வியாழன், 3 செப்டம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 7

நாட்டேரி ஸ்வாமி கடந்த 31-08-2015 அன்று நிகழ்த்திய  "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" ஏழாவது டெலி உபந்யாஸத்தினை நகலிறக்க/ கேட்டு மகிழ
http://1drv.ms/1EB2nRk

அல்லது

http://www.mediafire.com/listen/63qklss21kixcl7/007_SSR_%2831-08-2015%29_00_25_21-01_46_45.mp3 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்

||ஸ்ரீ;||
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன்
அருளிச் செய்த
ஸத்யவ்ரத க்ஷேத்ரமாஹாத்ம்யம்
என்கிற
ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்
தனியன்கள்
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.
ராமாநுஜ தயாபாத்ரம் ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்.
நேரிசை வெண்பா
சீரொன்று தூப்புற் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
மாநார்ஹம் மஹதாம் மஹா நடஜடா பர்யந்த நிர்யந்த்ரண
க்ரீடா பந்துர ஸிந்துராஜ மஹிஷீ ஜந்மாஸ்பதம் தத்பதம்
மாதங்காசல மௌலி மண்டநமணேர் வந்தாரு ப்ருந்தாரக
ச்ரேணீ சேகர பாரிஜாத கலிகா சூடாசல மீடாமஹே.
வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி
வாழி யெதிராசன் வாசகத்தோர் —- வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதா ரன்பு. (1)
ஸகல லோக ஹிததம விஷய விவித வேதாந்தோப ப்ருஹ்மணங்களான புராணங்களில் முக்யதமமாகையாலே முற்பட எண்ணப்பட்ட ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்ர மாஹாத்ம்ய முக்யத்தாலே ஸந்தர்சிதமான பேரருளாளன் பெருமையை பாவுகரான பகவந் நிஷ்டருடைய ஹ்ருதயரஞ்ஜநார்த்தமாக மநஸ்ஸிலே பாவமும், வாக்கிலே ராகமும், கரத்திலே தாளமுமாக, பாவ ராக தாளங்களை வகுத்த பரத சாஸ்த்ரத்தின்படியே பண்ணும் இசையும் திகழப் பார்க்கின்றோம். இத்தைக் குறிக்கொண்டு கேட்டருள்மின்.
                                                                     (தொடரும்)