இந்திய இதிஹாஸங்கள், சரித்திரங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் , 9, 18 ஆகிய எண்களுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை.
தேவாஸுர யுத்தங்கள் நடந்த கால அளவு == 18 ஆண்டுகள். (18 =1+8 = 9)
ராம-ராவண யுத்தம் நடந்தது == 18 மாதங்கள் (18= 1+8=9)
மஹாபாரதத்தில் உள்ள பருவங்கள் == 18 (1+8=9)
பகவத்கீதையில் உள்ள அத்தியாயங்கள் == 18 (1+8=9)
பாரதப்போரில் ஈடுபட்ட சேனைகள் == 18 அக்ஷௌஹிணி (1+8=9)
பீஷ்மர் தர்மருக்குச் சொன்ன அரசரின் கடமைகள் == 18 (1+8=9)
மஹாபாரத யுத்தத்தில் ஈடுபட்ட சேனை ஒரு அக்ஷௌஹிணியில்
ரதங்கள் இருபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எழுபது. 21870 == கூட்டுத் தொகை 21870 = 18=9
யானைகள் இருபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எழுபது 21870 = 18 =9
காலாட்கள் ஒரு லக்ஷத்தி ஒம்பதாயிரத்துமுன்னூற்றி ஐம்பது =109350= 18=9
குதிரைகள் அறுபத்திஐயாயிரத்துஅறுநூற்றுப்பத்து = 65610 = 18 = 9
அரசரின் சின்னங்கள் 18 = 9
அரசன் வழங்கும் தண்டனை வகைகள் 18 = 9
காளை வடிவில் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்ல வந்த அரிஷ்டன் என்ற அரக்கனைக் காலால் எட்டி உதைத்து காளை போய் விழுந்த தூரம் 18 அடி = 9
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணருடன் சண்டையிட்டுத் தோற்றது 18 தடவைகள் = 18 = 9
க்ருத யுகத்தின் ஆண்டுகள் 17,28,000 கூட்டுத்தொகை 18 = 9
த்ரேதா யுகத்தின் ஆண்டுகள் 12,96,000 கூட்டினால் 18 = 9
த்வாபர யுகத்தின் ஆண்டுகள் 8,64,000 கூட்டினால் 18 = 9
கலியுகத்தின் ஆண்டுகள் 4,32,000 கூட்டினால் 18 = 9
ஒரு கல்பத்தின் மொத்த ஆண்டுகள் 6048,00,00,000 கூட்டினால் 18 = 9
பாரதப் போர் முடிந்து த்ருதராஷ்ட்ர மன்னன் வாழ்ந்த ஆண்டுகள் 18 = 9
நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000 கூட்டுத் தொகை 18 = 9
ஒரு மன்வந்திரத்தின் மொத்த ஆண்டுகள் 432,00,00,000 கூட்டுத்தொகை = 18 =9
மனித உடலுக்கு வாசல் = 9
நல்ல அரசனின் குணங்கள் 36 = 3+6 = 9
பாரத யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணரின் உதவியால்தான் தன் 100 பிள்ளைகளையும் கொன்று வெற்றி பெற்றார்கள் என்று கோபம் கொண்ட காந்தாரி ஸ்ரீகிருஷ்ணரும் அவரது உறவினர்களும் "இன்று முதல் 36வது ஆண்டில் கொல்லப்படுவார்கள்" என்று சபித்தாள். 36ன் கூட்டுத் தொகை 3+6 = 9
யுதிஷ்டிரர் பாரதப்போர் முடிந்து நல்லாட்சி செய்த ஆண்டுகள் 36 = 3+6 = 9
தமிழ்ச்சங்க நூல்கள் பதிணெண்கீழ்க்கணக்கு, பதிணெண்மேல்கணக்கு, கலம்பகத்தின் உறுப்புகள் 18 = 9
சித்தர்கள் மொத்தம் 18 பேர் = 1+8 = 9
சபரிமலை ஐயப்பன் கொயில் படிகள் 18 = 9
காவிரி நதி பெருக்கெடுக்கும் நாள் ஆடி 18 = 1+8 = 9
தமிழக விவசாயிகள் விதை விடும் சுபநாள் ஆடி 9
கஜனி முகமது இந்தியாவின்மீது படையெடுத்தது 18 முறை = 1+8 =9