தமிழாக்கமும் பொழிப்புரையும்
வைகுந்தவாஸி ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்கார்
மையோபநதைஸ்தவ ப்ரவாஹைர நுகம்பே க்ருதஸம்ப்லவா தரித்ரி
சரணாகதஸஸ்யமாலிநீயம் வ்ருஷசைலக்ருஷீவலம் திநோதி. 21.
உள்ளு மத்திரு வொத்த வத்தறு வாயெழுந் தயை! மாநிலம்
தள்ள லில்லுன துள்ள மொள்ளிய தண்ண ளிப்பெரு வெள்ளநீர்
தெள்ளு தானடை கொள்ளு வாழ்கதிர் காழ்த்த தூமுடி தாழ்த்தவே
கொள்ளு வன்களி கண்டு வேங்கடத் தொய்ய னல்லற வையனே. .21.
[ தயையே! ஸமயத்தில் (காலத்தில்) வரும் உனது ப்ரவாஹங்களால் ஜலம் நிறைந்த பூமியானவள் சரணாகதர் என்னும் பயிர்களை மாலையாக அணிந்துகொண்டு வேங்கடமலைக்கு அதிபதியாகிய பயிரொளியை ஸந்தோஷப்படுத்துகிறாள்]
கலசோததிஸம்பதோ பவத்யா: கருணே ஸந்மதிமந்தஸம் ஸ்க்ருதாயா:
அம்ருதாம்சமவைமி திவ்யதேஹம் ம்ருதஸஞ்ஜீவநமஞ்ச நாகலேந்தோ. 22.
திண்ண நன்மதி மந்த ரந்தரு மேனி யுந்தமு திந்துவாய்த்
தண்ண லந்தெளி யண்ண லுந்துயிர் தந்தெ ழும்நிறை நன்றியாழ்ந்
தெண்ண ரும்பொரு ணண்ணு நற்கரு ணைத்தி ருப்பெருந் தேவியுன்
வண்ண லந்திகழ் பாற்க டல்வளங் கொண்ட மெய்யிது கண்டனன். .22.
[கருணையே! அஞ்ஜநமலையில் சந்திர பிம்பம் போல் விளங்கும் ஸ்ரீநிவாஸனுடைய ம்ருதஸஞ்ஜீவினி போன்ற திருமேனியை நன்மதி யென்னும் மத்தினால் கடையப்பெற்ற திருப்பாற் கடல் போன்ற உன்னுடைய அம்ருதம் என்னும் ஸாராம்சமாக நினைக்கிறேன்.]
ஜலதேரிவ சீததா தயே த்வம் வ்ருஷசைலாதிபதே: ஸ்வபாவபூதா
ப்ரளாயரபடீ நடீம் ததீக்ஷாம் ப்ரஸபம் க்ராஹ்யஸி ப்ரஸத்திலாஸ்யம் .23.
தண்மை யேதரு நன்மை யேதெரி தன்மை யார்கலி வேங்கட
விண்ணி லத்திரு வண்ண னின்னிய லென்னு மன்னரு ளன்னையே
உண்ண டூழிகொ ணீக்க னோக்கெனுங் கூத்தி யாரப டிப்பெயர்
அண்ண னண்ணிட மென்னி லாசிய மாய்வ லித்ததை யாக்குவாய். 23.
[தயையே! ஸமுத்ரத்திற்குக் குளிர்ச்சி எவ்வாறு ஸ்வபாவமோ அவ்வாறே வேங்கடமலை அரசனுக்கு நீ ஸ்வபாவமானவள். பிரளய காலத்தில் தலைவிரிகோலமாய்க் கூத்தாடும் அவருடைய கொடும் பார்வை யென்னும் நர்த்தகியை நீ பலாத்காரமாக அந்தக் கொடுமையான ஆட்டத்திலிருந்து திருப்பி ஸ்ருஷ்டி என்னும் ம்ருதுவான ப்ரஸந்ந நர்த்தனத்தில் ப்ரவர்த்திக்கச் செய்கிறாய்.]