சனி, 31 டிசம்பர், 2011

ஆரணமும் அருளிச் செயலும்

அன்று தூப்புல் ஸ்வாமி தேசிக அவதார விசேஷத்தினால் பெரும்புகழ் அடைந்தது என்றால் இன்று அவர் புகழைப் பரக்கப் பாடி, பல்வகையால் அவர் ஸ்ரீஸூக்திகளைப் பாரெங்கும் உள்ளோர் உய்யும் வண்ணம் ப்ரவசநங்கள் செய்து தேசிகனல்லால் வேறோர் தெய்வமில்லை என்று வாழ்கின்ற வேதமோதுமுத்தமர்களால் தூப்புல் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அப்படி ஸ்வாமி தேசிகன் திருவடித் தொண்டே தலையாய பேறு என்று வாழ்வோர் பலருள்ளும் ஸ்ரீ உ.வே. சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடிக்கடி இணையத்தின் வழியாயும் பல அற்புதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நம் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். ஆசார்ய அனுக்ரஹத்தால் இந்த நிர்மூடன் மீதும் அவருக்கு அளவற்ற ப்ரீதி, அதனால் அடிக்கடி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். அப்படி நேற்று அடியேனுக்கு அனுப்பிய ஒரு கட்டுரையை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆரணமும் அருளிச்செயலும்.
தாஸஸ்ய விஞ்ஞாபநம்.
 ,
தேவர்கள் யாகத்தில் எதை செய்தார்களோ அதையே அஸுரர்களும் செய்தார்கள் என்ற பொருளில்
வேதத்தில்  தேவா வை யத்யஞ்ஞேகுர்வதததஸுரா அகுர்வத என அநேக இடங்களில் ஓதப்படுகிறது.
இதுபோல் யதேவாத்வர்யுஃ கரோதிதத்ப்ரதிப்ஸ்தாதா கரோதி,  ,
.யாகத்தில் அத்வர்யு என்கிற ரித்விக்கு செய்வதை ப்ரதிப்ஸதாதா எனகிற ரித்விக்கும்
செய்கிறார்,அத்வர்யுகணத்தில் அத்வர்யு பெரியவர் ஆவார்ப்ரதிப்ரஸ்தாதா சிறியவர் ஆவார்.பெரியவர் செய்வதையே
சிறியவரும் செய்வதை லோகத்திலும் காணலாம் என்பதை  வேதம் கூறுகிறதுதஸ்மாத் யத் ச்ரேயான் கரோதி தத் பாபீயான்கரோதி,
இதையே யத்யதாசரதி ச்ரேஷ்டஃ தத்ததேவேதரோ ஜனஃஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே,
லோகத்தில்  உயர்ந்தவன் எதை அனுஷ்டிக்கிரானோ,அதை ப்ரமாணமாக கொண்டு மற்றவர்களும் அதை பின்பற்றுகிறார்கள் என
ஸ்ம்ருதியில் கீதாசார்யன் குறிப்பிடுகிறார்..
,இதையே சற்று வேறுவிதமாக  பூர்வாசார்யர்கள் ஸாதித்த விஷயத்துக்கு விரோதமில்லாமல் பின்புள்ளவர்கள்  விஷயத்தை ஸாதிக்கவேணும் என
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப்பேசாதே.
 தம்நெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவரவார்தை என்பர் மூர்கராவார்  என ஸ்ரீரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார்.
முன்பு கூறிய க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் செய்ததை ஸ்ரீமணவாளமுனியும் செய்ததாக அமைந்தவிதத்தை நாம் சிறிது அனுபவிப்போம்
ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில்
ஆழ்வார்கள் அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவுதிருநாமங்கள் அவர்தாம் செய்த
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகையிலக்கம் மற்றுமெல்லாம்.
வீழ்வாக மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே ,,,,,,  என ஆழ்வார்கள் அவதரித்த
மாதம் நக்ஷத்ரம் திவ்யதேசம்  மற்றும் அவர்கள் செய்த பாசுரத்தின் தொகை முதலியவற்றை ஒரு பாட்டில் குறிப்பிட்டு 
ஆழ்வார்களை வரிசை படுத்தி அனுக்ரஹித்தார்பிறகு 15,16 பாட்டுகளில் பாசுரங்களை கூட்டி கணக்கிட்டு நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே  என ஸாதித்து பிறகு  வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் என முன்பு ஸாதித்தக்ரமத்தில்  வரிசையாக ஸாதிக்கிறார்.இங்கு எம்பெருமானார்  ஆழ்வாரில்லை,ஆயினும் அவர் விஷயமாக இராமானுசநூற்றந்தாதி உள்ளபடியால் அதையும் சேர்த்தே 4000 பாசுரம் என கணக்கிடுவதால் அவருக்கும்  பாசுரத்தை சேர்த்துள்ளார்,ஸ்ரீமதுரகவியாழ்வார்  நம்மாழ்வார் விஷயமாக கண்ணினும் சிறுத்தாம்பு ப்ரபந்த்தை அனுக்ரஹித்தாலும் அதுவும் ப்ரபந்தத்தில்  சேர்ந்ததாலும்,அவரையும் மற்றும் ஆண்டாளையும் சேர்த்து ஆறிருவரோடொருவர் அவர்தாம் செய்த,துய்யதமிழ்மாலை இருபத்துநான்கின் பாட்டின் தொகை என ஸாதித்தார்.மற்றுமுள்ள ஆசார்யர்களை இங்கு குறிப்பிடவில்லை.ஸம்ப்ரதாய வரலாறையும் குறிப்பிடவில்லை.
இனி ஸ்ரீமணவாளமுனி ஸாதித்த உபதேசரத்நமாலையை அனுபவிப்போம்,
ஸ்வாமி தேசிகன் பரமபதஸோபானக்ரந்தத்தில்
1,யதிவரனார் மடப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்தையுள்மன்னியதே என எம்பெருமானாரின் சிஷ்யரான மடப்பள்ளி ஆச்சான் வழியாக கிடைத்த ரஹஸ்யார்தங்கள் கிடாம்பி அப்பிள்ளார் அநுக்ரஹித்த க்ரமத்தில்  தன் ஸ்ரீஸூக்தியில்  அமைந்ததை ஸாதிப்பதாக அனுக்ரஹித்த க்ரமத்தில்  ஸ்ரீமணவாளமுனி தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையின் அனுக்ரஹத்தால்  வந்த உபதேசத்தை பேசுவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.ஸ்வாமி தேசிகன் பெற்றது ரஹஸ்யார்தம்,ஸ்ரீமணவாளமுனி பெற்றது ஸம்ப்ரதாயவரலாறு.,

2.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில் 52 வது பாட்டில் கோதற்றமனம் பெற்றார் கொள்வார் நம்மைஎன்றும் கூனுளநெஞ்சுகளால் குற்றமென்னு இகழ்ந்திடினும் என ஸாதித்தக்ரமத்தில் மற்றோர்கள் மாச்சர்யத்தால் இகழில்வந்ததெந்னெஞ்சே என ஸ்ரீமணவாளமுனி குறிப்பிடுகிறார்..

3.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவிபொய்யில் புகழ் கோழியர்கோன்  விட்டுசித்தன் பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்ஐயனருள் கலியன்என ஸாதித்தபடி,
பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன்,துய்யபட்டநாதனன்பர்தாள்தூளி நற்பாணன் நன்கலியன்என ஸாதித்தார்.

4.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே  என ஸாதித்தபடி
ஆழ்வார்கள் இந்தவுலகிலிருள் நீங்க வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாமென்றார்.ஆக இங்கு ப்ரதிஞ்ஞை செய்தது மாதமும் நாளும் மாத்ரமாகும் அவதரித்த ஊரை சொல்லவில்லை என்பது விசேஷம்..
 பிறகு பொய்கை பூதம் பேய்  என மூவரும் அவினாபூதர்களாதலால் ஆகலாம் மூவரையும் ஒரே பாட்டில் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் என குறிப்பிடுவது,அடுத்து வரவேண்டியது பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன் கணக்கில்  மழிசைப்பிரான் , ஆயினும் முன்பு சொன்னக்ரமத்தை மாற்றி  மாதகணக்கில் ஐப்பசிக்கு அடுத்ததான கார்திகை மார்கழி தை மாசி வைகாசி ஆனி என அம்மாதங்களில் அவதரித்த மங்கையர்கோன்,  பாணர் , தொண்டரடிப்பொடியாழ்வார்,மழிசைப்பிரான்,குலசேகரன்,சடகோபர்பெரியாழ்வார்,வரையில் ஸாதித்து மீண்டும்
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள்,மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் இந்தவுலகோர்க்குரைப்போம் யாம். என குறிப்பிடுகிறார்.இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,முன்பு சொன்ன க்ரமம் வேறு தற்சமயம் கூறுவது வேறு,இது முகத்தில் வேறுவிதமாக ஊர்த்வபுண்ட்ரம் தரித்து மற்ற அங்கங்களில் வேறுவிதமாக தரிப்பது போல் உள்ளது.மேலும் ஆழ்வார்களில் மதுரகவியும் உண்டு எனில் முன்பே ப்ரதிஞ்ஞை செய்தபடியால் இங்கு மீண்டும் அவரை தனியே குறிப்பிடுவதும்  முன்பு கூறிய கோஷ்டியில் இவரை சேர்க்காததும் ஏன் என. பதிலை ஓரான் வழியாக உபதேசம் பெற்ற ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

5.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் எண்ணின் முதலாழ்வார்கள் என 15,16 பாட்டுகளில்  ஆழ்வார்கள் அனுக்ரஹித்த பாசுரங்களை கூட்டி கணக்கிடுவதை போல் ஆழ்வார்கள் அவதரித்த ஊர்களை 30 முதல் 33 வரையில் 4 பாட்டுகளில் குறிப்பிடுகிறார்.
எண்ணரும் சீர்ப்பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர் வண்மைமிகு  கச்சிமல்லைமாமயிலை,மண்ணியினீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்.,ஓங்குமுறையூர் பாணனூர்,30,

தொண்டரடிப்பொடியாழ்வார் தோன்றியவூர் தொல்புகழ்சேர் மண்டங்குடியென்பர் மண்ணுலகில்,எண்டிசையுமேத்தும் குலசேகரனூரெனவுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்,31.

மன்னுதிருமழிசை மாடத்திருக்குருகூர்மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்,நன்னெரியோர் எய்ந்த பக்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான்.வாய்ந்துதித்தவூர்கள்வகை.32.

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத்திருக்கோளூர்,ஏரார் பெரும்பூதூரென்னுமிவைபாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார்,எதிராசர் தோன்றியவூரிங்கு,33,
இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,இங்கு ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களை கூறுவதாக ப்ரதிஞ்ஞை இல்லை.மேலும் வெண்பாவானபடியால் அவரவர்கள் பாட்டில்  ஊரையும் சேர்க்கமுடியாது என தனியாக கூட்டினாரோ என,பதிலை ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

6.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில்
என்னுயிர் தந்தளித்தவரை சரணம் புக்கு என தனது ஆசார்யர்முதலாக ஸாதித்த க்ரமத்தில்
தெருளுற்றவாழ்வார்கள் சீர்மையரிவாரார்,அருளிச்செயலையறிவாரார். அருள் பெற்றநாதமுநிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமநமே யுண்டோ பேசு என  நாதமுனி முதலாக தேசிகன் என ப்ரஸித்திபெற்ற நம் ஸ்வாமிதேசிகன் பர்யந்தமாக ஸாதிக்கிறார்.

ஆழ்வார்களையும்  அருளிச்செயல்களையும்,தாழ்வாக நினைப்பவர்கள்தாம். நரகில் வீழ்வார்களென்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்.சென்றணுகக்கூசித்திரி. என ஸாதிப்பதால் ஆழ்வார்களைப்போல் அநேகம் ப்ரபந்தத்தை அனுக்ரஹித்த ஸ்வாமி தேசிகனை தாழ்வாக நினைப்பவரிடம் செல்லவேண்டாமென்றும் உபதேசித்தபடி.

 ஸத்யமிப்படியிருக்க சிலர்  ஸ்வாமிதேசிகனுக்கு முன்பாக இருந்த ஆசார்யர்கள் ஸ்வயம் த்ராவிடப்ரபந்தத்தை ஸாதிக்கவில்லை ,ஸ்வாமிதான் தமிழ்ப்ரபந்தத்தை முதன்முதலாக ஸாதித்தார்,ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஸூக்தியை copy  அடித்து ரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார் என்றும் .ஸ்வாமிதேசிகன் வாழித்திருநாமத்தை copy அடித்து மற்ற வாழித்திருநாமம் வந்தது என குற்றம் கூறுவது தவறாம்,ஏற்றத்தாழ்வை மத்யஸ்தர்கள் அறிவார்கள்.

திங்கள், 26 டிசம்பர், 2011

Natteri swamy’s Guru Paramparai vaibhavam dated 25-12-2011 Upanishath Bhashyakarar swami


ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (25-12-2011) “குரு பரம்பரை வைபவம்” உபந்யாஸத்தில், உபநிஷத் பாஷ்யகாரர் என்று ப்ரஸித்தி பெற்ற வேலாமூர் ஸ்ரீரங்கராமாநுஜமுனியின் திவ்ய சரித்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.
To listen to online
68 Guru paramparai Vaibhavam (25-12-2011) by pamaran
To download from Mediafire
http://www.mediafire.com/?i8by620gigx61oh


புதன், 21 டிசம்பர், 2011

நித்ய கர்மாநுஷ்டானங்கள்


நேற்றைய பதிவில் "நித்யகர்மாநுஷ்டான விதிகள்" என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியையும் நேற்றைய பதிவில் படித்திருக்கலாம். விதிகள் மீறப்பட வேண்டியவை என்பது நமது நாட்டில் மக்களின் மனோநிலை. சாலைப் போக்குவரத்து விதிகளிலிருந்து, ரெயிலவே முன்பதிவு, பள்ளி கல்லூரி சேர்க்கை என்று எங்கும் எதிலும் விதிகளை அலட்சியம் செய்தே வாழ்பவர்கள் நாம். இந்த கர்மாநுஷ்டான விதிகளை மட்டும் கடைப்பிடித்து விடுவோமா?

ஆனால், இந்நூலில் கண்டுள்ள விதிகளில் சந்த்யா வந்தனம் ஒன்றைத் தவிர மற்ற எதையும் நாம் பின்பற்ற முடியாத அளவுக்குக் கடுமையான விதிகள்! கர்மாநுஷ்டான விதி என்று தெரியாமலே நாம் அதில் ஒன்றைக் கடைப்பிடிக்கிறோம். அது என்ன என்று இங்கே நான் சொல்ல மாட்டேன். படித்துப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய சூழலில் கடைப்பிடிப்பது என்பதும் முடியவே முடியாததுதான். ஆனால் அவைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் பாபங்களை அறிந்தால் ....... அது இன்னும் வேதனை! நூலைப் படித்த பிறகு, நான் தெரிந்து கொண்டது நம்மில் 99.9% இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை, முடியாது என்பதுதான். முன்னோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்நூலை வலையேற்றியிருக்கிறேன்.

ஸ்ரீமத் அழகியசிங்கர் திருப்புல்லாணியில் தனது அனுக்ரஹணபாஷணத்தில் மீண்டும் மீண்டும் சந்த்யாவந்தனம் செய்வதன் அவசியத்தைப் பற்றிக் கூறியது நினைவிருக்கும். இந்நூலைப் படித்த பிறகுதான் அவருடைய அபார காருண்ய குணம் புரிந்தது. நித்ய கர்மாநுஷ்டான விதிகளில் குறைந்த பக்ஷம் இன்றும் கடைப்பிடிக்கக் கூடியதான சந்த்யாவந்தனத்தின் மூலமாகவாவது நாம் சேர்த்துக் கொண்டிருக்கும் பாபச் சுமைகளைக் குறைத்துக் கொள்ளட்டும் என்ற கருணையினால்தான் அவர் அதை வலியுறுத்தியது என்று இப்போது உணர்கிறேன்.

நூலைப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கிலிருந்து நகலிறக்கிக் கொள்ளலாம். இரண்டு பிடிஎப் கோப்புகளாக உள்ளன. 


 Mediafire லிங்கிலிருந்து நகலிறக்க (adiyen learnt from many thro' mail and phone that skydrive link is not properly opening and hence adiyen uploaded to Mediafire also)
Nithyakarmanushtanam 1 
http://www.mediafire.com/?6ymuq5kmr6n125m
Nithyakarmanushtanam 2
http://www.mediafire.com/?7cjwpotuin4mdncபரான்ன போஜனம்!

நேற்றைய நாட்டேரி ஸ்வாமியின் குரு பரம்பரைஉபந்யாஸத்தைக் கேட்டவர்கள் அவர் பரான்னத்தைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டிருப்பீர்கள்.

இன்று யதேச்சையாக நண்பர் ஒருவர் வீட்டில் விரோதி வருஷம் விஜயதசமி (அதாவது 1949-1950) அன்று ஸ்ரீ நே.ஈ. வேங்கடேச சர்மா என்பவர் ப்ரசுரித்த “வைத்யநாத தீக்ஷிதீய ஸ்ம்ருதி முக்தாபல ஆன்ஹிக ஸாரமான நித்ய கர்மானுஷ்டான விதிகள்” என்ற பழைய நூல் ஒன்று கிடைத்தது. அதில் பரான்ன போஜனத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதில் கண்ட அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க இன்றைய சூழலில் முடியாவிட்டாலும் முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்போமே!

எப்போதே எழுதின அந்த நூலில் அடியேனுக்கும் ஒரு பெயர் சூட்டிவிட்டார். எவ்வளவு தீர்க்கதரிசிகள் நம் முன்னோர்கள்! என்ன பெயரா? கடைசி வரியில் இருக்கிறது.

அந்த நூலை முழுவதும் படித்தால் சாஸ்த்ர விரோதமில்லாமல் இன்று நடப்பவர் அநேகமாக யாருமேயில்லை என்று கூறலாம்.

நூலைக் கொடுத்தவர் அடித்த கமெண்ட்; அப்போ அந்த நாளிலேயே பரான்னம் புசிப்பது பரவலாக இருந்திருக்கிறது அதனால்தானே இவ்வளவு கடுமையாக எழுதியிருக்கிறார்கள்!

நூலை பிடிஎப் ஆக நாளை இணையத்தில் வெளியிடுவேன்.

 

பரான்ன போஜன தோஷங்கள்

பிறரது அன்னத்தைப் புசித்தலானது புத்தி, தைர்யம், வீர்யம், கண் காதுகள், மனஸ், ப்ராணன், நினைவு, அறிவுகள், யாவையையும் குலைத்துவிடும். இவன் செய்த ஜபம், தபம், ஹோமம், தானம், அத்யயனம், இவை யாவும் அன்னதாதாவைச் சேர்ந்துவிடும். ஒருவன் அன்னத்தையுண்டு புணர்ந்து புத்ரன் உண்டானால் பிறந்தவனின் ஸர்வ புண்ய கர்ம பலனும் அன்னதாதா வினுடையதே என்று வ்யாஸ பகவான் கூறுகிறார்.(வீர்யம் அன்னத்தினாலுண்டாவதால்). தவிரவும் அன்னமளிப்பவனுடைய பாவமும் இவனையடைந்து விடுகிறது. க்ருஹஸ்தன் பரான்ன போஜனத்தால் பதிதனா கிறான். பரான்ன நியமம் வைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுபவர் புசித்துவிட்டால் நாய், பன்றி, கழுதையாய்ப் பிறக்கின்றனர். பரான்ன போஜனமே செய்பவர் பசுமாடாய் ஜனித்து அன்னமளித்தவர்க்கு உழைக்கின்றனர். தேவபித்ரு கர்மங்களைச் செய்துவிட்டுப் பிறர் வீட்டிற்போய்ப் புசிப்பவன் பாவத்தையே புசித்தவனாய் செய்துவிட்டு வந்த கர்ம பலன்களை அன்னமளிப்பவனுக்குக் கொடுத்தவனாய்விடுகி றான் என ஜமதக்னி மஹரிஷி கூறுகிறார்.

பரான்னத்தில் த்ருஷ்டியோடு தன் கர்மாக்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. பிறர் அன்னம் தேஹத்திலிருக்கும் பொழுது செய்யப்படும் வைதிக கர்மங்களின் பலன் மூன்றில் ஒரு பங்கு அன்னமளித்தவனை அடைகிறது. பூமி, பசு, பொன் ரத்னங்கள் முதலியவைகளை வாங்கிக் கொள்ளலாம். அன்னம் மட்டும் புசிக்கக் கூடாது என யமன் கூறுகிறார்.

பிறருடைய அன்னம், வஸ்த்ரம், தீர்த்தம், பெண்கள், க்ருஹம் யாவும் அனுபவிப்பவனுடைய தனத்தைக் குலைக்கும். க்ருஹஸ்தனுக்குப் பரான்ன போஜனம் பரிஹரித்துக் கொள்ள முடியாத ஒரு தனித்த பாவமாய் நிற்கிறது. சிஷ்டரான ச்ரோத்ரியருடைய ஒரு நாள் அன்னம் மட்டும் நம் ஸகல பாவங்களையும் நிவர்த்திக்கிறதால் அது க்ராஹ்யமாகும்.

பஞ்சமஹாயக்ஞங்களை அனுஷ்டித்துவிட்டுப் பிறருடைய அன்னத்தில் வயிறு வளர்க்கும் அதமர்கள் பரபாகரதர் என்றும், க்ருஹஸ்தனுக்கு உரிய கர்மாக்களை விதிப்படி அனுஷ்டித்து அவற்றை க்ரயத்திற்கு விற்பவன் அபசரென்றும் பெயராகும். அபசருக்குக் கொடுத்த தானம் தாதா ப்ரதிக்ரஹீதா இருவர்களையுமே நரகமடைவிக்கிறது. பரபாக நிவ்ருத்தர், பரபாகதர், அபசர், பரிவித்தி, பரிவேத்தர், குண்டன், கோளகன், தேவலன், புரோஹிதர்களது அன்னத்தைப் புசித்துவிட்டால் சாந்த்ராயண க்ருச்ரம் அனுஷ்டிக்கக் கடவர். அனாசாரன், நிஷித்தன், அசுசியாயுமுள்ள அந்தணன் அன்னத்தைப் புசித்துவிட்டால் ஒரு நாள் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். ஔபாசனாக்கியை விட்டுவிட்டுத் தன்னை க்ருஹஸ்தனாய்ச் சொல்லிக்கொள்ளும் அசடுக்கு வ்ருதாபகன் எனப் பெயர்.. இவருடைய அன்னமும் த்யாஜ்யமே.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

Natteri swamy's Guru Paramparai Vaibhavam dated 19-12-2011

ஆசார்ய பரம்பரையில் ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பின், பஞ்சமத பஞ்சனம் தாததேசிக ஸ்வாமி, அவரின் ப்ரதான சிஷ்யரான ஸ்ரீஅனந்தாச்சார்யர் ஸ்வாமி ஆகியோரைப் பற்றிய விரிவான உபந்யாஸம், நடாதூர் என்ற ப்ரஸித்தமான அக்ரஹாரம் இன்று காணமுடியாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம், அந்த நடாதூர் அக்ரஹாரத்துக்குப் பின்னால் அவர்களுக்காக உருவான அக்ரஹாரங்கள் எவை என்பது போன்ற பல விஷயங்கள் ,பரான்னம் என்று அருமையான உபந்யாஸமாக இன்று அமைந்தது. ஆன்லைனில் கேட்டு மகிழ


To download from Mediafire


http://www.mediafire.com/?z2jmdctkb40u60l

புதன், 14 டிசம்பர், 2011

நாட்டேரி ஸ்வாமியின் "குரு பரம்பரை வைபவம்" உபந்யாஸங்கள்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி 5-12-2011 மற்றும் 12-12-2011 தேதிகளில் நிகழ்த்திய "குரு பரம்பரை வைபவம்" டெலி உபந்யாஸங்களை வழக்கம்போல் மீடியாபையர் லிங்கிலிருந்து நகலிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் ஆன் லைனில் கேட்க விருப்பப் படுகிறார்கள். அவர்களுக்காகவும் லிங்குகள் கொடுத்துள்ளேன்.
ஸ்ரீமத் ஆதிவண் சடகோப ஜீயருக்குப் பின் இந்த ஆசார்ய பரம்பரை வளர்ந்த விதத்தை மிக விரிவாக சாதித்துள்ளார். கேட்டு அனுபவித்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய அருமையான தொடராக இது வந்து கொண்டிருக்கிறது. மிகவும் தற்செயலாக என்னுடைய வேர்டு ப்ரஸ் இணைய தளத்தில் (http://thiruthiru.wordpress.com) அடியேன் பதிவிட்டு வரும் ஆசார்ய பரம்பரைக்கு நாட்டேரி ஸ்வாமியின் உபந்தாஸம் விரிவுரையாக இரண்டு வாரங்களாக அமைந்திருக்கிறது.
5-12-2011 உபந்யாஸத்தை மீடியாபையரிலிருந்து நகலிறக்க
http://www.mediafire.com/?wc8wldzkjkawd3n

12-12--2011 தேதிய உபந்யாஸத்தை நகலிறக்க
http://www.mediafire.com/?3h82q5xvparj9hn

ஆன் லைனில் கேட்க விரும்புபவர்களுக்காக
5-12-2011 தேதிய உபந்யாஸம்


 12-12-2011 தேதியஉபந்யாஸத்தை இங்கு கேட்கலாம்

.

வியாழன், 8 டிசம்பர், 2011

An Obituary

Following is a mail message adiyen received from a friend.


Obituary printed in the London Times.....Absolutely Brilliant !!! 


Today we mourn the passing of a beloved old friend,
 Common Sense , who has been with us for many years. 
No one knows for sure how old he was, since his birth records were long ago lost in bureaucratic red tape.
 
He will be remembered as having cultivated such valuable lessons as:
- Knowing when to come in out of the rain;
- Why the early bird gets the worm;
- Life isn't always fair;
- and maybe it was my fault. 

Common Sense 
lived by simple, sound financial policies (don't spend more than you can earn) and reliable strategies (adults, not children, are in charge).

His health began to deteriorate rapidly when well-intentioned but overbearing regulations were set in place.
 
Reports of a 6-year-old boy charged with sexual harassment for kissing a classmate; teens suspended from school for using mouthwash after lunch; and a teacher fired for reprimanding an unruly student, only worsened his condition. 

Common Sense 
lost ground when parents attacked teachers for doing the job that they themselves had failed to do in disciplining their unruly children.

It declined even further when schools were required to get parental consent to administer sun lotion or an aspirin to a student; but could not inform parents when a student became pregnant and wanted to have an abortion. 

Common Sense 
lost the will to live as the churches became businesses; and criminals received better treatment than their victims. 

Common Sense 
took a beating when you couldn't defend yourself from a burglar in your own home and the burglar could sue you for assault. 

Common Sense 
finally gave up the will to live, after a woman failed to realize that a steaming cup of coffee was hot. She spilled a little in her lap, and was promptly awarded a huge settlement. 

Common Sense 
was preceded in death, by his parents, Truth and Trust, by his wife, Discretion, by his daughter, Responsibility, and by his son, Reason.

He is survived by his 4 stepbrothers;
I Know My Rights
I Want It Now
Someone Else Is To Blame
I'm A Victim 

Not many attended his funeral because so few realized he was gone.
 
If you still remember him, pass this on.
 
If not, join the majority and do nothing.
  

திங்கள், 28 நவம்பர், 2011

Natteri swamy's "Guru Paramparai Vaibhavam" tele-upanyasam dated 28-11-2011

நம்முடைய ஆசார்யர்கள் -- முனித்ரயமோ ஸ்ரீ அஹோபில மட ஸம்ப்ரதாயமோ-- நம்முடைய காலக்ஷேப பரம்பரைகளிலே எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்று அறிந்து அனுபவித்து,அதன்பின் ப்ரும்மதந்த்ர ஜீயர் மற்றும் ஆதிவண்சடகோப ஜீயர் பெருமைகளை கேட்டு ஆனந்திக்க வழி செய்யும் வகையில் நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (28-11-2011) டெலி-உபந்யாஸம் அமைந்திருக்கிறது. ஆதிவண்சடகோப ஜீயரின் பெருமைகளைப் பலபடியாகப் பரக்கப்பேசிப் பரவசப்படும் அதே நேரத்தில், நம்மாழ்வாருக்கு அப்பெயர் வந்தது ஆதிவண்சடகோப ஜீயராலே என்கிற ப்ரசாரத்தையும் மறுத்திருப்பதும் கேட்டு அறியவேண்டியது.

To download from MediaFire
http://www.mediafire.com/?fca8cuh0s0acqxo


சென்ற வாரங்களில் நயினாராசார்யரின் பெருமையை இங்கு கேட்டு அனுபவித்தவர்கள் அந்த உன்னதமான வரலாற்றை ஒரே வரியில் விவரித்திருப்பதை http://thiruthiru.wordpress.com ல் படித்து மகிழலாம்.

புதன், 23 நவம்பர், 2011

Guru Paramparai Vaibhavam dated 21-11-2011

Enjoy Guru Paramparai Vaibhavam tele-upanyasam by Natteri Sri Rajagopalachariar delivered on 21-11-2011
http://www.mediafire.com/?3fwt7plxgec2zi8

வியாழன், 17 நவம்பர், 2011

சனி, 12 நவம்பர், 2011

ஹிந்து நாளிதழில் ஒரு புதிய முயற்சி

எத்தனை பேர் பார்த்தீர்களோ கேட்டீர்களோ தெரியவில்லை. "The Hindu" நாளிதழ் தனது இணைய பக்கத்தில் ஒரு புதிய முயற்சியைத் துவங்கியுள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தலையங்கங்கள் செய்திகள் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்து அதுவும் ஏதோ தமிழிலேயே எழுதப் பட்டதுபோல் அருமையான மொழிமாற்றத்துடன் போட்காஸ்டாக அங்கு கேட்க வழி செய்துள்ளது. மிக அருமையான முயற்சி. பாராட்டுவோம்.

 "The Hindu" has started a novel idea in its website. A few selected editorials and news have been translated into Tamil and available as podcasts there. A sample is available here

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2612170.ece

புதன், 9 நவம்பர், 2011

Sri Andal Adaikkala Patthu

 

Enjoy this adaikkala patthu on Sri Andal by Smt Goda Parthasarathi which appeared in March 1978 issue of “Sri Ranganatha Paduka”

The back issues of “Sri Ranganatha Paduka” show considerable participation of Ladies in those days. Nowadays except in “Sri Desika Seva”, in all other Srivaishnava journals ladies writing on samprathaya matters is almost nil. Not that learned ladies are not there. They must be encouraged.

Read  “Sri Andal Adaikkala Patthu” here

SVR Andal adaikkalappatthu

 

Those who prefer to download and read may visit

http://www.scribd.com/fullscreen/72119861?access_key=key-2h46bk7q30fnk17c8htg

திங்கள், 7 நவம்பர், 2011

Guru Paramparai Vaibhavam

நாட்டேரி ஸ்வாமியின் “குரு பரம்பரை வைபவம்”  டெலி உபந்யாஸம் கடந்த 22-8-2010ல் நமது ஆசார்ய பரம்பரையில் ப்ரதம ஆசார்யனான பெருமாளிடம் தொடங்கி போன வாரம்
31-10-2011 அன்று ஸ்வாமி தேசிகன் வைபவம் வரை மிக அருமையாக நடந்து கொண்டிருக்கிறது.

     இன்று 7-11-2011 அன்று ஆசார்ய பரம்பரையில் அடுத்தவரான ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் ஸ்ரீ நயினாராசார்யர் பற்றி டெலி- உபந்யாஸத்தைத் தொடர்ந்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்களான 1] மூவாயிரப் படி குரு பரம்பரைதான் மிகவும் சரியானது 2] ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் தனது வாழ்நாள் முழுமையும் ஸ்வாமி தேசிகனின் தொண்டராகவே இருந்தவர். ஒருபோதும் தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்துக்கு மாறியவரில்லை. ஸ்ரீ மணவாள மாமுனியின் சிஷ்யரானவருமில்லை. அவரது பேரர்கள் காலத்தில் நடந்ததை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் என்று சொல்வது தவறு. – என்ற இரண்டையும் மிகவும் ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக நிரூபிக்கும் கட்டுரை ஒன்று “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” ஆங்கில இதழில் வெளியாகியிருந்தது. அதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/file/3nb189x9nw9hzaw/61%20Guru%20Paramparai%20Vaibhavam%20%20%20%2806-11-2011%29.mp3

இதைக் கேட்டு ரசித்த பின் “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” வில் வந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களும், ஏற்கனவே படித்தவர்கள் கூட இன்று நாட்டேரி ஸ்வாமியின் மிக அருமையான உபந்யாஸத்தை மனதில் வாங்கி மீண்டும் ஒருமுறையும் படிக்க.

PB Annan

இந்த வடிவில் படிக்க சிரமம் இருந்தால் இந்த லிங்கிலும் படிக்கலாம்.

http://www.scribd.com/fullscreen/71892710?access_key=key-2gb103kl4us2a9gcyedx

 

Privatization of water! Is it not time to awake?

ஞாயிறு, 6 நவம்பர், 2011

சிகரத்தில் ஏறிய ஸ்ரீவைஷ்ணவர்கள்

As usual adiyen was searching on the net. http://iyengars.wordpress.com  is a site that attracted adiyen’s attention. And the following list of Iyengar’s who are/were in prestigious positions by way of their academic excellance was found there. Sharing the list here makes me happy.

Science and Technology

 • Sreenivas Lakshminarasimha Malurkar (late), Former Director, Colaba and Alibag Observatories, Mumbai. M.Sc. Cantab, Sidney Sussex College, Cambridge, UK. Worked in mathematical physics at Sir Ernst Rutherford Research Laboratory, Cambridge, UK. Fellow, Indian National Science Academy. Post-doctoral Research Associate, Goddard Space Flight Center, Greenbelt, MD, USA.
 • M.C.Rangaswamy, Director, National Dairy Research Center, Bangalore
 • Prof. Asuri Sridharan , Geotechnical Engineer, Former Deputy Director ,Indian Institute of Science Bangalore , Distinguished Engineering Alumnus Purdue University U.S.A ,Fellow , Indian National Science Academy , Indian Academy of Sciences , Indian National Academy of Engineering.
 • Sir K. S. Krishnan – Physicist, Fellow of the Royal Society, Director of National Physical Laboratory. He along with Sir C.V.Raman discovered the Raman Effect.
 • C S Seshadri – Director, Chennai Mathematical Institute and Trieste Awardee.
 • Dr.Raja Ramanna – Nuclear Scientist.
 • Dr S Rajappa, Former Deputy Director, National Chemical Laboratories, Pune.
 • Dr Rangaswamy Srinivasan – Former Scientist, IBM Research Labs, NY and inventor of LASIK laser surgery.
 • Dr. V.K. Aatre- Former Scientific Advisor to Defence Minister of India (replaced Dr. A.P.J. Abdul Kalam, Oceanographic scientist, Fmr. Scientific Advisor to the Defence Minister of India and Fmr. head of the DRDO.
 • Prof S Sadagopan – Founder Director, International Institute of Information Technology, Bangalore, India.
 • Mandyam V Srinivasan – Robotics and Biology.
 • Dr. K Kasturirangan – Head of Indian Space Research Organisation (India’s Space Agency).
 • P. K. Iyengar – Former Chairman of the Atomic Energy Commission.
 • M. R. Srinivasan – Former Chairman of the Atomic Energy Commission.
 • Dr.Rajan K. Sampath – FAO Consultant Head of Economics Dept, Colorado State University and Former Director of ISARD.
 • Dr. S. Rangachari – Renowned physician.
 • Dr. P.Vasudevan- Renowned Urologist in the US after whom the Dr Vasudevan Wellness Center at the University of Arkansas at Helena, Arkansas is named.
 • Dr. Srinidhi Varadarajan – Renowned Computer Scientists, Director of Terrascale Computing Facility at Virginia Tech and leader of the team that built the world’s cheapest and seventh fastest super computer.
 • Dr. R. N. Iyengar – Director, Central Building Research Institute, KSIIDCChair, Department of Civil Engineering, Indian Institute of Science.
 • Dr. Kotur S. Narasimhan – Former Director, Central Fuel Research Institute, (CSIR) Dhanbad, Bihar.
 • Dr Thirumalachari Ramasami- Secretary, Department of Science and Technology, Govt of India, New Delhi.
 • Professor Ramanuja Vijayaraghavan – Physicist, TIFR.
 • Sonny Ramaswamy – Insect physiologist; Director of Agricultural Research Programs and Associate Dean, Purdue University
 • Gita Ramaswamy – Textile scientist; Associate Dean of the Graduate School, Purdue University
 • Ravi Iyengar- Indian neuroscientist, pioneer in G protein studies.
 • Venkataramanan Soundararajan- Fellow of Biological Engineering at the Massachusetts Institute of Technology (MIT) and IIT Guwahati Alumni who founded the education consultancy company Lakshyas.com in 2005.
 • Dr. Rangachar S. Keshavaprasad – American trained Interventional Cardiologist who has performed over 10,000 cardiac catheterizations completely free of charge in rural India.
 • Dr.K.Aprameyan – Former CMD, Bharat Earth Movers Limited
 • Prof.S.Ranganathan- Professor Emeritus ( Metallurgical sciences ),IISc and Bhatnagar award recipient
 • Professor Dr Nallar Chakravarthy Vaijayanthi, Professor Obstetrics & Gynaecology, banaglore University
 • Dr. Sudarshan – Remote Sensing Expert – Regional Organisation for Protection of Marine Environment – Kuwait
 • Late Prof. Sampath -Ertswhile Director IIT Kanpur and a distibguished academic
 • Mathematics
 • Srinivasa Iyengar Ramanujan – world renowned Mathematician.
 • Prof Thothatri Iyengar – Professor of Mathematics, St Joseph’s College, Tiruchi, and teacher of A P J Abdul Kalam
 • S. R. Srinivasa Varadhan – Abel Prize awardee
 • Ramakrishnan – Actuary – Consultant for various insurance companies
 • Professor Chidambaram Padmanabhan Ramanujam – Mathematician, TIFR.
 • T.S.Vijayaraghavan – Eminent Mathematician.
 • Professor Mudumbai Narasimhan – Mathematician & Fellow of the Royal Society (1996).
 • Professor Madabusi Raghunathan – Mathematician & Fellow of the Royal Society (2000).
 • Professor Conjeeveram Seshadri – Mathematician & Fellow of the Royal Society (1988).
 • Professor Mandyam Srinivasan – Fellow of the Royal Society (2001).
 • Professor Cadambathur Tiruvenkatacharlu Rajagopal – Mathematician, Ramanujan Institute
 • S Ramanan -Mathematician and TIFR Professor
Social Sciences / Literature
 • Mrs. YGP (YG Parthasarathy) Padma seshadri Bala Bhavan
 • Aandayya : Ancient Kannada poet of Sri Vaishanvisim ( Used 100% kannada for his poetry without mixing a single Sanskrit word)
 • Mahamahopadhyaya Rao Bahadur R.Narasimhachar- Doyen of Archeology in India( Ex Director of Archeological Department of Karnataka ),Author of Kannada Kavicharithre(Epigraphy of Karnataka)
 • Prof K T Bhasyam : Eminent Kannada Professor
 • Vasudha Narayanan – President Elect, American Academy of Religion and Professor of Religious Studies, University of Florida.
 • Indira Parthasarathy – Playwright, Author, Saraswathi Samman Awardee.
 • A. K. Ramanujan – Chair of Department of South Asian Studies at the University of Chicago, Padma Shri Awardee and MacArthur Fellow.
 • T. S. Parthasarathy – Musicologist and music critic for The Hindu.
 • Chikkupadhyaya – Kannada Literature, Minister and Teacher of His Royal Highness Sri Chikka Devaraja Wodeyar.
 • Masti Venkatesha Iyengar – Kannada Literature.Jnanapeeta Awardee
 • Gorur Ramaswamy Iyengar – Kannada Literature.
 • Dr. G.P. Rajarathnam – Kannada Literature.
 • P.T. Narasimhachar – Pu.Thi.Na – Kannada Literature.
 • Aadya Rangacharya -sriranga – Kannada Literature ( Drama )
 • Sujatha Rangarajan – Fiction & Film Writer & Visionary A prolific thinker (From Srirangam)
 • K.S.Varadachariar-Eminent Sanskrit Scholar.
 • Mahavidwan R. Raghava Iyengar – Tamil and Sanskrit Scholar.
 • M N Srinivas – Pioneering Sociologist.
 • S. M. S. Chari – Author of books on Sri Vaishnavism.
 • P.B.Annangaracharyar – Renowned Vaishnavism Scholar in Sanskrit and Tamil.
 • D. Lakshminarasimhachar – Kannada Literature.
 • G. Srinivasa Desikachar – Sanskrit/Kannada Scholar, Asthana Vidhwan – “Sri Abhinava Ramanuja” title conferred in 2006 by Governor of Karnataka.
 • Madabushi Gopalachari – author, playwright, freedom fighter.
 • Raghuram Rajan-Chief Economist, IMF
 • Prof.Narayanacharya : Ramayana & Mahabharata Specialist
 • Echeskey : Prof. H.S.Krishnamacharya Iyengar : Eminent Kannada columnist
 • Heremagalooru Kannan : Kannada writer,speaker
 • Varada Desikacharya : Eminent Sanskrit scholar
 • Sri Rama Bharati : Carnatic musician & composer
 • Sriranga Mahaguru : Founder of Astanga Yoga Vigyana Mandira, Mysore
 • Dr. Vijay Govindarajan:Dr. Earl C. Daum 1924 Professor of International Business at the Tuck School and founding director of Tuck’s Center for Global Leadership
 • Prof VV Chari-Professor of Economics , University of Minnesota
 • Seshadri – President, Shanmugananda Hall, Bombay
 • Velukudi Krishnan – ( Upaniasam )
 • Dr. Rangarajan – Psychiatrist – Chennai
Music
 • Ariyakkudi T. Ramanuja Iyengar – Renowned Carnatic musician.
 • Mysore Doreswamy Iyengar – Veena Maestro.
 • Varaha swamy – Gottuvadya Maestro
 • Madurai T.N. Seshagopalan – Carnatic music maestro.
 • Chitraveena Ravi Kiran – Chitraveena maestro & Child Prodigy.
 • Guitar Prasanna – Carnatic Guitar pioneer and Jazz fusion composer.
 • Annamacharya – Vaishnava Saint and Carnatic Music Composer.
 • Tiger Varadachariar – Renowned Carnatic Music Exponent.
 • T.B.Narasimhachar – aka ‘Saragrahi’, renowned Carnatic Music Critic and Sabha organiser.
 • BS Raja Iyengar : Carnatic Vocal
 • Chitte Krishna Iyengar : Carnatic Vocal
 • Belakavadi Srinivasa Iyengar : Carniatic Vocal
 • M J.sreenivasa Iyengar : Veena
 • Veena Chokkama : Veena & Vocal – Carnatic Music
 • Srirnagam Gopalaaratam : Vocal
 • Neelamma Kadambi : Veena & Vocal – Carnatic Music
 • Rajalakshmi Tirunarayanan : Veena
 • Vasundara Das – Musician.
 • Sudha Raghunathan – Carnatic Vocal.
 • NS Krishnaswamy Iyengar – Carnatic Vocal; Guru of DK Pattammal
 • T M Krishna – Carnatic Vocal.
 • Sangeetha Bhushana M A Narasimhachar- Carnatic Vocal Exponent
 • Latha Rajnikanth Notable personality and singer wife of Rajnikanth Tamil Film Actor
 • Lakshmi Rangarajan Notable Carnatic Vocalist
 • Harini – Film Singer
Journalism
 • TCA Srinivasa-Raghavan – Columnist, Business Standard of India.
 • Seshadri Chari – Editor, The Organiser, periodical of the Rashtriya Swayamsevak Sangh.
 • Sreenivasan Jain – Of iyengar heritage and correspondent for NDTV.
 • Madhan – Cartoonist.
 • Govind – Cartoonist The Hindu.
 • Sandilyan – Tamil Novelist
 • T. S. SreenivasaRaghavan – Correspondent, The Times of India.
 • Seetha Parthasarathy – Journalist and Author of The Backroom Brigade: How a Few Intrepid Entrepreneurs Brought the World to India.
 • Vai. Mu. Kodainayaki Ammal – First woman editor in Tamil, Jaganmohini, Tamil monthly, and novelist(1903-1960).
 • V.K.Narasimhan – Ex-Editor-in-chief, Indian Express.
 • S.Narasimhan – Ex-Asst. Editor, Indian Express, Bangalore.
 • V.N.Narayan – Editor Bhavan’s Journal of Bharatiya Vidya Bhavan.
 • Indra Soundarrajan – Story Writer – Tamil
Industry
 • Ms. Shobana Ramachandran – Chairperson TVS Tyres Ltd
 • Shailesh Ayyangar – Managing Director, Aventis Pharma Ltd
 • Dr. Krishna Bharat- Principal Scientist, Google Inc.
 • Pulavanur Chakrapani Iyengar – ESSEE Industries Ltd
 • Narasimha Chari -Chief Architect ,Tropos networks
 • Uday Garudachar – Managing Director and Promoter of Garuda Group, the group which owns Garuda Mall in Bangalore
 • G. R. Gopinath – CEO and Co-Founder of Air Deccan
 • Sampath Iyengar -CEO, PSI Systems
 • Sridar Iyengar – Director of Infosys and President of TiE (The Indus Entrepreneurs) in Silicon Valley
 • Suresh Krishna – CEO, Sundaram Fasteners
 • A Krishnan – Ex Managing Director, State Bank of Mysore, Author of a rendition of The Ramayana
 • N Sampath Kumar – Executive Director, Finance, IndusInd Bank Ltd.
 • Ravi Parthasarathy – Vice-Chairman & Managing Director, IL&FS Ltd.
 • S V Parthasarathy- Executive Director- operations, IndusInd Bank Ltd.
 • Kuppuswamy Vijay Raghavan – Ex-Chairman, Engineers India Limited, Chairman, premier explosives Limited and President, EID Parry Ltd.
 • N S Raghavan – Co-Founder of Infosys.
 • Arvind Raghunathan – Managing Director and Head of Global Arbitrage, Deutsche Bank
 • P Ragunathan – Senior Vice-President, IndusInd Bank Ltd.
 • Srini Rajam – Chairman and CEO, Ittiam Ltd
 • Shyam Ramanna – CEO of Crest Communictions, a famous animation firm and son of Dr Raja Ramanna
 • R. Seshasayee – President of Confederation of Indian Industry and CEO of Ashok Leyland, part of the Hinduja group
 • Balaji Sreenivasan – Founder & CEO, [Aurigo] Software Technologies Inc.
 • Ramanujam Sridhar – Author and CEO of Brand-Comm, a prominent Brand consulting firm
 • Raj Srikanth – Managing Director, Deutsche Bank Alex Brown Securities, New York
 • Venu Srinivasan – MD, TVS Motor Company Ltd
 • T.V. Sundram Iyengar – Founder of T.V.S. group (automobile and finance)
 • N. Vaghul – Chairman of ICICI and Director of Mittal Steel
 • Vidyadharini – Former Business Development Manager of Covansys, Sanjose now Business Head Innova Inc CA.
 • TT Srinivasaraghavan MD Sundaram Finance Ltd
Diplomacy, Bureaucracy and Politics
 • A. R. Badrinarayan (late) – Former Minister for Education, Govt. of Karnataka, Former Member of Parliament (Lok Sabha), Former President, Hebbar Srivaishnava Sabha.
 • C. V. Narasimhan – former Under secretary General, United Nations
 • C.Vijayaraghvachariyar- President, Indian National Congress (1920), All India Hindu Maha Sabha (1931), Member Imperial Legislative Council.
 • Sir T.Vijayaraghavachariyar- Dewan of Udayapur.
 • Sir V.T.Krishnamachari – Dewan of Baroda.
 • C. S. Venkatachar – Dewan of Udayapur
 • C. S. Srinivasachar – Secretary to Sir M. Visvesvaryya
 • Rajaji – Freedom fighter, national leader, the first Indian Governor General of Independent India and also the Chief Minister of State of Madras.
 • C V Ranganathan – Former Indian Ambassador to China.
 • TCA Srinivasavardan – Former Home Secretary, Government of India.
 • Justice K.S. PARIPOORNAN – Former justice Supreme Court of India.
 • Dr.K.Sreenivasan – Former DGP & IGP of Karnataka State.
 • L N Rangarajan – Indian Ambassador to Norway, Professor at Manchester University, UK and author of an English translation of Arthasastra.
 • H V R Iyengar – (Late) ICS, Home Secretary, RBI Governor, Secretary to the Constituent Assembly etc among various positions in the administrative services in both pre and post independence India.
 • Vijay Rangarajan – Acting British Ambassador to Mexico.
 • N Gopalaswami – Election Commissioner, Government of India.
 • G. Parthasarathy – Former Indian High Commissioner to Pakistan, Cyprus and Australia.
 • S. Ramaswamy – Former Director General of Technical Development, Ministry of Industries, Govt.of India.
 • Venkat Chary – Former Chairman Maharashtra Electricity Regulatory Commission and Addnl Chief Secretary Govt of Maharashtra,currently Chairman MCX, Multi Commodity Exchange of India.
 • N. Rangachary – Director, Insurance Regulatory and Development Authority (IRDA), India.
 • C.V. Narasimhan – Under Secretary General of the UN.
 • C. Rangarajan – Former Governor of Reserve Bank of India and governor of Andhra Pradesh, India.
 • M Ananthasayanam Ayyangar – First speaker of the Indian Parliament.
 • K. Santhanam- An attorney, Gandhian, 1st Railway Minister in Free India, Governor of Vindhya Pradesh, Chairman of Santhanam Committee on Corruption, authored several books), including a critical edition on the Jallianwallah Bagh massacre.
 • K Parasaran – Attorney General of India for Indira Gandhi.
 • Mohan Parasaran – Eminent Lawyer – SC
 • Ashok Parthasarathi – Scientific Adviser to Indira Gandhi.
 • Sir Bhashyam Iyengar-Eminent Lawyer and one of the first Indian Judges of the Madras High Court.
 • T.T. Krishnamachari – Industrialist, Minister of Finance for Jawaharlal Nehru.
 • J. Jayalalithaa – Former Chief Minister of Tamil Nadu.
 • K N Govindacharya – RSS Idealogue.
 • Gopalkrishna Gandhi – Of Iyengar heritage (mother Laxmi was daughter of Rajaji and wife of Devadas Gandhi) and was Governor of West Bengal and grandson of Mahatma Gandhi.
 • Rajmohan Gandhi – Brother of Gopalkrishna Gandhi and popular author.
 • R K Raghavan – Director of Central Bureau of Investigation.
 • T Narasimha Iyengar – Renowned Criminal Vakil who was a member of the jury investigating the Arbuthnot Crash and grandfather of Rangaswamy Srinivasan and P Ragunathan.
 • Sr. Advocate Embar Varadha Iyengar- Renowned Criminal lawyer.
 • N Kannan – Head, Civil Affairs, U.N Mission in Cyprus.
 • Justice .M. Srinivasan-Judge, Supreme Court.
 • Justice S. Ranganathan (retired judge Supreme Court and the Delhi high Court)
 • Sr. Advocate Late Heragu Singaiyengar – Renowned lawyer
 • TT Vasu – Eminent Personality
 • Jairam Ramesh – Member of Parliament
 • Sports
 • MJ Gopalan – Cricket & Hockey Player.
 • S. Venkataraghavan – Cricketer.
 • Krishnamachari Srikanth – Cricketer.
 • Sadagopan Ramesh – Former Opening Batsman, Indian Cricket Team.
 • W V Raman – Opening Batsman, Indian Cricket Team.
 • M. Chinnaswamy – Cricket administrator.
 • Sudararajan Kidambi – International Chess Master.
 • T A Sekar – Cricketer & Chief Coach at the MRF Pace Foundation, Chennai.
 • Krishnan Sasikiran – Chess Grandmaster.
 • TE Srinivasan-Former Test Cricketer
 • Shyla Yoganand-from Mysore (09823053135)-got an entry into guinness book of records as first lady in the world to reach highest motorable point on earth (khardungla pass – 18400′ at -23 C temp.) driving an ordinary 100 cc scooter.
 • Films and Entertainment
 • R. Madhavan — Tamil actor
 • Vyjayantimala Bali – Tamil/Hindi Actress.
 • Hema Malini – Hindi Actress.
 • Kavignar Vali – Tamil Lyricist.
 • Dr.P.B.Srinivas – Playback singer.
 • B.S.Ranga – Veteran producer and director of Kannada, Telugu and Tamil films with more than 70 movies to his credit, winner of 2 President’s Awards, Rajotsava Awardee.
 • Kamal Haasan – Actor.
 • “Crazy” Mohan – Scriptwriter and dramatist.
 • Maadhu balaji – dramatist
 • M.S.Sathyu – Kannada and Hindi Film Director.
 • Sandeep Prasad- Actor.
 • Aathreya – Telugu lyricist.
 • Sadagopan Venkatesh – Former DJ of New Jersey FM, actor and stage performer.
 • Yashoda Ranganathan – Indo-Canadian Actress.
 • Sabrina Setlur – German rapper Of Iyengar heritage (Father Iyengar).
 • Chithralaya Gopu – Tamil Playwright and Film Director.
 • Vasundara Das – Actor (Kannada,Tamil And Hindi Movies).
 • Y G Mahendran – Famous Drama / Cinema Actor
 • Raman Vijay – Famous local comedian of champagne / aspiring Cinema Actor
 • Suhashini Manirathinam – Film Actress W/o Manirathinam Famous Director in Tamil, Hindi
 • Geetha – Tamil Actress and TV Actress
 • Srikanth – Upcoming Tamil Film Star
 • Late “Major” Sundarrajan – Yesteryears Film Personality
 • “LIC” Narasimhan – Film and TV Actor
 • Charu Hassan – Tamil Actor – FIL of Manirathinam
 • Anu Hassan – Tamil Actress – D/o Chandra Hassan
 • Army and Police
 • Aprameya Sreenivas Malurkar – Former (17th) DG & IG of Police Karnataka State.
 • Gen. K. Sundarji – Former Chief of the Indian Army.
 • General Sundararajan Padmanabhan – Former chief of the Indian Army.
 • Dr.K.Sreenivasan – Former DGP & IGP of Karnataka State.
 • S. Parthasarathi Ayyangar – Former Commissioner of Police in Madras Presidency.
 • Lt Gen C R Sampath Kumar – Military Secretary to Shankar Dayal Sharma, President of India.
 • Lt.Gen.S.S.R.Iyengar , Former commandant of School of Artillery
 • Air Marshal(Retd.) Sriperampudur Raghavan,former AO-in-C(Logistics),HQMC
 • B. N. Garudachar – Director-General and Inspector-General of Police Karnataka.
 • K. R. Srinivasan – Director-General of Police Karnataka.
 • Dr.P. S. Ramanujan – Director-General of Police Karnataka & a Sanskrit scholar
 • K.Seetharam- Black cat to Rajiv Gandhi and Aide-De-Camp(ADC) to Governor of Karnataka
 • Miscellaneous
 • B.K.S. Iyengar – Yogi and founder of Iyengar Yoga.
 • Srinivasa (Hal)Iyengar – Chief Structural Engineer of the Sears Tower, John Hancock Tower and Spain’s Guggenheim Museum.
 • Dr. K.R. Srinivasa Iyengar – Former Vice Chancellor of Andhra University, who pioneered Indian writing in English
 • V. Krishnaswamy Sharma – Founder LIFCO Books

 

செவ்வாய், 1 நவம்பர், 2011

Natteri swamy's Guru-paramparai upanyasam dated 31-10-2011

The tele- upanyasam on "Guru-Paramparai Vaibhavam" on 31-10-2011 by Natteri Swamy is the last and concluding upanyasam of the section "Azhwar to Swami Desikan". The same can be downloaded from      http://www.mediafire.com/?yl05puaz66a4rki  

        The Tele-upanyasam started on 22-8-2010 on Avani Thiruvonam, Sri Hayagreeva Avathara Dhinam, and it is adiyen's bhagyam to record and share all the upanyasams here. When adiyen proposed to create a DVD from the start to today's episode so that it will be useful for those not yet accustomed to internet and also for future generations, Natteri swamy has most graciously agreed and permitted me to share the DVD with those willing. Adiyen will return to Thiruppullani on 4th and after the DVDs are ready, adiyen will inform the details to receive it.
   
         Natteri swamy will continue further --- from next week he will make us enjoy the life and kainkaryams of Swami desikan's illustrious son Nainaracharyar. So, please visit every Tues day to realise the greatness of our Acharya Paramparai .
 

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

தெலுங்கும் தமிழ்போல் தேனாய் இனிக்கும்

ஸ்ரீ பாதுகா சஹஸ்ர ப்ரஸ்தாவ பத்ததி 19வது ஸ்லோகம்

அநுக்ருதநிஜநாதாம் ஸூக்திமாபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: |
நிஶமயதி யதாஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே! ரங்கநாத: ||

இதற்கு ஸ்ரீமத் ஆண்டவனின் அனுக்ரஹபாஷணம்!
தமிழைப் போலவே தேனாய் இனிக்கும் சுந்தரத் தெலுங்கில்!செவ்வாய், 25 அக்டோபர், 2011

திங்கள், 24 அக்டோபர், 2011

சனி, 22 அக்டோபர், 2011

அமுதத் திவலை 3

ஸ்ரீமத் ஆண்டவன் அமுதத் திவலை 3 இங்கு கேட்டு மகிழலாம்.


சிலர் இங்கிருந்து நகலிறக்கித் தங்கள் கணிணியில் சேமிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். சில காரணங்களால் வேண்டுமென்றே இந்த முறையில் அவைகளை இங்கு இடுகிறேன். ஆனாலும், இந்த வலையைப் பின்தொடரும் பல வல்லுநர்களுக்கு அவற்றை நகலிறக்கும் வழிமுறைகள் நிறையவே தெரிந்திருக்கும். சிரமப்படாமல் நகலிறக்க விரும்புவோர் இப்போதைக்கு ஆன்லைனில் கேட்டு மகிழுங்கள். மொத்தமாக பின்னால் நகலிறக்கி சேமித்துக் கொள்ள உதவுவேன்வெள்ளி, 21 அக்டோபர், 2011

அமுதத் திவலை 2 Photo : Courtesy   Sri parakala mutt  Souvenir


ஸ்ரீமத் ஆண்டவனின் அமுதத் திவலை 2  இங்கு
புதன், 19 அக்டோபர், 2011

ஆராவமுதம்


ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார் ஒரு அருமையான காரியம் செய்திருக்கிறார். ஆராவமுதப் பொற்குடத்திலிருந்து அவ்வப்போது சிந்தும் திவலைகளை மிக அழகாக சேமித்துவைத்திருக்கிறார். அந்த ஆராவமுதப் பொற்குடம் நம் ஸ்ரீமத் ஆண்டவன் என்பதை அடியேன் சொல்ல வேண்டியதில்லை.அவர் அனுமதியுடன் சில அனுக்ரஹ பாஷணங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்குக் கிடைத்த பெரும் பேறு.அதிலும், முதலில் வந்தது ஒப்பிலியப்பன் விஷயமானது என்பது அடியேனுக்கு மிக மிக சந்தோஷத்தை அளிப்பது.
ஒரு புதிய வரவு

பல பழைய நூல்களை என்னுடைய bed scanner மூலம் ஸ்கான் செய்ய நான் படுகின்ற சிரமங்களையும் அதைக் காட்டிலும் அந்த நூல்கள் ஸ்கான் செய்த பின் அட்டைகள் அகன்று பைண்டிங் பிரிந்து பாழாவதையும் கண்டு இரக்கப் பட்டு அடியேன் குமாரத்தி இன்றுஅடியேனுக்கு ஒரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறாள்,

113749_top

அது ஒரு portablescanner. பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை. வீட்டில் வெளியில் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று எளிதில் ஸ்கான் செய்யமுடியும். விலை ரூ 6000/- இனி மிகப் பழைய நூல்களை எளிதில் ஸ்கான் செய்து விடலாம். நூல்களை இரவல் தர விரும்பாத நண்பர்கள் வீட்டிலேயே அந்நூல்களை படி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மெமரி கார்டு, ப்ளூ டூத் usb எனப் பல வசதிகளோடு இருக்கும் இந்த ஸ்கானர்  300 மற்றும் 600 DPI color or black&white options இவைகளுடன் மட்டுமில்லை OCR software உடனும் வருவதால் மிக வசதி. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு  !பல நூல்களை  xerox எடுக்க வேண்டிய சிரமம் இல்லை. நூலகங்களில் இருந்து நேரடியாக நூல்களை   ஸ்கான் செய்து பின் தங்களின் கணிணிகளில் அவர்கள் சேமித்துக் கொள்ளலாம்.

சென்னையில்  M/S Navkar computers, shop no 511, KAJ Plaza, FirstFloor, 838, Anna Salai, (7, narasingapuram street) Chennai என்ற இடத்தில் கிடைக்கிறது.

 

 

 

 

 

ஒரு சாம்பிள் இங்கே!

திங்கள், 17 அக்டோபர், 2011

“Srimad Rahasyathrayasaram” commentary by Sri V.K.Ramanujachariyar --- the final part

The last portion of the commentary of Sri V.K. Ramanujachariyar on “Srimad Rahasyathrayasaram” is available at

http://www.mediafire.com/?a38978ecp01a98q

In the above pdf, some characters are lost when adiyen tried to split the pages before making a pdf (for purposes of easy reading). Because adiyen scanned the xerox pages of the book from Sri Anakaputhur Rangachari swamy, splitting can not be perfectly made.

Hence another pdf without splitting is available at

http://www.mediafire.com/?9axr1ky18hax8tz

YOU MAY DOWNLOAD as per your choice.

adiyen will combine all of the files uploaded and present as a single pdf as early as possible.

adiyen arrived at Thiruppullani this morning to exercise my vote and will be back at Chennai tomorrow morning.

Sri Aravamuthan swami has handed over some books and D.Ramaswamy Iyengar’s commentary on “Amalanathi Piran” is one among them. It is in English and adiyen will begin to share that with you all from tomorrow.

 

Natteri Swamy’s tele-upanyasam dated 17-10-2011

Natteri swami continues on Desika Dinacharya in his tele-upanyasam dated  17-10-2011

The same may be downloaded from
http://www.mediafire.com/?tnyjz2v117u5s1d

புதன், 12 அக்டோபர், 2011

Guru paramparai Vaibhvam dated 10-10-2011

Guru paramparai Vaibhavam tele-upanyasam by Natteri Swamy on 10-10-2011 is now available for download at
http://www.mediafire.com/?1dbg009ddvu1vf7


செவ்வாய், 11 அக்டோபர், 2011

A Demo in our village

இந்த சந்தைப்படுத்துதல் --- மார்க்கெட்டிங் என்றால் எளிதாகப் புரியுமோ – வளர்ச்சிதான் எவ்வளவு அபாரமாய் இருக்கிறது! 30, 40 வருடங்களுக்கு முன் ஒரு காஷ்மீர் குசும், அல்லது பாண்ட்ஸ் பவுடர் விளம்பரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பு வெள்ளையில் படம் என்கிற பேரில் கரேல் என்று ஒரு ப்ளாக்குடன் வரும். ஜெமினி எஸ்.எஸ். வாசன் முயற்சியால் அன்றே பல விதமான விளம்பர உத்திகள் பயன்படுத்தப்பட்டு அவரால் விளம்பரப் படுத்தப் பட்ட பொருட்கள் அமோகமாக விற்பனையானதாம். அதன் பின் படிப் படியாக முன்னேறி, அடுத்த கட்டமாக விளம்பரக் குறும் படங்கள் சினிமா காட்சிகளுக்கு முன் காட்டப்பட்டு முதலில் வரவேற்பைப் பெற்றாலும் பின்னால் சலிப்பையும் உண்டு பண்ணின. அதிலும் திரைப்படம் தலைவலி தருவதற்கு முன்னமேயே வரும் சாரிடான் விளம்பரங்களை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அச்சுக் கலைகள் வளர வளர விளம்பரங்களும் கண்ணைக் கவரும் வண்ணம் பத்திரிகைகளில் வர ஆரம்பித்துப் பின்னர் மல்ட்டி மீடியா தொழில் நுட்பங்களால் தொலைக் காட்சிகளில் சில நொடிகளுக்குப் பல்லாயிரம் ரூபாய் கட்டணத்தில் வர ஆரம்பித்து இன்று பல விளம்பரங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சுவையாக உள்ளன. எனக்கு ஒரு விசித்திரமான நண்பர் விளம்பரங்கள் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது ரிமோட்டை அழுத்தி அடுத்த சானல் விளம்பரத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். மனம் கவர்கின்ற வகையில் வரும் விளம்பரங்கள் இடையில் முகம் சுளிக்க வைக்கின்ற , இலை மறைவு காய் மறைவாய்ச் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் அம்பலப் படுத்தி ஆபாசத்தின் எல்லையைத் தொடும் சில விளம்பரங்களும் உண்டுதான். இப்படி ஊடகங்களின் வாயிலாக விளம்பரம் காணாது என்று அடுத்த கட்டமாக தங்கள் பொருட்களைச் சந்தைப் படுத்த இப்போது நேரடி செயல் விளக்கம் demo என்ற ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்கு ஒரு ஏழெட்டுப் பேராவது கழுத்தில் டையுடன் ஒரு பெரி…..ய்ய பையைத் தூக்கிக் கொண்டு வந்து நின்று வீட்டுக் கதவைத் தட்டி ஏதேனும் ஒரு பொருளை  இயக்கிக் காட்டி எப்படியாவது அதை நம் தலையில் கட்டப் படாத பாடு படுவது பலர் அறிந்ததே. இது போதாது என்று இந்த டெமோக்களுக்கென்றே அவ்வப்போது கண்காட்சிகள் வேறு. அவ்வளவு பெரிய சாம்சங் நிறுவனப் பிரதிநிதியையே சென்னை ரிச்சி தெருவில் சாலை ஓரத்தில் அவர்களது ஏதேனும் ஒரு  தொலைக் காட்சிப் பெட்டியையோ கம்ப்யூட்டர் மானிட்டரையோ வைத்துக் கொண்டு கூவி அழைப்பதைப் பார்க்கலாம். இப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள மார்க்கெட்டிங் சிற்றூர்களில் எப்படி? இங்கு காய்கறி வெட்டும் கத்திதான் அடிக்கடி சாலை ஓரங்களில் டெமோ செய்யப்படும். வியாபாரி கையில் படு வேகமாய்ச் சுழன்று நிமிடத்தில் ஒரு கிலோ முட்டைக் கோஸை தேங்காய்ப்பூ போல வெட்டும் அந்தக் கத்தி அதை நாம் ஆசையுடன் வாங்கி வந்தால் ஆடாமல் அசையாமல் நின்று, காயை வெட்டாமல் நம் விரலை வெட்டும்.
ஆனால் இன்று ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தேன். ஒரு  மாட்டு வண்டி நிறைய சுட்ட செம்மண் அடுப்புகளை ஒரு வியாபாரி கொண்டு வந்து தெரு ஓரத்தில் கடை பரத்தினார். அட பாவமே!ஊரெல்லாம் காஸ் அடுப்பு என்று கிராமமே மாறிப் போன நிலையில் இந்த அடுப்பை யார் வாங்கப் போகிறார்கள் என்று சற்று இரக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நம்மால் இரக்கம்தானே பட முடியும்? 44ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரைப்போல் செய்யமுடியுமா? நினைத்ததுபோல உடனடியாக யாரும் வாங்க வரவில்லை. தனி அடுப்பு, DSC03294கொடி அடுப்பு,, கொடி அடுப்பை இணைத்துக் கொள்ளும் அடுப்பு, பால் அடுப்பு என்று வித விதமான அடுப்புகள். நகர்ப்புர வாசிகள் மறந்தே போனவை.  அரை மணி நேரம் கழித்து வியாபாரி மெள்ள ஒரு அடுப்பைப் பற்ற வைத்து அதனுடன் ஒரு கொடி அடுப்பையும் பற்ற வைத்து அதில் சோறு பொங்க ஆரம்பித்தார். அடியேனுக்குத் தான் பொறுக்காதே! அவரிடமே கேட்டேன். “ என்ன செய்கிறீர்கள்” என்று. அவர் சொன்னார் “ நான் சமைத்தது மாதிரியும் இருக்கும். அடுப்பு எப்படி எரிகிறது என்று போகிற வருகிறவர்கள் பார்க்கிற மாதிரியும் இருக்கும்”  அட! இது பிரமாதமான டெமோவாக இருக்கிறதே என்று சிரித்தேன்.
DSC03298 ஆனால் அவர் விவரமானவர் என்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. அடுப்பு எரிவதை வந்து நின்று கவனித்த ஒரு அம்மா பேரம் பேசி ஒரு அடுப்பை வாங்கிச் சென்றார். அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் கூட்டமாய் வந்தார்கள். “தைப் பொங்கலுக்குத் தேடி அலைய முடியாது.” என்று சொல்லி வீட்டிற்கு ஒன்றாய் வாங்கிச் செல்ல சோறு பொங்கி வியாபாரி சாப்பிட்டு முடிவதற்குள், அடுப்பு எல்லாம் வித்துப் போச்சு. 


DSC03296DSC03295
DSC03297