அபீதி ஸ்தவம்
சுலோகம் 7
रमादयित
!
रङ्गभूरमण
!
कृष्ण
!
विष्णो
!
हरे
!
त्रिविक्रम
!
जनार्दन
!
त्रियुग
!
नाथ
!
नारायण!
|
इतीव
शुभदानि य:
पठति
नामदेयानि ते
न
तस्य यमवश्यता नरकपातभीति:
कुत:
|| 7
ரமாத₃யித
!
ரங்க₃பூ₄ரமண
!
க்ரு̆ஷ்ண
!
விஷ்ணோ
!
ஹரே
!
த்ரிவிக்ரம
!
ஜநார்த₃ந
!
த்ரியுக₃
!
நாத₂
!
நாராயண!
|
இதீவ
ஶுப₄தா₃நி
ய:
பட₂தி
நாமதே₃யாநி
தே
ந
தஸ்ய
யமவஶ்யதா
நரகபாதபீ₄தி:
குத:
|| 7
ய:
எவன்,
ரமாதயித
--
லக்ஷ்மீகாந்த!
, ரங்கபூரமண
--ஸ்ரீரங்கத்தில்
ரமிப்பவனே!,
க்ருஷ்ண
--
கண்ணா
!
(பூர்ணாநந்த
பூமியே!,),
விஷ்ணோ
--
எங்கும்
நிறைந்தவனே!,
ஹரே
--
ஹரியே
(ஆபத்தை
ஹரிப்பவனே,
சிங்கமே
),
த்ரிவிக்ரம
--
மூவுலகளந்த
சேவடியோனே!,
ஜநார்த்தன
--
ஜனார்த்தனனே!,
த்ரியுக
--
ஆறுகுணத்தோனே!,
நாத
--
நாதனே!,
நாராயண
--
நாராயணனே!!,
இதீவ
--
இதுவும்,
இதுபோலுள்ளவுமான,
ஶுபதாநி
--
க்ஷேமத்தை
அளிக்கும்,
தே
--
உம்முடைய,
நாமதேயாநி
--
திருநாமங்களை
,
படதி
--
உச்சரிக்கிறானோ,
தஸ்ய
--
அவனுக்கு,
யமவஶ்யதா
--
காலனுக்கு
வசமாவதென்பது,
ந:
-- கிடையாது,
நரக
-
பாத
-
பீதி
--
நரகத்தில்
வீழ்வதென்னும்
பயம்,
குத:
-- எங்கிருந்து
வரும்.
ஸ்ரீ
அன்பில் ஸ்ரீனிவாசன்
ஸ்வாமி
பூமகளின்
நற்துணைவா!
பொழிலரங்கக்
காதலனே!
முகில்வண்ண
கண்ணாவே!
மறைந்தெங்கும்
நிற்பவனே!
தீமைகளை
ஒழிப்பவனே!
திருவடியால்
உலகளந்த
திரிவிக்ரமாஸ்ரீ
ஜநார்தனா!
திருவாறு
குணமுடையோய்!
நாம்வணங்கும்
பெருந்தலைவா!
நாராயணா!
என்றென்று
நலமெல்லாம்
தருமுன்றன் நாமங்களைப்
பயில்வோனை
நமன்தனக்கு
வயமாக்கும் நிலையென்றும்
ஏற்படாதே!
நரகத்தில்
வீழ்கின்ற நடுக்கம்தான்
உண்டோதான்?
7.
ஸ்ரீ
அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்
ஸ்வாமி
முன்
சுலோகத்தில்
"துப்புடையாரை"
நினைத்தார்.
அத்திருமொழியில்
மேல்பாசுரங்களில்
"என்னை
அநேக
தண்டம்
செய்வதா
நிற்பர்
நமன்தமர்கள்",
"நமன்
தரம்
பற்றும்போது",
"நமன்தமர்
பற்றலுற்ற
அன்றைக்கு"
என்று
யமவச்யதா
பயமில்லாமல்
காப்பவராக
அரங்கத்
தரவணைப்
பள்ளியானைத்
துதிக்கிறார்.
பல
விஷயங்கள்
சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில்
ஓட
இங்கே
இந்த
சுலோகம்
அமைக்கப்
பட்டுள்ளது.
நம்பெருமாள்
திவ்யமங்கள
விக்ரஹம்
கோவிலை விட்டு வெளியே
எழுந்தருளியிருந்த
ஸமயம்,
ஸ்ரீரங்கநாய்ச்சியாரை
விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது.
ஸ்ரீரங்க
பூமியை
விட்டுப் பிரிவு,
ஸ்ரீரங்க
பூமியிலுள்ள
மனுஜ
திர்யகாதி
விஷய
வாஸிகளை
விட்டுப் பிரிவு,
ஸ்வாமியைப்போல்
ததேகநியதாசயராய்
ஸ்ரீரங்கநாதனையே
த்யானம்
செய்து ரமிப்பவரோடும்
பிரிவு.
"உம்மோடு
கூட
இருப்பதே
ஸ்வர்க்கம்.
உம்மை
விட்டுப் பிரிவே நரகம்"
என்று
ஸ்வர்க்க
நரக
லக்ஷணம்
சீதை லக்ஷ்மணன்
போன்ற
சேஷ
ஜனங்களுக்கு.
நம்
பெருமாளைவிட்டுப் பிரிவு
நரகபாத
துல்யம்.
"விஷ்ணு
பக்தருக்கு,
வைஷ்ணவருக்கு,
நமன்
தமர்
பயமில்லை.
நமனுக்கு
வசமாவதில்லை.
அவர்கள்
இவர்களைக்
கண்டு
பயந்து
ஓடுவார்கள்"
என்று
விஷ்ணு புராணத்தில்
பீஷ்மர்
நகுலனிடம்
யமனுக்கும்
அவன்
படர்களுக்கும்
நடந்த
ஸம்வாதத்தை
வர்ணித்தார்.
அவர்கள்
ஸம்வாதத்தை
நரகத்தில்
அப்போது அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த
காளிங்கர்
நேரில் கேட்டார்.
அவர்
ஜாதிஸ்மரர்.
அதாவது
ஒரு சக்தி
விசேஷத்தால்
பூர்வ
ஜன்மங்களில்
தாம் அனுபவித்ததை
யெல்லாம் ஸ்மரிப்பவர்.
பூர்வ
ஜன்மத்தில்
தாம் நரகத்தில்
கூட
இருந்து
கேட்ட
பேச்சை
அப்படியே
அவர்
தம்முடைய
பிராமண
ஜன்மத்தில்
பீஷ்மருக்கு
வர்ணித்தார்.
பீஷ்மர்
நகுலனுக்கு
வர்ணித்ததைப்
பராசரர்வர்ணித்தார்.
இந்த
ஸம்வாதத்தில்
ஸ்ரீசங்கரர்
முதலிய
அத்வைதப்
பெரியார்களுக்கு
விசேஷ
ஈடுபாடு.
யமன்
பாடினான் என்று
"ஹரிகுருவஶகோऽஸ்மி
ந
ஸ்வதந்த்ர:
ப்ரபவதி
ஸம்யமதே
மமாபி விஷ்ணு:"
(हरिगुरुवशगोऽस्मि
न स्वतन्त्र:
प्र्भवति
संयमते ममापि विष्णु:)
என்ற
சுலோகத்தை
பரமதீ
க்ரந்தம்
உதாஹரித்தது.
"மது
ஸூதன
ப்ரபந்நரைப்
பரிஹரிப்பாயாக.
வைஷ்ணவர்கள்
பேரில் எனக்கு
அதிகாரமில்லை.
வைஷ்ணவர்களல்லா தாருக்கே
நான் ப்ரபு"
என்ற
சுலோகத்தை
மதுஸூதனர்
தம்
அழகான
கீதா
வ்யாக்யானத்தில்
உதாஹரித்தார்.
ஹரி,
விஷ்ணு,
ஜநார்த்தனன்,
மதுஸூதனன்,
வாஸுதேவன்
முதலிய
திருநாமங்களை
தர்மராஜர்
அங்கே அடிக்கடி
கீர்த்தனம்
செய்கிறார்.
இந்தத்
திருநாமங்களை
உச்சரிப்பவர்களைக்
கண்டு
யமபடர்கள்
நடுங்க
வேண்டும்.
"நமன்தமர்
தலைகள்
மீதே
…………..
நின்
நாமம் கற்ற
ஆவலிப்புடைமை
கண்டாய்
அரங்கமா
நகருளானே"
என்று
அரங்கனையே
அத்யந்தம்
ஐகாந்த்யத்தோடு
பற்றிய
(ததேக
நியதாஶயரான)
தொண்டரடிப்பொடிகளும்
யமனுடைய
கானத்தை
அநுகானம்
பண்ணினார்.
காதோடு
ரஹஸ்யமாகச்
சொல்லுகிறேன் என்று தொடங்கிய
யமன்
போகப்போக
ஸந்தோஷ
பாரவச்யத்தால்
மெய் மறந்து
உரக்கப்
பாடினான் என்னும் ரஸத்தை
பாமதி
அநுபவித்தது.
பீஷ்மரும்
பராசரரும்
அநுபவித்தார்கள்.
छिन्धि
भिन्धि
(சிந்தி,
பிந்தி)
(கிழி,
பிள)
என்று
கொடுமையே பேசுபவர்
பாடினார் என்றும் ரஸம்.
गीतं
वैवस्वतेन यत्
(கீதம்
வைவஸ்வதேந
யத்)
என்று
கடைசியில்
யமன்
இப்படிப்
பாடினான் என்று பீஷ்ம
பராசரர்கள்
ரஸித்தார்கள்.
யமன்
பாட்டுக்களில்
கடைசிப்
பாட்டு
कमलनयन
वासुदेव विष्णो धरणिधराच्युत
शङ्खचक्रपाणे
|
भव
शरणमितीरयन्ति ये वै त्यज भट
दूरतरेण तानपापान्
||
கமலநயந
வாஸுதேவ
விஷ்ணோ
தரணிதர
அச்யுத
சங்கசக்ரபாணே
|
பவ
ஶரணம்
இதீரயந்தி
யே வை த்வஜ
பட
தூரதரேண
தாந்
அபாபாந்
||
என்பது.
"இந்தத்
திருநாமங்களைச்
சொல்லி நீயே அடைக்கலம்
என்று பேசுபவரிடமிருந்து,
அதி
தூரம்
விலகிச்
செல்லுங்கள்"
முன்
"விலகு"
"தூர
விலகு"
என்று
பாடிற்று.
இங்கு
திருநாமத்தைச்
சொல்லி
"அடைக்கலம்"
என்று
பேசுபவர்
விஷயத்தில்
"தூரதரம்
விலகு"
என்று
பாடப்பட்டது.
முன்
பாதியில் திருநாமங்கள்
அடுக்காகப்
படிக்கப்பட்டது.
இந்த
சுலோகத்திலும்
அதே ரீதியாக
முன்பாதியில்
திருநாமங்களை
மட்டும்
அடுக்கி அமைத்து
:"இதி
ஈரயந்தி"
என்றதுபோல்
"இதீவ
படதி
நாமதேயாநி
தே"
என்று
இங்கும் பின்பாதியின் அமைப்பு.
"இதீவ"
"இதுபோன்ற
நாமதேயங்களை".
யமனுடைய
சுலோகத்திலும்
அதே நாமங்களையோ
மற்ற
நாமங்களையோ
என்று தாத்பர்யம்
என்பதை
ஸ்வாமி "இவ"
என்று
காட்டியருளுகிறார்.
யமன்
பாடினபடியும்
தொண்டரடிப்பொடிகள்
பாடினபடியும்
உம் திருநாமங்களைச்
சொல்லி நீரே சரணம்
என்று வாயாலேயாவது
சொல்லும் எம்போல்வார்க்கு
யமவஶ்யதை
என்பதே
ஸம்பவிக்க
மாட்டாது.
"த்வயா
விநா"
உம்மைவிட்டுப்
பிரிவினால் நாங்கள்
நரகத்தையே
அனுபவிக்கிறோம்.
யமவஶ்யதை
இல்லாதார்க்கு நரகாநுபவம்
வர
ந்யாயமில்லை.
உம்
பிரிவால் ரௌரவாதி
ஸப்த
நரகங்களை
நாங்கள்
இப்போது அனுபவிப்பது
உண்மை.
எங்களுக்கோ
யமவஶ்யதை
கிடையாது என்பது
திண்ணம்.
யமவஶ்யதை
நரகாநுபவத்திற்குக்
காரணம்.
காரணமில்லாமல்
காரியம்
உண்டாகிறதே,
இது
என்ன அந்யாயம்
என்று கடைசிப்
பாதத்தில் கைமுத்யத்தால்
விளக்கும்
அழகு
ரஸிக்கத்
தக்கது.
ஸ்வாமி
திருவுள்ளப்படி
ஒவ்வொரு பதத்தின்
ரஸத்தைக்
கொஞ்சம்
காட்டுவோம்.
ரமாதயித
--
தேவரீர்
செஞ்சிக்கோட்டையிலும்,
ஸ்ரீரங்கநாச்சியார்
கோயிலிலுமாக
இருப்பது
ந்யாயமோ?
"நிரயோ
யஸ்-த்வயாவிநா"
"விஷ்ணோ:
ஸ்ரீ:
அநபாயிநீ"
"அகலகில்லேன்
இறையும்"
என்னும்
உம் பிரிய
காந்தைக்காகவாவது
நீர் கோயிலுக்குத் திரும்பி
எழுந்தருள
வேண்டாமோ?
निवर्त्य
राजा दयितां दयालु (நிவர்த்ய
ராஜா
தயிதாம்
தயாளு)
என்று
ரகுவம்சம்.
தயிதை
விஷயத்திலும்
தயாளுவல்லவோ
?
ரங்கபூரமண
--
பிராட்டி
விபுவாக
நம்மோடு
எங்கும் எப்போதும் गाढोपगूढ
(காடோபகூட)மாய்
அணைந்தே இருப்பவள்.
அவளை
விட்டுப் பிரிவு என்பதே
இல்லை என்பீரோ,
ரங்கபூ
என்னும் அரங்கநகர்
(அயோத்யை)
நோவு
படுகிறதே.
அதற்கு
நீர்தானே ரமணன்.
அதற்குப்
பொறுக்காத
அரதி.
அதில்
வஸிக்கும்
மநுஜ
-
திர்யக்
-
ஸ்தாவரமெல்லாம்
ராம
விரஹத்தில்
அயோத்தியில் சராசரம்போலக்
கதறுகின்றனவே.
ரமணனில்லாமல்
ரங்கபூமி
நாயகனற்ற
ஸ்திரீபோல்
துக்கப்படுகிறதே.
"ரங்கம்"
என்னும்
நகர்,
"பூ"
என்னும்
பூமிதேவி,
இருவருக்கும்
"ரமண"
என்றும்
கொள்ளலாம்.
ரங்கம்
பூமியிலே ஏகதேசமானாலும்,
ரங்கத்தை
மட்டும்
தனித்து
எடுத்துப் பேசுவது
ரஸம்.
அரங்கமும்
கதறுகிறது.
பூமிப்
பிராட்டியும் கதறுகிறாள்.
अश्रुमुखी
खिन्ना-
क्रन्दन्ति
करुणं
(அஶ்ருமுகீ₂
கி₂ந்நா-
க்ரந்த₃ந்தி
கருணம்)
உபயநாச்சிமாரும்
அவர்களிருக்கும்
நகரமான
ரங்கமும்
கதறுகிறார்கள்
என்பதைக்
காட்ட,
"ரங்க"
என்பதை
இரண்டு
நாச்சிமாருக்கும் நடுவில்
வைத்தார்.
தாய்களும்
ப்ரஜைகளும்
நோவுபடுகின்றன
என்றபடி.
அடைக்கலம்
கொள்ளுவதற்கு
இந்தத் திருநாமங்கள்
ஸப்ரயோஜனம்.
க்ருஷ்ண
-
"ஹா
க்ருஷ்ணா"
என்று
த்ரௌபதி
கூப்பிட்ட
திருநாமம்.
பத்தொன்பதாவது
சுலோகத்தில்
அவள்
வ்ருத்தாந்தத்தைப் பேசப்
போகிறார்.
"க்ருஷ்ண"
என்பதற்கு
"ஆனந்தத்
தின்
எல்லை பூமி"
என்று
பொருள்.
"க்ருஷி"
என்று
பூமிக்குப் பெயர்.
"ரங்கபூ"
என்று
பேசியதும்
"பெருமாளே
நிர்வ்ருதிபூமி"
"ஆனந்தத்திற்கு
எல்லைபூமி"
என்று
ரஸமாய்ச்
சேர்க்கிறார்.
ரங்கபூமியில்
நிர்வ்ருதிபூமியான
நீர்
சேர்ந்திருந்தால் பரஸ்பர
ரஸம்.
"ரங்கம்"
என்பதற்கு
"ரதிம்
கத:"
"ரதியை
அடைந்தார்"
என்று
பொருள்.
அதிலிருப்பதால்
ரதி
அடையப்
படுகிறது.
रति
गतो यतस्तस्मात् रङ्गमित्यभिधीयते
(ரதிம்
கதோ
யதஸ்
தஸ்மாத்
ரங்கம்
இதி அபிதீயதே)
விஷ்ணோ!
ஹரே
!
-- யமன்
பாடிய
திருநாமங்கள்.
யமபடருக்கு
பயமுண்டாக்குபவை.
"रकारादीनि
नामानि,
अकारादीनि
नामानि"
(ரகாராதீநி
நாமாநி,
அகாராதீநி
நாமாநி)
உலகத்தின்
ஆபத்தை
யெல்லாம் ஹரிப்பவராயிற்றே.
ப்ரணதார்த்தி
ஹரனல்லவோ?
த்ரிவிக்ரம
--
लोकविक्रान्तचरणौ
शरणं
तेऽव्रजं
प्रभो
(லோக
விக்ராந்த
சரணௌ
ஶரணம்
தே அவ்ரஜம்
ப்ரபு
)
-- உலகளந்த
உம்
சேவடிகளைச்
சரணம்
புகுந்தேன் என்று சரண்
புகும் வகை.
विष्णुं
क्रान्तं
वासुदेवं
विजानन्
(
விஷ்ணும்
க்ராந்தம்
வாஸுதேவம்
விஜாநந்)
என்றபடி.
ஜநார்த்தன
-- இதுவும்
யமன்
பாடல்களிலுள்ளது.
த்ரியுக
--
மூவிரண்டான
ஆறு
குணங்களை
உடையவரே
!
முதல்
மூன்று யுகங்களில் மட்டும்
மத்தியில்
அவதாரம்
செய்பவர்.
கலியில்
அதன்
முடிவில்தான்.
விபவாவதாரம்
கலி மத்தியில்
கூடாதென்று இருக்கிறீரோ?
நாத
--
"ரங்கநாத"
என்று
கூப்பிடக்
கூடாமலிருக்கிறதே,
இதனிலும்
எங்களுக்குக்
கஷ்டமுண்டோ?
நாராயண
-- இடராயினவெல்லாம்
நிலம்தரம்
செய்யும் நாமம் பெருமாள்
சக்ரபாணியாய்
ஆகாசத்தில்
எழுந்தருளி
தன்னைக்
காட்டக்
கண்டபோது,
"நாராயண!
அகிலகுரோ!
பகவந்
! நமஸ்தே
" என்று
கஜேந்த்ராழ்வார்
முதலில்
கூப்பிட்ட
நாமம்.
திருவஷ்டாக்ஷரத்திலும்
த்வயத்திலும்
விளங்கும்
திருநாமம்.
இதீவ
-- இப்படி,
இதுபோன்ற.
இவ
என்பதால்
முழுவதும்
சரியாகச்
சொல்லாவிடினும்,
சொல்லுவதுபோலிருந்தாலும்
போதும்.
படதி
இவ
--
வேறு
ஏதோ ப்ரஸ்தாவத்தில்
இந்த
ஸப்தத்தை
மட்டும்
உச்சரித்தாலும்.
"நாராயண"
என்னும்
திருநாமத்தால்
அஜாமிளன்
கதையை
நினைத்து,
"படதீவ"
-- பாடம்
படிக்கிறது
போலிருந்தாலும் என்று கருத்து.
आक्रुश्य
पुत्रमघवान् यदजामिलोऽपि
म्रियमाण
अवाप
मुक्तिम्
(ஆக்ருஶ்ய
புத்ரம்
அகவாந்
யதஜாமிளோபி
நாராயண
இதி
ம்ரியமாண
அவாப
முக்திம்)
இந்த
நாமத்தின்
ப்ரபாவத்தை
ரஸித்த
ஸ்ரீவித்யாரண்ய
ஸ்வாமி
பஞ்சதசியில்
இந்த
சுலோகத்தை
உதாஹரித்தார்.
நாமதேயாநி
--
திருநாம
சப்தத்தை
மட்டும்.
அர்த்தம்கூட
வேண்டியதில்லை.
வாச்யனான
உம்முடைய
நினைப்பில்லாமல்,
உம்
பேராயிருப்பது
மாத்ரமே
போதும்.
"பவ
ஶரணம்"
என்று
பேசுவார் என்றான் யமன்.
"இதி
ஈரயந்த"
शरणगतिश्ब्दभाज"
(ஶரணாகதி ஶப்தபாஜ)
என்று
ஆழ்வான்
"ஸ்வார்த்தே
தேயட்
ப்ரத்யயம்"
என்பர்.
தே
-- உம்
திருநாமமாதலால்
சப்தத்தின்
படநமாத்ரத்திற்கு
இத்தனை
ப்ரபாவம்.
ந
தஸ்ய
யமவஶ்யதா
--
அவர்கள்
விஷயத்தில்
தனக்கும்
தன்
படர்களுக்கும்
அதிகாரமில்லை
என்று அதிகாரி புருஷனான
தர்மராஜனே
சொல்லி இருப்பதால்,
அதில் ஸந்தேஹமில்லை.
இதைக்
காட்டவே
அந்த
சுலோகத்தின்
ரீதி இங்கே அனுஸரிக்கப்
பட்டது.
யமவஶ்யதை
வராமல்
நரகபாதம்
ஸம்பவிக்க
ந்யாயமில்லையே.
ஸப்த
நரகங்களிலும்
யமனுடைய
அதிகாரம்
(வ்யாபாரம்)
தான்
என்று ஸூத்ரகாரர்
"अपि
सप्त",
"तत्रापि
च तद्वयापारादविरोध:
" என்று
தீர்மானித்தார்.
ஸூத்ரப்
பிரஸித்தியைக்
கொண்டு இங்கே கைமுதிக
ந்யாயத்தை
வைக்கிறார்.
நரகாநுபவத்திற்குக்
காரணமான
யமவஶ்யதை
இல்லாமலே
நாங்கள்
நரகதுல்யமான
யாதனைகளை
உம் பிரிவினால் அனுபவிக்கிறோம்.
இதையெல்லாம்
உடனே
நிவர்த்திக்க
வேணும்.
ஸ்ரீரங்க
நாச்சியார்,
அரங்கம்,
பூதேவி,
அரங்கவாஸிகள்
எல்லோரும் நாதனுடன்
கூடியிருக்க
வேணும்.
நாதனோரிடம்,
அரங்கமோரிடமாக
இருக்கலாகாது
என்கிறார்.
(7)