திங்கள், 18 அக்டோபர், 2010
நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் dtd 18-10-2010
நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸம்
“ஸ்ரீரங்கநாத பாதுகா” ஆசிரியர் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாச்சார்யாரின் டெலி உபந்யாஸம் தொடர்கிறது. நேற்றைய இடுகையில் தவறாக இதை முதல் பகுதி எனக் குறிப்பிட்டிருந்தேன். மன்னிக்க வேண்டுகிறேன்.
திருப்புல்லாணியில் விஜயதசமி
விஜயதசமித் திருநாளான இன்று திருப்புல்லாணியில் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டு கிராமத்தின் ஈசான்ய மூலையில் வன்னி மரத்தடியில் (இப்போது மரம் இல்லை. எனவே அந்த பாவனையில், ஒரு வன்னிமரக் கிளையை தற்காலிகமாக நட்டுவைத்து) அம்பு எய்தி ரக்ஷித்து ஆஸ்தானம் திரும்பினார். பல, பல வருடங்களுக்குப் பின் யானை முன் செல்ல புறப்பாடு நடந்தது. எங்கிருந்தோ எங்கேயோ சென்றுகொண்டிருந்த யானையும், பாகனும் தற்செயலாய் புறப்பாடு ஆகும்போது வர, அதை அடியோங்கள் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டோம். ஒரு சிறு வீடியோ இங்கு
ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் டெலி–உபந்யாஸம்.
இரண்டு வாரங்களாக “ஸ்ரீரங்கநாத பாதுகா” ஆசிரியர் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி “குரு பரம்பரை” பற்றி அமெரிக்கா வாழ் ஆஸ்திகர்களுக்காக டெலி உபந்யாஸம் நடத்தி வருகிறார். இந்திய நேரம் அதிகாலை 6 மணி என்பதால் பலருக்கு கேட்க அவகாசம் இருந்திருக்காது. அந்த உபந்யாஸத்தின் இரண்டாவது பகுதி இங்கு உள்ளது. அருமையாள திருக்குடந்தை ஆண்டவனின் படங்களையும் கண்டு களிக்கலாம். முதல் பகுதியை நாளை இங்கு காணலாம்.
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
திருப்புல்லாணியில் ஸ்வாமி தேசிகனின் 743வது திருநக்ஷத்ரோத்ஸவம்
உலகெலாம் உய்விக்க வந்த நம் ஆசார்ய வள்ளலின் 743வது திருநக்ஷத்ரோத்ஸவம் சென்ற வருடங்களைப் போலவே மிகச் சிறப்பாக, திருப்புல்லாணி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் ஸந்நிதியில் மூன்று நாள் உத்ஸவமாக நடைபெற்றது. திருநக்ஷத்திரத்தன்று இராமநாதபுரம் ஸமஸ்தானம் தேவஸ்தானம் சிரஸ்தேதார் தலைமையில் அனைத்து ஆலய கைங்கர்யபரர்களும் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாள், பத்மாசனித் தாயார் அனுக்ரஹித்து அளித்த மாலை, தீர்த்தம் பரிவட்டம் தளிகை மரியாதைகளைக் கொணர்ந்து ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்தனர். திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தின் 29வது வெளியீடான “திருச்சின்னமாலை” மறுபதிப்பாக வெளியிடப்பட்டு முதல் பிரதியை சிரஸ்தேதார் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.