சனி, 14 மே, 2011

அன்றும் நேற்றும் ! நாளை எப்படியோ?

எப்போ பார்த்தாலும் பெருமாள் இல்லைன்னா பழைய தமிழ் புத்தகம் காபி இதுதானே உன் ப்ளாக்கில் இருக்கிறது! என்னைப் போன்ற 65 வயது இளையர்களுக்குப் பிடித்த மாதிரி எதுவும் எழுதக்கூடாதா? என அடியேனுக்கு முன் அமர்ந்திருந்த பெரியவர் கேட்டார். சரி! ஏதேனும் போடுகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன். நினைவுக்கு வந்தவர் நடிகர் வடிவேலு. ஏதேனும் சொல்லிவிட்டு மாட்டிக் கொள்வாரில்லையா அதுபோல நம் கதை ஆயிற்றே என்ற திகைப்பால் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றி நினைவுக்கு வந்ததும், சினிமாவில்தான் எசகுபிசகாக ஏதேனும் செய்து அடி வாங்குவார், இப்போது நிஜத்திலும் அப்படி ஆகி விட்டதே என நினேத்துக் கொண்டே இணையத்தில் நுழைந்தேன். யாரோ ஒரு மகானுபாவர் எனக்காகவே இட்ட மாதிரி "மின்தமிழ்" குழுமத்தில் இந்த வீடியோவை இட்டிருந்தார். அப்பாடி வழக்கம்போல் காபி அடிக்க தோதாகிவிட்டது என மகிழ்ந்து இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். வீடியோவைப் பாருங்கள்!

http://www.youtube.com/watch?v=YmTSayCcBWo

Natteri swami's tele-upanyasam on 8-5-2011

Get this widget | Track details | eSnips Social DNA

வியாழன், 12 மே, 2011

Thirumanjanam on the 4th day of Thiruppullani chaithrothsavam

திருப்புல்லாணி ஸ்ரீ பட்டாபிராம ஸ்வாமி சித்திரை ப்ரும்மோத்ஸவத்தின் 4ம் நாள் காலையில் ஸ்ரீ இராமன் திருவீதிப் புறப்பாட்டுக்குப் பின் கோவிலிலிருந்து ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார். அதன் தொகுப்பு வீடியோவாக !

Thiruppullani 2011 chaithrothsavam day 3 and day 4

DSC02281

DSC02286

Day 3  Sri Raman on Hanuma vahanam

DSC02287

DSC02289

4th day Srirangam Srimath Andavan Ashrama mandakappadi

Sri Raman proceeding to Andavan Ashramam from Temple after thiruveethi purappadu in the morning

DSC02294

Sri Raman arrived at Ashramam and was received with poorna kumbha mariyadhai

DSC02298

DSC02307

Ready for Thirumanjanam

DSC02316

Thirumanjanam starts

(thirumanjana video will be posted separately)

4th Day evening

DSC02350

DSC02351

During chatthumurai

DSC02369

Ready for purappadu (waiting for Sri Adhi Jagannaatha Perumal to join at Ashramam premises) (வில்லையும் அம்பையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு விட்டார். இல்லையென்றால் கேஆர்எஸ் பிடிபிடி என்று பிடித்து விடுவார் என்று அவருக்குத் தெரியும்)

DSC02365

Perumal arrived at the entrance of Ashramam

DSC02366DSC02383

Sri Raman  with Perumal, ready for thiruveethi purappadu

DSC02391

மீண்டும் வரும் பங்குனியில் வருவோம் எனச் சொல்லி இராமனைப் பெருமாள் அழைத்துச் செல்கிறார்

திங்கள், 9 மே, 2011

Thiruppullani 2011 chaithrothsavam

Chitthirai brummothsavam for Sri Pattabiramaswamy at Thiruppullani started on 8/5/2011

Day 1  night
Soorya prabhai vahanam

DSC02245

Sri Adhi Jagannatha Perumal with Sridevi and Bhoodeviaccompanied

DSC02247

Day 2 Morning  pallaaku

DSC02248

 

DSC02249

Vaduvur Srirangam Srimad Andavan ashrama vidyarthis perform veda parayanam

DSC02252

Day 2 night  Simha vahanam

DSC02264

DSC02262

Pappaa Ramayanam

In many of my earlier postings here, I have mentioned about two blogs http://madhavipanthal.blogspot.com  and http://kannansongs.blogspot.com  and also expressed my admiration for the work done by the blog authors. While Madhavipanthal is managed by Shri KRS Ravishankar the other is a joint venture by a few youngsters. Both are dedicated to make the youngsters to learn about our great sanadhana dharma. Perhaps their way of describing may not be a conventional one but definitely they are able to draw a considerable number of youngsters thereby made them to realise what great treasures we have. One such of their efforts is to take Ramayanam close to children for which one of the authors at “kannansongs” Smt Lalitha Mittal has written a “Paappaa Raamaayanam” Which is really very interesting even for old man like me. To add juice to it, Sri KRS Ravishankar has sung the Sundara kandam in his voice. All the lines in “Paappaa Raamaayanam” ends with “Ram” . A sample of the text is here.

அனைவரும்    அனுமனை நாடினராம்;

         சீதையை மீட்க வேண்டினராம்.

                   அனுமனும் அதற்குத்  துணிந்தனராம்;

       ராமநாமத்தை ஜெபித்தனராம்.

    (ராம ராம ஜெய ......சீதாராம்)

               பேருருவத்தினராய் மாறினராம்;     
     மலையுச்சியிலே ஏறினராம்.  

               காலால்    மலையை அழுத்தினராம்;

                 வேகமாய் மூச்சினை இழுத்தனராம்.

             மலையை ஊன்றி உதைத்தனராம்;

                   விண்ணை       நோக்கி விரைந்தனராம்.

        வானவீதியை     எய்தினராம்;

                  வானவர்     மலர் மழை பெய்தனராம்.



வான்வழி     அனுமன் பறந்தனராம்;

வால்    நக்ஷத்திரம்போல் தெரிந்தனராம்.

கடலரசன் இதைக்     கண்டனராம்;

உதவிட எண்ணங்கொண்டனராம்.

  மைநாகமலைதனை விளித்தனராம்;

உபசரித்திடும்படி பணித்தனராம் .

மலையரசனும் மனமிணங்கினராம்;

வேகமாய் ஓங்கி வளர்நதனராம்.

அனுமனின் பாதையில் நின்றனராம்;

   மாருதி மலையைக் கண்டனராம்.

   வேகத்தடையென எண்ணினராம்;

    தேக  பலத்தால்   தள்ளினராம்.

      நிலைகுலைந்தரசன் விழுந்தனராம்.;

       நாணியவாறே            எழுந்தனராம்.

       அனுமனின் ஆற்றலை உணர்ந்தனராம்;

   அவரை அன்பாய் உபசரித்தனராம்.

          கடலோன் விருப்பத்தைக் கூறினராம்;

    களைப்பாறிச்செல்லக் கோரினராம்.

அனுமன்       ஐயம் தெளிந்தனராம்;

அன்புடன் அவனை வருடினராம்.

ஓய்வாய் அமர்ந்திட மறுத்தனராம்.

வைதேகியை மீட்கப் பறந்தனராம்.

வானோர் கண்டு      வியந்தனராம்.;

வாயுபுத்திரனைப்      புகழ்ந்தனராம்.

The entire ramayanam can be read at http://kannansongs.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

There are 12 posts. Read all of them.

Please listen sundara kandam of Paappaa Ramayanam sung by Shri KRS Ravishankar.

http://www.esnips.com/doc/c5fdf3fd-0c88-4eb8-baf8-968676cdb506/KRSRavi-Sundarakandam~1

உடையவருக்கு ஒரு தாலாட்டு

அடியேன் மிக விரும்பித் தொடரும் ஒரு வலைப்பூ "மாதவிப் பந்தல்". அறிய வேண்டிய சம்பிரதாய விஷயங்களை இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் சொல்வதில் வல்லவர் அதன் ஆசிரியர் திரு கே.ஆர்.எஸ். அவர் தளத்திலிருந்து உடையவருக்கு ஒரு தாலாட்டு
மன்னுபுகழ் காந்தி மதி, மணி வயிறு வாய்த்தவனே
தென் பொருநல் மாறனடி, சேர்ப்பித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன்மா மதில்புடை சூழ் அரங்கநகர்க்கு அதிபதியே
என்னுடைய இன்னமுதே இராமனுசா தாலேலோ!

தாலே தாலேலோ, உன் முப்புரிநூல் தாலேலோ!
தாலே தாலேலோ, உன் முக்கோலும் தாலேலோ!
தாலே தாலேலோ, உன் முறுவல்நிலா தாலேலோ!
தாலே தாலேலோ, கண்வளராய் தாலேலோ!

உறங்காதே சக்கரமே, உடனிருந்து காத்திடுவாய்!
உறங்காதே வெண்சங்கே, பால்கொடுத்து ஊட்டிடுவாய்!
உறங்காதே கோபுரமே, குளிராமல் போர்த்திடுவாய்!
உறங்காதே காவேரீ, கால்வருடி விட்டிடுவாய்!

சங்கரனும் ராகவனும் சடுதியில் ஓடிவந்தோம்!
தங்கையவள் கோதையுடன் தமிழோதி ஓடிவந்தோம்!
திங்களொளி ராத்திரியில் தாலாட்ட ஓடிவந்தோம்
பங்கயத்தின் சிவப்பழகே பதறாமல் கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு, இலட்சுமணா கண்ணுறங்கு!
கண்ணுறங்கு கண்ணுறங்கு, இராமனுஜா கண்ணுறங்கு!
நீயுறங்கு நீயுறங்கு, நிர்மலனே நீயுறங்கு!
நானுறங்கு நானுறங்கு, நானிலமும் தானுறங்கு!

ஆரீ-ராரீ-ரோஓஓஓஓஓஓ!

முழுவதும் படிக்க, அந்த த் தாலாட்டை இசையுடன் கேட்க
http://madhavipanthal.blogspot.com/2011/05/bharatidasan-ramanujar.html