வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

இன்று அடியேன் படித்துக் கொண்டிருக்கும் “ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியனும் அதன் ஏற்றமும்” (நூல்  கல்யாணபுரம் தேவஸ்தானம் ஸாமவேத வித்வான் ஸ்ரீ உ.வே. பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி – 13-09-2007ல் அவரது ஜன்ம நக்ஷத்ர ஸாந்தி மஹோத்ஸவ மலராக வெளியிட்டது) நூலிலிருந்து ஒரு பகுதி

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

ஸ்ரீ தேஶிகன் விஷயமான 3 தனியன்களில் முதலான விஷயங்கள் மூன்று என அநுபவிக்கப்பட்டது. அவற்றுள் மூன்றாவதான ராமாநுஜ தயாபாத்ரம் என்னும் தனியனுக்கு இன்னும் ஒரு படி ஏற்றம் உண்டு.

ரஹஸ்யத்ரயங்களில் सदैवं वक्त्ता என்கிற ஏற்றம் பெற்றது த்வயம்.

ஆசார்யர்களுக்குள் மற்றொருவருக்கும் கிடைக்காததாயும் ஸ்ரீதேஶிகன் ஒருவருக்கே கிடைத்ததுமான பெருமை வேதாந்தாசார்யர் என்னும் பிருது. இதைப் பலபடிகளாலும் தாம் நிர்வஹித்தருளிய ப்ரகாரத்தை ஸ்ரீதேஶிகன் தாமே அருளிச் செய்திருக்கிறார். நமது ஸம்ப்ரதாயத்தில் உபய வேதாந்தங்களும் ப்ரமாணங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கிற ப்ரஹ்ம ஸூத்திரங்களின் வ்யாக்யாநமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்த ஸங்க்ரஹமான ஸ்ரீஅதிகரணஸாராவளியில்
तेन देवेन दत्तां वेदान्ताचार्यसंज्ञामवहित बहुवित्सार्थमन्वर्थयामि
என்று அநுஸந்தித்திருக்கிறபடியினால் ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களில் தாம் நிகரற்றவர் என்பதை வெளியிட்டருளினார்.

आचार्यप्रियचिकीर्षया प्रेरित: तत्प्रसादसन्धुक्षित तत्प्रबन्धानुसन्धान जनित ज्ञान भक्ति परिवाहरूपे स्तोत्रे

    என்கிறபடியே த்ராவிட வேதங்களின் அநுஸந்தாந பரிவாஹமான ஸ்ரீஸ்தோத்ர ரத்நத்திற்கு வ்யாக்னமிட்டருளி அதன் இறுதியில்
स्वकमिति हरिदत्तं यामुन स्तोत्र वृत्तया व्यवृणुत निगमान्ताचार्यकं वेङ्कटेश: 

என்றருளிச் செய்திருப்பதினாலே திரமிட வேதங்களில் தாம் நிலவர் என்பதை ஸ்தாபித்தருளினார். ஸ்ரீபாஷ்யத்திற்கு விஸ்தாரமான வ்யாக்யாநமான ஸ்ரீதத்வடீகையை यतिपतिभुवो भाष्यस्यासौ यथाश्रुतचिन्तित प्रवचनविधावष्टाविंशे जयध्वजपट्टिका  என்றும் , ஸ்ரீசதுஶ்லோகீ பாஷ்யத்தில் व्यासन शमन व्यक्त्तोस्तेया जयध्वजपट्टिका என்றும் அருளிச் செய்திருப்பதினாலும் உபய வேதாந்தங்களில் பாண்டித்யத்தை உடையவர் என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது. இப்படி உபய வேதாந்தங்களிலும் ஆசார்யனாய் விளங்கின போதிலும்

1. செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 2. பாணன் ஓதியதோர் இருநான்கு இரண்டுமான ஒரு பத்தும் பற்றாக உண்ர்த்துரைத்தோம் 3. சந்தமிகு தமிழ்மறையோன் என்றிவை முதலாக அநுஸந்தித்திருப்பதினாலே ஒரு விஶேஷம் பெற்றதாயிருக்கும் த்ராவிட வேதங்கள். ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களின் வ்யாக்யாநங்களான ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீகீதாபாஷ்யம், முதலிய க்ரந்தங்களும் பகவானுடைய மஹிமையையே ப்ரதிபாதித்தபோதிலும், பகவத் குணாதிகளை நேரில் அவ்யவஹிதமாக ஒன்றும் விடாமல் ப்ரதிபாதிக்கிற த்ரமிட வேதங்களின் வ்யாக்யாநங்களுக்குப்போலே அவற்றுக்கு பகவத் விஷயம் என்னும் திருநாமம் கிடைக்கவில்லை. எம்பெருமானாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்று, அந்த ஜ்ஞாநத்தினாலேயே அவனை உள்ளபடியே அநுபவித்து, அநுபவித்தபடியே பேசுகிற பேச்சுக்களான திருவாய்மொழியின் முதல் வ்யாக்யாநமாக எம்பெருமானாருடைய நியமனத்தினால்  பிள்ளான் பணித்தருளிய திரு ஆறாயிரப் படிக்கே அப்பெருமை. அதற்கு வ்யாக்யாநமான எழுபத்தி நாலாயிரப்படியின் காலக்ஷேப காலத்தில் அவதரித்த இத்தனியன் மற்றத்தனியன்களை விட ஓர் ஏற்றம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஸ்ரீரங்கத்தில் தடைபட்டு நின்ற திருவத்யயனோத்ஸவத்தை ப்ரதிவாதிகளை நிரஸித்து அந்த மஹோத்ஸவத்தை நடத்தி வைத்த ஸமயத்தில் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் என்னும் தனியனுக்கு முன்பு அநுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதனால் நியமிக்கப்பட்ட பெருமை வாய்ந்திருக்கும் இத்தனியன் என்றபடியாகவுமாம்.

மற்றும், பூர்வாசார்யர்கள் எல்லோரும் உபய வேதாந்தங்களிலும் நிலவர்களாகிலும் அவர்கள் ஸ்ரீதேஶிகனைப்போலே உபயவேதாந்தாசார்யத்வத்தில் அபிஷிக்தர்களாகவில்லை. ஏனென்றால் ---  ப்ரபந்நஜந கூடஸ்தரான ஆழ்வார் த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்கிற பெருமை பெற்றவர். யோகதசையில் ஸாக்ஷாத்க்ருதமாய் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபயவேதாந்தங்களையும் உபதேஶித்தருளினாலும் க்ரந்த முகமான உபகாரம் த்ரமிட வேதங்களாலேதான். தமிழ் மறைக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளலான ஸ்ரீமந் நாதமுனிகளும் திவ்ய ப்ரபந்தங்கள் விஷயமாய் க்ரந்த முகமாக உபகாரம் செய்தருளவில்லை. பெரிய முதலியாரும் த்ரமிடவேத த்ரஷ்டாவான ஆழ்வார் விஷயமாக ஒரு ஶ்லோகம் அருளிச் செய்திருந்தபோதிலும் திவ்ய ப்ரபந்தங்களின்ப்ரபாவாதிகளைப் பரக்க நிரூபித்தாரில்லை. தர்ஶந ப்ரவர்த்தகரான எம்பெருமானாருடைய திவ்ய ப்ரபந்தாநுஸந்தாந ஊற்றம் நூற்றந்தாதியில்

“மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி – பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் – கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் – சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி – இடம்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் இணையடிப் போதடங்கும் இதயத்து – செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ்மாலையும் பேராத சீர்அரங்கத்து ஐயன் கழல் பணியும் –கொல்லி காவலன் சொல்பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் – பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து – அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் – தண்தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை --- எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை – மாறன் விளங்கிய சீர்நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று – தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசும் தமிழ்தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண்வைத்த – திருவாய்மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னுமிடம்தொறும் நிற்கும் – பண்டரு மாறன் பசும் தமிழ் ஆநந்தம் பாய் மதமாய்”      (இராமாநுஜ நூற்றந்தாதி)

முதலியவைகளில் விஶேஷமாக ப்ரதிபாதிக்கப் பட்டிருந்தபோதிலும், க்ரந்தமுகமாக ஆழ்வார்களைப் பற்றியோ அவர்கள் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய த்ராவிட வேதங்களைப் பற்றியோ அவர் ஓரிடத்திலும் நிரூபிக்கவில்லை. எம்பெருமானாரால் உபய வேதாந்த ஸிம்மாஸனத்தில் அபிஷிக்தரான பிள்ளானும் த்ரமிடோபநிஷத்தின் அர்த்த விஶேஷங்களை ஆறாயிரப்படியில் பரக்க நிரூபித்திருந்தாலும் ஆழ்வார்களின் அவதாரப்ரபாவ விஷயமாய் ஒன்றும் நிரூபிக்கவில்லை. ஸ்ரீதேஶிகன் ஒருவரே தான் வேதாந்தாசார்யர் என்னும் தம்முடைய திருநாமத்திற்கேற்ப உபய வேதாந்தங்களின் அர்த்தங்களையும், அவற்றின் உத்கர்ஷத்தையும், ஆழ்வார்கள் த்ரமிட வேத த்ரஷ்டாக்கள் என்பதையும், அவர்களுடைய அவதார ப்ரபாவத்தையும் வெளியிட்டருளியவர். இப்படி உபய வேதாந்தங்களிலும் நிலவரான ஸ்ரீ தேஶிகனாலே
नित्यम् जाता शठारिपु तनो: निष्पतन्ति मुकात्ते|
प्राचीनानां श्रुतिपरिषदां पादुके पूर्वगण्या ||
  (பாதுகாஸஹஸ்ரம்)
என்று கொண்டாடப் பட்டிருக்கும் பெருமையையுடையவைகள் த்ராவிட வேதங்களே. இப்படிப்பட்ட ஏற்றமுடைய த்ரமிட ப்ரபந்தங்களின் தனியன் என்னும் பெருமை பெற்றது.

மேலும், ரஸங்களுக்குள் உத்க்ருஷ்டமான ஶாந்தி ரஸத்தை ப்ரதாநமாக ப்ரதிபாதிக்கிறபடியினாலும் ஸம்ஸ்க்ருத வேதங்கள்போல் த்ரைவர்ணிகர்களுக்கு மட்டுமன்றிக்கே ஸர்வாதிகாரங்களாய் நிற்கிறபடியினாலும் பெருமை பெற்ற த்ரமிட வேதங்களுக்குத் தனியன் என்கிற உத்கர்ஷம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஶரணாகதியையும், அதன் அங்கங்களையும், அதற்கு இன்றியமையாததான பகவானுடைய கருணையையும் அர்ச்சாவதாரத்தையும் விஶேஷித்து ப்ரதிபாதிக்கிறது என்கிற பெருமையையும் பெற்ற “திராவிடவேதங்களின் தனியன்” என்கிற பெருமையும் வாய்ந்தது.

பின்பும் नाथे न: என்கிற ஶ்லோகத்தில் பாகவதர்களின் ப்ரஸாதமே நமக்கு உத்தேசமென்றும், आचार्यादिह देवतां समधिकामन्यां न मन्यामहे| என்கிற ஶ்லோகத்தின்படியே ஆசார்யனுடைய கடாக்ஷத்தையே நாடவேண்டும் என்பதையும் இது காட்டுகிறது. 

(இது சேட்லூர் ஸ்வாமி மணிப்பிரவாளத்தில் எழுதியதின் தமிழாக்கம் என்று நூலில் சொல்லப் பட்டுள்ளது)

திங்கள், 24 பிப்ரவரி, 2014

Saranagati Deepikai (24-02-2014) Tele-upanyasam

कर्मादिषु त्रिषु कथां कथमप्यजानन्
कामादि मेदुरतया कलुष प्रवृत्ति: |
साकेत संभव चराचर जन्तु नीत्या
वीक्ष्य: प्रभो विषय वासितयाऽप्यहं ते ||


கர்மாதி³ஷு த்ரிஷு கதா²ம் கத²மப்யஜாநந்
காமாதி³ மேது³ரதயா கலுஷ ப்ரவ்ருத்தி: |
ஸாகேத ஸம்ப⁴வ சராசர ஜந்து நீத்யா
வீக்ஷ்ய: ப்ரபோ⁴ விஷய வாஸிதயாऽப்யஹம் தே ||


என்ற 47வது சுலோகத்தை ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி விவரிப்பதைக் கேட்டு மகிழ
https://www.mediafire.com/?epy6k5da6gsv24d