வியாழன், 30 ஜூன், 2011

A Happy news for the visitors!

Be Happy! There will be no updates atleast for 10 days !

செவ்வாய், 28 ஜூன், 2011

Corrections in திருமந்திரச்சுருக்கு 2

Some typos in the திருமந்திரச் சுருக்கு 2 , pointed out by Coimbatore swamy, are corrected and republished. If anybody takes print outs kindly reprint the same. adiyen may be excused for the inconveniences.

திங்கள், 27 ஜூன், 2011

Sri Bhashyakararum Swami Desikanum

To day's tele-upanyasam on Guru paramparai by natteri swamy  "Sri Bhashyakararum swami desikanum' is available here. Next week also the same is to continue.


Get this widget | Track details | eSnips Social DNA

திருமந்திரச் சுருக்கு 2

இப்படி அகாரார்த்தத்தை அருளிச் செய்து அதில் ஏறி லோபித்துக் கிடக்கும் சதுர்த்தீ விபக்தியின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் – இளக்கமில் என்றாரம்பித்து.

இளக்கமின் மயக்கந்தன்னா லெனக்குநானுரியே னென்னுங்
களக்கருத்தொன்றே கொண்டு கடுநரகடைந்து நின்றீர்!
விளக்கு மிவ்வெழுத்தை நாலாம் வேற்றுமை யேற்றிவாங்கித்
துளக்கமி லடிமைபூண்டுத் தூயராய் வாழ்மினீரே                         .2.
[ப –ரை] இளக்கம் – இளகிப் போதல், அதாவது சிதிலமாகிப் போதல், இல் – இல்லாத தான, மயக்கம் தன்னால் – அஜ்ஞானத்தினால், நான், எனக்கு, உரியேன் – சேஷபூதன், என்னும், களக்கருத்து – அபஹார ரூபமான அனுஸந்தானம், ஒன்றே கொண்டு –ஒன்றையே ஸ்திரமாக அங்கீகரித்து, கடு –க்ரூரமான, நரகு –நரகத்தை, அடைந்து , நின்றீர் – நிற்கிறவர்களே! இவ்வெழுத்தை – இந்த அகாரத்தை, விளக்கும் – ப்ரகாசம் செய்கிற, அதாவது அஸாதுவாக்காமல் சப்தத்தினாலும், அர்த்தத்தினாலும் அதை ஸாதுவாக்குகிற, நாலாம் வேற்றுமை ஏற்றி – அந்த அக்ஷரத்தின் மேல் வைத்து, வாங்கி – எடுத்து விட்டு, அதாவது, உச்சரிக்கும்போது அதை நீக்கிவிட்டு என்றபடி, துளக்கம் – சலிப்பு, இல் – இல்லாத, பிறகு ஒரு நாளும் சலியாத என்றபடி, அடிமை – தாஸ்யத்தை, பூண்டு – அங்கீகரித்து, தூயராய் – பரிசுத்தராய், வாழ்மினீரே – வாழுங்கோள்.        (2)
[தா – ம்]  இளக்கமில் மயக்கம் என்றது அநாதியான ஸம்ஸாரத்தில் ஒரு பொழுதாவது இதுவரையில் பகவானுக்கு நாம் சேஷபூதம் என்கிற ஜ்ஞாநம் உண்டாகவில்லை. இப்படி அநாதி வாஸனையால் ஏற்பட்ட த்ருடதரமான அஜ்ஞானம் என்றபடி. அதாவது ஜீவபரமாத்ம ஸ்வரூபங்களை அறியாமை. நாதி³வாஸநாரூட மித்²யாஜ்ஞான நிப³ந்த²நா:| ஆத்மாத்மீய பதா³ர்த²ஸ்தா²யா ஸ்வாதந்த்ர்யஸ்வதாமதி: ||( अनादिवासनारूढ मिथ्याज्ञान निबन्थना: आत्मात्मीय पदार्थस्थाया स्वातन्त्र्यस्वतामति:) என்றன்றோ சொல்லப் பட்டது. களக்கருத்து -- யோந்யதா² ஸந்த்ரமாத்மான மந்யதா² ப்ரதிபத்³யதே‌| கிந்தே நக்ருʼதம்ʼ பாபம்ʼ சோரேணாத்மாபஹாரிணா‌ம்||( योन्यथा सन्त्रमात्मान मन्यथा प्रतिपद्यते‌ किंतेन नकृतं पापं चोरेणात्मापहारिणा‌म्) என்றும், ஜிதகௌஸ்துப சௌர்யஸ்ய ஸம்ʼராஜ ஸ்ஸர்வபாப்மநாம்|  ஆத்மாபஹாரசௌர்யஸ்ய நிஷ்க்ருʼதி:||( जितकौस्तुभ चौर्यस्य संराज स्सर्वपाप्मनां  आत्मापहारचौर्यस्य निष्कृति:) என்றும் சொல்லுகிறபடியே கௌஸ்துப சௌர்யத்தைக் காட்டிலும் கொடியதாயிறே ஆத்மாபஹார சௌர்யம் இருப்பது. ஸ்ரீமத் கீதா பாஷ்யத்தில் தைர்த³த்தான ப்ரதா³யைப்யோ யோபுங்க்தே ஸ்தேனஏவஸ:( तैर्दत्तान प्रदायैभ्यो योभुङ्क्ते स्तेनएवस:) என்கிற ச்லோக வ்யாக்யானத்தில்  சௌர்யம்ʼஹி நாம ன்யதீ³யே தத் ப்ரயோஜனாயைவ பரிகஸ²ப்தே வஸ்துனி ஸ்வகீயதா பு³த்³திம்ʼ க்ருʼத்வா தேன ஸ்வாத்மபோஷணம் | அதஏவ தஸ்ய ந பரமபுருஷார்த்தா² நர்ஹதாமாத்ரம்ʼ அபி து நிரயகா³மித்வம்ʼ ச பவிஷ்யதீத்யபிப்ராய:( चौर्यंहि नाम कन्यदीये तत् प्रयोजनायैव परिकशप्ते वस्तुनि स्वकीयता बुद्धिं कृत्वा तेन स्वात्मपोषणं अतनएव तस्य न परमपुरुषार्था नर्हतामात्रं अपि तु निरयगामित्वं च भविष्यती त्यभिप्राय:) என்றருளிச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது அயலானுடையதாய் அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே ஏற்பட்ட வஸ்துவில் தன்னுடையது என்கிற புத்தியைச் செய்து அதைக் கொண்டு தன்னை ரக்ஷித்துக் கொள்ளுதல், ஆதலால் இவனுக்கு மோக்ஷத்தையடைய யோக்யதை இல்லாமை மாத்திரமல்ல, பின்னை எதென்னில், நரகத்தை அடைவதும் உண்டாகப் போகிறதென்று தாத்பர்யம் என்றர்த்தம். இதற்கு ஸ்ரீமத் தாத்பர்ய சந்திரிகையில்  தேனஸ்வாத்ம போஷணமிதி சௌர்யஸ்ய ப²லம்| அன்யதீ³யே ஸ்வகீயதா பு³த்³தி கரணமித்யேவ லக்ஷணம்|......... பு³த்³திம்ʼ க்ருʼத்வா இ த்யனேன சௌர்யஸ்ய நாதிக வ்யாபாரோ  (நகாதிக வ்யாபாரோ) அவஸ்²யாபேக்ஷித: இதிஸூசிதம்ʼ ..........ஏவம்ʼ ச ஸதி ... யோன்யதா² ஸந்தம்ʼ இத்யாத்³யுக்தாத்ம சௌர்யமபி லக்ஷிதம்ʼ வதி|  ³வதீ³யே தத்³³தாதிஸ²யா தானேச்ச²யைவ பரிகல்பிதே ப்ரத்யகா³த்மனி ஸ்வாதிஸ²யாவஹ ஸ்வதந்த்ரத்வாபிமான ரூபத்வா த்தஸ்ய(तेनस्वात्म पोषणमिति चौर्यस्य फलं अन्यदीये स्वकीयता बुद्धि करणमित्येव लक्षणं ......... बुद्धिं कृत्वा इ त्यनेन चौर्यस्य नाधिक व्यापारो  (नकाधिक व्यापारो) अवश्यापेक्षित: इतिसूचितं ..........एवं च सति ... योन्यथा सन्तं इत्याद्युक्तात्म चौर्यमपि लक्षितं भवति  भगवदीये तद्गतातिशया धानेच्छयैव परिकल्पिते प्रत्यगात्मनि स्वातिशयावह स्वतन्त्रत्वाभिमान रूपत्वात्तस्य) என்றருளிச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது, அதைக்கொண்டு தன்னை ரக்ஷித்துக் கொள்வது என்பது சௌர்யத்தின் ப்ரயோஜனம், அயலாருடைய வஸ்துவில் தன்னுடையதென்கிற புத்தியைச் செய்வதே (சௌர்யத்துக்கு ) லக்ஷணம் ………….. ‘புத்தியைச் செய்து’ என்பதினால் சௌர்யத்துக்கு அதிகமான (தேஹத்தினால்) செய்யக் கூடிய வ்யாபாரம் வேண்டியதில்லை.  …………..இப்படியாகில் ‘யோந்யதா2ஸந்தம்’ இத்யாதிகளில் சோல்லப்பட்ட ஆத்ம சௌர்யமும் குறிக்கப் பட்டதாகிறது. பகவானுடையதாயும் அவனுக்கு உண்டாகிற அதிசயத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினாலே ஏற்படுத்தப் பட்டதாயுமிருக்கிற இந்த ஜீவாத்மாவினிடத்தில் தனக்கு அதிசயத்தைச் செய்கிறது ஸ்வதந்திரம் என்கிற அபிமானமாகையால் ‘ என்றர்த்தம். “ஈஸ்வரோஹ மஹம்போகீ³ (ईस्वरोह महंभोगी)என்று ஆஸுர ஸ்வபாவமுடையவர்களின் லக்ஷணமாக அன்றோ சொல்லப்படுகிறது. கடுநரகு என்பதினால் ஸர்வேச்வரனுடையதாயும், ஸர்வோத்க்ருஷ்டமாயும் இருப்பதற்குத் தகுந்தபடி சிக்ஷையும் க்ரூரமாயிருக்கும் என்றபடி. க்ஷிபாம்யஜஸ்ர மஸுபா நாஸுரிஷேவ யோநிஷு(क्षिपाम्यजस्र मसुभा नासुरिषेव योनिषु  என்றல்லவோ இவர்கள் திறத்தில் பகவத் ஸங்கல்பம் இருக்கும்படி. இப்பொழுது பூலோகத்தில் இருக்கும் சேதனர்களைக் குறித்து ‘அடைந்து நின்றீர்’ என்றருளிச் செய்திருப்பது உசிதமோ என்னில்? ஆத்மா பகாரிகளுக்கு நரகம் ஸித்தம் என்கிற அபிப்ராயத்தினால் இந்த ஆத்மாபகாரம் ஸ்வரூபத்தில் தட்டினவாறே நரகம் நிச்சயம் வரக்கூடியதென்பதைக் காட்டுவதற்காக இப்படி அருளிச் செய்யப்பட்டது. ‘நின்றீர்’ என்பதினால் பார்த்த பார்த்த இடமெங்கும் இவர்களேயாய் நிறைந்திருக்கை விவக்ஷிதம். விளக்கும் இத்யாதி -- நகேவலா ப்ரக்ருʼதி: ப்ரயோக்தவ்யா (नकेवला प्रकृति: प्रयोक्तव्या) (வேற்றுமையில்லாமல் ப்ரக்ருதியை மட்டும் ப்ரயோகிக்கக் கூடாது) என்று சொல்லியிருப்பதினால் இது இந்த சப்தத்தை ஸாதுவாக்கிக் கொண்டு நிற்கிறது. மேலும் இவ்விடத்தில் அகாரம் முதல் வேற்றுமை உடையதாய் ஜீவ பரமாத்மாக்களுக்கு ஐக்யத்தைச் சொல்லுகிறதென்றால் மேல் சரணாகதியைச் சொல்லுகிற நம: என்கிற பதத்திற்கும் , ஆதார ஆதேயபாவம், கார்ய காரண பாவம் முதலியவற்றைச் சொல்லுகிற நாராயண சப்தத்துடனும் பொருந்தாது. மேலும், ஜுஹுயாத் ப்ரணவே நாக்³னா வச்யுதாக்²யே ஸநாதனே’ (जुहुयात् प्रणवे नाग्ना वच्युताख्ये सनातने) ஓமித்யாத்தானம்ʼ யுஞ்ஜீத’(ओमित्यात्तानं युंजीत) என்று ஆத்ம ஸமர்ப்பணத்துக்குக் கரண மந்திரமாக ப்ரணவத்தை உதாஹரித்திருப்பதினால் அப்பொழுது ப்ரணவம் அந்த ஸமர்ப்பணத்தை ப்ரகாசிக்க வேண்டியது அவச்யமாகையினால் அதில் மகாரம் ஸமர்ப்பிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவைச் சொல்லுகிறபடியினாலும், யாருக்கு ஸமர்ப்பிக்கப்படுகிறதென்னில், அதற்கு உத்தேச்யனைத் தெரிவிக்க வேண்டியது மிகுதியாயிருப்பதினாலும், அந்த அகாரமே அந்த உத்தேச்யனைக் காட்ட வேண்டியதாகையாலும், ‘அக்³னயே இத³ம்ʼஇந்த்³ராய இத³ம்ʼ (अग्नये इदं इन्द्राय इदं) இத்யாதி வேறு மந்திரங்கள் எல்லாவற்றிலும் ஸமர்ப்பணத்துக்கு உத்தேச்யனை சதுர்த்தி விபக்தியுடைய பதத்தினால் காட்டியிருக்கிறபடியினாலும் இங்கும் அப்படியே சதுர்த்தி விபக்தியே இருக்கவேண்டும் என்கிற ந்யாயங்களை அனுஸரித்து அகாரத்தை சப்தஸ்வரூபத்திலும் அர்த்தத்திலும் விரோதமில்லாமல் தெரிவிக்கிறபடியினால் ‘விளக்கு மிவ்வெழுத்தை நாலாம் வேற்றுமை’ என்றருளிச் செய்யப்பட்டது. ‘ஏற்றி வாங்கி’  ஸுபாம் ஸுலுக் (सुपां सुलुक्) (வேதத்தில் பதங்களில் இருக்கும் வேற்றுமை உருபுகளுக்கு சில இடத்தில் லோபம் வரும்) என்று சொல்லியிருப்பதை அனுஸரித்து இங்கு நான்காம் வேற்றுமை உருபு லோபித்துக் கிடக்கிறது என்று திருவுள்ளம். அப்படி வேற்றுமை லோபித்திருந்தாலும் அதன் மூலமாக வ்யாகரணத்தின்படி அர்த்தத்தைச் சொல்லிக் கொள்வது ஸுலபம் என்று தெரிவிக்கப் பட்டதாகிறது. இப்படியே ஸ்ரீபாஷ்யத்திலும் அக்ஷேபத: ப்ராப்தாதா³பியாநி கஸ்யைவ க்³ராஹ்யத்வாத் (अक्षेपत: प्राप्तादाभियाति कस्यैव ग्राह्यत्वात्)   என்று அங்கு உசிதமான லுப்த ஷஷ்டியின் அர்த்தத்தைச் சொல்லிக் கொள்வது உசிதம் என்று அருளிச் செய்யப்பட்டிருப்பது அனுஸந்தேயம். ‘துளக்கமில்’ இத்யாதி – இப்பொழுது உண்டாகிய தாஸ்யம் மோக்ஷபர்யந்தமாய், மோக்ஷத்திலும் அனுவர்த்திக்கக் கடவதாய் மறுபடியும் ஸம்ஸார ப்ரஸங்கமில்லாமையாலே யாவதாத்மபாவியாய் இருப்பதொன்றென்று திருவுள்ளம். அன்றிக்கே குயுக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாதபடி அடிமையைப் பூண்டென்று திருவுள்ளமாகவுமாம். பூண்டு என்பதினால் இதுவே ஜீவாத்மாவுக்கு நிலை நின்ற ஆபரணம் என்பது திருவுள்ளம். பூர்வமேவ மஹாபா³: ஸௌமித்ரிர் மித்ரந்த³ன:| அக்³ரஜஸ்யானு யாத்ரார்தே² த்³ருமசீரைரலங்க்ருʼத:|| (पूर्वमेव महाभाग: सौमित्रि र्मित्रनन्दन: अग्रजस्यानु यात्रार्थे द्रुमचीरैरलंकृत:) -- மரஉரியுடுத்து அணிகலங்கள் அணியாமல் நிற்கும் தசையிலன்றோ அலங்க்ருʼத: (अलंकृत:)என்றது கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு முடிசூட்டினாற்போல் இருந்தமையை நினைத்து, தூயராய் – பரிசுத்தர்களாய் நஹிஜ்ஞாநேந ஸத்³ருʼ²ம்பவித்ரமி ஹவிஷ்யதே (नहिज्ञानेन सदृशंपवित्रमि हविष्यते) என்று ஆத்மஸ்வரூபஜ்ஞானம் மிகவும் பரிசுத்திகரம் என்று ஸ்ரீகீதாசார்யனும் அருளிச் செய்தான். வாழ்மினீரே  இந்த ஜ்ஞானம் உண்டானவாறே இதற்கு உசிதமான புருஷார்த்தத்தில் ருசியும், அதற்கு அனுகுணமான உபாயனுஷ்டானமும் தன்னடையே வருமாகையினால் இந்த ஜ்ஞானமே இவனுக்கு வாழ்வு என்று திருவுள்ளம். இப்படிக்கில்லாவிடில் அஸந்நே (असन्नेव) என்னும்படி நிற்கிறானிறே. ‘அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்’ என்கிறபடியே இந்த ஜ்ஞானம் பிறப்பதற்கு முன் தசையில் அஸத்கல்பனாய் பிறகு இவன் வாழ்ந்தானாக இருக்குமிறே. ‘ஆன்விடை ஏழடர்த்தார்க்கு  ஆளாரல்லாதார் மானிடரல்லரென்று  என் மனத்து வைத்தேனே’  என்றிறே ஸர்வேச்வரன் பக்கல் ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார்  அருளிச் செய்தது. இவற்றையெல்லாம் திருவுள்ளம் பற்றி இங்கு இப்படி அருளிச் செய்யப் பட்டது.