प्रपञ्चमिध्यात्वनिरूपणम्
ப்ரபஞ்ச – மித்யாத்வ - நிரூபணம்
ச்ருதிப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறாப்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம் ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால்-இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை. இது ஸத்யமாக இருந்தால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த ஸத்யமாக ஆகும். ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்குப் பின்னும் காணப்படுவதில்லை. ஸத்யமாயிருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப் படவேண்டும். அப்படியன்றிக்கே ஒரு காலத்திலுண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத. வஸ்துக்கள் பரமார்த்த ஸத்தாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள் தோன்றுகிறது போல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த அர்த்தம் 'மாயையை யுடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்' என்றும், 'பரமாத்மா மாயைகளால் அநேக ரூபமுள்ளவனாய்த் தென்படுகிறான்' என்றும் சொல்லும் பல ச்ருதிகளால் கிடைக்கிறது.
மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமயமாயும், ஸத் என்றும் அஸத் என்றும் சொல்லமுடியாததாயும், ( सत् - ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்ல வொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை. असत्-- ஒருகாலத்திலும் இல்லாத முயற்கொம்பு போன்றவை.) தன்னாச்ரயத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை யடைவதுமான ஒரு வஸ்து. இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும். சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று. இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும், அதிலிருந்துண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது. காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறதுபோல ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும். இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயாகார்யம் -- மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.
அன்றிக்கே ச்ருதிகள், 'பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறபடியாலும், இந்த ப்ரபஞ்சம் மித்யை (मिथ्या –– பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸூர்யகிரணத்தில் தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசி யுண்டு : அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்; ப்ருதிவீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத்.
ஸத்
என்பது ப்ராதிபாஸிகம்,
வ்யாவஹாரிகம்,
பாரமார்த்திகம்
(प्रातिभासिकं,
व्यावहारिकं,
पारमार्थिकअम्)
என்று
மூன்றுவகைப் படும்.
இதில்
ப்ராதிபாஸிகஸத்தாவது ப்ரஹ்மம்
தவிர வேறு வஸ்துக்களில்
தோன்றி,
அந்த
வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை
அறிவதனால் நிவ்ருத்திப்பது.
அதாவது
தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது
முத்துச் சிப்பியின் ஸ்வரூபம்
மறைந்து அது வெள்ளி என்று
ப்ரமம் உண்டாகிறது.
பின்பு
ஸமீபத்தில் போய்பார்த்தால்
இது வெள்ளியன்று,
சுக்தி
(शुक्ति
– முத்துச்சிப்பி)
என்று
தெரிகிறது.
இங்கு
ப்ரமத்திற்கு
ஆதாரமான
சுக்தியினுடைய ஸ்வரூபஜ்ஞானத்தால்
வெள்ளி நிறுத்திக்கிறது.
இவ்வாறு
முத்துச்சிப்பியில் தோன்றும்
வெள்ளிதான் 'ப்ராதிபாஸிகஸத்'
என்று
சொல்லப்படுகிறது.
வ்யாவஹாரிகஸத்தாவது, ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூதபௌதிக ப்ரபஞ்சம். ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி-ப்ரபஞ்சம் ஏற்படுகிறது. வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்மஸ்வரூபத்தின் ஸாக்ஷத்காரம் உண்டாகும்போது முன் ஏற்பட்ட ஆகாசாதி - ப்ரபஞ்சம் நசித்துப் போகிறது. இதனால் ப்ரஹ்மஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும், ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்ரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.
பரமார்த்தஸத்தாவது ஒருகாலத்திலும் நிவ்ருத்தியாமல் (निवृत्ति:- நீங்குதல்.) எல்லாக் காலங்களிலும் அநுவர்த்திக்கும் (अनुवृत्ति – இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர் குணப்ரஹ்மம்.
தொடர்வது
जीवेश्वरभेदभ्रमनिरूपणम्-- ஜீவேச்வர பேத ப்ரம நிரூபணம்