जीवेश्वरभेदभ्रमनिरूपणम्
ஜீவேச்வர
பேத ப்ரம நிரூபணம்
ப்ரஹ்மத்தின்
ஸ்வரூபத்தை மறைக்கும்
ஸ்வபாவமுள்ளதான மாயைக்கு
இரண்டு அம்சமுண்டு.
ஒன்று
தலையெடுத்த ஸத்வகுணத்தை
யுடையதாயும்,
மற்றொன்று
குறைந்த ஸத்வமுடையதாயும்
இருக்கும்.
இவ்விரண்டில்
முதலாவது மாயையென்றும்,
இரண்டாவது
அவித்யை யென்றும் சொல்லப்படும்.
இந்த
இரண்டும் கண்ணாடிபோல் பிம்பத்தை
க்ரஹிக்க சக்தியுள்ளது.
ஆகையால்
ப்ரஹ்மம் இவைகளில் ப்ரதிபலிக்கிறது.
இதில்
மாயையில் ப்ரதிபிம்பம்
ஈச்வரனென்றும்,
அவித்யையில்
ப்ரதிபிம்பம் ஜீவனென்றும்
ஒரே ப்ரஹ்மத்தில் பேதம்
உண்டாகிறது.
சிலர்
மாயையில் ப்ரதிபிம்பம்
ஈச்வரனென்றும்,
மாயாபரிணாமமான
அந்தக்கரணத்தில் ப்ரதிபிம்பம்
ஜீவனென்றும் சொல்லுகிறார்கள்.
அவித்யாம்சங்களும்
அந்தக்கரணங்களும்
அநேகங்களாகையால் அவைகளில்
ப்ரஹ்ம--ப்ரதிபிம்பத்தால்
பல
ஜீவர்கள்
ஏற்படுகிறார்கள்.
கண்ணாடியில்
ப்ரதிபலிக்கிற முகம்
நேரிலிருக்கும் முகத்தைக்
காட்டிலும் உண்மையில் வேறன்று,
ஆகிலும்
வேறாகத் தோன்றுகிறது.
அப்படியே
இரண்டு கண்ணாடிகளில் ஒரு
முகம் ப்ரதிபலித்தால்
கண்ணாடியின் பேதத்தால்
ப்ரதிபலிக்கும் முகங்களும்
வேறுவேறாகத் தோன்றுகின்றன.
வாஸ்தவத்தில்
எல்லாம் ஒன்றே.
இவ்விதமே
ஒரே ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்களில்
ப்ரதிபலிப்பதால் மூன்றும்
வேறுவேறாகத் தோன்றுகின்றன.
அவற்றில்,
ஈச்வரரூபமான
ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான
மாயையில் அதிகமான ஸத்வகுணமிருப்பதால்,
அது
அதிகமான ஞானம்,
சக்தி,
முதலியவைகளை
யுள்ளதாயிருக்கும்.
கண்ணாடியிலுள்ள
தோஷங்களெல்லாம் அதில்
ப்ரதிபலித்த முகத்தில்
தோன்றுகிறதுபோல,
மாயையிலுள்ள
அதிகமான ஞானம்,
சக்தி
முதலியவை அதில் ப்ரதிபலிக்கிற
ப்ரஹ்மத்தில் தோன்றுகிறது.
அதனால்
ஈச்வரன் ஸர்வஜ்ஞன்,
ஸர்வசக்தன்,
ஸத்யஸங்கல்பன்
முதலான வ்யவஹாரங்கள்
நடந்துவருகின்றன.
இவனுக்கு
அதிகமான ஞானசக்திகள் இருப்பதால்
இவன் ஆராத்யனாயும்,
(आराध्यः
–– பூஜிக்கப்படுபவன்)
தன்னை
ஆராதிப்பவர்களுக்கு பலப்ரதனாயும்
(
फलप्रदः
--
ப2லத்தைக்
கொடுப்பவன்)
ஆகிறான்.
இந்த
ஈச்வரன்தான் ஸகுணப்ரஹ்மம்
என்று சொல்லப்படுகிறான்.
ஜீவரூபமான
ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான
அவித்யை அல்லது அந்தக்கரணம்
ஸத்வகுணம் குறைவாயிருப்பதால்
அல்பமான ஞானசக்திகளை
யுடையதாயிருக்கும்.
அதனால்
அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மம்
அல்பஜ்ஞமாய் அல்பசக்திகமாய்த்
தோன்றுகிறது.
இதனால்
ஜீவன் அல்பஜ்ஞன் அல்பசக்திகன்
என்கிற வ்யவஹாரம் நடந்துவருகிறது.
மாயாபரிணாமமான (பரிணாமம் --விகாரம், மாறுதல்) அந்தக்கரணத்தின் விகாரங்களான ஞானம், இச்சா, (इच्छाः ஆசை) க்ருதி,(कृति - முயற்சி) த்வேஷம், ஸுகம், துக்கம் முதலானவைகள் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கிற ஜீவனிடத்தில் தோன்றுகிறபடியால் ஜீவனுக்கு நான் ஞாதா, (ज्ञाता --அறிபவன்) போக்தா, (भोक्ता -- அனுபவிப்பவன்) கர்த்தா,(कर्ता -- செய்பவன்) ஸுகீ, துக்கீ முதலிய வ்யவஹாரங்கள் நடக்கின்றன.
ஜலத்தில் ப்ரதிபலித்த சந்திரனிடத்தில் ஜலத்திலுண்டாகும் அசைதல் முதலியவை தோன்றி, சந்திரன் அசைகிறான் என்று ப்ரமத்தால் சொல்லப்படுவதுபோல் அந்தக்கரணத்தில் உண்டாகும் சலநாதிவிகாரம் (चलनादिविकारः –– அசைதல் முதலிய செய்கைகள்) அதில் ப்ரதிபலித்த ப்ரஹ்மத்தில் தோன்றுவதால், ஜீவன் இகலோக பரலோக ஸஞ்சாரம் (इहलोकपरलोक सच्चारः –– இவ்வுலகம், மேலுலகம், இவைகளுக்குப் போவது வருவது) செய்கிறான் என்கிற வ்யவஹாரம் உண்டாகிறது.
ஜீவனுக்கு ஞானம், சக்தி முதலியவை குறைவு. அதனால் ராகத்வேஷாதிகளாலே தனக்கு இஷ்டமான வஸ்துவை யடைவதற்கும், அநிஷ்டமாய்த் தோன்றுவதை விலக்குவதற்கும் சக்தியற்றவனாய், அதற்காக ஈச்வரனை உபாஸித்து, அவனுடைய அநுக்ரகத்தால் ஐச்வர்யம் முதலான ஸாம்ஸாரிக பலத்தை (संसारिकफल –– ஸ்வர்க்கம், பூமி இவைகளிலேயே அனுபவிக்கக் கூடிய பலம்) அடைகிறான். நிஷ்காமனாய் ஈச்வரனை உபாஸித்தால், அவனுடைய அநுக்ரகத்தால் சித்தசுத்தி உண்டாகி வேதாந்த ச்ரவணத்திற்கு அதிகாரியாகிறான். (अधिकारः –– ஒரு காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய யோக்யதை. இதையுடையவன் அதிகாரி)
(தொடர்வது பந்தமோக்ஷநிரூபணம்)