சனி, 25 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 7

13. ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லும்

            உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உவப்புஇல் வலியார், அவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ, நான்முகன் ஏத்த, முன்நாள் அவர்நாள் ஒழித்த பெருமான்,

            காய்ந்து இருளை  மாற்றி கதிர் இலகு மாமணிகள் யெந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார். முரன் நாள் வலம் அழித்த மொய்ம்பன்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 6

          11. கஜேந்திர மோக்ஷம் (யானையின் துயர் தீர்த்தருளியது)

           ஒருநாள் கொழுந்து அலரும் மலர்ச்சோலைக்கு , மீன் அமர்இலை ஆர்மலர்ப் பூம்பொழில் பூரம்கொள் பொய்கையில், நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு, “வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கு” என்று எப்பொழுதும் கைநீட்டும் ஆனை சென்று, நால்வாய் மும்மதத்து இருசெவி தனிவேழம் கடிகொள் தாமரை வாங்க, களிறு முடியும் வண்ணம் காலை ஓர் முழுவலி பதக முதலை பற்ற, பிலம்புரை பேழ்வாய் வெளிஎயிறுஉற அதன் விடத்தினுக்கு அனுங்கி, தடம் மால்வரை போலும் போர்யானை கோட்பட்டு நின்று அலறி, நடுக்குற்று, குலைந்து, உள்நினைந்து, துவண்டு, “நீ அன்றி மற்றுஒன்று இலம் நின் சரணே” என்று நீர்மல்கக் கமலம் கொண்டு ஒரு நெடுங்கையால் கூப்பி, “ நாராயணா ஓ! மணிவண்ணா, நாகணையாய் ஓ! வாராய் என் ஆர்இடரை நீக்காய் என் கண்ணா, என் கண்ணா” என்று நினைந்து கதற, நாவளம் நவின்று அங்கு ஏத்த, திருமால் வெகுண்டு, உதவப்புள் ஊர்ந்து, செம்புலால் உண்டு வாழும் முதலைமேல்ச் சீறிவந்தான், பெண் உலாமசடையினானும் பிரமனும் உன்னைக்காண்பான் எண்இலா ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண் உளார் வியப்ப ஓடிவந்து ஆனையின் அருந்துயர்கெட, மதம் ஒழுகு வாரணம் உய்ய மாமுதலை கோள்விடுப்பான், தன் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர அருள் செய்தான் ஆழிப்படையான், கொடிய வாய்விலங்கின் உயிர் மலங்கக்கொண்ட சீற்றத்தால் சென்று சுடு ஆழி தொட்டுவன் முதலை துணிபட இரண்டுகூறாக கொடுமாமுதலைக்கு இடர்செய்தான் செங்கண் பெருந்தோள் நெடுமால். கைம்மதயானை இடர்தீர்த்த கருமுகிலை, தூம்பு உடைப்பணைக் கைவேழம் துயர் கெடுத்தருளிய அம்மானை, நரகத்தின் நடுக்கம் தீர்த்தானை, பொள்ளைக்கரத்தப் போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனை அடைக்கலம் புகுவோம்.

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன்சேவடிமேல் அன்பாய், துணிந்தேன்
புரிந்து ஏத்திஉன்னை, புகலிடம்பார்த்து ஆங்கே
இருந்துஏத்தி வாழும் இது.

12. நீறு பூசி ஏறு ஊரும் சிவன் சாபம் தீர்த்தது
      {பிண்டி ஆர் மண்டை ஏந்தி, பிறர்மனை திரிந்து உண்ணும் முண்டியான் துயர் நீங்கியது}

        அயன் அரனைத்தான் முனிந்து இட்ட, வெம்திறல் சாபத்தால், துண்ட வெண்பிறையணிந்து, வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யில் பூசி, கையகத்து ஓர் சந்துஆர் தலைகொண்டு மூவுலகும் பலிதிரியும் ஈசன், சென்று மாமணி வண்ணனிடம் “என் எந்தாய்! சாபம் தீர், முகில்வண்ணா ஓ ஈன்அமர் சாபம் நீக்காய்” என இரந்தான் இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள குறைஇரப்ப, இரங்கி, வெண்த்தலைப் புலன் கலங்கஉண்ட பாதகம்கெட, மாறுஒன்று இல்லா வாசநீர், அலங்கல் மார்வு அகலத்து குருதிநீர், இலங்கு அமுதநீர் அளித்து மண்டை நிறைத்து இடர் நீக்கினான் அரவின் அணைமேலான் செக்கர்மேனி நீறு அணிந்த புன்சடைக்கீறு திங்கள் வைத்தவன், நக்கன், ஊன்முகம் ஆர்தலை ஒட்டு ஊண் ஒழித்து, பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத்தன் உந்தியிலே உறையவைத்தான்.

புதன், 22 பிப்ரவரி, 2012

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 5

7.பரசுராமாவதாரம்
(முன்னும் இராமனாய் முனிந்த முனிஆய் வந்து மழுவின் படை ஆண்ட தார்ஆர் தோளன்)

      வையகம் முழுதும் முறைகெடச் செய்த குலமன்னர் அங்கம் மழுவினில் துணிய, கோமங்க, வங்கக்கடல் வையம் உய்ய, இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும் ஒருநாலும் ஒன்றும் உடனே செருது, மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவன்.

     ஆழி அம் திண்தோள் அரசர் வந்து இறைஞ்ச அலைகடல் உலகம் முன்ஆண்ட பாழி அம்தோள் ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய அடல்புரை எழில்திகழ் திரள்தோள் ஆயிரம் துணித்த மைந்தன்.

    மன்னர்முடி பொடிப்படுத்து, அரசுகளை கட்டு, அவர்தம் குருதிப் புனல் குளித்து, திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து, வையம் உய்வித்த திறலோன்.

     என் வில்வலி கண்டு போ என்று எதிர்ந்தான் மழுவாளி, தன் வில்லினோடும் அவன் தவத்தை முற்றும் செற்று வென்றி கொண்டு தனதாக்கினான் தசரதன் பெற்ற மரகத மணித்தடம் தாசரதி.

      கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் மனம். 

அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே
.

8. பலராமாவதாரம்  (பின்னும் இராமனாய்)

             வெற்றித்தொழிலார் வேல்வேந்தர் விண்பால் செல்ல வெம்சமத்துச் செற்றக் கொற்றத்தொழிலான் பலதேவன், பிலம்பன் தன்னைப் பண் அழிய பாண்டி வடத்தே வென்றான் வெண்சங்கின் மாமேனியான்; உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும் மழலோடுவாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன்.

        சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணைஆம் மணிவிளக்காம் பூம்பட்டுஆம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.

       கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு அருளு நின் தாள்களை எனக்கே.

9. புத்தாவதாரம்

        கள்ள வேடத்தைக்கொண்டு போய்புரம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளபேதம் செய்திட்டு, உயிர் உண்ட உபாயங்களும், பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியாய் நின்ற தனி உடம்பன். 

அவரவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவுஇலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

10. கற்கி அவதாரம்

           தவநெறிக்கு ஓர் பெருநெறி ஆய் வையம் காக்கும் கரும்பரிமேல் கற்கியும் ஆனான்,

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல்இதழ் தாமத்தால்
வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால்
ஏத்துதி ரேல் நன்று.

எந்தையேஎன்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.
          

ஏழாட்காலம் பழிப்பிலோம்

ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரிலிருந்து மேலும் ஓர் ரத்னம் நிகர் வ்யாஸத்தைப் பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கு பெரு மகிழ்ச்சி. இதை எழுதிய ஸ்ரீ ஈகை ஸ்வாமியைப் பற்றி இருதினங்களுக்கு முன்னால்தான் சொஞ்சம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. தேசிகன் தவிர மற்று தெய்வமில்லை என்று வைராக்யமாக வாழ்ந்த பெரியார் என்றும் அவர் வாழ்நாளில் ஸ்ரீதேசிக த்வேஷிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்றும் கேள்விப் பட்டேன். இந்த  கட்டுரையுமே அதை மெய்ப்பிக்கின்றது.   அளவில் சிறியதுதான் என்றாலும் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் படிக்கின்ற அளவுக்கு விஷயகனமானது.

Guru Paramparai Vaibhavam Tele- Upanyasam dated 20-02-2012

திருக்குடந்தை தேசிகன் திருமலையிலிருந்து திருக்குடந்தைக்கு திரும்புங்கால் காஞ்சீ,திருநீர்மலை, திருவஹீந்திரபுரம், திருச்சித்ரகூடம், தேரழுந்தூர் எனப் பல  திவ்யதேசங்களை  மங்களாசாஸனம் செய்துகொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளிய வைபவத்தை மிக அற்புதமாக நாட்டேரி ஸ்வாமி இன்றைய (20-02-2012) "குரு பரம்பரை வைபவ"த்தில் விவரிப்பதை நேரடியாகக் கேட்டு மகிழ


To download from Mediafire

http://www.mediafire.com/?kfqzws2ajqy320g 

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 4

வாமன, திருவிக்கிரம அவதாரம்

(தனி ஒரு மாணியாய் வந்து, உத்தர வேதியில் ஓங்கி உலகளந்த உத்தமன்)

      மாவலி வலிதொலைப்பான் விண்ணவர் வேண்ட, வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க வாதிப்புண்டு ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர்நீக்க, வானவர் துயர்தீர வந்துதோன்றி, குறியமாண் உருவாகி, தாயைக் குடல்விளக்கம் செய்து சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனனாகி, “வருக! வருக! இங்கே வாமன நம்பி வருக இங்கே தளர்நடை இட்டு இளம்பிள்ளையாய்” “மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில், பேணி உனக்கு பிரமன் விடுதந்தான், மாணிக்குறளனே தாலேலோ” அழேல்! இந்திரன் தானும் எழில்உடை கிண்கிணிதந்து உவனாய் நின்றான் தாலேலோ” “தாமரைக்கண்ணா தாலேலோ” என்று தாயர் தாலாட்ட பின்பு.