||ஸ்ரீ:||
தயாசதகம்
திருவருட்சதகமாலை
அசேஷ விக்நசமநம் அநீகேச்வர மாச்ரயே
ஸ்ரீமத:கருணாம் போதே: சிக்ஷாஸ்ரோத இவோத்திதம். .5.
துன்றுதடை யாவுமுட னன்றவை துடைக்கும்
வன்றரும மங்கையுறை மார்பனரு ளாழி
வென்றியுறு வீறுதரு மேரணிய றக்கோல்
ஒன்றிருடி கேசனநி கேசனைய டுத்தேன். .5.
[தடைகள் யாவையும் உடனே துடைப்பவரும், ஸ்ரீநிவாஸனுடைய கருணை நிரம்பிய தடாகத்திலிருந்து சிக்ஷணம் செய்கிறது என்ற வாய்க்காலாகக் கிளம்பினவருமான விஷ்வக்ஸேனர் என்னும் ஸேனை முதலியாரை ஆச்ரயிக்கிறேன்.]
ஸமஸ்த ஜநநீம்வந்தே சைதந்யஸ்தந்யதாயி நீம்
ப்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் .6.
துன்னுமுடி மின்னுமறை யுன்னுதிரு மன்னன்
பொன்னருளி னன்னருரு வென்னவுயி ரெல்லாம்
மன்னுமக வன்னவுணர் வம்மமினி தூட்டும்
அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன். .6.
[உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.]