ன‌ம‌ர‌த்தைச் சொல்லலாம். முன் பாதத்தில் ஸ்ரீவிஷ்ணு என்ற‌து ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன் என்று இர‌ண்டாம் பாதத்தில் சொல்ல‌ப்ப‌டுவ‌தோடொன்றாகும் என்று அந்த‌ யோஜ‌னையில் ப‌ல‌ம். ஸ்ரீயென்ன‌, விஷ்ணுவென்ன‌, இவ‌ர்க‌ளுடைய‌ சித்த‌மான‌ குல‌த்தில் (நந்த‌ன‌த்தோட்ட‌த்தில்) அவ‌ர்க‌ள் ம‌கிழ‌த் தோன்றிய‌ க‌ற்ப‌கக்கொடியாவாள் கோதை. ம‌ன‌த்தை ஆராமம், தோட்ட‌ம் என்று பேசுவ‌ர் வேதாந்திக‌ள். திவ்ய‌ த‌ம்ப‌திக‌ள் இருவ‌ரும் த‌ம்முடைய‌ சுப‌மான‌ ம‌ன‌தில் த்யான‌மும் ம‌னோர‌த‌மும் செய்து அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ன‌தான‌ ஆராம‌த்தில் (நந்த‌வ‌ன‌த்தில்) தோன்றிய‌ க‌ற்பகக்கொடியாவாள் கோதை. 9வ‌து சுலோக‌த்தில், "விஷ்ணுவின் சித்தத்தில் ச‌ந்திர‌ம‌ண்ட‌ல‌ம் உதித்ததுபோல் நீ உதித்தவ‌ள். நீயும் ச‌ந்திர‌னுடைய‌ ஓர் மூர்த்தி விசேஷ‌மாவாய். திருப்பாற்க‌ட‌லில் ச‌ந்திர‌னோடுகூட‌ உதித்த‌ பெரிய‌பிராட்டியாருக்கு நீ உட‌ன்பிற‌ந்த‌வ‌ளுமாவாய்" என்று ஸாதிப்ப‌தால் இங்கே "ஸ்ரீவிஷ்ணு சித்தத்தில‌ உதித்த‌வ‌ள்" என்றும் பொருள் கொள்ளுவ‌து உசித‌மே. க‌வியின் க‌ருத்தே. ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌னோத்யான‌த்தில் தோன்றிய‌ க‌ற்ப‌கக்கொடி என்னும் பொருளுள்ள‌வே உள்ள‌து. "விஷ்ணுவை நினையாத‌வ‌ர் பூமிபார‌ம் என்றும், அவ‌ர்க‌ள் தின்னும் சோற்றைப் பிடுங்கி நாய்க்கிடுமின்" என‌றும் பேசுப‌வ‌ர் விஷ்ணுசித்த‌ர். திருவையும் பெருமாளையும் ஸ‌ர்வ‌கால‌மும் த்யானித்துக்கொண்டே இருக்கையில் திருவின் அம்ச‌மான‌ கோதையெனும் தூய‌ க‌ற்ப‌கக்கொடி அவ‌ர் தூய‌ சித்த‌மாகிய‌ பூந்தோட்ட‌த்தில் அவ‌த‌ரித்தாள். க்ருத‌ யுக‌த்தில் ம‌ன‌தாலே மாத்ர‌ம் ச்ருஷ்டி, உட‌ம்பாலல்ல‌. க‌லியிலும் இந்த‌ க்ருத‌யுக‌ப் பெண் பெரியாழ்வார் சித்தத்தில் ஆவிர்ப‌வித்தாள். சீதை க‌ர்ம‌ட‌ரும் ஜ்ஞானியுமாகிய‌ ஜ‌ன‌க‌ராஜ‌னுடைய‌ யாக‌பூமியில் அவ‌த‌ரித்தாள். ஜ‌ன‌க‌ரைப்போல‌ பெரியாழ்வாரும் சிற‌ந்த‌ க‌ர்ம‌ட‌ர். ச்ரௌத‌விஷ‌ய‌மான‌ க‌ல்ப‌ஸூத்ர‌ வ்யாக்யான‌ மிய‌ற்றிய‌வ‌ர். இர‌ண்டாம‌டியில் ஆண்டாளோடு யோக‌த்தைச் சொல்லுகையில் ச‌ந்த‌ன‌ யோக‌த்தைப் பேசுவ‌து விவாஹ‌த்திற்கேற்ற‌தாகும். ஆண்டாளை ஸ்ம‌ரிப்ப‌திலும் பேசுவ‌திலும் ப‌ரிம‌ள‌த்தையும் புஷ்ப‌த்தையும் பேசாம‌லிருக்கக் கூடுமோ? தேவோத்யான‌மான‌ பூந்தோட்ட‌த்தையும், க‌ற்ப‌கக்கொடியையும், ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தையும், ச‌ந்த‌ன‌த்தையும், "க‌ந்தத்வாராம் துராத‌ர்ஷ‌ம்" என்று வேத‌ம் கொண்டாடிய‌ க‌ந்த‌ங்க‌ம‌ழும் ஸ்ரீயை இருத‌ர‌மும் இங்கே குறிப்ப‌து ப‌ரிம‌ள‌ங்க‌ளின் சேர்த்தியைக் காட்டுகிற‌து. ம‌ற்ற‌ தேவிமாரும் கோதையும் ஒரு ம‌ன‌தே என்ப‌தைக் காட்ட‌ பூதேவியே கோதை என்ப‌தை "இவ‌ள் ஸாக்ஷாத் க்ஷ‌மாதேவியே" என்று மூன்றாம‌டியில் காட்டுகிறார். "இவ‌ள் பொறுமையின் அவ‌தார‌மே" என்ப‌து அத‌ற்குப் பொருள். "க‌ருணாமிவ‌ ரூபிணீம்" என்ற‌ப‌டி க‌ருணைக் க‌ட‌லாகிய‌ ல‌க்ஷ்மீதேவி த‌யையின் மூர்த்தியாவாள். கோதையும் க‌ருணைக் க‌ட‌லாகையால், த‌ன்னுடைய‌ எல்லையில்லாத‌ க‌ருணையால் அப‌ர‌ல‌க்ஷ்மீயாவாள் என்கிறார். இப்ப‌டி பொறுமைக்கும், க‌ருணைக்கும் நிதியான‌வ‌ளைச் ச‌ர‌ண் புகுந்தால் ப‌ல‌ம் கிடைப்ப‌து நிச்ச‌ய‌ம் என்று விள‌க்குகிறார். இங்கே "ந‌ப்பின்னை" என்றும் நீளாதேவியைக் குறிப்பிட்டுச் சொல்ல‌வில்லை. "ந‌ப்பின்னாய் க‌ந்த‌ம் க‌ம‌ழும் குழ‌லீ", "மைத்த‌ட‌ங்க‌ண்ணினாய்" என்றும் ஆண்டாளால் துதிக்க‌ப்ப‌டுப‌வ‌ளும், "ந‌ப்பின்னை ந‌ங்காய்த் திருவே துயிலெழாய்" என்று திருவோடு பிரியாத‌வ‌ளென்று பேச‌ப்ப‌டுப‌வ‌ளும், கூடாரை வெல்லுஞ்சீரில் பெருமாளோடுகூட‌ச் சேர்ந்து ஆண்டாளுக்குப் "ப‌ல்க‌ல‌னும‌ணிவ‌து" முத‌லிய‌ ச‌ம்மான‌ம‌ளிப்ப‌தாக‌ப் பாடும் விஷ‌ய‌முமான‌ ந‌ப்பின்னையும் கூடித்தான் ஆண்டாள் திருக்க‌ல்யாண‌ம் முத‌லிய‌ ம‌ங்க‌ள‌ங்க‌ள் ந‌ட‌க்குமென்ப‌து திண்ண‌மாகையால் இங்கே த‌னித்துப்பேச‌ வேண்டிய‌ அவ‌ச்ய‌மில்லை. முடிவில் 28வ‌து சுலோக‌த்தில் "ச‌த‌க‌ம‌ணிநீலா" என்று ஒருவாறாக‌ நீளாநாம‌த்தையும் நிர்த்தேசிக்கிறார். "வ‌ல‌ந்திக‌ழும் திரும‌க‌ளும‌ற்றிட‌த்தே ம‌ன்னிய‌ ம‌ண்ம‌க‌ளோடு நீளையாரும் ந‌ல‌ந்திக‌ழ் வீற்றிருந்த‌ நாத‌ன் பாத‌ம் ந‌ம‌க்கிதுவே முடியென்றெண்ணினோமே" என்ப‌தையும் நினைக்க‌வேணும். ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு சேர்த்தியில் ஸ்ரீபூதேவிக‌ளான‌ உப‌ய‌நாய்ச்சிமாரே த்ருச்ய‌ராய் ஸேவை ஸாதிப்ப‌தால், இர‌ண்டு தேவிமாரை ம‌ட்டும் குறிப்பாக‌ இங்கே நிர்த்தேசிக்க‌ப் ப‌ட்ட‌து. இந்தத் துதியில் ச்லோக‌ங்க‌ளின் எண்ணிக்கை 29. தத்துவ‌ங்க‌ள், ஜ‌ட‌ம் 24, ஜீவாத்மா 1, 26வ‌து தத்துவ‌மாகிய‌ பெருமாள் 1, அவ‌ருடைய‌ தேவிமார் 3, ஆக‌ தத்துவ‌க் க‌ண‌க்கு மொத்த‌ம் 29ஐ அநுஸ‌ரித்ததாயிருக்க‌லாம். கோதை பாடின‌ திருப்பாவையின் க‌ண‌க்கு 30ல், "ப‌ட்ட‌ர்பிரான் கோதை சொன்ன‌ ச‌ங்க‌த்த‌மிழ்மாலை முப்ப‌தும்" என்று திருப்பாவையின் வ‌ர்ண‌ன‌ம் ம‌ட்டுமான‌ க‌டைசிப் பாட்டைச் சேர்க்காம‌ல் "சிற்ற‌ஞ்சிறு காலை"யோடு பூர்த்தி செய்து 29 க‌ண‌க்காக‌த் திருவுள்ள‌மாயிருக்க‌லாம். இங்கே 29வ‌து சுலோக‌த்தில் "ச‌ர‌ண‌ க‌ம‌ல‌ ஸேவாம் ஶாஶ்வ‌தீ மப்யுபைஷ்ய‌ந்" என்று இருப்ப‌து "உன்னைச் சேவித்து உன் பொற்றாம‌ரைய‌டியே போற்றும் பொருள்" "நீ குற்றேவ‌ல் எங்க‌ளைக்கொள்ளாம‌ல் போகாது இற்றைப்ப‌றை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கு மேழேழ் பிற‌விக்கும் உன்த‌ன்னோடுற்றோமே யாவோமுன‌க்கே நாமாட்செய்வோம்" என்று 29ம் பாட்டிலுள்ள‌தையே அநுஸ‌ரிப்ப‌து ஸ்ப‌ஷ்ட‌ம். "இதி ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம் வ‌க்தி கோதாஸ்துதிம் ய‌" என்று 29ம் சுலோக‌த்திலுள்ள‌து. 30ம் பாட்டில் "கோதை சொன்ன‌ ச‌ங்க‌த் த‌மிழ்மாலை முப்ப‌துந் த‌ப்பாமே இங்கிப்ப‌ரிசுரைப்பார்" என்ப‌தை முழுவ‌தும் அநுஸ‌ரிப்ப‌தும் ஸ்ப‌ஷ்ட‌ம். "இதி வ‌க்தி" என்ப‌த‌ற்கு "ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியோடு தேசிக‌ன் (வேங்க‌டேச‌ன்) ம‌ன‌திலிருந்து உருகி (வாக்காக‌) வெளிவ‌ரும் ப்ர‌கார‌மாக‌ இப்ப‌டியே யார் த‌ப்பாமே உச்ச‌ரிக்கிறாரோ" என்ப‌து பொருள். "இப்ப‌ரிசுரைப்பார்" என்ப‌த‌ற்கும், "கோதை எப்ப‌டி ப‌க்திவெள்ள‌மாக‌ ம‌ன‌ம‌கிழ்ந்து உரைத்தாளோ அப்ப‌டியே ஓதுப‌வ‌ர்" என்ப‌து பொருள். ர‌ங்க‌ராஜ‌னிட‌ம் கோதையின் ப‌க்தியையொக்கும், கோதையிட‌ம் ஸ்ரீதேசிக‌ன் ப‌க்தி. "ச‌ங்க‌த்த‌மிழ்மாலை" என்ப‌த‌ற்குச் சிற‌ந்த‌ த‌மிழாகிய‌ ச‌ங்க‌த் த‌மிழாலிய‌ற்றிய‌ பாமாலை என்றும் சொல்லலாம். "ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம்" என்ப‌து ச‌ங்க‌த் த‌மிழ்போல‌ உய‌ர்ந்த‌ ஸ‌ம்ஸ்க்ருத‌மான‌ வைத‌ர்ப்பீ பாஞ்சாலி ரீதிக‌ளில‌மைந்தது. கோதையினின்ன‌ருளால் இத்துதி என்று பேசுவ‌தாக‌ச் சொல்லலாம். இத்துதியை ஓதும‌வ‌ன் ஸ்ரீமானான‌ ர‌ங்க‌ப‌ர்த்தாவுக்கு ப‌ஹுமாந்ய‌னாவான். திருப்பாவை முப்ப‌துந் த‌ப்பாமே உரைப்ப‌வ‌ர் "ஈரிர‌ண்டு மால்வ‌ரைத்தோள் செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமாலால் எங்குந் திருவ‌ருள் பெற்று இன்புறுவ‌ர்" கோதைக்கு "செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமால்" ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன். "ஆண்டாள‌ர‌ங்க‌ர்க்குப் ப‌ன்னு திருப்பாவை" என்ற‌ப‌டி ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னே திருப்பாவைக்கு விஷ‌ய‌ம். இம்முப்ப‌துந்த‌ப்பாமே உரைப்ப‌த‌னால் திருமாலால் வைய‌த்து வாழ்வோர்க‌ள் அருள் பெற்றின்புற‌ச் செய்வ‌தே "த‌ன‌க்குப் பாவை, வ்ர‌த‌ம்" என்ப‌தை "என் பாவாய்" என்ற‌டுத்த‌ பேச்சால் காட்ட‌ப் ப‌டுகிற‌து. "இதுவே என‌க்கு வ்ர‌த‌ம்" என்று இவ‌ள் ப‌தி இராம‌ன் ச‌ப்த‌ம் செய‌ததுபோல் கோதைக்கு இப்ப‌டி வ்ர‌த‌ம். வாக்கைக் கொடுத்த‌ கோதைவிஷ‌ய‌மான‌ இந்த‌ ஸ்துதி 29ம் கோதை சொல்லுவித்ததாகையால் இத‌ற்கும் திருப்பாவையை ஓதுவ‌துபோல‌ ப‌ல‌முண்டு என்ப‌து திருவுள்ள‌ம். "திங்க‌ட்திருமுக‌த்துச் சேயிழையார்" என்று க‌ண்ண‌னைக் குறித்து விர‌த‌ம் அநுஷ்டிக்கும் ஆய்ச்சிய‌ரைச் ச‌ந்த்ர‌பிம்ப‌ம்போன்ற‌ முக‌முடையார் என்று புக‌ழ்ந்தாள். ஒரு பெண்ம‌ணி ம‌ற்ற‌ப் பெண்க‌ளின் அழ‌கை ஒப்புவ‌ளோ? புக‌ழ்வ‌ளோ? கோதையின் கோதிலாக் குண‌ங்க‌ள் இத‌னால் வெளியாகும். திருப்பாவை முடிவில் ஆண்டாள் பேசிய‌ "திங்க‌ட் திருமுக‌த்தை", முத‌ல் பாட்டிலேயே "திங்க‌ள், ம‌தி, நிறைந்த‌ ம‌தி, ம‌திய‌ம்போல் முக‌த்தான்" என்று த்வ‌நிப்ப‌தை ர‌ஸிக‌ர் க‌வ‌னிக்க‌ வேண்டும். திருப்பாவைக்கு நாம் கோதை அருளை முன்னிட்டுச் செய‌யும் வ்யாக்யான‌த்தில் விஸ்த‌ரிப்போம். இப்ப‌டி முத‌லிலும் முடிவிலும் பேசுவ‌தால் திங்க‌ள் (ம‌தி) ம‌தி நிறைந்திருந்தது ஆண்டாள் நெஞ்சில் என்ப‌தை ஸ்ரீதேசிக‌ன் அநுப‌வித்து இங்கே முத‌ல் சுலோக‌த்தில் "ச‌ந்திர‌ன் (புருஷ‌னுடைய‌) ம‌ன‌திலிருந்து ஜாத‌ன்" என‌ற‌ புருஷ‌ஸூக்த‌ ச்ருதியை அநுஸ‌ரித்து "விஷ்ணுசித்தத்தை நந்த‌ன‌ம் செய்து அதில் தோன்றிய‌வ‌ள்" என்ப‌தையும், இர‌ண்டாம‌டியில் ச‌ந்த்ர‌ப‌ர்யாய‌மான‌ ராஜ‌ச‌ப்தத்தை ப்ர‌யோகிப்ப‌தால், ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ன் என்றும் பேசுகிறார் என்ப‌தையும் ர‌ஸிக‌ர் அறிய‌வேணும். "ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ம‌ஸ‌ம் இந்திர‌யா விஹ‌ர்த்தும்" முத‌லிய‌ ஸ்ரீப‌ட்ட‌ர் அநுப‌வ‌ங்க‌ளையும் நினைக்க‌வேண்டும். இங்கே "கோதாம்" என்ப‌து விசேஷ்ய‌ம். இது ஸாபிப்பிராய‌ம். "வாக்கைக் கொடுப்ப‌வ‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைகிறேன்" என்ற‌தால் ப‌ரிக‌ராங்குர‌ம் என்னும் அணிமுறையாக‌ வாக்கின் அபேக்ஷையை ஸூசிக்கும் ஸ்வார‌ஸ்ய‌மும் க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து. இங்கே ஆண்டாளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு யோக‌ம், அவ‌ள் திருநாமமாகிய‌ "கோதா" ச‌ப்தத்திற்கும் யோக‌ம் என்னும் அவ‌ய‌வ‌ப் பொருள். இங்கே "விஷ்ணுசித்த‌குல‌நந்த‌ன‌" என்ப‌தால் "ஜ‌ன‌க‌வ‌ம்ச‌த்தர‌ச‌ர்க‌ள் குல‌த்திற்கு என் பெண் கீர்த்தியைக் கொண‌ர்வாள்" என்ற‌ ஜ‌ன‌க‌ர் வார்த்தையை நினைக்க‌ வேண்டும்.