வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009


4 நாட்கள்

விடுமுறை!

அடியேனுக்கு மட்டுமில்லை!

உங்களுக்கும் தான்!!

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

ஆதிகாலத்தில் சித்திர எழுத்துக்கள், அதன்பின் வட்ட எழுத்துக்கள் என எத்தனையோ விதமான மாற்றங்களைக் கண்டு இன்று பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை ஏற்று திரு எம.ஜி.ஆர். உத்தரவிட்டதற்குப் பிறகு நம்மால் பரவலாக உபயோகப்படுத்தப் படும் வரி வடிவத்தை இன்னும் எளிதாக்க பல முயற்சிகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அந்த வகையில் 216 குறியீடுகளை 39 குறியீடுகளால் எழுத முடியும் என்று அறிஞர் வா.செ. குழந்தைச்சாமி அவர்கள் கூறுவதை இங்கு காணலாம். அவர் கூறுகின்ற காரணங்கள் ஏற்புடையதா, இன்னும் சீர்திருத்தம் தேவைதானா? உங்கள் கருத்து என்ன?

Dr. வா.செ.குழந்தைச்சாமி கூறும் காரணங்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

திருப்பாதுகமாலை

22. பொற்பத்ததி
 
731. நன்னர் தங்கள் கப்படி வத்தெழில்
      மன்னு பூரிவ ளர்திரு மாண்கிளர்
      மன்னி லைத்திரு மந்நிலை யூன்றுமால்
      மின்னு பாதுகை மேவிவ ணங்குவன்.                        1               
732. கண்ண னத்திரு மேனிவ ளங்கவர்
      விண்ணி னப்பிழை வீயவ வன்கழல்
      நண்ணி மன்னத னவ்வொளி யன்னநீ
      அண்ண லாடக பாதுகை! மின்னியே.                        2

733. அண்ண லங்கிரி யவ்வுரை கல்லினின்
         வண்ண நல்லரி தோற்றொரு மாற்றினில்
         எண்ணு வர்நல ரெண்ணுறு பொன்பிற
         மண்ணை யொத்தென மாலணிபாதுகாய்!.                 3


734. மீதெ ழுங்கன கத்தெழி லேறுசெந்
      நாத கோகுல நாறிடு காமமா
      மாத வத்துரு மன்னும சோகநீ
      தாதர் கட்கினி தாயரி பாதுகாய்.                            4

735. நன்னி றத்தெளிர் பொன்னது நாறிடா
        தென்னு மக்குறை யென்றது தீரமின்
        துன்னு காவிரி தூமறை யின்மணம்
        மன்னு பொன்னினி னீகமழ் பாதுகாய்.!                     5

736. மேவு பீலிடமி டற்றொலி யேறுபா
         தாவ னீயணி செய்யணி யாடகம்
         மாவு ரத்தணி மாலெனு மாமணிக்
         காவ னல்லணி யாயணி மல்குமே.                        6

737. உன்னு கிர்முதற் பொன்னுரு முற்றவு 
         மன்ன வற்கொளி நல்கிய ரற்குமே
         துன்னு பொற்பிறை தோன்றணி கொன்றையாய்
         மின்ன லுன்னரி மின்னரி பாதுகாய்!.                        7

738. சந்தி ராதவ முந்துப தாவனீ!
         முந்தை யெந்தையு லோகம ளந்தகால்
         வந்த மேலவர் மங்கையர் வாழ்முகச்
         சந்த மாமலர் சாரும லர்த்தியே!.                            8

739. தேறு நீர்தெரி வாலுக மென்றுதொட்
        டேறு நின்னரி நேரொளி யார்ந்ததோ
        கூற வன்றுமு தற்பொலி காவிரி
       நாறு பொன்னியே னாயது பாதுகாய்!.                        9

740. மாத வன்திகழ் கோயில்க ளாகுமா
         றாத ரத்திரு ணல்கரி பாது! நின்
        நீதி மந்திர சந்திர நீழலில்
        மாத வர்மன மாமலர் விள்ளுமே.                            10

741. நாத னின்னைய ணிந்துபு துப்பெருந்
        காத ரத்தளி காணவொ துங்குகாற்
        பாது! பொன்னின தாதவ மேவபொற்
       போத மாமலர் பொன்னிய விழ்க்குமே.                     11

742. கண்ண னின்னொடு பொன்னிவ ளத்தடம்
         எண்ணி நாடம ராடி! நி னாதரி
        வண்ண மாடிளஞ் சோழம டந்தையர்
        மண்ணு மஞ்சன மஞ்சணி றத்தவாம்.                       12

743. நாற மாமறை நாற்றம ராடி! மா
         ஊற லக்கர மூடலர் கோலமீ
         தேறு மாவரி நீலவ ளத்தளி
         தேற நீதெரி தேசிக மாமலர்.                13                   

744. சிந்து நாயக னில்வளர் காவிரி
         பந்த மேறுப யப்புறு பாது! சீர்
        சந்த வோங்கல ணைந்திடு சால்பிறன்
        பந்த னைத்திரு வென்றுனை யாட்டுவள்.                 14

745. உம்ப ருய்யரி பாதுன தொண்கலை
       சம்பு மத்தக நத்தணி வண்ணமேற்
       பம்பு நந்தைவ ளர்ந்துயர் பூரண
      விம்ப சந்திர விம்மொளி வீசுமே.                            15

746. புல்லெ னப்பொனை யுன்னும வாவிலர்
        ஒல்லை நின்னரி மின்னினிற் பொன்னெனப்
        புல்லை நோக்கலி னிற்கிடு தூர்வைகால்
       நல்ல பொன்னென நண்ணுவர் பாதுகாய்.                16

747. சோதி யில் வசு தூய்மையு றுந்தெளி
         நீதி யீதுல கத்துநி ரந்தரம்
        சோதி சுத்தியு னிற்பெற லெத்திறம்
       ஆதி யேகரி சாலரி பாதுகாய்.!                            17

748. தார கைத்திற னாறரி வண்ணமே 
        லோரி யம்பிறை யுன்னிடை பாதுகாய்!
        மேரு வாரமொ துங்கிப மென்னவோர்
       மாரி வண்ணன்ம கிழ்நடை நாடுவான்.              18       

749. நந்தாவங் காரவணங் கவியி னேற்றம்
                   மந்தகதி யுந்துகுரு புந்தி மின்னல்
        சிந்தாத செங்கதிரின் சுருவச் செம்மல்
               சீரொழுகு பூங்கலையின் செறிவி வற்றிற்
       செந்தாது செழும்பாத ரதநீ நாளும்
             விண்டுபத மண்டுநலங் கொண்ட பண்பில்
       அந்தாம நலமிகவிவ் வுலகுக் கெல்லாம்
             அருடருகோண் மண்டிலமாய் நிகழ்கின் றாயே.    19

                                    
750. வழுப்பொன் னுருக்குங் கொழுந்தைந்து கூரும்
        எழிற்கோ ளரிப்பே ரெழுத்தோது சோதி
       விழுப்பொன் னுருப்பா துனைத்தா னெமக்கே
       முழுச்சீ ரெனத்தா னுவந்தே யருள்வான்.                   20