திங்கள், 7 ஜூலை, 2014

மடல் டெலி உபந்யாஸம் (05-07-2014)

நாட்டேரி ஸ்வாமியின் “சிறிய திருமடல்” டெலி உபந்யாஸம் (05-07-2014) நிகழ்த்தியது

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

http://www.mediafire.com/listen/mepy2m10z9mi802/007_madal_(05-07=2014).mp3

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 9

21. ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு. நித்யஸூரியான இவரை நித்ய ஸம்ஸாரியாக பாவித்தனர். இவர் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களுக்கு ஓராண்வழியாக வந்தது திருவாறாயிரப்படி வ்யாக்யாநம். இந்த வ்யாக்யாநம் ஸ்ரீபாஷ்யகாரரால் நியமனம் செய்யப்பட்ட திருக்குருகைப்பிள்ளானால் பண்ணப்பட்டது. இதற்கும் ஸ்ரீபாஷ்யம் முதலான ப்ரமாணங்களுக்கும் சேராமல் வ்யாக்யாநம் செய்தார்கள் பலர். இப்படி ஆழ்வாருடைய ப்ரபாவத்தையும் பெருமையையும் உலகத்தில் நிலைநிறுத்தியது ஸ்வாமியினிடமிருந்த ஆழ்வார் ஆசார்ய பக்தியைக் காட்டுகிறது.

மேலும் பகவானுடைய அவதார விஷய ரஹஸ்யங்களைப் பற்றி ஆராயக்கூடாது. பகவான் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து” என்றபடி ஒருவருக்குப் பிறந்து மற்றொருவருக்கு மகனாய் எப்படி வளர்ந்தான்? என்றும், கீதையை எப்படி உபதேஶித்தான்? இது முதலானவைகளை எப்படி விமர்ஶனம் செய்ய்க்கூடாதோ அதுபோன்று ஆழ்வாருடைய விஷயத்திலும், அவர் ஏன் நான்காவது வர்ணத்தில் அவதாரம் செய்தார்? ஸ்ரீமதுரகவி ஆழ்வாருக்கு வேதாந்த உபதேஶம் எப்படிச் செய்தார்? என்றெல்லாம் ஆக்ஷேபம் செய்யக்கூடாது என்பதைத் திருவுள்ளத்தில் கொண்டு

द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्भुतम्|
सम्यक् श्रुतवतां नात्र शङ्कनीय उपप्लव:||
देवगुह्योषु चान्येषु हेतुर्देवि निरर्थ इत्यादि
न्यायदृष्टया च तोष्टव्यमिह सूरिभि:

த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|
ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி⁴:

என்று அருளிச் செய்துள்ளார் . (ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)

अपोह्य स्वं भावं हरिचरणसन्तानकलिकाम विक्षद्योगीयस्तनुमतनु कारुण्य विवश:
அபோஹ்ய ஸ்வம் பா⁴வம் ஹரிசரணஸந்தாநகலிகாம விக்ஷத்³யோகீ³யஸ்தநுமதநு காருண்ய விவஶ:
 (ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம்) இந்த யுகாரம்பத்தில் ப்ரஹ்மநந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி) என்றும்,

“ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும் யோகதஶையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் என்றும், (குருபரம்பராஸாரம்) இவரை ப்ரபந்நஸந்தான கூடஸ்ததையாலே ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தார் என்றும்,

         अथ पराशरप्रबन्धादपि वेदान्तरहस्य वैशद्यातिशयहेतुभूतै: सद्य: परमात्मचित्त रञ्जकतमै: सर्वोपजीव्यै: उपबृह्मणै: मधुरकविप्रभृति संप्रदायपरम्परया नाथमुनेरपि उपकर्तारं काल विप्रकर्षेऽपि परमपुरुषसङ्कल्पात्  कदाचित्  प्रादुर्भूय साक्षादपि सर्वोपनिषत् सारोपदेष्ठारं परांङ्कुशमुनिम्
அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத்  கதா³சித்  ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம் என்று அருளிச் செய்துள்ளபடியாலும் (ஸ்தோத்ரபாஷ்யம்), மேலும்

மஹாப்ரளயத்தில் ஸம்ஸ்க்ருத வேதங்களைத் தன்னிடம் வைத்திருந்து மறுபடியும் ப்ரஹ்மாவிற்கு உபதேஶம் செய்தான் எம்பெருமான். மதுகைடபர்களால் வேதம் அபஹரிக்கப்பட்டபோது, அவர்களிடமிருந்து அதை மீட்டுத் தந்தான். அதேபோல் ஆழ்வாரும் ஒரு காலகட்டத்தில் த்ராவிடவேதமான திவ்யப்ரபந்தங்களுக்கு மறைவு ஏற்பட ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபதேஶம் செய்து த்ராவிட வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். ஒரு ஸமயம் ஆழ்வாரிடத்திலும், ப்ரபந்தங்களிடத்திலும் அதிப்ரீதனான எம்பெருமான் த்ராவிட வேதத்தில் அந்வயமில்லாதவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இடம் தரவேண்டாமென்று விஷ்வக்ஸேநருக்குக் கட்டளையிட, பரமகாருணிகரான ஆழ்வார் அப்படிப்பட்டவர்களுக்கும் எம்பெருமான் அநுக்ரஹம் கிடைக்கவேண்டுமென்று ஸ்ரீபாதுகைகளாக அவதாரம் செய்து அடியார்களை ரக்ஷித்தார் என்பதை ஸ்வாமி

द्रमिडोपनिषन्निवेशशून्यानपि लक्ष्मीरमणाय रोचयिष्यात् |
ध्रुवमाविशतिस्म पादुकात्मा शठकोप: स्वयमेव माननीय:||
 

த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:||
  

                         (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)

என்று அருளிச் செய்துள்ளார். ஆழ்வார்கள் இயற்றியதான த்ராவிட வேதங்கள் தமிழ்மொழியில் இருப்பதால் இவற்றை பகவத் ஸந்நிதிகளில் அநுஸந்திக்கக் கூடாது என்று சிலர் ஆக்ஷேபம் செய்ததற்கு ஸமாதானமாக “भाषा गीति: प्रशस्ता भगवति वचनात् राजवच्वोपचारात्” “பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்”  (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி) என்று அநுக்ரஹித்து, வ்யாகரணம் (இலக்கணம்) இல்லாத மொழிகளைத்தான் பகவத் ஸந்நிதிகளில் அநுஸந்திக்கக்கூடாது ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கு பாணிணி வ்யாகரணம் போல் தமிழுக்கு அகஸ்த்ய மஹரிஷியால் “பேரகத்தியம்” என்னும் இலக்கணம் இருப்பதால் இதற்குத் தடையில்லை. மேலும் ருத்ரனின் உடுக்கை ஸப்தத்திலிருந்து ஏற்பட்ட ஶப்தகூட்டங்கள் மொழிக்கு மாத்ருகாக்ஷரங்களாக இருப்பதுபோல், அவைகளே தமிழ்மொழிக்கு உயிரெழுத்துக்களாகவும், மெய்யெழுத்துக்களாகவும் அமைந்துள்ளன.  மேலும், பகவத் விஷயமான மொழியும் கானமும் (பாட்டும்) எப்பொழுதும் நிஷேதிக்கப் படவில்லை. அப்பேர்ப்பட்டவைக்கு எப்பொழுதும் ஏற்றம் உண்டு என்பதை,

नित्यं जाता शठरिपुतनो: निष्पतन्ति मुखात्ते|
प्राचीनानां श्रुतिपरिषदां पादुकेपूर्वगण्या|

நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே|
ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா
(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
                                        ताम्रवर्णीतटगतशठजित् दृष्ट सर्वीय शाखा 
தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² 

(ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி)                         
आम्नायानां प्रकृतिमपरां संहितां दृष्टवन्तम्  

ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம்    (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
अखिलद्रामिडब्रह्मदर्शी
அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
             (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)

वकुळधरतनुस्त्वं संहितां यामपश्य:
வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய:               
                       (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)

वकुळधरमार्षिदृष्टे द्रमिडनिगमे
வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³நிக³மே                                           (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)

श्राव्यवेदात्  ஶ்ராவ்யவேதா³த்             (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

शठजिदुपचिषद्दुग्धसिन्धुं 
ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம்            (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

वेदानागस्त्य भाषा बपुष उदधरच्छ्रेयसे देहिनां य:
வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய:          (தாத்பர்யரத்னாவளி)

शठमथनमुने: संहिता सार्वभौमी वकुळधरमहर्षिदृष्ट विश्वजनीनोपनिषत्
ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

 கறந்த பாலுள் நெய்யே போல         (ஸ்ரீதத்வத்ரய சுளகம்)

  யானும் தானாய் ஒழிந்தான்           (திருவாய்மொழி)   

போன்ற த்ரமிடோபநிஷத் வாக்யங்களுக்கும் “ஆளவந்தார் ஆழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி” (ஸ்ரீகுருபரம்பராஸாரம்) முதலியவற்றில் அருளிச் செய்து இவருடைய ப்ரபந்தங்களை “உபநிஷத்துக்களாக நிரூபித்தும், இவைகள் வேதங்கள்போலவே க்ரஹிக்கப்பட வேண்டும்” என்றும்     

பராங்குஶ பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தஶாவதாரம் பண்ணி(ஸ்ரீகுருபரம்பராஸாரம்) என்றும் இவருடைய ப்ரபாவத்தை வெளியிட்டருளி, விண்ணவர் தம் குழாங்களுடன் வேதம் பாடிப் பண்ணுலகில் படியாத இசையால் பாடும் பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே பாவலரும் தமிழ்ப் பல்லாண்டு இசையுடன் பாடுவமே (ஸ்ரீபரமபதஸோபாநம் 18,20) என்பதால் த்ராவிட வேதங்களும் “நித்யங்கள்” என்று நிரூபித்து सर्गोपि नोपजायन्ते प्रळये न व्यथन्ति च “ஸர்கோ³பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத²ந்தி ச “ஸ்ருஷ்டி ப்ரளயத்தில் மாறுதலடைகிற லீலா விபூதியைப்போல் இல்லாமல் நித்ய விபூதியில் பரமபதத்தில் தமிழ்ப்பல்லாண்டு பாடுவமே என்பதால் திராவிட வேதங்கள் நித்யமாக அங்கு அநுஸந்திக்கப் படுகிறது, இதனால் நித்யத்வமும் அதற்கு உண்டு என்பதும் தெரிகிறது. 

“இப்பிரபந்தங்களுக்கு ஸ்ரீநிகமபரிமளம்” என்னும் விஸ்தாரமான வ்யாக்யாநத்தையும் ஸாரமான அர்த்தங்களை ஸுலபமாக அநுஸந்திப்பதற்காக “ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி”, “ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம்” என்னும் ஸ்ரீஸூக்திகளையும் அருளிச் செய்து, திருவிருத்தத்தின் தாத்பர்யார்த்தத்தை “ஸ்ரீஉபகார ஸங்க்ரஹ”த்தில் விசேஷித்து நிரூபித்தருளி, “ஸ்ரீப்ரபந்தஸார”த்தில் ஆழ்வார்களுடைய அவதார ப்ரபாவத்தை வரு, வந்து, தோன்றி என்ற பதங்களினால் வெளியிட்டருளியபடியால், இவருக்கு வேதாந்தாசார்யர் என்று பட்டம் வழங்கி, உலகத்தாரால் கொண்டாடப் படுகிறார்.

சந்தமிகு தமிழ்மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்தகுரு என்று ஆசார்யனைப் போற்றியுகப்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் கடமையாகும். அதற்காகவே ஸ்வாமி தேஶிகன் த்ராவிட வேதங்களின் பெருமையை வெளியிட்டு, ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார். ஸ்ரீநாத பத்ததியில் திருவாய்மொழியின் ப்ரபாவத்தை பரக்க நிரூபித்திருந்தாலும்

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்றென்னைப் புறம் போகப் புணர்ந்ததென் செய்வான்

வெறிதே அருள் செய்வார் (திருவாய்மொழி)

என்றபடி பகவான் அவனாக வந்து நமக்கு அநுக்ரஹிக்க வேண்டுமே தவிர, அவனை அடைவதற்காக நாம் எந்த உபாயத்தையும் அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்று சிலர் வ்யாக்யானம் செய்தனர் – அது சரியில்லை என்று பல ப்ரமாணங்களைக் காட்டி ஸமாதானம் அருளிச் செய்கிறார் ஸ்வாமி.

ஈஶ்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ர்ய காருண்யங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜ பூதங்களான விஶேஷகாரணங்களை அநாதரித்துப் பண்டு என்னைப் பராங்முகனாக்குகைக்கும் இன்றென்னை அபிமுகனாக்குகைக்கும் உன் ஸ்வாதந்த்ர்யமும் க்ருபையும் ஒழிய வேறு ஒரு ப்ரதான காரணம் கண்டிலேன், எனக்குக் காட்டாதே ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில் அருளிச் செய்யவேணும் என்ன, ஈஶ்வரன் நிருத்தரனாய் இருக்கிற இருப்பாலே ஸ்வாதந்த்ர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார். (ஸித்தோபாய ஶோதநாதிகாரம்) என்றும், திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து (திருவாய்மொழி) என்றவிடத்தில் “திருமாலிருஞ்சோலை” என்ற ஒரு வார்த்தையையாவது உச்சரித்தால் எம்பெருமான் “வெறிதே அருள் புரியும்” என்றபடி அருள் புரிவான். அதுவும் சொல்லவில்லையென்றால் அநுக்ரஹம் செய்யவே மாட்டான் என்பது ஆசார்யருடைய திருவுள்ளம்.

“நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும்” (திருவாய்மொழி 4-4-7) என்கிற பாசுரத்தில் “நீறு” என்பது பஸ்மத்தைக் குறிப்பிடுகிறது என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர். இது எந்த ப்ரமாணத்திலும் சேராது என்பதை ததீயவஸ்து ஸாத்ருஶ்யத்தாலே ததீயமல்லாதவற்றையும் ததீயமாகக் கருதிப் பிதற்றுகிற இவள் என்ற “திருவாறாயிரப்படி” வ்யாக்யானத்தை திருவுள்ளம் பற்றி, “ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை”யில் ஸமாதானம் செய்தருளியுள்ளார்.

सादृश्यमूल भ्रान्तिप्रतिपादन परत्वात् तस्य वाक्यस्य “ஸாத்³ருஶ்யமூல ப்⁴ராந்திப்ரதிபாத³ந பரத்வாத் தஸ்ய வாக்யஸ்ய”  என்று அருளிச் செய்தும்,

यद्वा न तत्र भस्मासाधारण: शब्द: प्रयुक्त: | तत्र हि प्रयुक्त: शब्दो भगवद्भक्त पादरजसि तेनैव प्रयुक्त:| अतो दिव्यचूर्ण विषयतयापि तच्छक्यं निर्वोढुम् | नन्वस्तु तत्र तथा, धवळचूर्णपरामर्शेन भगवत्कामुक नायिकोन्माद प्रशमनाभिधानं कथमिति चेन्न शर्ववाक्य परामर्शात् धवळचूर्णपरामर्शेन तच्छन्तिरिति वाक्यार्थपरत्वात्| अनन्तर गाथायां भगद्भक्तपादरजसा तच्छन्ति: सिद्धान्तिता: धवळशब्दस्यापि सितमनसमं इतिवत् विशुद्धमात्रपरतयोत्तरैकार्थ्यं वा| एतेन भगवत् एव वळर्क्षचूर्णधारण वचनमपि निर्व्यूढम्| चक्षुषि चतद्धारणं तत्र विहितमिति अञ्जनपरत्वमाहुराचार्या: शक्य:

யத்³வா ந தத்ர ப⁴ஸ்மாஸாதா⁴ரண: ஶப்³த³: ப்ரயுக்த: | தத்ர ஹி ப்ரயுக்த: ஶப்³தோ³ ப⁴க³வத்³ப⁴க்த பாத³ரஜஸி தேநைவ ப்ரயுக்த:| அதோ தி³வ்யசூர்ண விஷயதயாபி தச்ச²க்யம் நிர்வோடு⁴ம் | நந்வஸ்து தத்ர ததா², த⁴வளசூர்ணபராமர்ஶேந ப⁴க³வத்காமுக நாயிகோந்மாத³ ப்ரஶமநாபி⁴தா⁴நம் கத²மிதி சேந்ந ஶர்வவாக்ய பராமர்ஶாத் த⁴வளசூர்ணபராமர்ஶேந தச்ச²ந்திரிதி வாக்யார்த²பரத்வாத்| அநந்தர கா³தா²யாம் ப⁴க³த்³ப⁴க்தபாத³ரஜஸா தச்ச²ந்தி: ஸித்³தா⁴ந்திதா: த⁴வளஶப்³த³ஸ்யாபி ஸிதமநஸமம் இதிவத் விஶுத்³த⁴மாத்ரபரதயோத்தரைகார்த்²யம் வா| ஏதேந ப⁴க³வத் ஏவ வளர்க்ஷசூர்ணதா⁴ரண வசநமபி நிர்வ்யூட⁴ம்| சக்ஷுஷி சதத்³தா⁴ரணம் தத்ர விஹிதமிதி அஞ்ஜநபரத்வமாஹுராசார்யா: ஶக்ய:

என்று விஸ்தாரமாக நிரூபித்து, ஆழ்வார் தாமே தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்று பாகவத தாஸ்யத்தை அங்கீகரித்து அதை நெடுமாற்கடிமை (திருவாய்மொழி) என்பதை ஸங்க்ரஹித்து “नाथे नस्तृणं” “நாதே² நஸ்த்ருணம்” (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற ஶ்லோகத்தில் அருளிச் செய்துள்ளார்.